Archive for June 12, 2008
Discussion #1 The Verdict
உங்கள் முடிவுகளை மற்றவர்கள் ஏன் பார்க்கக் கூடாது என்று நினைக்கிறீர்கள் என்று தெரியவில்லை. 13 பேர் கருத்து தெரிவித்தீர்கள். ஒரே ஒருவர் மட்டுமே பின்னுாட்டத்தில் தெரிவித்திருந்தார். ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டது போல இது Two-way Communication . உங்கள் கருத்துக்களும் முக்கியம்.
நல்லது. முடிவை தெரிந்து கொள்ளும் முன் Discussion #1 Investment Basics மற்றொரு தடவை நன்றாக படித்து விடவும். உங்கள் முடிவுகளில் பெரும்பாலும் ( 10 பேர்) நகை கடையையும், ரியல் எஸ்டேட் வணிகத்தையும் விரும்பினர். இரண்டு பேர் மட்டும் டிவிடி மற்றும் Blue Metals கடைகளை தேர்வு செய்தனர்.
Mr. X என்பவர் ஆளுங்கட்சிக்கு வேண்டியவர். எல்லோரும் ஏதோ ஒரு கட்சியின் உறுப்பினராகவோ, அனுதாபியாகவோ இருப்போம். ஒரு வணிகம் நடத்துபவர் கூட அதில் விலக்கல்ல. ஆனால், அது அவர் நடத்தும் வணிகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்றால் அதில் விலகி இருப்பதே அவருக்கு நல்லது. நமது தொழிலதிபர் Mr. X நடத்தும் இரண்டு கடைகள் ( DVD Shop மற்றும் Blue Metals) ஆகியவை முழுவதும் சட்டத்திற்குட்பட்டு (fully legalized) நடக்கும் தொழில்கள் என்று சொல்ல முடியாது. ஒரு தொழில் முழுவதும் சட்டத்திற்குட்பட்டு நடக்கவில்லையென்றால், அதில் செய்துள்ள முதலீட்டினை திரும்ப பெறுவது என்பது முழுக்க சாத்தியமல்ல ஒன்று. மேலும் கடுமையான போட்டியாளர்கள் உள்ள நிலையில், அரசியல் சூழ்நிலையில் மாற்றம் நேர்ந்தால், வணிகம் கடுமையான விளைவுகளுக்கு உள்ளாகும். எந்த அளவிற்கு இலாபமோ அந்த அளவிற்கு ரிஸ்க் கூட. சமயத்தில் உங்கள் முதலீட்டு தொகை கிடைக்காமல் போகக் கூட வாய்ப்பு உண்டு அல்லவா!
ரியல் எஸ்டேட் மற்றும் நகை வணிகத்தில் முக்கியமான ஒன்று நல்ல பெயர் (Goodwill). உங்கள் வாடிக்கையாளர்கள் அனைவரும் நீங்கள் கொடுக்கும் நகைகள் மற்றும் தேர்ந்தெடுக்கும் இடங்கள் அனைத்தும் முழுவதும் நம்பகதன்மை கொண்டவை என்று நம்பினால் மட்டுமே வணிகம் செய்வார்கள். நமது தொழிலதிபர் நடத்தும் மற்ற இரு கடைகளில் ஏதேனும் ஒரு அசம்பாவிதம் ( உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்) நடந்தால், அச்சம்பவம் கண்டிப்பாக இந்த இரு கடைகளின் நல்ல பெயரை குலைத்து விடும். ரியல் எஸ்டேட் மற்றும் நகை வணிகம் சட்டத்திற்குட்பட்டது எனினும், நல்ல பெயர் இல்லாவிடில் வாடிக்கையாளர்கள் இல்லை. இலாபமும் ஈட்ட முடியாது.
குறுகிய காலத்திற்கு ( ஒரு வருடம் முதல் ஐந்து வருடங்கள் வரை) வேண்டுமானால் Mr. X நடத்தும் நான்கு கடைகளும் நன்கு வருமானம் ஈட்டும் வாய்ப்பு கொண்டவையாக இருக்கும்.
நீண்ட கால நோக்கில் பார்க்கும்போது, முதல் இரு தொழில்களும் மற்ற இரு தொழில்களை பாதிக்க வாய்ப்பு உண்டு. எனவே, மேற்படி நான்கு கடைகளிலும் முதலீடு செய்யாமல் இருப்பதே சிறந்த முடிவாக இருக்கக் கூடும் என்று நான் நினைக்கிறேன்.
12-06-2008
ரிசர்வ் வங்கி ரெபோ (Repo) ரேட்டை உயர்த்தியிருக்கிறது. இதை எதிர்பார்த்து தான் அனைத்து வங்கி துறை பங்குகளும் கடந்த இரண்டு வாரகாலமாக மெல்ல மெல்ல இறங்கி வந்தன. இப்ப நாட்டாமை தீர்ப்பும் வந்த பிறகு, இன்றைக்கு வங்கி துறை பங்குகள் சரிய வாய்ப்பு உண்டு. ஆனால், சிறிது நேரம் தான் நீடிக்கும் என நினைக்கிறேன். ஏறக்குறைய வங்கி துறையில் நட்சத்திர பங்குகள் அனைத்தும் ஒரு வருட கால குறைந்த விலைக்கு அருகில் இருப்பதால் வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் முனைவார்கள் என்றே நினைக்கிறேன்.
சந்தையின் இன்றைய நிலை Negative . ஆரம்பமும் அப்படிதானிருக்கும். 100 புள்ளிகளுக்கு மேல் சரியும் பட்சத்தில் Recover ஆக வாய்ப்பு இல்லை. நாளை வாரத்தின் கடைசி நாள் மற்றும் விலைவாசி உயர்வு அறிக்கை வரும் நாள். எனவே, 100 புள்ளிகள் இறங்குவதற்கும் வாய்ப்பு உண்டு. 43** புள்ளிகளுக்கு வரும் பட்சத்தில் Selling Pressure மேலும் அதிகரிக்க கூடும். இந்நிலை நண்பகலில் வந்தால், புதிய முதலீடுகளை ஏதும் செய்யாமல் விலகி விடுவது நல்லது. சந்தை ஆரம்பத்தில் மிக எச்சரிக்கையாக இருங்கள். தின வணிகத்தில் புதியவர்கள் இறங்க வேண்டாம்.
இன்றைக்கு கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :
Punjab National Bank, Axis Bank, RPL, Larsen & Toubro, Unitech.
Recent Comments