Archive for June 28, 2008

Apollo Tyres I

      தமிழ்நாடு சென்னை மாகாணமாக இருந்தபோது கூவம் ஆற்றின் வழியே சரக்கு போக்குவரத்து நடந்ததாக படித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நீர் வழி போக்குவரத்து (Waterway Transport)  குறித்து ஆங்கிலேயர் அமைத்திருந்த நீண்ட கால திட்டங்களால் தான் நடைபெற்றது என்றும், இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நம்மால் அப்பொழுதே நீண்ட கால திட்டங்கள் எதனையுமே வாக்கு வங்கி சம்பந்தப்படாமல் நிறைவேற்ற பட முடியாமல், அனைத்து நீர் வழி போக்குவரத்து வழிகளையும் நாசமாகி விட்டோம் என்ற கருத்தும் உண்டு. இந்தியாவில் நீண்ட கால திட்டங்களை அனைத்தும் வாக்கு வங்கியை ஒட்டி தான் எடுக்கப்படும் என்பதில் எனக்கு எந்த எதிர் கருத்தும் கிடையாது. ஆனால், நீர் வழி போக்குவரத்து தமிழ்நாட்டில் சில முக்கியமான பகுதிகளில் இருந்ததா என்பதற்கு நீங்கள் உங்கள் ஊர் பெரியவர்களிடம் கேட்டு இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

     அதற்கு பிறகு இந்தியா முழுவதும் தரை வழி போக்குவரத்து (Roadway Transport)  தான் முதலிடம் வகிக்கின்றது. பால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருட்களை ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுவதற்கு தரை வழி போக்குவரத்தையே நம்பியிருக்கின்றோம். லாரி ஸ்ட்ரைக் ( லாரி என்ற வாகனத்தை  ஆங்கிலேயர் நம்மை ஆண்டதால் இந்தியா முழுவதும் இந்த பெயரால் அழைக்கப்படுகிறது. உலகம் முழுவதும் ட்ரக் என்ற பெயரிலேயே  அழைக்கப்படுகிறது.) என்றால் எப்படி அன்றாட சந்தை ஸ்தம்பித்து விடும் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். இந்த தரை வழி போக்குவரத்து என்பதை தற்போது ஒரு தனி துறையாகவே கருதலாம். இதில் முக்கியமாக லாரிகள் ( டாடா, அசோக் லேலண்ட்), மினி லாரிகள் (டாடா, அசோக் லேலண்ட், எய்சர்), அதற்கும் சிறிய வாகனங்கள் (டாடா ஏஸ்) போன்றவை பெரும்பாலும் பயன்படுகின்றன. பிறகு மக்களின் போக்குவரத்திற்கு நீண்ட துாரத்திற்கு  பேருந்துகள் (அசோக் லேலண்ட், டாடா), கார்கள் (டாடா, மாருதி, மகிந்திரா), பைக் (பஜாஜ், டிவிஎஸ்) போன்றவை. எப்படியிருப்பினும் நகரில் வாழும் ஒரு பணியாளர் ஒரு நாளைக்கு குறைந்தது 20 கிலோ மீட்டராகவது பயணிக்கின்றார்.
      போக்குவரத்து வாகனங்கள் (Transport Vehicles) இத்தனை இருந்தாலும், அதில் முக்கியமான தேவை டயர்கள் (Tyres) . தேய்மானத்தை வைத்து பார்க்கும்போது, ஒரு வாகனத்தில் முக்கியமான பகுதி டயர்கள் ஆகும். ஒரு வாகனத்தை தேய்மானத்தை முன்னிட்டு மாற்றும்போது டயர்களை நிறைய முறை மாற்றியிருப்போம். இந்தியா போன்ற முன்னேறும் நாட்டில் தரைவழி போக்குவரத்து இன்னும் பெரிய பங்கு வகிக்கப்போகின்றது. டயர் விற்பனை பத்து மில்லியனுக்கு மேல் உள்ளது. மேலும் வளர்ந்து வருகின்றது.  இந்த வளரும் துறையில் முதலீடு செய்தால் இரு வருடங்களில் நல்ல இலாபம் வரும் என்பதில் சந்தேகம் இல்லை.
 இந்த டயர் விற்பனையில் இந்தியாவில் உள்ள கீழ்கண்ட குழுமங்கள் இயங்கி வருகின்றன.

1) எம் ஆர் எப் (M.R.F.)

2) அப்போலா டயர்ஸ் (Apollo Tyres)

3) ஜே கே டயர்ஸ் (J.K. Tyres)

4) சியட் (CEAT)

5) டிவிஎஸ் (TVS Tyres)

6) பிர்லா டயர்ஸ் (Birla Tyres)

7) குட் இயர் (Good Year)

 

    மேற்கண்ட குழுமங்களில் எம் ஆர் எப் குழுமமே முதலிடத்தை வகிக்கின்றது என்றாலும் இந்த பகுதியில் பரிந்துரைக்கப்படுவது அப்போலோ டயர்ஸ் தான். 1972-ல் ஆரம்பிக்கப்பட்ட இக்குழுமத்திற்கு தற்போது சேர்மனாக இருப்பவர் ஓங்கர் எஸ் கன்வார். இவர் இந்திய சேம்பர் ஆப் காமர்ஸ் (Indian Chamber of Commerce) தலைவராகவும் பதவி வகி்த்தவர். இப்பதவியானது எல்லோருக்கும் வழங்கப்படுவதில்லை. குறிப்பாக அரசியல்வாதி பதவி மாதிரி கிடையாது. ஒரு தகுதி உள்ளவர்கள் மட்டுமே அப்பதவியினை ஏற்க முடியும், இதுவரை. தற்போது இருப்பவர் ஐசிஐசிஐ (ICICI Bank) சேர்மனாக இருக்கும் திரு கே வி காமத் ( இவர் குறித்தும் எழுத நிறைய இருக்கின்றது. சமயம் வரும்போது எழுதலாம் என்றிருக்கிறேன்). இந்தியாவில் ஒரு பில்லியன் டாலர் அளவில் விற்பனை காட்டும் குழுமங்களில் இதுவும் ஒன்று. ஒவ்வொரு காலாண்டிலும் மிகச் சிறப்பான இலாபத்தை ஈட்டி வருகின்றது.
      இக்குழுமத்தின் ஒரு வருட அதிக பட்ச-குறைந்த பட்ச விலை : 62.90-31.40. தற்சமயம் 34.10 என்ற அளவில் (கடந்த வெள்ளியன்று) முடிந்திருக்கின்றது. ஒரு வருட குறைந்த விலையை தொடும் அளவில் இருக்கின்றது.

June 28, 2008 at 9:32 pm 3 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
June 2008
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30