Archive for June 25, 2008
25-06-2008
அமெரிக்க சந்தை 34 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது. ஆசிய சந்தைகளும் Mixed ஆக தொடங்கியிருக்கின்றன. ரிசர்வ் வங்கி மீண்டும் ரெபோ (Repo) மற்றும் சி ஆர் ஆர் (CRR) உயர்த்தியிருக்கிறது. வங்கி துறை பங்குகள் அனைத்தும் ஏறக்குறைய ஒரு வருட குறைவான விலைக்கே கிடைக்கின்றன. ரிசர்வ் வங்கியின் முடிவு வங்கி துறை பங்குகளை மேலும் புதிய குறைவான விலைக்கு எடுத்து செல்லும்.
சந்தையின் நிலையினை இப்போது தனி மனிதர்கள் ஆட்டும் நிலைதான் இருக்கிறது. சந்தையின் ஏற்ற இறக்கங்கள் எப்படி இன்று இருக்கும் என்று ஊகிக்கதான் முடியும். +100 முதல் -75 வரை ஆடி Positive ஆக முடிய வாய்ப்பிருப்பதாக நினைக்கிறேன். வங்கி துறை பங்குகளில் நல்ல பங்குகளை சிறிது சிறிதாக வாங்க இன்று நல்ல வாய்ப்பு.
இன்றைக்கு கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :
ICICI Bank, Idea, Reliance Petroleum, State Bank of India, Reliance
Recent Comments