Archive for June 10, 2008
10-06-2008
அமெரிக்க சந்தை 70 புள்ளிகளில் Positive ஆக முடிந்தாலும், தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் இறங்கு முகமாகவே காணப்படுகின்றன. நமது சந்தை இன்று gap down or flat ஆகவே தொடங்கும். நண்பகலில் selling pressure அதிகரிக்க தொடங்கும் என நினைக்கிறேன். நேற்று ஐரோப்பிய சந்தைகள் ஓரளவு positive ஆக முடிந்தமையால், நமது சந்தை 200 புள்ளிகளிலிருந்து 126 வரை recover ஆனது. இன்று ஐரோப்பிய சந்தைகள் positive ஆக தொடங்காது என நினைக்கிறேன். அது நமது சந்தையின் மேல் நண்பகலில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இன்றைய தினமும் சந்தை see-saw விளையாட்டு தான். நண்பகலில் தான் தெரியும் எந்த பக்கம் கூடுதல் எடை என்று.
கச்சா எண்ணெயின் விலையை வைத்து கொண்டு உலக சந்தைகளை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு டாலர் ஏறி பிறகு இரு டாலர் இறங்கி சந்தைகளை கட்டுபடுத்தும் சக்தியாக ஆகிவிட்டது. பார்ப்போம், இது எது வரை போகிறது என்று. Realty and Banking துறை பங்குகள் மிக குறைவான விலையில் கிடைக்கின்றன. Accumulate செய்யலாம். புதியவர்கள் தின வணிகத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது.
Discusison #1 பகுதியி்ல் உங்கள் பின்னுாட்டங்களை இடுங்கள். என்னுடைய e-mailயில் தயவு செய்து அனுப்ப வேண்டாம். உங்கள் முடிவுகளை அனைவரும் பார்க்கட்டுமே!
Recent Comments