Archive for February, 2015

Kingsman – The Secret Service

இருள் சூழ்ந்த தேவாலயத்தின் பிரமாண்ட தூண்கள் வழியே அவன் நடந்து கொண்டிருக்கையில், அவன் மனதில் ஏற்படுகின்ற போராட்டங்கள் போல ஒளியும், இருளும் அவன் பாதையில் ஊடாடி வரும் வகையில் ஒளிப்பதிவு செய்த

           இது போன்று ரசிக்கப்படும் திரைப்படங்கள் பார்ப்பதில் எனக்கு ஆர்வம் இல்லை. பால்ய வயதிலிருந்தே மசாலா படங்கள் பார்த்து வளர்ந்ததால், என் மனதில் நீங்கா இடம் பெற்ற திரைப்படங்கள் என்றால், ஜம்பு, சூரக்கோட்டை சிங்கக்குட்டி (சில்க் ஸ்மிதா நடித்தது), கும்பக்கரை தங்கய்யா போன்ற படங்கள்தான்.

       தீவிர உலக சினிமா இரசிகர்களான நண்பர்களிடம் ஜம்பு ஒரு க்ளாஸிக் என நிறுவ முற்படுகையில் தாக்கப்பட்டிருக்கிறேன். தன் அன்னையை காப்பாற்ற, காட்டுக்கொடியினை பற்றி  மரங்களுக்குள் ஊடாடி செல்லும் நாயகனின் மனப்போராட்டத்தினை உணர முடியாதவர்களிடம் வேறென்ன பேசுவது!

      மசாலா என்று வந்துவிட்டால் எல்லைகள் பிரிப்பது தவறு என தெலுங்கு மசாலாக்களையும் விரும்பி பார்த்திருக்கிறேன். மறக்க முடியாத அனுபவம் என்றால், லாரி டிரைவர் என்ற படத்தில்  இரசிகர்களின் விசில்களுக்கு நடுவில் வரும்  ஒரு காட்சி. அந்த வயதில் எனக்கு அந்த காட்சி புரியவில்லை லாரி ட்ரைவரான பாலக்கிருஷ்ணா ஒரு அத்துவான காட்டில் இறங்குகையில், கை பம்பு ஒன்று பூட்டு போடப்பட்டிருப்பதை பார்ப்பார். அங்குள்ள நங்கையிடம் அவர் அது பற்றி கேள்வி கேட்க, அவர் பதிலளிக்க அவற்றிற்கு இரசிகர்களின் ஆரவாரமான விசில் சத்தத்திற்கிடையே கேட்கையில் ஏற்படும் அனுபவம் கலை படங்களில் எனக்கு சத்தியமாக ஏற்பட்டதே இல்லை.

ஏய், என்ன பம்ப்பை பூட்டி வைச்சிருக்கே

கண்டவனும் கை வச்சிட்டா என்ன பண்றது?

     என்ற ரீதியில் போகும் உரையாடல் கைபம்ப்பினை பற்றி இல்லை எனவும், அது ஒரு குறியீடு என்றும், உலக திரைப்படங்களில் காட்சி குறியீடு போல என்பது பிற்பாடுதான் புரிந்தது.

    இன்னொரு படத்தில் விக்ரம் என்ற பெயருடைய கதாநாயகனின் குடும்பம் வில்லனால் கொல்லப்படுவதால், பத்து நிமிடங்களுக்கு முன்பு கதாநாயகியுடன் புரண்ட நாயகன், கடலில் பாறைகளுக்கு நடுவில் வறண்ட முகத்துடன் நின்று கொண்டிருப்பார். கதாநாயகி அடுத்த பாடலுக்கு அவரை அழைக்கையில், அவன் தற்சமயம் அதற்கு இடமில்லை என மறுப்பான். நாயகி, விக்ரம் என விம்முகையில், வறண்ட குரலில் நாயகன் சொல்வான். விக்ரம் என்று யாரும் இங்கில்லை. நான் விக்கி தாதா.

      மேற்கண்ட காட்சிக்கு நான் விசிலடித்திருக்கிறேன் என்று சொல்வதில் எனக்கு வெட்கமே இல்லை.

    சட்டையை மாற்றிக் கொண்டு, நாயகியை புரட்டினால் மட்டும் மசாலா படங்கள் வெற்றி பெறுவதில்லை. மசாலா படங்கள் எடுப்பதற்கும் தனித்திறமை வேண்டும் என்பதை உலக திரைப்பட ரசிகர்கள் அறிய மாட்டார்கள். குரசோவாவின் செவன் சமுராயும், கர்ணனின் இரட்டைக் குழல் துப்பாக்கியும் என் மனதில் சம இடங்களை பெற்றிருக்கின்றன என சொல்கையில்  உலக திரைப்பட ஆர்வலர்கள் அதிர்வதை என்னால் உணர முடிகிறது.

     இப்போதைய காலக்கட்டத்தில் மசாலா திரைப்படங்களுடன் நுண் இரசனையை கலப்பதால், நல்ல மசாலா திரைப்படங்களை காண்பதரிதாக உள்ளது. தற்போதைய  தமிழ் படங்களில் நாயகனின் புஜபல பராக்கிரமங்களையே போற்றுவதாக சித்தரிப்பது நல்ல மசாலா படங்களுக்குரிய இலக்கணம் அல்ல. அது உப்பு போல. அதிபாகு லவணம் ஸர்வ நாஸ்ய. இந்த பத்தியில் சம்ஸ்கிருதத்தை உபயோகித்த விதமே இந்த பத்தியை சிறப்பானதாக ஆக்கியுள்ளது என்பதை சிறந்த வாசகர்கள் அறிவார்கள். உபயோகித்த விதம் இலக்கண ரீதியாக சரியாக இருக்க வேண்டிய அவசியமில்லை. அதிபாகு க்ரமேர் you know?

      உலக சினிமா திரைப்படங்களை இரசிப்பவர், ஒவ்வொரு ப்ரேமிலும் கலை நுணுக்கத்தினை எதிர்பார்ப்பவர் என நாம் இரசனையை வளர்த்துக் கொண்டாலும், பால்ய வயதில் மசாலா திரைப்படங்களை பார்த்தே வளர்ந்திருக்கிறோம். அந்த மசாலா நம் இரத்தத்தில் கலந்தே இருக்கிறது. ஜம்பு திரைப்படத்தினை இப்போதும் உங்கள் நண்பர்களுடன் பாருங்கள். உங்களால் ரசிக்க முடியும். அதுவே ஒரு செம்மையான  திரைப்படத்திற்குரிய அம்சம் என கருதுகிறேன்.

   இந்த வகையில் கிங்ஸ்மேன் ஒரு செம்மையான மசாலா திரைப்படம். காலின் பர்த் கனவான் வேடங்களிலேயே நடித்தவர். அவரின் உச்சரிப்பு, பாவனைகள் அனைத்துமே அதையே பிரதிபலிக்கும். அவரை ஒரு அதிரடி உளவாளியாக காட்டி அதில் வெற்றி பெற்றதே இயக்குநரின் முதல் வெற்றி.

    கிங்ஸ்மேன் என்ற உளவு நிறுவனத்தில் பணியாற்றும் உளவாளிகள் வாழ்க்கை, பயிற்சி, உளவு வேலைகள் ஆகியவை அடங்கிய திரைப்படம் இது. அதை காட்டிய விதத்தில்தான் இயக்குநர் தூள் கிளப்பியிருக்கிறார். பழைய மசாலா படங்களில் நாம் ரசித்த அனைத்துக் காட்சிகளும் இத்திரைப்படத்தில் உண்டு.  ஸ்டாலோன் இது போன்றே எக்ஸ்பென்டபுள் பட வரிசையை நாயகர்களுடன் ஆரம்பித்தார். மாத்யு வானோ மசாலா திரைப்பட நிகழ்வுகளை கொண்டு இப்படத்தினை அமைத்திருக்கிறார்.

  மதுபான விடுதியில் கதவை மூடி போடும் சண்டையும், தேவாலயத்தில் நடக்கும் இரத்த வெறியாட்டமும், இறுதியில் சிதறும் படலமும் திரைப்படத்தில் இவ்வளவு இரத்தத்துடன் கூடிய வன்முறையை புன்னகையுடன் பார்க்கும் வகையில் படமாக்கியிருக்கிறார்.

     சாமுவேல் ஜாக்ஸனின் வில்லத்தனம், அதன் காரணத்தை அவர் நியாயப்படுத்தும் விதம்,ஜே பி என்கிற பக் இன நாய்,  ஸ்வீடிய இளவரசி என திரைப்படத்தின் ஒவ்வொரு தருணங்களையும் வெகுவாக ரசிக்கத்தக்க வகையில் எடுத்திருக்கிறார்.

     பால்ய வயதில் சனிக்கிழமை காலை எழுந்தோடி,  நெடுஞ்சாலையை ஒட்டிய சுவரை பார்க்கையில் அதில் காலை 11 மணிக் காட்சிக்கென ஒரு திரைப்படத்தின் போஸ்டர் (படங்களற்றது) ஒட்டியிருப்பார்கள். இனிய பாடல்கள் பயங்கர சண்டைகள் நிறைந்த கலர் என. அதைப் போல படம் இது.

February 28, 2015 at 12:45 pm 6 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 8 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 9 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 10 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 10 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 10 years ago
February 2015
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728