Archive for June, 2014
Transformers – Age of Extinction
படம் துவங்கும் முன்
சீன எழுத்துக்கள் ஒரு குறியீடு.
துவங்கிய ஐந்து நிமிடங்களில்
முடிவில்
பயங்கர சண்டைக் காட்சிகள் நிறைந்த கலர் படம்
முக்கோணத்திற்கு எத்தனை பக்கம் அத்தியாயம் 6 பூம்புகார்
நான் மர்மங்களை ஆராயும் எழுத்தாளன். நாட்டில் அனைத்து பகுதிகளிலிருந்தும் எனக்கு தகவல் சொல்ல தொடர்புகள் உண்டு.
ஒரு புதன்கிழமையன்று, காலை 10 மணியளவில் நான் பூரி சாப்பிட்டு கொண்டிருந்த போது எனக்கு பூம்புகாரிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
சார், என்ன தெரியுதா?
யாருய்யா நீ?
அமீர் சார். உங்க பரம ரசிகன், நீங்க உடனே புறப்பட்டு பூம்புகார் வந்திங்கனா உங்களுக்கு பெரிய அதிசயத்த காட்றேன்.
பூரியை ஒரு நிமிடம் பார்த்த நான், அரைமனதுடன்,
அப்டி என்னய்யா காட்டப் போற?
சார், போன்ல அத சொல்லக் கூடாது. கிளம்பி சட்டுன்னு வாங்க.
பூம்புகாருக்கு நான் வந்து இறங்கியபோது மாலை ஆகிவிட்டது. பேருந்து நிலையத்தில் என்னை சந்தித்த அமீர் இளைப்பாற அவகாசம் கொடுக்காமல் கடற்கரை அருகில் உள்ள கிராமத்திற்கு கூட்டிச் சென்றான்.
அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் சேறு நிரம்பிய ஒரு பாதையில் ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டுமென்று சொன்னான்.
போகும் வழியில் அவனை விசாரணை செய்துக் கொண்டே சென்றேன்.
அங்க என்ன கல்லறை ஏதானும் இருக்குதா?
மனதிற்குள், ராஜராஜ சோழனின் ஏதேனும் வாரிசுகள் இருக்குமா என பெயர்கள் நகர்ந்த வண்ணம் இருந்தன.
சார், நீங்க பாத்திங்கீன்னா அசந்து போய்டுவீங்க.
அவன் வார்த்தைகளில் அபார உணர்ச்சி.
சேறு முழங்கால் வரை படிய கொசுக்களின் ரீங்காரத்துடன் அந்த பாதையை வாயை மூடிக் கொண்டு கடந்து வந்தோம்.
சட்டென்று எனக்கு முன்னால் சென்ற அமீர், நாடகப் பாணியில் பக்கத்திலிருந்து புதரை விலக்கி விட்டு ஒரு கல்வெட்டை காட்டினான்.
பார்த்தேன்.
எனக்கு அந்த இரவு நேரத்திலும் உலகம் இருள்வது போல இருந்தது. மெல்ல திரும்பி அமீரை பார்த்தேன். அவன் உற்சாகத்தில் தளும்பிக் கொண்டிருந்தான்.
எவ்வித எச்சரிக்கையும் கொடுக்காமல் அவன் மீது பாய்ந்தேன். தக்காளி சட்னியில் தக்காளிக்கு என்ன கதி ஏற்படுகிறதோ அந்த நிலையை அவனுக்கு வெகு வேகமாக அளித்துக் கொண்டிருந்தேன்.
புயலை கடித்தவன்
பாரீஸ் நகர வீதியில் சக இன்டர்போல் உளவாளிகளுடன் மாலை தென்றலை இரசித்தப்படி கோயாவி நடந்துக் கொண்டிருந்தார்.
ஒரு உளவாளி அவருடைய எகிப்திய அனுபவத்தை கூறலானார்.
பாரோக்களின் கல்லறையில் கொட்டிக் கிடக்கும் செல்வங்களையும், அதை கொள்ளையடிக்க கிளம்பிய கும்பலை எவ்வாறு மடக்கிய விவரங்களையும் சுவைப்பட விவரித்தார்.
வைகிங் கல்லறைகளையும் அதுபோலவே ஆராயப்பட வேண்டும்
என கோயாவி கூறினார்.
கோமணம் கட்டினவனே இவ்ளோ சேர்த்தான்னா முழு பேண்ட் போட்டவன் எவ்ளோ சேர்த்துருப்பான்
என தர்க்க ரீதியாக விளக்கினார்.
கனத்த மௌனத்துடன் உளவாளிகள் நடந்துக் கொண்டிருந்தனர்.
கோயாவியின் கூரிய கண்கள் எதிர் வரிசையில் காரின் அருகே மறைந்து ஒருவன் துப்பாக்கியுடன் காத்துக் கொண்டிருந்ததை கவனித்து விட்டன.
அவரின் மூளை சுற்றுப்புறங்களை ஆராய ஆரம்பித்து. இரு பேருந்துகள் எதிர்நோக்கி 48 கிமீ வேகத்தில் வந்துக் கொண்டிருக்கின்றன, பக்கத்து பேக்கரியில் கத்தியால் ஒரு பெண் கேக்கினை நறுக்கிக் கொண்டிருக்கிறாள், 20 மீட்டர் தொலைவில் கட்டிடம் கட்டுகின்ற இடத்தில் ஒரு கான்க்ரீட் மிக்ஸர் வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது.
சக உளவாளிகளை காப்பாற்ற உடன் முடிவெடுத்து, பாய எத்தனைத்தார்.
அவரை பாயவிடாமல் பின்னால் ஒரு உருவம் இறுக்க கட்டிப்பிடித்துக் கொண்டது. திரும்பி பார்க்கையில் அமெரிக்க உளவாளி கண்ணீருடன் சொன்னார்
கோயாவி, விட்ருய்யா, அவன் சுட்டா ஒருத்தனுக்கு காயம் படும், நீ காப்பாத்தா புகுந்தா எல்லோரும் கோமாவுக்கு போய்டுவோம். வேணாம்யா. கெஞ்சிக் கேட்டுக்கிறேன்.
Recent Comments