Archive for August, 2012
ரா.கி.ரங்கராஜன் – அஞ்சலி
குமுதத்தில் துணை ஆசிரியராக இருந்த திரு ரா.கி. ரங்கராஜனின் படைப்புகளில் சிறந்தது என நான் நினைப்பது படகு வீடு. சுற்றுலா சென்ற ஒரு ப்ளேபாய், துறவியாக திரும்புவது என்கிற கதைச்சுருளை மிக அற்புதமாக எழுதியிருப்பார்.
ஆங்கில பெஸ்ட் செல்லர்களை உரிமை வாங்கி மொழி பெயர்ப்பு சுவை பட செய்வதில் வல்லவர். இதில் உரிமை வாங்கி செய்ததை கண்டிப்பாக இப்போது நினைவு கூற வேண்டும்.
அவரின் கோஸ்ட் எனக்கு மிகவும் பிடித்த நாவல். அமானுஷ்ய சக்திகள் பற்றிய கதைகளை ஒன்றாக இணைத்து புனையப்பட்ட நாவல். அமானுஷ்யத்தை உணர்ந்த பல்வேறு மனிதர்களிடமிருந்து நிகழ்ச்சிக்களை ஒருங்கிணைத்து எழுதப்பட்ட நாவல்
சுஜாதா அளவிற்கு பிரபலம் ஆகவில்லையென்றாலும், ஒரு பெரும் வணிக பத்திரிக்கையின் ஆசிரியராக நீண்ட காலம் பதவி வகித்தவர்.நல்ல ஆங்கில புலமை வாய்ந்தவர். குமுதத்தில் லைட்ஸ் ஆன் என்ற சினிமா தகவல் பகுதியினை ஆங்கிலம் கலந்து நாகரிகமான முறையில் எழுதியது அவரின் சாதனைகளில் ஒன்று.
அவரின் நாவல்களில் படகு வீடு, கோஸ்ட், நான், கிருஷ்ண தேவராயன் ஆகியவை படிக்கப்பட வேண்டியவை.
அன்னாரின் குடும்பத்தினருக்கு என் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
Recent Comments