Posts filed under ‘Non-linear Writing’
சித்தர் பாடலும், சீவக சிந்தாமணியும் சூப்பர் ஹீரோக்களின் சஞ்சலங்களும்
கேளடா, மானிடா, காதலெண்ணும் ஒரு கண்ணி
வெளியே சுற்றித் திரியும் ஒரு பன்னி,
வீணாக பெண்களை மனதில் எண்ணி
துடிக்கிறடா கனவில் உந்தன் ……………..
– தாடிச் சித்தரின் முழுமை பெறாத ஒரு பாடல், பழங்கால ஒலைச்சுவடியில் காணப்பட்டது. காலம் பதினெட்டாம் நூற்றாண்டு.
உங்களில் பலருக்கு மாணவ பருவத்தை அறவே மறந்து போயிருக்கலாம். பள்ளிகளில் கூடப் படித்த பெண்களை தவிர கற்றவை அனைத்துமே மறந்து போயிருக்கலாம். அது நியாயம்தான். பரீட்சையின்போது நினைவுக்கு வராத ஒரு விடை பள்ளிக்கு வெளியே சென்றதும் நினைவு வரும் அனுபவம் அனைவரும் அடையும் ஒன்றே. ஆனால் ஒரு மழைக்கால இரவில் (ஒவ்வொரு பிரபல கதாசிரியருக்கும் உள்ள தனித்துவம் போல, எனக்கு மழைக்கால இரவு) உறக்கம் வராத நேரத்தில் எனக்கு தமிழின் ஐம்பெரும் காப்பியங்கள் யாவை என்ற கேள்விக்கு பதில் பளீரென இருபது ஆண்டுகளுக்கு பிறகு நினைவு வந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பிதான் ஆகவேண்டும்.
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றுதான் சீவக சிந்தாமணி. சீவகன் என்னும் இளவரசனே கதை நாயகன். இந்த இளவரசன் எவ்வாறு அரசானாகிறான் என்பதுதான் இக்காப்பியத்தின் கதை. சுப முடிவுள்ள காப்பியம்.
சித்தர்கள் சொன்னார்கள் என தமிழகத்தில் நிறைய சொற்றொடர்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. சித்தர் பாடல்கள் எனவும் புத்தகங்கள் பல உள்ளன. உண்மையில் சித்தர்கள்தான் இவற்றை எழுதினார்களா என்பது முற்றிலும் நம்பிக்கை சார்ந்ததாகவே உள்ளது.
சீவகன் மாபெரும் வீரன். இளவசரனாக பிறந்தும் கர்வம் கிஞ்சித்தும் இல்லாதவன். பிறன்மனை நோக்காதவன். எட்டு மனைவிகள். வாரத்திற்கோ ஏழு நாட்கள்தான்.
சித்தர்களை யாரும் பார்த்ததில்லை என்பதால் இத்தகைய பாடல்களுக்கு பெரிய மரியாதை இருந்தது. இதுவே இப்பாடல்களின் நம்பகதன்மையை பெரிதும் சந்தேகத்துள்ளாகி விட்டது. அடாபுடாவென எழுதினால் சித்தர் பாடல் என்ற கட்டுக்கோப்பினை உருவாக்கி புதிய பாடல்கள் இதில் வந்து கலந்து விட்டன.
குதிரையின் மீதேறி கடும் துரத்தலுக்கு பிறகு வனக் கொள்ளையர் கும்பலை காவல் துறையினரிடம் ஒப்படைத்த முகமூடி வீரர் மாயாவி ஆயாசத்துடன் தன் குகைக்கு திரும்பி, தன் உதவியாளரிடம் தவிடு ஒத்தடத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். இன்னும் சில நாட்களுக்கு உள்ளாடை அணிவதில்லை என்று முடிவு செய்துக் கொண்டார்.
கோதம் நகரில் தன் நண்பி மேரி ஜேனுடன் சரசத்தில் ப்ரூஸ் வாய்னே இருந்தபோது அவரின் ஜன்னல் வழியே வவ்வால் படம் போட்ட விளக்கு எரிய ஆரம்பித்தது. “தாயோளி, எந்த நேரத்தில் கூப்டறதுன்னு ஒரு விவஸ்தை இல்லை” என அலுத்துக் கொண்டே தன்னுடைய சீருடையை அணிய விரைந்து சென்றார். சீருடை போடுறவன்களை இனிமே சிநேகம் பண்ணிக்கக் கூடாது என முடிவு செய்த மேரி ஜேன் குப்புற படுத்துக் கொண்டாள்.
மிஸ்டர் பன்டாஸ்டிக் என்றழைக்கப்படுகிற ரீட் ரிச்சர்ட்ஸ் தன்னை யாரும் கவனிக்கவில்லை என ஊர்ஜிதம் செய்துக் கொண்டு அந்த மூத்திர சந்தில் நுழைந்தார். கதவிலக்கம் 58-ஐ நெருங்கிய அவர் கதவை தட்ட, கதவும் திறந்தது. கதவை திறந்தவனுக்கு வயது நாற்பத்தியெட்டு இருக்கலாம். கூட இரண்டோ, மூன்றோ குறையலாம். அவன் பார்வையில் கேள்வி இருந்தது. “”உடும்பு தைலம் ஒரு பாட்டில் அவசரமாக வேண்டும்" என்று கேட்ட ரீட் ரிச்சர்ட்ஸ் குரலில் கெஞ்சல் இருந்தது. நாளைய தினம் அவரின் கல்யாண நாள்.
பின் குறிப்பு இந்த பதிவு நான்-லீனியர் என்ற முறையை பின்பற்றி எழுதப்பட்டது. இதை நீங்கள் படித்து ஏதாவது புரிந்துக் கொண்டால் இதை முதன் முறையாக எழுதிய என்னுடைய தவறுதான். வருங்காலத்தில் இது போன்ற தவறுகள் ஏற்படாது என உறுதியளிக்கிறேன்.
“சீவக சிந்தாமணி” என்று வார்த்தையை கூகிளில் தேடி இந்த பதிவை கண்டடைந்தவர்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Recent Comments