Archive for August, 2008
ஒரு ருபாய், ஒரு கிலோ
செய்தி அலசல் என்ற புதிய பகுதியை இன்று முதல் தொடங்கலாமென்றிருக்கிறேன். முதலீட்டாளர்களாகிய நாம் செய்திதாட்களில் வெளிவரும் செய்திகளை படிப்பது மட்டுமல்லாமல், அது குறித்து அலசும் திறமையையும் வளர்த்துக் கொள்ள இப்பகுதி உதவும். உலகில் ஏதேனும் ஒரு நாட்டில் ஏற்படும் புரட்சி முதல் உள்ளுர் கோயில் திருவிழா செய்திகள் வரை அலசலாம். உலகம்,தேசிய, மாநில செய்திகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து அது குறித்து அலசி காய போடலாம். இதை நான் மட்டும் செய்ய போவதில்லை, நீங்களும் உங்கள் கருத்துக்களை அவசியம் தெரிவியுங்கள்.
கூடுமானவரையில், உங்கள் கருத்துகள் யாரையும் தனிப்பட்ட முறையில் தாக்காமல் இருத்தல் நலம்.
இந்த வாரம் தமிழக முதல்வர் ஒரு ருபாய்க்கு ஒரு கிலோ அரிசி நியாயவிலைக் கடைகளில் வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார். இதுதான் செய்தி.
தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகாலமாக தேர்தலில் வெற்றிபெற அரிசி மற்றும் காய்கறிகளின் விலை ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. குறிப்பாக அரிசி. தமிழக மக்கள் அரிசி உணவை தங்கள் வாழ்வின் முக்கிய அம்சமாக நினைக்கின்றார்கள். இதற்கு மாற்றாக கோதுமை உணவை அரசு ஒருமுறை பரிந்துரைத்து நியாயவிலைக் கடைகளில் கோதுமை வழங்க முற்பட்டபோது, தமிழக மக்கள் அத்திட்டத்தினை முற்றிலும் நிராகரித்து படுதோல்வியடைய செய்தனர்.
அரிசி உணவை பற்றி பல கதைகளும் நிலவுகின்றன. அரிசி உணவை சாப்பிடுவதால், முளை வளர்ச்சி அபரிதமாக இருக்கிறது என்றும், சர்தார்ஜீ மற்றும் தமிழன் இரயிலில் போகும்போது நடந்த சம்பவம் போன்று நிறைய கதைகள் இருக்கின்றன. அரிசி உணவு சாப்பிடுவதால் முளை வளர்ச்சி ஏற்படுகிறதா என்பது வேறு விஷயம். ஆனால், வணிக ரீதியில் பார்க்கும்போது அரிசி ஒரு முக்கிய வணிக பொருள். பங்குகளில் நிப்டி குறியீட்டில் உள்ள பங்குகள் அனைத்தும் எவ்வாறு Liquidity அதிகமாக உள்ளதோ, அரிசியும் Liquidityஅதிகமுள்ள வணிக பொருள். மற்ற விவசாய தானியங்களில் சில வருடத்தில் சில மாதங்கள் மட்டுமே தேவை அதிகமாக இருக்கும். ஆனால், அரிசி வருடத்தில் எல்லா காலங்களிலும் தேவை உள்ள விவசாய தானியம். எனவே, இதை வைத்து பணம் செய்யும் ஆபரேட்டர்கள் அதிகம் உண்டு. அதன் விலையை செயற்கையாக ஏற்ற பற்றாக்குறையை உண்டு பண்ணி விலையை ஏற்றி இலாபம் சம்பாதிப்போரும் அதிகம். இது ரொம்ப நாளாக நடந்து வரும் ஒன்றாகும். பழைய கருப்பு வெள்ளை படங்களில் பார்த்தோமென்றால் அப்பா வேடமிடத்திருக்கும் நடிகர்களை அவர்கள் மகன்கள் வீட்டில் அரிசி முட்டைகளை அடுக்கி வைத்திருக்கின்றதை வெளியே சொல்லி விடுவோம் என்று மிரட்டியிருப்பதை பார்த்திருப்பீர்கள்.
இரண்டு ருபாய்க்கு ஒரு கிலோ அரிசி என தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சியமைத்த தற்போதைய அரசாங்கம் அதை பல்வேறு இடருக்கிடையில் நிறைவேற்றவும் செய்தது. எத்தனை பேர் பயனடைந்தார்கள் என்பதைவிட அரிசி கடத்தல் அண்டை மாநிலங்களுக்கு பேஷாக நடந்து வந்தது. தற்போது விலைவாசி உயர்வு அதிகம் என்பதால், அரிசி விலையை செயற்கையாக ஏற்ற ஆபரேட்டர்கள் முயற்சி செய்வார்கள் என்பதாலும், அதன் விளைவை தமிழக அரசு மீது மக்கள் தேர்தலில் காட்டுவார்கள் என நினைத்து கூட, தமிழக அரசு இந்த திட்டத்தை அறிவித்து இருப்பதாகவும் கருதலாம். ஆனால் தேர்தலுக்கு நிறைய நாட்கள் இருக்கும்நிலையில் இவ்வாறான திட்டத்தினை தீடீர் என அறிவித்திருப்பதால், தமிழக அரசில் சில மாற்றங்கள் வருமென எதிர்பார்க்கலாம் என நினைக்க வாய்ப்பிருக்கிறது. அதற்கு தமிழக மக்கள் Positive Reaction வேண்டுமென என்று கூட இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது. ஆனால் தமிழகத்தின் தற்போதைய முக்கிய பிரச்சினை மின்வெட்டு என்றே நான் நினைக்கின்றேன். இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனர். அது குறித்து தமிழக நாளிதழ்களில் அரசு அறிக்கைகளை தற்சமயம் வெளியிட்டு வந்தபோதிலும், அது குறித்து உடன் நடவடிக்கை எடுத்தால் தமிழக மக்களின் கஷ்டம் நீங்கும் என நம்பலாம்.
Intraday Trading V
பங்கு சந்தையில் நுழைந்த ஒவ்வொருவரும் முதலில் ஈர்க்கப்படுவது தின வணிகத்தில்தான். குறிப்பாக எந்த அனுபவமும் இல்லாமல், குழுமங்களை பற்றிய அடிப்படை அறிவு இல்லாதவர்கள் கூட, இதில் மிகுந்த உற்சாகமாக ஈடுபடுவார்கள். சிலருக்கு முதல் சில தின வணிகங்களில் இலாபம் கூட கிடைக்கலாம்.இவர்கள் இதனை பங்கு சந்தை என்று பார்த்தால் கூட, என்னை பொறுத்தவரை இவர்களுக்கு பங்கு சந்தை என்பது ஒரு சூதாட்டக் கூடம் என்று தான் சொல்வேன். சிலர் முற்றிலும் அதிர்ஷ்டத்தை நம்பி மட்டுமே தின வணிகத்தில் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக நினைவில் கொள்ள வேண்டிய ஒரு விஷயம். வாரன் பப்பெட் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்கும். பங்கு சந்தை முதலீட்டை மட்டுமே மேற்கொண்டு உலக கோடீஸ்வரர்களில் ஒருவரானவர். 1960-களில் தொடக்கத்தில் முதலீடு செய்ய அவரிடம் தொகை இருந்தபோதிலும், சரியான விலையில் மட்டுமே முதலீடு செய்ய வேண்டுமென்று கிட்டத்தட்ட 10 வருடங்கள் காத்திருந்தார். அதற்கு பிறகு வந்த ஒரு பெரும் அமெரிக்க பங்கு சந்தை சரிவில் அனைவரும் விற்றுவிட்டு ஒடும்போது, இவர் பெரும் தொகையுடன் நுழைந்தார். பத்து வருடங்கள் காத்திருக்கும் அளவிற்கு பொறுமை. நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய மிக முக்கியமான ஒன்று.
தின வணிகத்தில் நாம் எவ்வாறு ஈடுபடபோகிறோம் என்பதை விட எங்கிருந்து ஈடுபட போகிறோம் என்பதை முதலில் பார்ப்போம். நாம் பொதுவாக கீழ்க்கண்ட வகையில் தின வணிகம் செய்து கொண்டிருக்கிறோம்.
1) பங்கு தரகு நிறுவனத்திலிருந்து
2) வீட்டிலிருந்து ( இணையம் முலமாக)
3) அலுவலகத்திலிருந்து (On the Road)
பங்கு தரகு நிறுவனத்திலிருந்து என்றால் காலை 9.30 முதல் மாலை 3.30 வரை அங்கிருப்போம். சந்தையின் தீடீர் சரிவு, ஏற்றம் போன்றவை நமக்கு உடனே தெரியும். அதற்கேற்ப நாமும் தயார்நிலையில் இருப்போம். அங்கு தவிர்க்க வேண்டியது என்னவெனில் . உங்களை போலவே நிறைய பேர் பல்வேறு வணிக குறிப்புகளுடன் வந்திருப்பார்கள். சிலர் அதைப் பற்றி வெளிப்படையாக பேசவும் செய்வார்கள். அவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு நீங்கள் காலையில் என்ன திட்டத்தில் வந்திருக்கின்றீர்களோ அதை மட்டும் பார்த்தால் நல்லது. முதலில் காலையில் உள்ளே வரும்போது நீங்கள் தின வணிகம் செய்யபோகும் பங்குகளுக்கான வணிக குறிப்புகளுடன் நுழைவது அவசியம். அங்கே போய் எது ஏறுதோ அதை பிடிப்போம் என “குதிரைப் பந்தய” நிலையில் நுழையவே கூடாது. அனுபவம் இல்லாதவர்கள் ஒரு பங்கிற்கு மேல் கவனம் செலுத்தமால் இருத்தல் நலம்.
சந்தை துவங்கிய பிறகு, நீங்கள் தின வணிகம் செய்யும் பங்குகளின் நிலையை மட்டும் கவனமாக பார்த்தால் போதும். அப்போதுதான் உங்கள் அருகிலுள்ளவர் ” Positive News வந்துடுச்சி. இவன் பாய போறான் பாரு. பார்த்துக்கிட்ட இரு” என்று சொல்லி distract செய்தாலும் நீங்கள் கவனத்தை விலக்காமல் இருக்க ஒரு அசாத்தியமான self-discipline தேவை. நீங்கள் அந்த “பாயும் புலியை” பார்த்துக் கொண்டே இருந்தால், உங்கள் Counters Close பண்ணி விடுவார்கள்.
வீட்டிலிருந்து செய்பவர்கள் என்றால் அங்கும் distractions இருக்க வாய்ப்புண்டு. முக்கியமாக இணைய தொடர்பு மற்றும் மின்சாரம். இணைய தொடர்பு துண்டிக்கப்படுதல் மற்றும் மின் தடை இவற்றை எதிர்பார்த்து அதற்கேற்ப கண்டிப்பாக Contingency Plans செய்து கொள்ள வேண்டும். இவை மட்டுமில்லாமல் Domestic distractions கூட இருக்க வாய்ப்புண்டு. “ஏங்க, சோப்பு தீர்ந்து போயிடுச்சி. வாங்கிட்டு வாங்களேன்!”. நீங்கள் கடைக்கு போய் சோப்பு வாங்கி வருவதற்குள், சந்தை உங்களை குளிப்பாட்டி விட்டிருக்கும்.
அலுவலகத்திலிருந்து, பயணத்தின்போது சிலர் தின வணிகம் செய்யலாம். அலுவலகத்திலிருந்து என்றால் ஒவ்வொரு தடவையும் சூப்பர்மேன் தன் உடையை மாற்ற மறைவிடத்திற்கு செல்வது போல செல்போனை துாக்கிக் கொண்டு, மறைவிடத்திற்கு சென்று உங்கள் பங்குகளின் நிலவரங்களை கேட்டுக் கொண்டிருப்பீர்கள். அலுவலகப் பணியும் பாதிக்கப்படும். பயணத்தின்போது Distractions மிகவும் அதிகம். செல்போனில் ஆர்டர்கள் சொல்லும்போது பிற இரைச்சல்கள் உங்களை பாதிக்கும். உங்கள் ஆர்டரை செல்போனில் நீங்கள் சொல்லும்போது “நேற்று இராத்திரி யம்மா” பாட்டு உச்சஸ்தாயில் ஒலித்துக் கொண்டிருக்கும். உங்கள் பங்கு தரகரும் சரியாக புரிந்துக் கொள்ளாமல் வேறு எதையாவது செய்யவும் வாய்ப்பிருக்கிறது.
முதலில் தின வணிகத்திற்கு தேவை என்று பார்த்தோமென்றால் மிகத் தெளிவான திட்டம். தின வணிகத்தில் ஈடுபடுபவர்கள் நிறைய பேர் ஸ்டாப் லாஸ் பற்றியே யோசித்திருக்க மாட்டார்கள். வாங்கும் விலை, இலக்கு விலை இவையிரண்டும் மட்டுமே தெரியும். ஸ்டாப் லாஸ் என்று கொடுத்திருந்தால் கூட அதை பொருட்படுத்துவதில்லை. இவ்வளவு இலாபம் என்று கணக்கிடும்பொழுதே இவ்வளவு நஷ்டம் மட்டுமே வரும் என்ற கணக்கீடும் முக்கியம்.
இரண்டாவது அம்சம் பொறுமை. ஆம். தின வணிகத்திலும் பொறுமை மிக முக்கியம். காலை 10.00 மணிக்கு வாங்கிய பங்கு அதன் இலக்கு விலையை மாலை 3.25 அளவில் கூட எட்டலாம். அடுத்த ஒரு மணிநேரத்திலேயே இலக்கு விலையை எட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது, அவ்வாறு எட்டாவிடில் அதை விட்டுவிட்டு நமது திட்டத்தில்லாத வேறு ஒரு பங்கிற்கு தாவுவது தவிர்க்கப்பட வேண்டும்.
முன்றாவது சுய கட்டுப்பாடு. உங்கள் பங்குகள் அதன் இலக்கினை ஒரு மணி நேரத்திலேயோ அதற்குள்ளேயே எட்டி விட்டால் சந்தையை விட்டு ஒதுங்கியிருப்பது உத்தமம். சந்தையை விட்டு வெளியே செல்ல வேண்டுமென்று சொல்லவில்லை. அவ்வாறு செய்வதும் தவறில்லை. சந்தையில் வேறு எந்த வித தின வணிகமும் அன்றைய தினம் செய்யாமல் இருப்பது உத்தமம்.
தின வணிகத்தில் மிகவும் அடிப்படையான யுக்திகளை அடுத்த பகுதியில் பார்க்கலாம்.
29-08-2008
ஒரு வழியாக பண வீக்கம் சிறிதே குறைந்திருக்கிறது. ஆனாலும், நம் சந்தையால் நண்பகலில் ஏற்பட்ட Selling Pressure தாக்குபிடிக்க முடியாமல் -78 புள்ளிகள் சரிந்துவிட்டது. குறிப்பாக கரடிகளுக்கு நல்ல வேட்டையாக இருந்திருக்கும்.
இன்றைய சந்தைக்கு வருவோம். அமெரிக்க சந்தை +200 புள்ளிகளுக்கு மேலாக முடிந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் Positive ஆகவே தொடங்கியுள்ளன. நம் சந்தை Gap up ஆக தொடங்கினாலும், சமாளிக்குமா என்பது கேள்விக்குறிதான். சந்தை +65 முதல் +90 புள்ளிகள் அதிகமாக gap up தொடங்கும் என எதிர்பார்க்கலாம்.
நிப்டி குறியீட்டில் பெரும் பங்கு வகிக்கும் நிறுவனங்களான ரிலையன்ஸ், ஓ என் ஜீ சி, ஐ சி ஐ சி ஐ வங்கி போன்ற பங்குகளில் நிறைய Long Positions எடுத்திருக்கிறார்கள். கரடிகள் மிகுந்த கவனத்துடன் அவற்றை கண்காணித்து வருவதாக தோன்றுகிறது. ஒரு அளவுக்கு மேல் சந்தை சுணக்கமடையும் பட்சத்தில், அவர்கள் அந்த பங்குகள் மேல் தங்கள் தாக்குதலை தொடங்கி சந்தையை மேலும் சரிய வைத்துவிட வாய்ப்பிருக்கிறது. இன்றைய தினம் வாரத்தின் கடைசி நாள் என்பதாலும், விடுமுறை தினங்களில் எதுவும் நிகழலாம் என சிறு முதலீட்டாளர்கள் இன்று பெரிய அளவில் Positions ஏதும் எடுக்க மாட்டார்கள். சந்தையின் Volume குறைவாகதான் இருக்கும்.
சந்தையின் டெக்னிகல் சார்ட் சந்தை சரிய வாய்ப்பு உள்ளதாகவே காட்டுகிறது. டெக்னிகல் சார்ட் என்பது 100% முற்றிலும் நம்பதகுந்தவை இல்லையென்றாலும், தற்போதைய முதலீட்டாளர்களின் மனம் 3800-லேயே இருக்கிறது. எனவே இன்றைய சந்தை மேலே ஏறினாலும், Profit Booking காரணமாக கீழே இறங்க வாய்ப்புண்டு. சந்தை இன்று Negative அல்லது Flat ஆக முடிந்தாலும் ஆச்ரியபடுவதற்கில்லை.
Fundamental Analysis மறந்து விட்டோம் என நினைக்கிறேன். அது பற்றி பதிவுகளை விடுமுறை நாட்களில் பதிவேற்ற முயற்சி செய்கிறேன்.
Happy Weekend!
Post Market:
Well, Up 146 pts! Something fishy!
அமெரிக்க சந்தை தற்போது gap down ஆக தொடங்கியிருக்கிறது. எத்தனை பேர் வார இறுதியில் துாக்கத்தை தொலைக்க போகிறார்களோ!
Recent Comments