Archive for June 4, 2008
Fundamental Analysis – Intro
முதலில் Fundamental Analysis பற்றி எழுதலாம் என்று உள்ளேன். பங்கு வர்த்தகம் செய்யும் போது அது அடிப்படை என்பதால். கட்டுரைகளை பெரும்பாலும் வாரக் கடைசி நாட்களில் எதிர்பார்க்கலாம். இக்கட்டுரைகளை படித்து விட்டு உங்கள் கருத்துகளை, கேள்விகளை பின்னுாட்டம் (Feedback) செய்யும் படி உங்களை கேட்டுக் கொள்கிறேன். அக்கேள்விகளுக்கு நான்தான் பதில் சொல்ல வேண்டுமென்பதில்லை. நீங்களும் சொல்லலாம். ஒவ்வொரு கட்டுரையையும் Discussion Forum ஆக மாற்றினால், உங்களிடமிருந்தும் நான் கற்றுக் கொள்ள வசதியாக இருக்கும் என்பதால்.
இன்னும் சில மாதங்களுக்கு சந்தையில் குறிப்பிடும் படியான முன்னேற்றம் ஏதும் இருக்காது என்பதால், நாம் நம்முடைய திறமைகளை (Analytical Skills) இக்காலகட்டத்தில் வளர்த்து கொண்டால் பின்னாளில் நமக்கு நிச்சயம் உதவி செய்யும். Analytical Skill என்பது ஒரு கத்தி மாதிரி. தொடர்ந்து கூர் தீட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இச்சமயங்களில் சும்மா இருப்பது நிறைய பேருக்கு எப்படி என்று தெரியாது. Restlessness சில மோசமான முடிவுகளை எடுக்க காரணமாக அமைந்து விடும். இத்திறமையினை வளர்த்துக் கொள்ள வணிகவியல் பட்டதாரிகளாகவோ, ஆங்கில புலமை கொண்டவர்களாகவோ இருக்க வேண்டியதில்லை. ஆர்வம் மட்டுமே போதும். அளப்பறிய ஆர்வம் உங்களை இக்கலையில் வல்லுநர்களாக ஆக்கும்.
இந்த மந்தமான காலகட்டம் (Stagnation Period) அடுத்த தேர்தல் பற்றிய அறிவிப்பு வரும்வரை நீடிக்கும் என நினைக்கிறேன். இக்கட்டுரைகளில் சில குழுமங்கள், துறை சார்ந்த அலசல் பற்றி நாம் அனைவருமே ஆராய்வோம். Fundamental Analysis மட்டுமே நம்பி அக்குழுமங்களில் உடன் முதலீடு செய்ய வேண்டாம். படித்து விட்டு நன்றாக உள்ளது என்று எழுதுவது மட்டுமில்லாமல் அதனை இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற உங்கள் பங்களிப்பு மிகவும் முக்கியம்.
உங்களிடம் பொறுப்பினை ஒப்படைத்து ஆரம்பிக்கிறேன்……………
04-06-2008
நேற்றைய தினம் சந்தை அனைவரையும் அலைகழித்து விட்டது இல்லையா? இன்றைய தினமும் அவ்வாறு நடப்பதற்கு வாய்ப்பு உண்டு. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் ஏறுமுகத்துடன் தொடங்கியுள்ளதால், நமது சந்தையும் சிறிது gap up தொடங்க வாய்ப்பு உண்டு. பெட்ரோல் விலை உயர்வு பற்றி ஒரு தெளிவான முடிவை மத்திய அரசு ( இது பற்றி இடது சாரி, வலது சாரி, பாதசாரி எல்லார்கிட்டயும் பேசுறாங்க. முடிவை தான் சொல்ல காணோம்) ஒரு தெளிவான முடிவு இன்று வெளிவரும் பட்சத்தில் எண்ணெய் துறை நிறுவனங்கள் நிப்டியை மேலேற்ற கூடும். குறிப்பாக ரிலையன்ஸ், ONGC. சந்தை 4800 புள்ளிகளை தாண்டும் வாய்ப்பும் உள்ளது.
Realty துறை பங்குகளில் டிஎல்எப், யுனிடெக் நேற்று சிறிது ஏற்றம் கண்டுள்ளது. இன்றும் அது தொடரலாம் என்று நினைக்கிறேன். நண்பகல் தொடங்கவிருக்கும் ஐரொப்பிய சந்தைகள் இறங்குமுகமாக தொடங்கினால், நம் சந்தையில் Selling Pressure அதிகரிக்கும்.
நீண்ட கால முதலீட்டாளர்கள் வங்கி துறையில் நட்சத்திர பங்குகள் குறைவாக விலையில் இருப்பதை Accumulate செய்ய ஆரம்பிக்கலாம். சந்தை நுாறு புள்ளிகளுக்கு மேல் சரியும் பட்சத்தில் கவனம் தேவை. Recover ஆக முடியாத வாய்ப்பு உள்ளது. நேற்று நடந்தது போலவே இன்றும் நடக்கும் என எதிர்பார்க்க முடியாது.
இன்றைக்கு கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :
MRPL, Essar Oil, ONGC, Reliance
Recent Comments