Archive for June, 2008

Apollo Tyres III

     அனைத்து டயர் குழுமங்களுமே தற்போது புத்தக மதிப்பை விட குறைவாக தற்போது விற்பனையாகின்றன ( எம்.ஆர்.எப்-ஐ தவிர).

     போட்டியாளர்களில் முதல் முன்று போட்டியாளர்களை பற்றி மட்டும் பார்ப்போம். மற்ற குழுமங்கள் அனைத்தும் மாநில அளவில் மட்டுமே விற்பனையாகின்றன.

 1) எம். ஆர். எப் (M.R.F.)

      Madras Rubber Factory என்ற பெயர் கொண்ட எம் ஆர் எப் (M.R.F.) குழுமம் இந்தியாவில் தற்போது முதலிடத்தை  பெற்றுள்ளது. இந்தியாவெங்கும் தனது விற்பனை அங்காடிகளை கொண்டுள்ளது.  கடந்த பத்து வருடங்களாக இக்குழுமத்தின் Capital Structure -ல் எந்தவித மாற்றமும் இல்லையென்பதால், தற்போது அதிக விலையில் விற்பனையாகின்றது. கூடிய விரைவில் தன்னுடைய Capital Structure  மாற்றக் கூடும்.  Rights Issue எதிர்பார்க்கலாம். இக்குழுமத்தின் சொத்து மதிப்பு அதிகம். இந்தியாவில் அதிகம் விரும்பக் கூடிய கிரிக்கெட்டை அடிப்படையாக கொண்டு பிரபலமான எம் ஆர் எப்  அகாதெமி (M.R.F. Pace Academy) நடத்தி வருகின்றது.  Funskool Toys என்ற விளையாட்டு பொருட்கள் விற்பனை குழுமம் இவர்களுடையதுதான். தற்போதைய விலையில் வாங்காமல் சந்தை சரிவில் வாங்கலாம். நீண்ட நாள் முதலீடாக வைத்திருந்தால் மட்டுமே இலாபம் தரக்கூடியது.

 

2) ஜே கே டயர்ஸ் (J.K. Tyres)

     லாலா ஜக்கிலால் சிங்கானியா மற்றும் அவர் புதல்வர் லாலா கமலாபட் சிங்கானியா என்பாருடைய பெயர்களின் முதலெழுத்தை கொண்டு தொடங்கப்பட்ட இக்குழுமம் இந்தியாவில் மிக முக்கியமான தொழிற் குழுமம் (Industrial Conglomerate)  ஆகும். மிகுந்த நஷ்டத்தில் சென்று கொண்டிருந்த இக்குழுமத்தை திறமையான மேலாண்மை திட்டங்கள்  முலம் தற்போது ஒவ்வொரு காலாண்டிற்கும் சிறந்த இலாபங்களை கொடுத்து மீண்டும் முன்னேற்ற பாதைக்கு தற்போதைய மேலாண்மை அழைத்துச் செல்கின்றது. புத்தக மதிப்பை விட கிட்டத்தட்ட ரு.100 குறைவாக விற்பனையாகிறது. ( இதை எழுதுவது 30-6-2008 அன்று). புகழ் பெற்ற ரேசிங் அகாதெமி இவர்களால் நடத்தப்படுகிறது.

 

3) சியட் (CEAT)
     ஆரம்பத்தில் இத்தாலி நாட்டில் தொடங்கப்பட்ட இக்குழுமம் பின்னர் இந்தியாவில் ஆர்பிஜீ நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. காண்டாமிருகத்தை விற்பனை லோகோவாக உருவாக்கி விற்பனை செய்து வந்த இக்குழுமம் தற்போது புதிய லோகோவை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இக்குழுமம் பங்கு சந்தையில் விலை ஏற்ற இறக்கத்தில் ஊழல் நடந்திருப்பதாக விசாரிக்கப்பட்டு பங்கு சந்தையிலிருந்து சிறிது நாட்கள் தற்காலிக நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் தற்போது பட்டியலிடப்பட்டிருக்கிறது. இப்பங்கின் விலை இன்னும் குறைய வாய்ப்பிருக்கிறது. இப்பங்கினையும் நீண்ட கால முதலீட்டுக்காக வாங்கலாம். இப்பங்கானது தற்போது ஒரு வருட குறைவான விலையில் தான் விற்பனையாகின்றது என்றாலும் எனது பரிந்துரை விலையாக ரு 55-65 நீண்ட கால முதலீட்டுக்காக வாங்கலாம்.

 

     ஏதேனும் ஒரு டயர் பங்குகளை வாங்கி நீண்ட கால கையிருப்பாக வைத்திருந்தால் முதலீடு puncture இல்லாமல் செல்லும் என்று நம்பி நீண்ட கால முதலீட்டு நோக்கத்துடன் ( இங்கு நீண்ட காலம் என்று குறிப்பிடப்படுவது குறைந்தது இரு வருடங்கள் முதல் ஐந்து வருடங்கள் வரை)  வாங்கலாம்.

June 30, 2008 at 8:51 pm 1 comment

30-06-2008

     ஆசிய சந்தைகள் அனைத்தும் உற்சாகத்துடன் தொடங்கியுள்ளன. நமது சந்தையும் gap up or flat ஆக தான் தொடங்கும். இடது சாரிகள் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் வாங்குவது பற்றி பல வித ஊகங்கள் வெளிவந்து சந்தையின் போக்கை திசை திருப்பக் கூடும். கச்சா எண்ணெய் விலை குறைவதாக இல்லை. இது எதிர்மறையான செய்தி. இன்று ஐரோப்பிய சந்தைகளும் Positive ஆக தான் ஆரம்பிக்கும் என நினைக்கின்றேன்.

      நமது சந்தை நண்பகல் வரை + 100 புள்ளிகள் வரை சென்று அதற்கு பிறகு selling pressure and speculations  காரணமாக புள்ளிகளை இழக்கக் கூடும் என நினைக்கின்றேன். சந்தை +100 முதல் – 60 வரை ஆடலாம். Positve or flat ஆக முடிவதற்கு வாய்ப்புள்ளது.

      இன்றைய சந்தையில் கீழ்கண்ட பங்குகளை கவனிக்கலாம் :

Cairn, Idea, Andhra Bank, DLF, Suzlon

June 30, 2008 at 5:52 am 3 comments

Apollo Tyres II

     அப்போலோ டயர் குழுமம் சவுத் ஆப்பிரிக்காவில் உள்ள மிகப்பெரிய டயர் குழுமம் “டன்லப்” (Dunlop)  -ஐ விலைக்கு வாங்கி உலக அளவில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது.  மேலும் தனியே போக்குவரத்து சேவையையும் (Logistics)  ( Gati போல்) துவக்க அப்போலோ டயர் குழும மேலாண்மை உத்தேசித்துள்ளார்கள். இந்தியாவில் பல மாநிலங்களில் (தமிழ்நாடு உட்பட) தங்களுடைய தொழிற்சாலைகளை  கட்டவிருக்கின்றது. பாரத் எர்த் முவர்ஸ் (Bharat Earth Movers)  நிறுவனத்திற்கு எர்த் முவர்ஸ் (like JCB) இயந்திரங்களுக்கு சிறப்பு வகை டயர்களை தயாரித்து தர ஒப்பந்தமும் பெற்றிருக்கிறது.  தற்போது நிப்டி Junior  குறியீட்டில் இருக்கிறது. தற்போதைய சந்தை நிலவரங்களை பார்க்கும்போது மேலும் விலை குறையலாம் என தெரிகிறது.

    எனவே ஒரு ஆண்டுகளுக்கு மேல் கையிருப்பில் வைத்திருக்க முடியும் என்று நினைப்பவர்கள் இப்பங்கினை ரு.21-27 விலையில் வாங்கலாம்.

டயர் வணிகத்தினை பாதிக்கும் சில காரணிகளை பார்க்கலாம் :

1) அயல்நாட்டு டயர் குழுமங்கள்

2) குறைந்த விலையில் கிடைக்கும் சீன டயர்கள்

3) இரப்பர் விலை

     இந்திய சந்தை வளரும் சந்தை என்பதால் அயல்நாட்டு குழுமங்களும் இங்கே தங்களது டயர்களை கடைவிரிக்க களம் இறங்குகின்றன. ஆனால் தயாரிப்பு செலவு மிக அதிகமாக ஆகும் என்பதால் இங்கே இருக்கும் ஏதேனும் ஒரு டயர் குழுமத்தினை வாங்கி உற்பத்தியை ஆரம்பிக்கும் என நினைக்கின்றேன். குறிப்பாக ஜப்பான் டயர் குழுமமான Yokohoma  மிக ஆவலுடன் இருக்கிறது. அவர்கள் தான் உலக அளவில் முதலிடம் வகின்றார்கள். சீன டயர்களை மிக குறைந்த விலையில் கிடைத்து வருகின்றன. தரம் என்று பார்த்தால் நமது டயர்களை அவற்றை விட நன்றாக இருப்பதாகவே பயனாளிகள் சொல்கின்றார்கள். இரப்பர் தற்போது கமாடிட்டி சந்தையில் (Commodity Exchange)  இருப்பதால் விலை ஏற்ற இறக்கமாகவே இருக்கிறது. ஆனால் தங்கம், கச்சா எண்ணெய் போன்று இல்லாததால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாது என தற்சமயம் கருதலாம்.

    இந்திய டயர் குழுமங்களை பொறுத்தவரை முதல் முன்று இடங்களில் உள்ள டயர் குழுமங்கள் Cartel அமைத்து செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது.  Cartelisation என்றால் இக்குழுமங்கள் தவிர வேறு எந்த குழுமங்களும் சந்தையில் செயல்பட விடாமல் தடுப்பது. இது ஒரளவிற்கு சட்டத்திற்குட்பட்டது என்றாலும் சில எல்லைகளை மீறும்போது சட்ட விரோதம் ஆகிறது. மைக்ரோ சாப்ட் செய்தது போல். இந்தியாவில் களமிறங்கும் அயல்நாட்டு குழுமங்கள் நம் நாட்டில் இருக்கும் கடுமையான போட்டியை சமாளித்தே ஆகவேண்டும். சியட் (CEAT) நிறுவனம் இவற்றில் சில எல்லைகளை தாண்டியதால் சில காலம் பங்கு சந்தையை விட்டு விலக்கி வைக்கப்பட்டது இங்கே குறிப்பிடதக்கது. ஆனால் மீண்டும் பட்டியலிடும் நேரத்தில் அக்குழும மேலாண்மை சில புதுமைகளை  புகுத்தியிருக்கிறது (உதாரணத்திற்கு லோகோவை (Logo) மாற்றியிருக்கிறது). மக்களுக்கு ஏற்கெனவே அறிமுகமுள்ள லோகோவை மாற்றுவது என்பது சாதாரண விஷயமல்ல. மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு புதிய லோகோவை மக்களுக்கு மீண்டும் அறிமுகம் செய்து வைக்கும் பணி மிகுந்த கடினம். சமயத்தில் சரியாக எடுபடாமல் கூட போய்விடும். தற்சமயம் சில குழுமங்கள் இவ்வாறு லோகோ மாற்றியுள்ளன. உதாரணத்திற்கு கோத்ரெஜ் (Godrej)  நீங்களும் சில உதாரணங்களை சொல்லலாமே.

     Tigercubs பகுதியில் இதுவரை முன்று குழுமங்களை ( இக்குழுமத்தையும் சேர்த்து) பற்றி எழுதி இருக்கிறேன். ஒரு குழுமத்தை பற்றி இரண்டு அல்லது முன்று பகுதிகளில் விளக்கமாக சொல்ல இயலாது என்றாலும், சில முக்கியமான விவரங்களை மட்டும் சொல்லி முடித்திருக்கின்றேன். இவற்றில் ஏதேனும் விவரங்கள் விட்டிருந்தால் நீங்கள் நினைவுபடுத்தினால் மீண்டும் அதனை எழுதலாம் என்று இருக்கின்றேன். உங்கள் கருத்துகளை இது பற்றி தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

      போட்டியாளர்கள் குறித்து அடுத்த பகுதியில் விவரமாக எழுதலாம் என்று உள்ளதால் இக்குழுமம் மட்டும் முன்று பகுதிகளுடன் முடியும்.

June 29, 2008 at 8:31 pm 3 comments

Older Posts


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
June 2008
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30