Archive for March, 2009
30.03.2009
கடந்த உயர்வுகள் இந்த வாரத்தில் சோதிக்கப்படும் வாய்ப்புகள் நிறையவே இருக்கின்றன. ஆசிய சந்தைகள் விளிம்பில் ஆடிக் கொண்டிருந்தாலும், இன்றைய தினம் நமது சந்தை ஒரு Selling Pressure துவங்கும் வாய்ப்பே இருக்கிறது. குறிப்பாக, ரிலையன்ஸ் குழுமங்களின் போக்கை வைத்தே இன்றைய சந்தை ஆட வாய்ப்பு இருக்கிறது.
வங்கி பங்குகள் கடந்த மாதத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டமையால் அவைகள் மேலேற வாய்ப்பு இருக்கின்றன. 3150 என்ற நிலை ஒரு முக்கிய நிலையாக தற்போது பார்க்கப்பட்டு வருகிறது.
உலக சந்தைகளின் உயர்வை வைத்தே நமது சந்தையின் உயர்வும் இருக்கிறது. சதவீதம் சற்று அதிகமாகவே இருக்கிறது. எல்லோர் மனதிலும் இந்த உயர்வுகள் ஷார்ட் கவரிங் என்கின்ற மனநிலையே இருக்கிறது.
இன்றைய சந்தை -58 முதல் 65 வரை ஆட வாய்ப்பு இருக்கிறது. 15-35 புள்ளிகளில் முடிய வாய்ப்பு உள்ளதாக நினைக்கிறேன். பார்ப்போம்.
Read Dislciamer
Good Morning to you all!
27-03-2009
உலக சந்தைகள் எல்லாமே கன ஜோராக மேலேறி கொண்டிருக்கிறன. நமது சந்தையும் நீண்ட காலமாக எட்ட முயன்று கொண்டிருந்த 3000 என்ற நிலையை வெகு எளிதாக கடந்து விட்டது. அடுத்தது என்ன?
3150 என்ற நிலையை கடந்து இரு நாட்கள் வலுவாக முடிந்தொலாழிய இந்த காளை ஒட்டம் நீடிக்காது. குறிப்பாக, ரிலையன்ஸ் குழும பங்குகளில் நடைபெறும் ஷார்ட் கவரிங் ஏறக்குறைய முடியும் நிலையில் உள்ளது.
இன்றைய தினம் பெரிய தலைகள் (ம்யூச்சுவல் நிறுவனங்கள்) விற்காமல் இருந்தால், சந்தை இன்றும் மேலேற வாய்ப்பு இருக்கின்றது. சந்தையானது 40 புள்ளிகளை இழக்க ஆரம்பித்தால் வெகு வேகமாக எல்லோரும் விற்க ஆரம்பிப்பார்கள். எந்த நேரம் வேண்டுமானாலும் கவிழ்ந்து விடலாம் என்ற நிலை தான் தற்போது இருக்கிறது. 2500 என்ற பழைய சப்போர்ட் நிலைக்கு சந்தை வெகு வேகமாக திரும்பக் கூடும்.
இன்றைய சந்தையின் துவக்கத்தை தவற விடாதீர்கள்.
Read Disclaimer.
Have a Happy Weekend!
26-03-2009
அன்புள்ள கார்த்திகேயன்,
சில தினங்களில் சந்தை இவ்வாறு தான் இருக்கும் என கூற முடியாது. அத்தகைய தினங்களில் பொதுவாக நான் எழுதுவதில்லை. பொதுவாக நமது சந்தை ஒரு தமிழ் படத்தில் இருக்கும் அடுத்த காட்சியை ஊகிக்கக் கூடிய அளவிலே இருக்கும். ஆனால் சில நாட்களில் ஆபரேட்டர் ரீலை மாற்றி போட்டது போல் தாறுமாறாக ஆகிவிடும்.
அது போன்ற சமயங்களில் நான் எழுதியதை நீங்கள் படித்து செல்வதை விட உங்களின் சொந்த முடிவுகளுடன் சந்தைக்கு போவதே நல்லது. காலையில் 8.30 மணி வரைக்கும் எவ்வித அபிப்பிராயங்களும் தோன்றாது. சந்தை தொடங்கி முதல் அரை மணி நேரம் கழித்துத் தான் ஒரு தெளிவான முடிவு ஏற்படும்.
அது போன்ற சமயங்களில் ஏதாவது எழுதி உங்களையும் என்னையும் நான் குழப்பிக் கொள்ள விரும்பவில்லை. அப்படியே விட்டு விடுகிறேன். அவ்வளவே.
இன்றைய தினமும் அப்படியொரு நாளே.
Good Morning to you all!
Recent Comments