Archive for April, 2008

30.04.2008

           எதிர்மறை செய்திகள் ஏதும் இல்லாத நிலையில் சந்தை Positive ஆக தொடங்க வேண்டும்.  Dabur India குழுமத்தின் ஆண்டறிக்கை வெளியாகும் நாள். நல்ல லாபம் தரும் ஆண்டறிக்கையை தரும் என எதிர்பார்க்கின்றேன்.

Watch out Dabur India!

 

டாபர் குழுமம் நல்ல காலாண்டு அறிக்கையை கொடுத்திருக்கின்றது.  மேலும் டாபர் பார்மா குழுமத்தின் 70 சதத்திற்கும் மேற்பட்ட பங்குகளை விற்று  FMCG துறையில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாக தகவல் தொடர்பு அறிக்கை தெரிவிக்கின்றது.

April 29, 2008 at 6:42 pm Leave a comment

Tiger Cubs

             இப்பகுதியில் நான் அவ்வப்போது சில பங்குகள் மற்றும் துறைகள் பற்றிய என்னுடைய புரிதலை எழுதலாம் என்று இருக்கின்றேன்.

            இப்பகுதியில் குறிப்பிடப்படும் பங்குகளை நீங்கள் உடன் வாங்க வேண்டும் என்ற கட்டாயமில்லை.  மேலும் அவை பரிந்துரைகளும் அல்ல. ஒரு பங்கினை பற்றி என்னுடைய புரிதலே.

            இப்பகுதியில் வரவிருக்கும் பங்கினுடைய EPS, Inline Growth, P/E, Bar Patterns, Candlestick patterns, Hockystick pattern, Matchstick pattern etc போன்ற Technical Details எழுத போவதில்லை. ஆரம்ப காலத்தில் அவைகள் எனக்கு அலர்ஜீயை ஏற்படுத்தியன.

     தொழில்நுட்ப விவரங்கள் முக்கியம்தான். ஆனால் அத்தொழில்நுட்ப விவரங்கள் பற்றி ஊடகங்களில் அறிந்து, அந்த பங்கினை பற்றிய    Commonsense Approach இல்லாமல் வாங்கும்போது சந்தை ஏற்ற இறக்கங்களில் வாங்குதல்-விற்றல் பற்றிய தெளிவான முடிவுகள் நம்மால் எடுக்க இயலாமல் போகலாம்.

      இப்பதிவில் குறிப்பிடும் பங்குகள் அனைத்தும் நீண்ட கால முதலீட்டுக்கு மட்டுமே. நீண்ட காலம் என்பது குறைந்தது நான்கு வருடங்கள் (கஷ்டந்தான் இல்ல), சரி, நாற்பது மாதங்களுக்கு மேல் வைத்திருந்தால் முதலீடு பெருக வாய்ப்பு உண்டு.

    குறைந்தது வங்கி வைப்பு சேமிப்பு வட்டியை விட அதிகமாக கிடைக்கும். ஆரம்ப காலத்தில்  Intraday, Swing Trade போன்றவற்றில் இலாபம் வருவதை போல் தெரிந்தாலும் நீண்ட கால முதலீட்டில் வரும்   consistency      இவற்றில் இருக்காது.

அது மட்டுமின்றி, வேறு சில நன்மைகளும் உண்டு.

புள்ளி விவரங்களை கூடிய மட்டும் இப்பகுதியில் தவிர்க்க இயலுகிறேன்.

 

 Ok, let’s sharpen our weapons. Targets coming…………………..

 

 

April 25, 2008 at 3:29 pm Leave a comment

Hunter’s Mind

நான் நேற்று மாலை தேநீர் அருந்த சென்ற போது டீக்கடை பாய் என்னை பார்த்து

“என்னா சார், ஷெர் மார்க்கெட்ல கரெக்ஷன் வர போதாமே, உண்மையா? போட்ட பணம் எல்லாம் கோவிந்தா தான்”.

நான் அதிர்ந்து “பாய், உங்களுக்கு யார் சொன்னா?”.

 “எல்லாந்தான் பேப்பர்லா போட்டுருக்கே”.
 இன்றைய பங்கு சந்தையில் ஊடகங்களின் பங்கு மிகவும் அதிகம்.  இந்த வார ஏறக்குறைய அனைத்து ஊடகங்களிலும் பங்கு சந்தையைப் பற்றி கிட்டதட்ட ஒரே செய்திதான்.
அதாவது, கரடிகளானது துாக்கத்திலிருந்து எழுந்து காபி குடித்து, தலை சீவி, உடையணிந்து, தங்கள் அலுவலகங்களுக்கு செல்ல தயாராகி விட்டன என்பது தான்.

எந்த வினாடியிலும் சந்தை தலைகுப்புற கவிழ்ந்து விடலாம்.

 

நம் நாட்டு கோடைக்காலம், மழைக் காலம் இவற்றைப் பற்றியும் நம்முடைய கருத்துகள் இவைதான்.

“போன வருசம் வெயிலைவிட இந்த வருசம் அதிகம் தான்”.

நமது பங்கு சந்தை என்னவோ கரடிகளின் கட்டுபாட்டில் வர இருப்பது தவிர்க்க இயலாதுதான். ஆனால் சரிவு மிக பயங்கரமாக இருக்காது என்றுதான் தோன்றுகிறது.  சென்ற வருடத்தில் ஏறிய விதந்தான் மிகவும் பயமுறுத்தும் வகையில் இருந்தது.

முதலீட்டாளர்களுக்கு கரடிகளை பிடிக்காது. காளைகளையே பிடிக்கும். சிலை கூட வைத்திருக்கின்றோம். நாட்டின் வளர்ச்சி பங்கு சந்தையின் புள்ளிகளை வைத்து கணக்கிடப் படுவதால், காளைகளே புள்ளிகளை ஏற்றுவதால் காளை இரசிகர் மன்றத்தில் அனைவரும் இணைந்துள்ளோம்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்கு சந்தை புள்ளிகள் மட்டுமே காரணியாக இருக்க முடியாது.

திரும்ப படித்து பார்க்கும்போது இக்கட்டுரையானது மிகவும் எளிமையாகவும், புதிய முதலீட்டாளர்களுக்கு தெரியாத எந்த விஷயத்தையும் இக்கட்டுரையில் குறிப்பிடவில்லை என தெரிகிறது.  ஆனால் இது அடிப்படை.

சந்தை சரியும் போது முதலீட்டாளர்களுக்கு தாங்கள் வாங்கிய பங்குகளை பற்றியும், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பற்றியும் பெருத்த சந்தேகம் எழுகின்றது. சரிவின்போது அடிப்படையை மறந்து விட்டு அச்சம் நம்மை சூழ்ந்து கொள்வதை ஒவ்வொரு முறையும் பார்க்கின்றோம். அத்தகைய நேரங்களில் முதலீட்டாளர் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் சந்தேக மனப்பான்மையுடன் தான் பார்ப்பார்.

 

இந்த மனநிலையின் இரு நிலைகள்.

“செல்லம், அப்பாவுக்கு முத்தா கொடு!”

“சனியனே, தள்ளிப் போ!”.
இந்த மனநிலைக்கு ஊடகங்கள் ஆற்றும் பணி மிகவும் குறிப்பிடதக்கது. இது குறித்து தொடர்ந்து பார்ப்போம்.

 

 

April 25, 2008 at 2:46 am Leave a comment

Older Posts


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
April 2008
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930