Archive for June 16, 2008
#3 Fundamental Analysis – Business
பங்கு சந்தையில் ஊடகங்களின் பங்கு முக்கியமானது என்று உங்களுக்கு நன்கு தெரியும். பெரும்பாலும் பங்கு சந்தையில் உள்ள Momentum பங்குகள் அனைத்தும் ஊடகங்களின் துணை கொண்டு தான் உருவாக்கப்படுகின்றன. Momentum பங்குகள் என்றால் ஊடகங்களில் ( பத்திரிக்கை, தொலைக்காட்சி மற்றும் நிபுணர்கள்) அனைத்தும் இப்பங்குகளை பற்றியே பேசி, எழுதி இப்பங்கின் விலையை ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஏற்றி, இறக்கி விளையாடுவார்கள். Momentum பங்கின் விற்பனை மிகவும் அதிகமாக இருக்கும். குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் வேறு பங்கிற்கு இந்த அந்தஸ்தை கொடுத்து விடுவார்கள்.
உதாரணத்திற்கு, சென்ற வருடங்களில் கீழ்க்கண்ட பங்குகள் இந்த அந்தஸ்து பெற்றிருந்தன என்பதை கவனித்திர்பீர்கள் ( இந்த பட்டியலில் ஏதேனும் பங்கு விட்டு போயிருந்தால் சொல்லலாம்)
1) ஜீ எம் ஆர் இன்ப்ரா (GMR Infrastructure)
2) எஸ்ஸார் ஆயில் (Essar Oil)
3) ரிலையன்ஸ் பெட்ரோலியம் (RPL)
4) யுனிடெக் (Unitech)
5) யுகோ வங்கி (Uco Bank)
6) ஐஸ்வர்யா டெலிகாம் (Aishwarya Telecom)
இந்த வகை Momentum பங்குகள் அனைத்துமே முதலீட்டுக்கானவை அல்ல. அடிப்படை நன்றாக உள்ள சில பங்குகள் இருக்கலாம். ஆனாலும் முதலீடு செய்வதில் மிகுந்த கவனம் வேண்டும். குறிப்பிட்ட காலம் முடிந்தபிறகு இந்த பங்கினை பற்றி ஊடகங்கள் கண்டு கொள்ளாமல் போய்விடும். முதலீடு செய்தவர்கள் உடனே தவறான பங்கில் முதலீடு செய்துவிட்டோம் என எண்ணி நஷ்டத்தினை உறுதி செய்து கொள்ள நேரலாம், அப்பங்கு அடிப்படையில் நல்ல பங்கு என்றாலும் கூட. இதனை தவிர்க்க இதில் முதலீடு செய்வதற்கு முன்னேயே அக்குழுமத்தை பற்றி மிகத் தெளிவாக அறிந்திருத்தல் வேண்டும். மேற்குறிப்பிட்ட பங்குகளில் ஐஸ்வர்யா டெலிகாம் பங்கின் ஆட்டத்தினை சமீபத்தில் பார்த்திருப்பீர்கள்.
இந்த வகை பங்குகளை வாங்குவதை முதலீடு (Investment) என்று தவறாக நிறைய பேர் எண்ணி கொண்டிருக்கிறோம். இதை வணிகம் (Trade) என்றுதான் சொல்ல வேண்டும். வணிகம் (Trade) மற்றும் முதலீடு (Investment) போன்றவற்றிற்கு என்ன வித்தியாசம்? வணிகம் என்பது ஒரு பங்கினை வாங்கி மிகக் குறுகிய காலத்திற்குள் விற்று இலாபம் அல்லது நஷ்டத்தினை பார்ப்பது. இதைதான் Swing Trade என்பார்கள். காளைகளின் சந்தையின் மிகப் பெரிய Drawback என்னவென்றால் முதலீட்டாளரை (Investor) வணிகராக( Trader) ஆக்கி விடும். முதலீடு என்றாலே குறைந்தது ஒரு வருட காலமாகவது அப்பங்கினை கைவசம் வைத்திருக்க வேண்டும். நல்ல அடிப்படை பங்கின் மீது முதலீடு செய்தால் நஷ்டம் ஏற்படுவது என்பது மிக மிக அரிது.
உங்களில் பலர் பல்வேறு தொழில்களை செய்து கொண்டிருக்கலாம். டாக்டர், ஆசிரியர், விவசாயி என்று. ஒரு பங்கின் அடிப்படை வணிகம் என்ன என்று அலசும்போது அது உங்களுக்கு மிகவும் பரிட்சயமான துறையாக இருந்தால் நல்லது. நீங்கள் மருத்துவராக இருப்பின் பார்மா (Pharma) துறை பங்குகளை தேர்ந்தெடுக்கலாம். அதுபோல், விவசாயிகள் உர நிறுவனங்கள் (Fertilisers) , சர்க்கரை துறை (Sugar ) பற்றி. நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறை உங்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்தால் அத்துறை சார்ந்த பங்குகளை பற்றி செய்கையில் நமக்கும் இயல்பாக உற்சாகம் ஏற்படும் அல்லவா! அத்துறையில் நீங்கள் பணியாற்றி கொண்டிருப்பதால், உங்களுக்கு அத்துறையின் விஷேச அம்சங்கள் (Special Factors) அனைத்தும் உங்களுக்கு அத்துபடியாக இருக்கும்.
இதற்கு முன் தெரிவித்திருந்தபடி, அக்குழுமத்தின் முக்கிய வருவாய் ஆதாரமாக (Main Revenue Source) விளங்குவது எந்த வகை வணிகம் என்பதில் சந்தேகமே இருக்கக் கூடாது. சில குழுமங்கள் இதர வகையின் முலம் பெறபட்ட வருமானம் (Income from Other Operations) என்று வருவாய் ஆதாரம் காட்டும். அவ்வகை ஆதாரங்கள் என்னென்ன என்பதை தெளிவாக கண்டறிய வேண்டும். அவ்வகை ஆதாரங்கள் குறித்த தகவல்கள் அக்குழுமத்தின் கணக்கு தணிக்கை அறிக்கையில் (Audited Report) தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கும். பட்டிருக்கப்பட வேண்டும். சில நேரங்களில் இந்த வகை ஆதாரங்கள் ஒரு குழுமத்தின் வருவாய் ஆதாரங்களை தவறாக புரிந்து கொள்ள வைத்து விடும்.
ஒன்றுக்கு மேற்பட்ட வருவாய் ஆதாரங்களை ஒரு குழுமம் கொண்டிருந்தால், அதனுடைய வருவாய் ஆதாரங்களில் அடிப்படையானது எது என்று கண்டறிந்து, அக்குழுமம் தன்னுடைய முக்கிய வருவாய் ஆதாரங்களை மாற்றி கொள்ளும் வகையில் அக்குழுமத்தின் மேலாண்மை செயல்படுகிறதா என்பதையும் அலச வேண்டும். அவ்வாறு மாற்றினால் அது குறித்து ஏதேனும் ஆண்டறிக்கையில் (Annual Report) கூறப்பட்டிருக்கிறதா என்று பார்க்க வேண்டும். மாற்றுவதற்கு உரிய காரணங்கள் உள்ளனவா என்றும் தெரிந்து கொள்ளுதல் நலம். அவ்வாறு மாற்றினால் அதனுடைய அடிப்படை வணிகம், போட்டியாளர்கள் போன்ற அனைத்தும் முற்றிலும் மாறிவிடும். மீண்டும் அப்பங்கினை analysis செய்து தான் முதலீட்டை தொடர்ந்து நீட்டிக்க வேண்டுமா என்பது பற்றி முடிவு செய்ய வேண்டும்.
மேலே கூறப்பட்ட அனைத்தும் ஒரு துறையை தேர்ந்தெடுத்து ஒரு பங்கினை Fundamental Analysis செய்வதற்கு முன் செய்ய வேண்டிய பணிகளாகும். இப்பயே கண்ணை கட்டுதே என்று திகிலடைய வேண்டாம். யோசித்து பாருங்கள். என்னாலும் ஒரு பங்கின் அடிப்படையை யார் ஆலோசனையுமின்றி அலசி, முதலீட்டுக்கு உரியது அல்லது இல்லை என்று தீர்மானிக்க முடியும் என்று சொல்வதில் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது! ஒரு முறை கற்றுக் கொண்டால் பின்னர் மிக எளிதாக இந்த கலை கைவந்து விடும். மிகுந்த மகிழ்ச்சியுடன் இதில் ஈடுபடுதலே முக்கியம்.
அடுத்தது கணக்கு வழக்கு பற்றி சிறிது சிறிதாக பார்க்க ஆரம்பிக்கலாம்!
16-06-2008
தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் இளம் சிவப்பு நிறத்தில் தொடங்கியுள்ளன. (அதாவது ஷங்காய் -, நிக்கி +). நாளடைவில் அவை எதிர்மறையாக தான் முடியும் என நினைக்கிறேன். இன்றைய சந்தையில் எதிர்மறை (Negative) எண்ணங்களே நிலவுவதால், ஏதேனும் ஒரு நல்ல செய்திக்காக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
சந்தை இன்று Choppy ஆக இருக்கும். Niffty +50 முதல் -75 வரை ஆடும் என நினைக்கிறேன். Negative முடிய தான் வாய்ப்பிருக்கிறது என நினைக்கிறேன். வங்கி பங்குகள் மேலேற வாய்ப்பு உள்ளது.
இன்றைய சந்தையில் கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :
Idea Celluar, Deccan Chronicle, Axis Bank, RPL.
Recent Comments