Archive for June 29, 2008
Apollo Tyres II
அப்போலோ டயர் குழுமம் சவுத் ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய டயர் குழுமம் “டன்லப்” (Dunlop) -ஐ விலைக்கு வாங்கி உலக அளவில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் தனியே போக்குவரத்து சேவையையும் (Logistics) ( Gati போல்) துவக்க அப்போலோ டயர் குழும மேலாண்மை உத்தேசித்துள்ளார்கள். இந்தியாவில் பல மாநிலங்களில் (தமிழ்நாடு உட்பட) தங்களுடைய தொழிற்சாலைகளை கட்டவிருக்கின்றது. பாரத் எர்த் முவர்ஸ் (Bharat Earth Movers) நிறுவனத்திற்கு எர்த் முவர்ஸ் (like JCB) இயந்திரங்களுக்கு சிறப்பு வகை டயர்களை தயாரித்து தர ஒப்பந்தமும் பெற்றிருக்கிறது. தற்போது நிப்டி Junior குறியீட்டில் இருக்கிறது. தற்போதைய சந்தை நிலவரங்களை பார்க்கும்போது மேலும் விலை குறையலாம் என தெரிகிறது.
எனவே ஒரு ஆண்டுகளுக்கு மேல் கையிருப்பில் வைத்திருக்க முடியும் என்று நினைப்பவர்கள் இப்பங்கினை ரு.21-27 விலையில் வாங்கலாம்.
டயர் வணிகத்தினை பாதிக்கும் சில காரணிகளை பார்க்கலாம் :
1) அயல்நாட்டு டயர் குழுமங்கள்
2) குறைந்த விலையில் கிடைக்கும் சீன டயர்கள்
3) இரப்பர் விலை
இந்திய சந்தை வளரும் சந்தை என்பதால் அயல்நாட்டு குழுமங்களும் இங்கே தங்களது டயர்களை கடைவிரிக்க களம் இறங்குகின்றன. ஆனால் தயாரிப்பு செலவு மிக அதிகமாக ஆகும் என்பதால் இங்கே இருக்கும் ஏதேனும் ஒரு டயர் குழுமத்தினை வாங்கி உற்பத்தியை ஆரம்பிக்கும் என நினைக்கின்றேன். குறிப்பாக ஜப்பான் டயர் குழுமமான Yokohoma மிக ஆவலுடன் இருக்கிறது. அவர்கள் தான் உலக அளவில் முதலிடம் வகின்றார்கள். சீன டயர்களை மிக குறைந்த விலையில் கிடைத்து வருகின்றன. தரம் என்று பார்த்தால் நமது டயர்களை அவற்றை விட நன்றாக இருப்பதாகவே பயனாளிகள் சொல்கின்றார்கள். இரப்பர் தற்போது கமாடிட்டி சந்தையில் (Commodity Exchange) இருப்பதால் விலை ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது. ஆனால் தங்கம், கச்சா எண்ணெய் போன்று இல்லாததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என தற்சமயம் கருதலாம்.
இந்திய டயர் குழுமங்களை பொறுத்தவரை முதல் முன்று இடங்களில் உள்ள டயர் குழுமங்கள் Cartel அமைத்து செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. Cartelisation என்றால் இக்குழுமங்கள் தவிர வேறு எந்த குழுமங்களும் சந்தையில் செயல்பட விடாமல் தடுப்பது. இது ஒரளவிற்கு சட்டத்திற்குட்பட்டது என்றாலும் சில எல்லைகளை மீறும்போது சட்ட விரோதம் ஆகிறது. மைக்ரோ சாப்ட் செய்தது போல். இந்தியாவில் களமிறங்கும் அயல்நாட்டு குழுமங்கள் நம் நாட்டில் இருக்கும் கடுமையான போட்டியை சமாளித்தே ஆகவேண்டும். சியட் (CEAT) நிறுவனம் இவற்றில் சில எல்லைகளை தாண்டியதால் சில காலம் பங்கு சந்தையை விட்டு விலக்கி வைக்கப்பட்டது இங்கே குறிப்பிடதக்கது. ஆனால் மீண்டும் பட்டியலிடும் நேரத்தில் அக்குழும மேலாண்மை சில புதுமைகளை புகுத்தியிருக்கிறது (உதாரணத்திற்கு லோகோவை (Logo) மாற்றியிருக்கிறது). மக்களுக்கு ஏற்கெனவே அறிமுகமுள்ள லோகோவை மாற்றுவது என்பது சாதாரண விஷயமல்ல. மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு புதிய லோகோவை மக்களுக்கு மீண்டும் அறிமுகம் செய்து வைக்கும் பணி மிகுந்த கடினம். சமயத்தில் சரியாக எடுபடாமல் கூட போய்விடும். தற்சமயம் சில குழுமங்கள் இவ்வாறு லோகோ மாற்றியுள்ளன. உதாரணத்திற்கு கோத்ரெஜ் (Godrej) நீங்களும் சில உதாரணங்களை சொல்லலாமே.
Tigercubs பகுதியில் இதுவரை முன்று குழுமங்களை ( இக்குழுமத்தையும் சேர்த்து) பற்றி எழுதி இருக்கிறேன். ஒரு குழுமத்தை பற்றி இரண்டு அல்லது முன்று பகுதிகளில் விளக்கமாக சொல்ல இயலாது என்றாலும், சில முக்கியமான விவரங்களை மட்டும் சொல்லி முடித்திருக்கின்றேன். இவற்றில் ஏதேனும் விவரங்கள் விட்டிருந்தால் நீங்கள் நினைவுபடுத்தினால் மீண்டும் அதனை எழுதலாம் என்று இருக்கின்றேன். உங்கள் கருத்துகளை இது பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.
போட்டியாளர்கள் குறித்து அடுத்த பகுதியில் விவரமாக எழுதலாம் என்று உள்ளதால் இக்குழுமம் மட்டும் முன்று பகுதிகளுடன் முடியும்.
Recent Comments