இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் II

October 4, 2008 at 11:22 am 15 comments

     எங்கே படித்தேன் அல்லது பார்த்தேன் என நினைவு இல்லை. பனிப்போருக்கு பின் அமெரிக்கா வரும் ஒரு இரஷ்யர் அமெரிக்கர்களின் அன்றாட நடவடிக்கைகளை கவனித்த பிறகு ஆச்சரியமடைந்த குரலில் “கடவுளே! இவர்களிடமா நாம் தோற்றோம்?” என கேட்பார். அமெரிக்கர்களின் நடைமுறை வாழ்க்கை அப்படிப்பட்டது.
     ஒன்பது வயது நிரம்பிய எந்த ஒரு இந்திய மாணவனும் அமெரிக்காவை உலக வரைப்படத்தில் காண்பிப்பான். இதே போல் அமெரிக்க மாணவர்களை பற்றி சொல்ல முடியாது. அமெரிக்க கல்வி முறைக்கும், நமது கல்வி முறைக்கும் நிரம்ப வித்தியாசங்கள் உள்ளன. அவர்களது கல்வி முறை மாணவர்களை மனப்பாடம் செய்து தேர்ச்சியடைய வைக்கின்ற முறையே அல்ல. அவர்களது பாடப்புத்தகங்களில் விளக்கங்கள் மிக எளிதாகவும், நிறைய விளக்கப் படங்களுடனும் (Illustrations)  காணப்படும். பாடம் சார்ந்த வெளி நுால்களும் (References)  விளக்கத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். கல்வி தொடர்பாக நிறைய வெளி நடவடிக்கைகள் (Extra-curriculular activities) நடத்தப்படும். ஒவ்வொரு மாணவனும் பாடம் சார்பான வெளி நடவடிக்கைகளை செய்ய ஊக்குவிக்கப்படுவான். தேர்வு என்ற குறிக்கோளை மையமாக  கொண்டு பாடங்கள் நடத்தப் படாது. இந்த பாடம் ரொம்ப முக்கியமானது, கடந்த நான்காண்டுகளாக ஐந்து மதிப்பெண் கேள்வியாக இது வந்து கொண்டிருக்கிறது என பாடங்கள் நடத்தப்படுவதில்லை.

     நமது பாடப்புத்தங்களையும் அவ்வாறு வெளியிட எது அல்லது யார் தடையாக இருக்கின்றன என தெரியவில்லை? பாடம் சார்ந்த வெளி நுால்கள் அனுமதிக்கப்படுவதே இல்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், வரலாறு பாடத்தை பார்த்தொமென்றால் மொழி நடை எல்லோரையும் துாங்க வைக்கும் அளவுக்கு இருக்கும். படிக்கும் மாணவனுக்கு எவ்வாறு ஆர்வம் வரும்? ஒரு நல்ல வரலாற்று ஆசிரியர் இருந்தால் பாடம் சுவாரஸ்யமாக இருக்கும்? அது எல்லா பள்ளிகளிலும் அமைந்து விடுகின்றதா என்ன? மாணவன் வீட்டில் வரலாறு பாடநுாலை எடுத்துப் பார்க்கும் அளவுக்கு இருக்கின்றதா?
 
      உதாரணத்திற்கு, வரலாற்று பாடத்தை எடுத்துக் கொள்வோம். இராஜேந்திர சோழன் மற்றும் இந்தியாவை நோக்கி வந்த கஜீனீ முகமது தலைமையில் வந்த படையெடுப்பையும்பற்றி தனித்தனியே எந்திர மொழி நடையில்தான் (Drone Writing) படித்திருக்கின்றோம். திரு. மதன் எழுதிய “வந்தார்கள் வென்றார்கள்” நுாலில், கஜீனீ முகமது தலைமையில் வந்த படையெடுப்பு இந்தியாவில் நடந்த காலக்கட்டத்தில், தமிழகத்திலிருந்து சென்ற இராஜேந்திர சோழனின் படைகள் வட இந்தியாவில் இருந்ததென்றும், அவ்விரு படைகளும் தாக்குகின்ற தொலைவில் (Striking Distance)  இருந்தபொழுதும் அவர்களுக்கிடையே எந்தவித போரும் நடக்க வில்லை என்ற சுவாரஸ்யமான தகவலை குறிப்பிடுகின்றபொழுது வரலாற்றில் ஒரு வித ஆர்வம் உண்டாகின்றது.  ஒவ்வொரு தடவை தோற்று ஓடிய பிறகும் மனம் தளராமல் திரும்ப வந்தமைக்கு கஜீனி முகமதுவை உதாரணம் சொல்வோம். ஆனால் கஜீனி முகமதுவின் ஒவ்வொரு படையெடுப்பிலும் ஏராளமான செல்வத்தை தன் நாட்டுக்கு அவர் கொண்டு சென்றதாக வரலாறு குறிப்பிடுகின்றது என மற்றொரு பக்கத்தை திரு மதன் கூறியிருப்பார்.மேலும் அந்த நுால் ஒரு நாவலை போல் விறுவிறுப்பான மொழி நடையில் எழுதப்பட்டிருக்கும். பாடம் சம்பந்தமான வெளி நுாலை உபயோகிக்காமல் விட்டாலும் பரவாயில்லை. வரலாறு பாட நுாலை உருவாக்கையில் இவர்களது எழுத்துகளிலிருந்து (of course, அவர்களின் அனுமதியுடன்)  மேற்கோள் (Exercepts)  எடுத்து உபயோகிக்கலாமே! எந்த ஒரு எழுத்தாளரும் இதற்கு மறுப்பு சொல்ல போவதில்லை.

     மேலும் பாடபுத்தகங்கள் பெரும்பாலும் கருப்பு வெள்ளையிலே அச்சடிக்கப்படுகின்றன. தற்போது தமிழகத்தில் அனைத்து மாணவர்களுக்கும் அரசாலேயே இலவச பாடபுத்தகங்கள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் இவற்றை வண்ணத்தில் அச்சிட எவ்வளவு செலவாகப் போகின்றது? அவ்வாறு கூடுதல் செலவு ஆனாலும் யாரும் அதனை எதிர்த்து கேள்வி கேட்க போவதில்லை. புத்தகங்களின் பக்கங்கள் அதிகமானாலே நிறைய படிக்க வேண்டும், அவ்வளவையும் படித்து தேர்வுக்கு தயாராக வேண்டுமென்ற எண்ணம் மாணவர்களிடம் மட்டுமல்ல ஆசிரியர்களிடையும் இருக்கின்றது. பதினோராம் வகுப்பு மாணவனை நீ இருக்குமிடம் சேர, சோழ, பாண்டிய, பல்லவ அரசுகளில் எந்த அரசால் ஆளப்பட்டு வந்தது என கேளுங்கள். இதுவே நம் வரலாற்று பாடத்தை பத்து ஆண்டுகளாக படித்து வந்த சாதனையை சொல்லும். நான் பத்தாம் வகுப்பு படித்து, பதினோராம் வகுப்பு சேரும் பொழுது சாம்ராட் அசோகரை பற்றி கேட்டால் அவர் மரங்கள் நட்டார், குளங்கள் வெட்டினார் என்ற அரிய தகவல்களை தவிர வேறு எதுவும் நினைவிற்கு வரவில்லை. இப்போதைய வரலாறு பாடநுாலில் வேறு சில அரிய தகவல்களை சேர்த்திருக்கலாம்.  இது போல ஒவ்வொரு பாடத்திற்கும் சொல்லலாம்.

     அமெரிக்காவுடன் நாம் எல்லா துறைகளிலும் போட்டிபோட முடியாவிட்டாலும், பாடநுால்களை மிக சிறப்பாக வடிவமைப்பதில் நமக்கு எவ்வித சிரமமும் இருக்க போவதில்லை. அதனை சிறப்புற செய்யும் தொழில்முறை எழுத்தாளர்களும், மிகச் சிறப்பான வடிவமைப்பு துறை வல்லுநர்களும் நாம் நாட்டியிலேயே ஏராளமானோர் உள்ளனர்.  அதற்கு ஆகும் செலவினமும் மிக அதிகமாக இருக்க போவதில்லை. மேலும் அச்செலவினம்  வருங்கால இந்தியாவை வலிமையானதாக்கும் ஒரு முதலீடே ஆகும்.

   

  இதில் மிகுந்த வருத்தத்திற்குரியது என்னவென்றால், மேற்சொன்ன அனைத்து சீர்திருத்தங்களையுமே நிறைவேற்ற நமது அரசுக்கு நிதி நெருக்கடி எதுவுமே இல்லை.  ஏனெனில் வருமான வரியில் ஒரு குறிப்பிட்ட தொகை அனைவருக்கும் கல்வி திட்டம் என்ற திட்டத்திற்காக ஒதுக்கப்படுகிறது. அத்திட்டத்தின் முலம் இவ்வனைத்தையும் செய்யலாம். முயற்சிகள் மட்டுமே மேற்கொள்ளப்படவி்லலை.

     இந்த சாதாரண பாடப் புத்தகங்களை படித்துவிட்டே கணினி மென்பொருள், ஆங்கிலம் போன்ற பிற துறைகளில் நாம் சாதனை படைத்து வருகின்றோம். மிக எளிமையான, மாணவனுக்கு சிரமமில்லாத பாடப்புத்தகத்தை கொண்டு வந்தால் இன்னும் பத்து வருடங்களில் உலக அளவில் மனித வளத்தில் சிறந்து விளங்க போவது நாம்தான்.        

    அடுத்த பகுதியில் அமெரிக்க, இந்திய வாழ்க்கை முறைகளை பற்றி பார்க்கலாம்.

Entry filed under: Hunter's Mind.

03-10-2008 கல்வி வல்லுநரின் மேடைப்பேச்சு

15 Comments Add your own

  • 1. dg  |  October 4, 2008 at 11:56 am

    வித்யாச முயற்சி வாழ்த்துக்கள்

  • 2. Jayalakshmi  |  October 4, 2008 at 12:14 pm

    Well written. The questions you have raised are very relevant. The government published text books in A.P. are printed on flimsy papers and with small prints. One cannot even read it properly!.

    Another point is, the lack of reading habits among teachers and so among students. The library is missing in schools and there is no encouragement for such a necessary activity.

    When will our children have decent education and not learn by ‘rote’ ?. It is a sad scenario still.

  • 3. Chandran  |  October 4, 2008 at 1:47 pm

    தகவலுக்கு நன்றி.

  • 4. V.SURESH, SALEM  |  October 4, 2008 at 5:00 pm

    Nice article. Apart from stock market views these types of articles are helpful to refresh our thoughts during weekend.
    Keep it up.

    One more suggestion.

    every sunday you can write the past week’s stock market performance/your views and next week’s prediction. A weekly review is neccessary to make your blog more interesting.

  • 5. Deiva  |  October 4, 2008 at 7:04 pm

    TN text books have improved considerably in past few years. I am teaching Tamil for kids here in US. We are using text books from TN State. They (especially tamil books) are good in standard with lots of pictures in color, large fonts and illustration for elementary school kids. So there is a considerable improvement compared to 10 years ago. But they should come long way compared to american education system. Also I think you are generalizing american education systems. Here also, there are some schools which are purely academic (especially charter and private schools)/ They give importance to extra curricular activities. But this is far less in charter/private schools compared to public schools

  • 6. sharehunter  |  October 4, 2008 at 7:57 pm

    நன்றி, தெய்வா,

    இங்குள்ள தனியார் பள்ளிகளிலும் கூட ஏறக்குறைய இதே “தீவிர படிப்பு” அனுகுமுறையே கடைப்பிடிக்கப்படுகிறது. என்னுடைய கருத்து தமிழ் பாடப்புத்தகத்தை ஒரு மாணவன் வீட்டிலும் ஆர்வமாக படிக்கும் வண்ணம் வடிவமைக்கப்படுகின்றதா என்பதுதான். இது தொடர்பான கல்வியாளர் கருத்தரங்குகளுக்கு நான் பார்வையாளராக சென்றிருக்கின்றேன். இது தொடர்பான பதிவினை இன்று இரவு பதிவேற்றுகிறேன். அதனை படித்த பிறகு சொல்லுங்கள், நான் ஏன் இப்படி வெறுத்து போய் எழுதியது சரியா என்று.

  • 7. தெகா  |  October 4, 2008 at 9:59 pm

    ஷேர்ஹண்டர்,

    அருமையான பதிவு! இதனையொட்டியே ஆங்காங்கே எனது பின்னூட்டங்களில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதுண்டு. அதனை முழுப் பதிவாக படிக்கும் பொழுது பிரச்சினையின் ஆழம் எல்லோருக்கும் கிடைக்கக் கூடும்.

    இங்குள்ள ஹைஸ்கூல் பாயோலஜி புத்தகத்தை நான் ரெஃபரன்ஸ்க்காக எனது நூலகத்தில் வைக்குமளவிற்கு இருக்கிறது. விளக்கப்படங்களுடன், எளிமையான நடையில் ஆழமாக சொல்லப்பட்டிருப்பதே அதற்குக் காரணம்.

    அது அப்படியாக இருக்க என்னுடைய +2 வகுப்பில் “வெற்றி” நோட்ஸ் வாங்கி இயற்பியல் போன்ற பாடங்களை மனனம் செய்தது ஞாபகத்திற்கு வருகிறது.

    நம்மூரில் பாட நூல்கள் எளிமையாக அமைக்காமல் இருப்பதற்கு காரணம், எழுதுபவர்களே பாடங்களை உள்வாங்கி இருக்கும் இடத்திற்கு தகுந்தாற் போல் மொழி நடையை எளிமையாக்கி விளக்காமல் போவதே காரணம். மேலும், ஆசிரியர்கள் அப்டுடேட் தன்னை பண்ணிக் கொள்ளவும் ஆர்வம்காட்டாததும் மற்றொருமொரு சிறப்புக் காரணம்.

  • 8. a reader  |  October 5, 2008 at 6:25 am

    You can download the textbooks of Tamilnadu Govt here

  • 9. covai sibi  |  October 5, 2008 at 6:50 am

    well written.expecting more in detail.

  • 10. anony  |  October 5, 2008 at 10:16 pm

    //இராஜேந்திர சோழன் மற்றும் மங்கோலியர்களின் படையெடுப்பு பற்றி தனித்தனியே எந்திர மொழி நடையில்தான் (Drone Writing) படித்திருக்கின்றோம். திரு. மதன் எழுதிய “வந்தார்கள் வென்றார்கள்” நுாலில், மங்கோலியர்களின் படையெடுப்பு இந்தியாவில் நடந்த காலக்கட்டத்தில், தமிழகத்திலிருந்து சென்ற இராஜேந்திர சோழனின் படைகள் வட இந்தியாவில் இருந்ததென்றும், அவ்விரு படைகளும் தாக்குகின்ற தொலைவில் (Striking Distance) இருந்தபொழுதும் அவர்களுக்கிடையே எந்தவித போரும் நடக்க வில்லை என்ற சுவாரஸ்யமான தகவலை குறிப்பிடுகின்றபொழுது வரலாற்றில் ஒரு வித ஆர்வம் உண்டாகின்றது. //

    Gengis Khan
    Reign 1206–1227
    Coronation 1206 in khurultai at the Onon River, Mongolia
    Full name Genghis Khan
    (birth name: Temüjin) -source-wikepedia

    Rajendra Chola
    Reign 1012 C.E. – 1044 C.E.
    Title Parakesari
    Capital Thanjavur
    Gangaikonda Cholapuram -source-wikepedia

    The Mongol Empire launched several Mongol invasions into the Indian subcontinent from 1221 to 1327. However, the campaigns proved unsuccessful, in spite of the constant Mongol threat. After the collapse of the Mongol Empire, the final Turco-Mongol invasion occurred when Timur sacked and plundered Delhi, the capital of the Delhi Sultanate, though he left India soon after. source-wikepedia

    We should check the facts ourselves 🙂

  • 11. anony  |  October 5, 2008 at 10:37 pm

    Rajendra Chola lived many years before the mongol invasion:-)

  • 12. SathyaPriyan  |  October 6, 2008 at 1:36 am

    நல்ல சுவையான பதிவு. இருப்பினும் ஒரு சிறு தகவல் பிழை இருக்கிறது. ரஜேந்திர சோழனுக்கும் மங்கோலியர்கள் படையெடுப்பிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை.

    கி. பி. 998 – கி. பி. 1025 இந்த 27 ஆண்டிற்குள் தான் கஜினி முகமது 17 முறை இந்தியா மீது படையெடுத்துள்ளார். அதே கால கட்டத்தில் தான் ராஜேந்திர சோழனும் கங்கை வரை சென்று வெற்றி பெற்றுள்ளார். அந்த கால கட்டத்தில் இருவரது படைகளும் ஒரு முறை கூட நேருக்கு நேர் சந்திக்க வில்லை.

    ஒரு வேளை அது நடந்திருந்தால் இந்திய வரலாறு மாறி இருக்கலாம். அதனையே அவர் குறிப்பிடுள்ளார்.

  • 13. sharehunter  |  October 6, 2008 at 5:36 am

    கஜீனி முகமது படைகளா அல்லது மங்கோலியர்கள் படைகளாக என்பதில் சிறு குழப்பம் ஏற்பட்டுவிட்டது. தவறுக்கு மன்னிக்கவும். சரி செய்துவிடுகிறேன். அப்புத்தகத்தை படித்து நீண்ட நாள் ஆகிவிட்டதால், இக்குழப்பம் ஏற்பட்டது. மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக் கொண்டு சரி செய்து விடுகின்றேன்.

    சுட்டிக் காட்டியமைக்கு மிக்க நன்றி.

  • 14. anony  |  October 6, 2008 at 6:33 pm

    உங்கள் எழுத்தில் குறை காண வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
    மதனின் மேல் உள்ள எரிச்சலால் எழுதினேன். எனக்குத் தெரிந்து
    இரு முறை தவறான தகவல் தந்துள்ளார்.

    உங்கள் கட்டுரை நன்றாக இருந்தது.

  • 15. sharehunter  |  October 6, 2008 at 6:58 pm

    அனானி நண்பரே,

    இதனை குறை என்று நான் கருதவில்லை. இந்த கட்டுரையின் மீது உங்கள் அக்கறையாகவே எடுத்துக் கொள்கிறேன். திரு.மதன் தவறான தகவல்கள் கூட கொடுத்திருக்கலாம். வரலாற்றை பற்றி எழுதும்பொழுது இது நிகழ கூடியதே.

    உங்கள் பெயர், வலைப்பூ விவரங்களை தெரிந்து கொள்ளலாமா?

Leave a comment

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
October 2008
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031