Archive for June 27, 2008
27-08-2008
BLACK FRIDAY?
அமெரிக்க சந்தை 350 புள்ளிகளை இழந்து ஒரு வருட குறைவான (One Year Low) புள்ளிகளுக்கும் கீழே முடிந்திருக்கிறது. தற்போது தொடங்கியுள்ள ஆசிய சந்தைகள் அனைத்தும் சிகப்பு தான். நம் சந்தையும் 100 புள்ளிகளை இழந்து தொடங்க வாய்ப்புள்ளது. கருப்பு வெள்ளி (Black Friday) மனப்பான்மை தற்போது சந்தையில் நிலவியுள்ளது. கடந்த எட்டு சந்தை நாட்களை பார்க்கும்போது எல்லோரும் இதற்காக காத்திருந்தது போல் தெரிகிறது. இன்றைய தினம் காளைகளுக்கும் கரடிகளுக்கும் ஒரு கடைசி யுத்தம். காளைகளின் கையில் உள்ள துருப்புச் சீட்டு. நண்பகலில் வெளியாகும் பணவீக்கம் (Inflation) சதவீதம் குறைவது மற்றும் ஐரோப்பிய சந்தைகளின் Positive ஆன ஆரம்பம். கரடிகளுக்கு நேற்றே துருப்புச் சீட்டு கிடைத்துவிட்டது.
இன்றைய சந்தையில் தின வணிகம் மிகவும் ஆபத்தானது. சந்தையின் முதல் பாதியில் குறைந்தது ஒரு வருட முதலீடு செய்ய மனமிருந்தால் வாங்கலாம். இன்றைய சந்தை -250 முதல் +25 வரை ஆடலாம். பண வீக்க புள்ளி விவரத்தை பொறுத்து ஆக முடிய வாய்ப்புள்ளது. பணவீக்க புள்ளி விவரம் Positive ஆகவே வெளிவரும் என நம்புகிறேன்.
இச்சந்தையில் கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :
Reliance Petroluem, Bharti Airtel, Idea, Reliance, Reliance Capital.
Recent Comments