Archive for December, 2008
Happy New Year!!!!
இந்த வலைப்பூவை தொடர்ந்து படித்து வரும் நண்பர்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒவ்வொரு புத்தாண்டு பிறப்பின்போதும் சில தீர்மானங்களை கடைப்பிடிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கடந்து பத்து வருடங்களாக நான் எடுத்து வருவதால் இந்த வருடமும் அவ்வாறே கடைப்பிடிக்க சில தீர்மானங்களை எடுத்துள்ளேன்.
அதேபோல் நீங்களும் சில புத்தாண்டு தீர்மானங்களை எடுத்துக் கொள்வது வாழ்க்கைக்கு நலம் பயக்கும் என்றே எண்ணுகிறேன். இவை மிக கடினமாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நம்புங்கள். மிக எளிதான ஒரு விஷயம் இது.
இந்தியாவில் புகழ் பெற்ற பிரபலங்கள் அனைவருமே (உதாரணத்திற்கு நான்) இது போன்ற தீர்மானங்களை மேற்கொண்டவர்கள் தாம் என்பதை மறந்து விட வேண்டாம்.
இந்த விஷயத்தில் சிறிதளவு கஷ்டமானது என்னவென்றால் எடுத்துக் கொண்ட தீர்மானங்களை அந்த வருடத்தில் கடைப்பிடிப்பது தான். அதைப் பற்றி நாம் 2009 வருட கடைசியில் பேசலாம்.
வருடத்தின் கடைசி நாள். இந்த நாளை கொண்டாடுவது பற்றி சிந்தியுங்கள். உங்களுக்கு கொடுத்த அறிவுரையை நானும் பின்பற்றுவதால் (கொண்டாடுவது பற்றியது) இன்று சந்தை தொடர்பான பதிவு போட இயலவில்லை. 🙂
Happy New Year to You All!
30-12-2008
இணையத்தில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக நான்கு நாட்களாக இணையத்தில் இயங்க முடியவில்லை. ஏர்டெல் மிக துரிதமாக செயல்பட்டு ஏற்பட்ட கோளாறை சரிசெய்து விட்டனர். அவர்களுடைய சேவை மைய பணியாளர்கள் கனிவான முறையில் சேவையை தருகின்றனர். அதற்காக இந்த விலையில் ஏர்டெல் வாங்கிடாதீங்க. கொஞ்சம் பொறுங்க.
நமக்கும் பெயில் அவுட் பணம்னு ஏதாச்சும் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் நமது சந்தை நேற்று மேலேறியது. அது பற்றி தெளிவான விவரங்கள் தெரிய வராத நிலையில், இன்றைய ஆசிய சந்தைகள் உயர்ந்து காணப்பட்டிருந்த போதிலும், நமது சந்தை கீழ்நோக்கி பயணம் செய்யவே வாய்ப்பு இருக்கிறது.
அமெரிக்க சந்தை நேற்றைய தினம் மிகவும் தடுமாறி முடிந்திருக்கிறது குறிப்பிடதக்கது. பொருளாதார சிக்கல் இன்னும் முடிந்துவிடவில்லை. 3000 என்பது நமக்கு இப்போது பெரிய இலக்காக தோன்றுகிறது. அடுத்த மாதத்தில் 2500 என்பது அவ்வாறாக தோன்ற வாய்ப்பிருக்கிறது என நினைக்கிறேன்.
இன்றைய சந்தை -78 முதல் 55 வரை ஆடலாம். முடிவு நெகடிவ்வாக தான் இருக்கும் என நினைக்கிறேன். Ind-Pak Standoff இன்னும் ஒரு முடிவுக்கு வரவில்லை. பாகிஸ்தானில் தற்போது இருக்கும் பலவீனமான தலைமையை இந்தியா உபயோகித்துக் கொள்ள முயற்சி செய்யும் என்றே நம்பி வந்துள்ளேன். அந்த விவகாரம் இன்னும் சுமுகமாக முடியாத நிலையில் நாமும் கொஞ்சம் உஷாராக இருந்து கொள்வது நல்லது.
மாலையில் விரிவாக எழுதுகிறேன். நிப்டியானந்தா பகுதியை Update செய்திருக்கிறேன்.
Good Morning To You All!
Post Market:
அமெரிக்க சந்தையில் பெயில் அவுட் பேகேஜ் வரபோகிறது என்ற செய்தியின் அடிப்படையில் ஐரோப்பிய சந்தைகள் மேலேற ஆரம்பித்ததன. நம் சந்தையும் அதையொட்டியே நகர்ந்தன. ஆனாலும், 70 புள்ளிகளில் நிற்க இயலாமல் 50 புள்ளிகளில் சரிந்துவிட்டது. இன்றைய அமெரிக்க சந்தை 200 புள்ளிகளுக்கு மேல் முடியும் பட்சத்தில் நம் சந்தை நாளை 3000 என்ற இலக்கை அடையும் என எதிர்பார்க்கலாம்.
26-12-2008 & 29-12-2008
மும்பை பயங்கரவாத செயல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்தியா பாகிஸ்தானுக்கு இன்றுவரை கெடு விதித்திருப்பதாக செய்தித் தாட்களில் படித்திருப்போம். இது தொடர்பாக வரும் வதந்திகள் இன்றைய சந்தையை அலைகழிக்கும்.
இன்றைய சந்தை துவக்கம் Flat ஆக இருக்கும் என நினைக்கிறேன். ஏதாவது ஒரு Cue -க்காக சந்தை காத்துக் கொண்டிருக்கும். அதுவரை சந்தையில் எவ்வித முன்னேற்றமும் இருக்காது.
Negative செய்திகளுக்கு சந்தை -82 புள்ளிகள் வரை சரிய வாய்ப்பு இருக்கிறது. நல்ல செய்திகள் என்றால் 45 புள்ளிகள் வர மேலே செல்ல வாய்ப்பு இருக்கிறது.
ரிலையன்ஸ் நிறுவன பங்கினை மிக கவனமாக கவனியுங்கள். இன்றைய சந்தையின் போக்கினை அதுவே நிர்ணயிக்ககூடும் என நினைக்கிறேன்.
இன்று மாலை விரிவாக எழுதுகிறேன்.
ஆம், நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த வேதாள உலகம் 11-ம் பகுதி இன்று வெளிவரும்.
கிறிஸ்மஸ் வாழ்த்துகள் தெரிவித்த நண்பர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
Good Morning to you All!
29-12-2008
இணைய தொடர்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நான்கு நாட்களாக இணையம் பக்கமே வர இயலவில்லை. நாளை முதல் வழக்கம் போல் Market Analysis வெளியிடுகிறேன்.
Recent Comments