Archive for January, 2009
29-01-2009
வெகு உற்சாகமான அமெரிக்க சந்தை. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகளும் அப்படியே. கடந்த இரண்டு நாட்களாக நமது சந்தையும் ஏற்றம் கண்டுள்ள நிலையில், இன்றும் அது தொடரும் என எதிர்பார்க்கலாமா?
இன்றைக்கு F & O முடியும் தினம் என்பதால், சந்தை ஊசலாட்டத்தில் காணப்படும். அமெரிக்க சந்தை உயர்வு, பெட்ரோல் விலைக் குறைப்பு பற்றிய அறிவிப்பு போன்றவற்றால் சந்தை நண்பகல் வரை மேலேறியே காணப்படும். இந்த நிலையை தக்கவைத்துக் கொள்ளுமா என்பது நண்பகலுக்கு பின்னால்தான் தெரியும். ஐம்பது புள்ளிகளை நண்பகலுக்கு பின்னால் இழக்க வாய்ப்புள்ளது என கருதுகிறேன்.
சத்யதிற்கு இன்று தான் F & O கடைசி நாள். இன்றும் சிறிது மேலேற முற்படும். இப்போதைக்கு அக்குழுமத்தை வாங்குவது ரிஸ்க்தான். ஏனென்றால் சந்தை இறங்கும்போது முதலில் கரடிகள் தாக்குவது தகவல் தொழில்நுட்ப துறையைதான். அந்த நேரத்தில் இந்த குழுமமானது மிக கடுமையாக தாக்குதலுக்கு உள்ளாகும்.
எதிர்பார்த்த அளவில் வங்கித் துறை பங்குகள் இன்னும் மேலேற வில்லை. இன்றாவது அதை எதிர்பார்க்கிறேன்.
சந்தையானது 115 முதல் 28 வரை ஆடும். முடிவு 45 முதல் 68 வரை முடிய வாய்ப்பு உண்டு.
Good Morning to you all!
28-01-2009
அமெரிக்க சந்தை 50 புள்ளிகளுக்கு மேலாக முடிந்திருக்கிறது. நமக்கோ F & O முடிய இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில் இன்று நம் சந்தை மேலேற வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக வங்கி பங்குகளில் நிறைய விற்றநிலையில் உள்ளதாலும், நல்ல காலாண்டு அறிக்கைகளை கொடுத்ததாலும் அத்துறை பங்குகள் மேலேற வாய்ப்பு உள்ளன. இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் யெஸ் பேங்க் போனற பங்குகளை கூர்ந்து கவனியுங்கள்.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு பெருத்த மாற்றத்தை எதுவும் ஏற்படுத்தாது என நினைக்கிறேன். எல்லோருக்கும் தெரிந்த ஒரு விஷயத்தை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. அவ்வளவுதான். காலையில் சற்று சுணக்கமாக தொடங்கினாலும், போகப்போக மேலேற வாய்ப்புண்டு என்றே நினைக்கிறேன்.
இன்றைய நமது சந்தை 95 முதல் 25 வரை ஆடும் என எதிர்பார்க்கிறேன். இதுபோன்ற சமயங்களில் வால்யூம் குறைவாக இருப்பதால், சந்தை இன்னும் அதிகமாக மேலேறவோ அல்லது கீழிறிங்கவோ வாய்ப்புண்டு என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
நம் அரசியல்வாதிகளுக்கு வரலாற்றை பற்றி அக்கறை இல்லை. நாளை நம்மை வரலாறு எவ்வாறு சித்தரிக்கும் என்பதில் ஆர்வமும் இல்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம் … சரி விடுங்கள். ஆனால் நேற்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி திரு ஆர் வி வெங்கட்ராமன் அவர்களை பொறுத்த வரையில் அவர் தொலை நோக்கு பார்வையில் தீட்டிய திட்டங்கள் மற்றும் உணவு பற்றாக்குறை இருந்தபோது அவர் செயல்பட்ட விதங்கள் அனைத்தையும் வரலாற்றை புரட்டி பார்த்ததால் நாம் இன்று எப்படிப்பட்ட ஒரு மனிதரை இழந்திருக்கிறோம் என தெரியும்.
பொதுப்பணித் துறை மற்றும் நிதி அமைச்சர் போன்ற பதவிகளை வகித்தவரும், இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியுமான திரு ஆர் வி வெங்கட்ராமன் ( 98 ) மறைவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். சிறந்த நிர்வாகி மற்றும் Visionary என்ற அம்சங்களை கொண்ட சில அரசியல்வாதிகளில் இவரும் ஒருவர் என்பதால் இவரின் மறைவிற்கு அஞ்சலி செலுத்துகின்றேன்.
27-01-2009
நேற்றைய அமெரிக்க சந்தை உயர்ந்தே முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் விடுமுறை காரணமாக, ஜப்பான் சந்தை மட்டுமே தற்போது ஏற்றத்தில் துவங்கியுள்ளது. சீன சந்தை புது வருட கொண்டாட்டம் காரணமாக விடுமுறை. எருது வருடமாம். சென்ட்டிமென்டாக நல்ல வருடம்.
நமது சந்தையில் Futures & Options Contract முடிய இன்னும் மூன்று வணிக தினங்களே உள்ள நிலையில் சந்தை எப்படி வேண்டுமானாலும் ஆடலாம். சந்தை மீண்டும் 3000 என்ற நிலையை தொடும் சாத்தியமும் தற்சமயம் இருக்கிறது.
வங்கிக் குழுமங்கள் அனைத்துமே நல்ல காலாண்டு அறிக்கைகளை கொடுத்துள்ளன. அவற்றில் ஒரு ஏற்றத்தை எதிர்பார்க்கலாம். அது போல ரியல் எஸ்டேட் மற்றும் மெட்டல் குழுமங்கள் மிகவும் சரிந்துள்ளன. அவற்றில் காளைகள் புகுந்து ஏதேனும் செய்வார்கள் என நம்பலாம்.
இன்றைய சந்தையை மிகச் சரியாக கணிக்க இயலாது என்ற போதிலும், சந்தையானது 88 முதல் 12 வரை ஆடலாம். முடிவு சுபமாக இருக்கும் என நினைக்கிறேன்.
Good Morning to you all!
Recent Comments