Archive for February, 2009
26-02-2009
இன்றைய தினம் ப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட் முடியும் நாள். சந்தையின் நிலைகளை உறுதியிட்டு கூற முடியாத நாள்.
அமெரிக்க சந்தை நேற்று 80 புள்ளிகள் இறங்கியிருந்தாலும், ஆசிய சந்தைகள் ஏறுமுகமாகவே இருக்கின்றன. ஊடகங்களில் இன்றைய தினம் காளை சந்தை என்பது போன்ற செய்திகளையே வெளிப்படுத்துவார்கள் என நினைக்கிறேன்.
இன்றைய சந்தை ஏற்றத்தில் முடிய வாய்ப்பிருக்கிறது. மேலும் அரசிடமிருந்து வேறு ஏதாவது அறிவிப்பு வந்தால் சந்தையின் திசை மாறும் வாய்ப்பும் இருக்கிறது.
விரிவாக மாலை எழுதுகிறேன்.
Read Disclaimer.
GoodMorning to you All!
Post Market:
ஆரம்பத்தில் சற்று சுணக்கமாக ஆரம்பித்த சந்தை மேலும் இறங்கவே தொடங்கியது. கடைசி ஒரு மணி நேரத்தில் நிப்டி பங்குகளில் கொஞ்சம் ஷார்ட் கவரிங் ஆரம்பித்த உடன் சந்தை மெள்ள மெள்ள முன்னேற தொடங்கியது. ஐரோப்பிய சந்தைகள் உந்துதலும் ஒரு காரணம் என்றாலும், இன்றைய தினம் அமெரிக்க சந்தை கண்டிப்பாக மேலேறும் என எதிர்பார்த்ததும் ஒரு முக்கிய காரணம் எனலாம்.
இது போன்ற நேரத்தில் சந்தை இறங்குகிறதே என ஷார்ட் போனவர்கள் நிலையை எண்ணி பார்க்க வேண்டும். சந்தையின் ஏற்றத்தை பார்க்கும்போது உங்களுக்கே தெரியும். மிக வேகமாக ஏறியிருக்கிறது. சந்தையின் சுவாரஸ்யங்களில் இதுவும் ஒன்று.
Good Night!
25-02-2009
அமெரிக்க சந்தைகள் 7100 என்ற நிலை வரை போய் அங்கிருந்து மேல்நோக்கி பயணம் செய்ய தொடங்கியிருக்கின்றன. இன்னும் சில நாட்களுக்கு இந்த பயணம் தொடரும் என்பதால், உலக சந்தைகளை பற்றிய கவலை தற்சமயம் தேவையில்லை (வேற ஏதும் புதிய பூதங்கள் கிளம்பாம இருக்கற வரைக்கும்).
நமது சந்தையில் நாளையோடு ப்யூச்சர்ஸ் காண்ட்ராக்ட்கள் முடிவதால், சந்தை டெக்னிகலில் அடங்காது என தெரியும். ஆனால் உலக சந்தைகள் ஏற்றத்தில் இருக்கும்போது, நம் மத்திய அரசும் வரிகளை குறைத்திருக்கின்ற நிலையில் சந்தை மேலேறவே வாய்ப்பு இருக்கிறது.
குறிப்பாக வானுர்தி நிறுவனங்களின் பங்குகள் மற்றும் வங்கிகளின் துறை இன்று மேலேற வாய்ப்பு உள்ளது. ஏனெனில் இவ்விரண்டு துறைகளும் கடந்த சில நாட்களாகவே கரடிகளின் பிடியில் சிக்கியிருந்தன என்பதால் நினைக்கிறேன்.
இன்றைய சந்தை 82 முதல் -24 வரை ஆடும் என நினைக்கிறேன். முடிவு சுபமாகவே இருக்கும்.
Read Disclaimer
Good Morning to you all!
300!!!!!
கடந்த இரு தினங்களாக அமெரிக்க சந்தை புதிய பள்ளங்களை தொட்டுக் கொண்டிருக்கிறது. நேற்றைய தினம் அமெரிக்க அரசு வங்கிகளுக்கு புத்துயிர் அளிக்கும் வண்ணம் ஊக்கங்கள் கொடுத்திருந்த போதிலும், தொழில்நுட்ப குழுமங்கள் இறங்கி மற்றொரு புதிய பள்ளத்தில் இறங்கியிருக்கிறது.
இன்றைய தினம் அமெரிக்க சந்தை 200 புள்ளிகள் வரை ஏறும் என எதிர்பார்க்கிறேன். இந்த இடத்தில் வாங்கும் நிலை அதிகமாக இருக்கும் என்பதால். நல்லவேளை, நேற்றைக்கு நமது சந்தை விடுமுறை என்பதால் இறங்காமல் தப்பித்தது. ஐரோப்பிய சந்தைகளும் இதை எதிர்பார்த்து நண்பகலில் ஒரு எழுச்சியை சந்திக்கும் என்று நம்புகிறேன்.
நமது சந்தை கடந்த வாரத்திலிருந்தே இறங்கி வந்திருப்பதால், இன்றைய தினம் சிறிது வாங்கும் நிலையுடன் ஆரம்பிக்கும் என நினைக்கிறேன். நமது வங்கிகள் அடிப்படையாக பொருளாதார பலம் கொண்டு விளங்குவதால் நமது வங்கித் துறை பங்குகள் மீண்டு எழும் என நினைக்கிறேன்.
சந்தை முதல் பகுதியில் இறக்கத்துடன் காணப்பட்டால் மீளும் வாய்ப்பு இரண்டாம் பகுதியில் இருக்கிறது. ஆனால் எதையேனும் எதிர்பார்த்து Flat ஆக தான் காணப்படும் வாய்ப்பும் இருக்கிறது. F & O Closing வேறு இன்னும் மூன்று தினங்களில் நிகழ இருக்கிறது. சந்தை அலைபாயும் வாய்ப்பும் அதிகம்.
இதை எழுதும் வரை இன்றைய சந்தை ஏற்றத்துடன் தான் முடியும் என நினைக்கிறேன்.
================================================================
இது 300-வது பதிவு என்பதால் சிறிது உற்சாகத்துடன் இருந்தேன்.
‘என்ன, காலையிலிருந்து லேப்டாப்யே பார்த்துக் கிட்டு இருக்கியே. பழைய நியூஸ் பேப்பர் இதையெல்லாம் கொண்டு போய் கடையில போட்டு காலி பண்ணலாம்ல.’ இது அம்மா.
‘எங்க, ராத்திரியெல்லாம் உட்கார்ந்து உலக சந்தையை வாட்ச் பண்றாராம் நான் ஒரு படம் டவுன்லோட் பண்ணப் போறேன் சொன்னா வுட மாட்டேங்கறான்.’ இது சகோதரன்.
இதையெல்லாம் கேட்டு என் இரத்தம் கொதிக்காமல் இருக்குமா?
‘உலகத்தின் எந்த மூலையிலும், எந்த நாட்டிலிருந்தும் தேடிப் பாருங்க. தமிழில் பங்கு சந்தையை பற்றி தினமும் எழுதும் பதிவுகளில் ஐந்தாவது இடம் எனக்குதான்.’
வீட்ல இருக்குறவங்க கொஞ்சம் இம்ப்ரஸ் ஆன மாதிரி தெரிஞ்சுது.
சமாளித்துக் கொண்டு சகோதரன் கேட்டான். ‘எத்தனை பேரு எழுறாங்க’
‘அஞ்சு’
‘அடச்சே.’
Recent Comments