Archive for September, 2008
30-09-2008
அமெரிக்க அதிபர் கொண்டு வந்த போதுமான உறுப்பினர்களின் ஆதரவு இல்லாமல் தோல்வியடைந்துவிட்டது. இப்படிதான் செய்திகள் கசிந்து கொண்டிருக்கின்றன. தற்போதைய நிலை வரை, அமெரிக்க அதிபர் கொண்டு வந்த மீது விவாதங்கள் நடத்தப்பட்டு, வேறு விதமாக போட வேண்டும் என்றே முடிவாகியிருக்கிறது. அதற்குள் அமெரிக்க பங்கு சந்தை எல்லாம் முடிந்தது போல -700 புள்ளிகளுக்கு மேல் இழந்து முடிந்திருக்கிறது.
இந்த விளைவினை நேற்றே எதிர்பார்த்தது போல், ஆசிய, ஐரோப்பிய பங்கு சந்தைகளும் சரிவடைந்தன. சரி, இன்றைய கதை. ஒரு வித படபடப்பு, லேசாக வருவது போல உணருவது, எதை கேட்டாலும் எரிந்து விழுவது, விரக்தியாக பேசுவது இது போன்ற அறிகுறிகள் கொண்ட யாரையாவது இன்று நீங்கள் பார்த்தால் அவர் ஒரு முதலீட்டாளர் என எளிதில் தெரிந்து கொள்ளலாம்.
இதை படிப்பவர்களில் சிலருக்கு மிகுந்த எரிச்சலாக இருக்கும். சந்தை சரிந்து கொண்டிருக்கும்போது என்ன ஜோக்கு என்று? இந்த சமயத்தில் தான் நாம் நிதானமாக நடந்து கொள்ள வேண்டும். It’s not the end of the world. It’s time to gather our wits and stay calm.
இன்றைய சந்தையை மேலும் இறங்க விடாது இந்திய நிதி நிறுவனங்கள் பங்குகளை வாங்க ஆரம்பிக்கக் கூடும். உறுதியாக சொல்ல முடியாது. இது தொடர்பான முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ள கூடும். இந்தியா-பிரான்ஸ் நாடுகளிக்கிடையே அனுசக்தி தொழிற்நுட்பம் தொடர்பான ஒப்பந்தம் இன்று நிறைவேற்றப்படுகிறது. ஆனால் தற்போதைய நிலையில், இச்செய்தி எந்தமாதிரியான விளைவினை ஏற்படுத்த போகின்றது என தெரியவில்லை.
ஒரு வருடம் காத்திருக்க முடியுமென்றால், இன்றைய தினம் சந்தை இறங்குகையில் லார்சன் & டுப்ரோ பங்கினை விலை குறைய குறைய வாங்கலாம்.
இன்றைய தினம் சந்தை இவ்வாறு ஆட போகின்றது, இவ்வாறு முடிய போகின்றது என்றெல்லாம் நான் சொல்ல போவதில்லை. ஒரு வித Open-minded உடன் செல்லுங்கள். யார் கண்டது, நமக்கு சில Surprises கூட சந்தை இன்று கொடுக்கலாம். வழக்கம் போல் மாலை விரிவாக பேசலாம்.
அடுத்த நாள் 03.10.2008 என்பதை நினைவில் வையுங்கள். இன்று வங்கிகள் கணக்கு முடிக்கும் நாள்.
Post Market :
சந்தை நமக்கு Surprise தான் கொடுத்தது இல்லையா? இன்றைய அமெரிக்க சந்தை உயர்வுடன் தொடங்கியிருக்கிறது. எவ்வாறு முடியபோகிறது என்று பார்க்கலாம். நேற்று சொன்னது இன்று நடக்கிறது…என்னத்த சொல்றது?
சக்கரக்கட்டி – மீண்டும் விமர்சனம்
சக்கரக்கட்டி திரைப்படத்திற்கு மிகவும் சிறியதாக விமர்சனம் எழுதியதாக நிறைய பேர் வருத்தப்பட்டுள்ளனர். விரிவான விமர்சனம் இப்போது வழங்குகின்றேன் :
உலக மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சக்கரக்கட்டி உலகமெங்கும் கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளிவந்தது அனைவருக்கும் தெரிந்ததே. வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, வட ஆப்பிரிக்கா, தென் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் திரையிடப்பட்டு திரையிட்ட இடமெல்லாம் திருவிழாக் கோலம் கொண்டிருக்கிருப்பதாக சி என் என் நிருபர் தெரிவிக்கின்றார். திரையிடப்பட்ட முதல்நாள் அமெரிக்க பங்கு சந்தையே ஸ்தம்பித்ததாக வால் ஸ்ட்ரீட் நிருபர் ஒருவர் வாயை பிளக்கிறார்.
அப்படி என்னதான் இருக்கின்றது இத்திரைப்படத்தில் என்று நடுநிலையோடு ஆராய்வோம். படத்தை பற்றி ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் பயங்கரம் … இல்லை.. இல்லை பயங்கர அற்புதம்.
படத்தின் முதல் ஐந்து நிமிடங்களுக்கே கொடுத்த காசு சரியாக போய்விட்டது. நீங்கள் மனச்சாட்சி உள்ளவர்கள் என்றால் அப்போதே எழுந்து வெளியே வந்து விடுங்கள். மீண்டும் அடுத்தக் காட்சி சென்று பாருங்கள்.
ஒரு சராசரி கல்லுாரி மாணவன் தன் கல்லுாரி வாழ்வில் சந்திக்கும் சவால்கள், அதை எப்படி வெற்றி கொள்கின்றான் என்பதுதான் கதை. இதை படமாக்கியிருக்கும் விதத்தை பற்றி சொல்ல வேண்டுமா? வேண்டாம், படத்தின் சுவாரஸ்யம் போய்விடும்.
படத்தின் கதாநாயகனுக்கு இது முதல் படம் என்றே நம்ப முடியவில்லை. கல்லுாரி மாணவனின் வேடத்தில் வாழ்ந்திருக்கின்றார். இதை பார்க்கும் கல்லுாரி மாணவர்கள் ஒருவரை ஒருவர் கட்டிபிடித்து கதறி அழுவதை திரையரங்கில் பார்க்க முடிந்தது. உணர்ச்சிகரமான காட்சிகளில் அவரின் நடிப்பு National Highway-ல் இருக்கும் ஒரு மைல்கல். கதாநாயகன் தமிழ் பேசி நடிக்கும்போது அவரின் முகபாவத்தில் தோன்றும் நவரசத்தையும் வர்ணிக்க முடியுமா? ஐயோயோ, முடியாது. பார்த்தால் தான் தெரியும்.
கதாநாயகிகள் இரண்டு பேர். தமிழ் திரையுலகில் நடிக்க தெரிந்த கதாநாயகிகள் அபூர்வம். அந்த குறை இப்படத்தில் நீங்கியது. போட்டி போட்டுக் கொண்டு நடித்தித்திருக்கின்றார்கள். தன் காதலை கதாநாயகனித்திடத்தில் வெளிபடுத்தும் முறை யாருக்கும் தெரியாமல் (தியேட்டர் ஆபரேட்டருக்கு கூட) கதாநாயகனுக்கு மட்டும் தெரியும் வண்ணம் அமைந்திருப்பது சிறப்பாக உள்ளது.
இயக்குநருக்கு இது முதல் படமாம். நம்ப முடியவில்லை. நம்பவே முடியவில்லை. படம் முடிந்த பிறகு அனைவரும் ஒருவித பிரமையில் இருக்கின்றார்கள். இந்த காலத்தில் யாரையும் நம்ப முடியாது என்பதற்காக கதை, திரைக்கதை, வசனம் மற்றும் இயக்கத்தையும் அவரே கையில் எடுத்திருக்கின்றார். படத்தின் உரையாடல்கள் மிகவும் சிறப்பாக உள்ளன. தமிழருக்கு ஆங்கிலம் பேச தெரியாது என்று நினைக்கும் வீண் பதர்கள் இத்திரைப்படத்தை பார்த்தால் வெட்கி தலைகுனிவர்.
இசை ஏ ஆர் ரகுமான். சுமாராகவே இசை அமைத்திருக்கின்றார். பேசாமல் இயக்குநரே இசையும் தன் பொறுப்பில் வைத்திருக்கலாம். படத்தின் சுமாரான பாடல்களுக்கு இயக்குநர் படம் பிடித்திருக்கும் விதம் உலகதரம்.
Hollywood வெட்கி தலைகுனியும் வண்ணம் கிராபிக்ஸ் அமைந்திருப்பது இப்படத்தின் மற்றொரு சிறப்பு.
இந்த திரைப்படம் அனைத்து தமிழர்களும் பார்க்க வேண்டிய ஒரு கருத்துப் பெட்டகம். காவியம். காப்பியம். ( இரண்டும் ஒன்றா?) தமிழக அரசு முழு வரிவிலக்கு கொடுத்து பள்ளி, கல்லுாரி மாணவர்களை பார்க்க செய்ய வேண்டும்.
மொத்தத்தில் சக்கரக்கட்டி – டயபடீஸ்காரர்களும் பார்க்கலாம்.
29-09-2008
இன்றைய தினம் கீழ்க்கானும் Positive செய்திகள் இருப்பதால், சந்தை ஆரம்பத்திலேயே gap up ஆக ஆரம்பிக்கும் என எதிர்பார்க்கலாம். தற்சமயம் ஆசிய சந்தைகள் அனைத்தும் Positive ஆகவே தொடங்கியுள்ளன. நமது சந்தையிலும் ஒரு gap up +75 எதிர்பார்க்கலாம்.
1. “வரும், வராது” என இழுத்துக் கொண்டிருந்த இந்திய-அமெரிக்க நியூக்ளியர் ஒப்பந்தம் ஒரு வழியாக அமெரிக்க சபையில் நிறைவேறிவிட்டது.
2. அமெரிக்க நிதி நிறுவனங்களின் தள்ளாட்டத்தை போக்க $700 பில்லியன் மதிப்புள்ள Bail-out திட்டத்திற்கு அமெரிக்க சபை இன்று அனுமதி அளித்து விடும்.
3. நிப்டியில் உள்ள லார்சன் & டுப்ரோ (Larsen & Toubro) நிறுவனம் போனஸ் பங்குகளை 1:1 என்ற விகிதத்தில் வழங்க ரெக்கார்ட் தேதியாக 01.10.2008 என்ற தேதியில் வைத்துள்ளதால், இன்றைய தினம் அப்பங்கானது கிட்டத்தட்ட ரு.300/- அளவில் மேலேறும் என எதிர்பார்க்கலாம்.
4. NTPC, TATA Power, Powergrid போன்ற பங்குகளும் மேலேறும். Reliance, Reliance Communications பங்கில் நிறைய short போயிருப்பதால், இன்று அதில் short-covering நடக்கும் எனவும் எதிர்பார்க்கலாம்.
மொத்தத்தில் இன்றைய தினம் Very Positive. வெள்ளியன்று நான் சொன்ன மாதிரியே அமெரிக்க அதிபரே முன்னின்று இந்த Bail-out Plan நிறைவேற்ற போகின்றார். அதற்குள் எத்தனை வதந்திகள் கிளம்பிவிட்டன.
Rise & Shine ! Have a Very Positive Day!
Post Market:
“பயம்”. தற்போது நம் முதலீட்டாளர்களின் மனதில் இருக்கின்ற ஒன்று. இருக்கக் கூடாததும் அதுவே. காலையில் எழுதிய அனைத்திற்கும் நேர்மாறாக இருந்தது சந்தை. இது போன்ற குட்டை குழம்பிய சமயங்களில் பெரிய மீன்கள், சிறிய மீன்களை முழுங்கும். பெரிய அளவில் பயப்பட வேண்டிய அவசியமில்லை.
இந்த ஜனவரியில் நிப்டி 6000 புள்ளிகளிலிருந்து, 4400 புள்ளிகள் வரை சரிந்தது. கிட்டத்தட்ட 1600 புள்ளிகள். ஒரே வாரத்தில். அப்போது இருந்த பயம் தான் இப்போதும் இருக்கின்றது. ஒரு வருடத்திற்கு தேவையிருக்காத பணத்தை மட்டுமே முதலீடு செய்யுங்கள். விற்க வேண்டிய காலமல்ல இது.
கிட்டத்தட்ட அனைவரின் கணிப்புகளையும் பொய்யாக்கிவிட்டு, சரிந்தது இன்றைய சந்தை. 200 புள்ளிகளுக்கு மேலாக இழந்து, கடைசி ஒரு மணிநேரத்தில் 65 புள்ளிகளை மீட்டெடுத்து -135 புள்ளிகளை இழந்து முடிந்திருக்கிறது. அமெரிக்க சந்தை ஆரம்பித்தவுடன், இது பற்றி விரிவாக எழுதுகின்றேன்.
Recent Comments