Archive for May, 2008
Enter with Joy II
இக்கட்டுரையின் முதல் பகுதியில் வீட்டை விட்டு கிளம்புவது வரைக்கும் எப்படி குஜாலா கிளம்புவது என்று பார்த்தோம். இரண்டாம் பகுதியில் பங்கு தரகர் அலுவலகத்தில் சென்று வணிகம் செய்பவர்களுக்கு சின்ன சின்ன யோசனைகள் :
வீட்டை விட்டு வெளியே கிளம்பும்போது ஒரு சிறந்த திட்டத்துடன் தான் செல்ல வேண்டும் என்று தனியே சொல்ல தேவையில்லை. ஒரு நாளைக்கு எவ்வளவு நஷ்டத்தை தாங்கலாம் என்பது மட்டுமின்றி கணிசமான இலாபம் வந்தவுடன் வெளியேறும் மனப்பான்மையும் வேண்டும். காலை, நண்பகலில் சம்பாதித்த இலாபமானது கடைசி ஐந்து நிமிடத்தில் பறக்கும் வாய்ப்பும் உள்ளது இல்லையா?
உங்கள் பங்கு தரகர் அலுவலகம் தினசரி 50 அல்லது 60 தின வணிகர்களை கொண்டிருந்தால் நீங்கள் அங்கு போய் சேரும் போது அநேகமாக அங்கு ஏதாவது ஒரு சண்டை ஆரம்பித்திருக்கும். யாரேனும் ஒரு வாடிக்கையாளர் உறுமி கொண்டிருப்பார். உங்களுடைய கவனம் சிதற வாய்ப்பு அதிகம். அதற்காக உர்ரென்று யாரையும் பார்க்காமல் அமர்வது என்று அர்த்தமல்ல. நாட்டாமையாக மாறி விடாதீர்கள். மாறினால் உங்கள் பங்கு தரகர் மற்றும் நண்பர் யாரிடமும் நல்ல பெயர் எடுக்க முடியாது. அவர்கள் இருவரும் இரு நாள்களுக்கு பிறகு சிரித்து பேசி கொண்டிருப்பார்கள். உங்களிடம் சிரித்து பேச மாட்டார்கள். ( என் அனுபவம் அப்படி!)
சந்தை ஆரம்பிக்கும் முன் Pre-Orders போடும் முன்னே ஒரு தடவை தீர்க்கமாக யோசித்துக் கொள்ளுங்கள். Pre-Orders போட்ட பிறகும் மாற்றலாம். ஆனால் கடைசி நிமிடத்தில் மாற்ற சொன்னால் பங்கு தரகர் தயங்குவார். உங்கள் Orders மாற்ற போய் மற்றவர்கள் Orders reject ஆக வாய்ப்பு அதிகம். உங்களுக்கும் தேவையில்லா மன உளைச்சல்.
முதல் 30 நிமிடங்களில் ஏகப்பட்ட orders வருவதால் மிகவும் அனுபவம் வாய்ந்த Terminal Operator கூட தடுமாறுவார். அந்த சமயத்தில் அவர் மேல் கோபம் கொள்ளாமல் மிகுந்த நிதானத்துடன் உங்கள் Orders சொல்லும் மனப்பக்குவம் வந்து விட்டாலே அன்றைய தினம் சுப தினமாகி விடும்.
பொதுவாக அனைத்து பங்கு தரகர் அலுவலகங்களிலும் கணினி திரையானது Cathode Ray Display (CRT) ஆகவே உள்ளது. உங்கள் பங்கு ஏற வேண்டுமென்று கணினி திரையையே பதினைந்து நிமிடங்களுக்கு மேல் வெறித்து பார்த்துக் கொண்டிருந்தால், வயதை பொறுத்து மிதமான அல்லது கடுமையான தலைவலி வர வாய்ப்பு உள்ளது.
முன்றாம் பகுதியில் தொடர்கிறேன் ………
30.05.2008
வெள்ளிக் கிழமை. நேற்றைய சந்தையில் ரிலையன்ஸ் பங்கினை மிக அற்புதமாக Operate செய்து சந்தையை கீழே இறக்கி விளையாடினார்கள். ஐந்து நிமிடத்தில் 100 புள்ளிகளை இழந்து பின்னர் மீண்டும் 50 புள்ளிகள் மேலே ஏறி சந்தை seasaw ஆடியது. வங்கி துறை பங்குகள் வேறு பயமுறுத்தி கொண்டேயிருந்தது.லார்சன் & டுப்ரோ ( L & T) பங்கின் நல்ல ரிசல்ட் மற்றும் போனஸ் அறிவிப்பு சந்தைக்கு கிடைத்த ஒரு உற்சாக டானிக்.
இன்றைய தினம் Inflation result வெளிவரும் நாள். இதே ஆட்டத்தினை சந்தை ஆடக்கூடும். தற்போதைய நிலை வரை Positive நிலைதான் சந்தையில் இருக்கிறது. தொடக்கம் Gap up or flat ஆக இருக்கலாம். புதியவர்கள் இன்றும் தின வணிகத்தை தவிர்ப்பது நல்லது. பெட்ரோல் விலை பற்றிய அரசு முடிவினை வைத்து பல Speculations நடக்கக் கூடும். லார்சன் & டுப்ரோ ( L & T) பங்கினை வைத்திருப்பவர்கள் இந்த ரெலியில் விற்காமல் கையிருப்பில் வைத்திருக்கலாம். புதியவர்கள் சந்தை இறங்கும்போது வாங்கலாம்.
இன்றைக்கு கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :
L & T, Tata Motor, Axis Bank, MRPL
29.05.2008
மாதத்தின் கடைசி வியாழன் கிழமை. சந்தை இன்று Positive ஆக ஆரம்பித்தாலும், ஏற்ற இறக்கங்களுடன் இருக்கும். இந்தியன் ஆயில் கார்பரெஷன் (IOC) இந்த காலாண்டு அறிக்கையில் நஷ்டத்தை காட்டியுள்ளது இச்சமயத்தில் குறிப்பிடதக்க ஒரு செய்தியாகும்.
சந்தை இன்று 5,000 புள்ளிகளை தொடுவதற்கு வாய்ப்பு உண்டு என நினைக்கிறேன். அதே புள்ளிகளில் முடியுமா என்பது வேறு விஷயம். பங்கு சந்தைக்கு புதியவர்கள் இன்று தின வணிகத்தில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஏதேனும் பங்குகள் விற்பதற்கு முயன்றால் உங்கள் விலையை போட்டு விட்டு நகர்ந்து விடுவது நல்லது.
இன்னும் ஒரு மாத காலத்திற்கு பங்கு முதலீட்டுக்காக நீங்கள் ஒதுக்கியுள்ள தொகையில் சுமார் 20 சதவிதம் ரொக்கமாக பங்கு தரகர் அலுவலகத்தில் இருக்குமாறு வைத்துக் கொள்ளலாம்.
Recent Comments