Archive for April, 2009

29-04-2009

      இம்மாதத்தின் ப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட் முடிவடையும் நாள்.  மாதத்தின் கடைசி நாளும் கூட.  இது போன்ற சமயங்களில் சந்தை இவ்வாறு தான் இருக்கும் என தெளிவாக கணிக்க இயலாது.  எனினும், உலக சந்தைகளில் தற்போது ஏற்பட்டு வரும் சுணக்கத்தை பார்க்கும்போது (குறிப்பாக அமெரிக்க சந்தை) இது நமது சந்தையையும் பாதிக்கும் என தெரிகிறது.

        டோ 8000 என்ற நிலையை தாண்டி சில வாரங்கள் ஆகியும் அதற்கு மேல் முன்னேற முடியவில்லை.  ஒரு நல்ல கெட்ட செய்திக்காக காத்துக் கொண்டிருக்கிறாற்போல தெரிகிறது.  அது கிடைத்ததும் மீண்டும் பின்னோக்கி செல்ல வாய்ப்பு அதிகம்.

      இன்றைய சந்தையை பொறுத்த வரையில் தின வணிகர்களும் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய சந்தை.  சிறு முதலீட்டாளர்கள் இன்னும் ஒரு வாரம் வரையிலாவது ஒதுங்கி இருப்பது நல்லது. 

       நிப்டி பங்குகளில் நிறைய Over Bought Zone  இருக்கின்றன.  குறிப்பாக ரிலையன்ஸ் நிறுவன பங்குகள். 

     பொறுமை.  பொறுமை.  பொறுமை. தற்சமயம் இதுதான் முக்கியம்.  (நான் சாந்தி சாந்தி சாந்தி என எழுதலாம் என்றிருந்தேன்.  உடனே யார் அந்த சாந்தி என நிறைய பின்னுட்டங்கள் வர வாய்ப்பிருப்பதால் மாற்ற வேண்டியதாகிவிட்டது.)

    Read Disclaimer!

     Have a good day!

April 29, 2009 at 7:54 am 5 comments

27-04-2009

      இம்மாதம் முடிய இன்னும் நான்கு தினங்களே உள்ளன.  நமது சந்தையோ 3300 என்ற நிலையில் மிகவும் வலுவாக உள்ளது. நடுவில் ஏற்பட்ட தள்ளாட்டங்களும் அதை மையப்படுத்தியே அமைந்துள்ளன.  இது சிறிய முதலீட்டாளர்களுக்கு ஒரு போலியான நம்பிக்கையை வரவழைக்கும் செயலாகவே நான் பார்க்கிறேன்.

        எது நடந்தாலும் 3300 என்ற நிலை மிகவும் வலுவானது அதனை தாண்டி சந்தை போகாது என உறுதியாக நம்ப ஆரம்பித்து விடுகிறார்கள்.  சந்தையின் அச்சாணிகளாக இருக்கும் குழுமங்களின் காலாண்டு அறிக்கைகள் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை.  ஆனால் ஊடகத்தில் அதைப் பற்றிய பெரிய அளவில் அலசல்கள் இல்லை.  உதாரணமாக, ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி போன்றவை.

       தற்போது ஆசிய சந்தைகள் சற்று பலமிழந்து காணப்படுகின்றன.  நமது சந்தை ஆரம்பத்தில் உயர்ந்து பின்னர் செல்லிங் பிரஷர் காரணமாக மெள்ள மெள்ள இறங்கவும் வாய்ப்பு உண்டு. சில சிறிய துறைகள் ஏற்றம் காண வாய்ப்புண்டு.  அவற்றில் ஷார்ட் கவரிங் நடப்பதால்.

       சந்தையின் உண்மையான நிலை தற்சமயம் 2800 என்ற நிலையில் இருப்பதாகவே எனக்கு தோன்றுகிறது.  அதையும் தாண்டி இறங்கினால் சந்தை வெகுவாக இறங்க வாய்ப்பும் உண்டு.  நீண்ட கால முதலீட்டாளர்கள் சற்று பொறுப்பது நல்லது என தோன்றுகிறது. 

       தேர்தல் காலத்தில் சந்தை இறங்கும் வாடிக்கையும் தற்போது மாறியிருக்கிறது. வட நாட்டில் நடந்த இரண்டாம் கட்ட தேர்தலும் சந்தையை பெரிய அளவில் பாதிக்கவில்லை.  இந்த இயல்பிற்கு மீறிய செயல் பின்னர் சந்தையை பாதிக்க வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கிறேன்.

       தற்போதைய சூழலில் காத்திருத்தலே நல்லது.

      Read Disclaimer.

      Good Morning to you all!

April 27, 2009 at 8:21 am 2 comments

23-04-2009

         இன்றைக்கு இரண்டாவது கட்ட பாராளுமன்ற தேர்தல்.  இந்தியாவின் முக்கிய வணிக மாநிலமாகிய மகாராஷ்ட்ராவிலும் தேர்தல் நடக்கிறது.  இதன் தாக்கம் சந்தையிலும் காணப்படும்.

      சந்தை ஊசலாட்டத்துடன் காணப்படும்.  இறக்கத்துடன் முடியவே வாய்ப்புண்டு என நினைக்கிறேன்.

     வேறென்ன சொல்வது இன்றைய சந்தையை பற்றி.

     Good Morning to you all!

April 23, 2009 at 8:35 am 3 comments

Older Posts


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
April 2009
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930