Archive for October 1, 2008

இந்தியர்கள் Vs. அமெரிக்கர்கள் I

     இந்த பதிவின் முலம் இந்தியர்கள் மற்றும் அமெரிக்கர்களின் பொதுவான குணநலன்களை பற்றி மட்டுமே பார்க்கப் போகின்றோம். இவற்றில் நிறைய விதிவிலக்குகள் இருக்கக் கூடும். இந்தியர்கள் அல்லது அமெரிக்கர்களிடம் உள்ள நிறை, குறைகளை சொல்லி யார் மனதையும் புண்படுத்துவது இப்பதிவின் நோக்கம் அல்ல. ஒரு அடிப்படையான ஒப்பீடு மட்டுமே. இந்த பதிவு பங்கு சந்தை, நிதி நிர்வாகம் போன்ற அம்சங்களில் இவ்விருவரும் எவ்வாறு இருக்கின்றனர் என்பதை தெரிந்து கொள்வதற்காகவே எழுதப்பட்டது. அமெரிக்கர்கள் நம்மிடம் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நாமும் அமெரிக்கர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.

        அப்பப்பா….. இதற்கு இவ்வளவு பெரிய முன்னுரையா. சரி, விஷயத்திற்கு வருவோம்.

 

        அமெரிக்கர்கள் தங்கள் நலனை (Self-Centred)  பெரிதாக கருதுவார்கள். இதிலென்ன, எல்லோரும் அப்படிதானே என்று நீங்கள் நினைக்கலாம். இந்தியர்களை யாராவது ஒருவர் “சுயநலவாதி”  (Selfish) என்று கூறினால் (கூறினால் என்ன, பொதுவாக இங்கே ஒருவரின் குணநலன்களை பற்றி சொல்லும்போது இது ஒரு கெட்டவார்த்தையாக கருதப்படுகிறது) சம்பந்தப்பட்டவருக்கு மிகுந்த கோபம் அல்லது சுய பச்சதாபம் வர வாய்ப்பு உள்ளது. நான் எல்லோருக்கும் நல்லது செய்து கொண்டிருக்கும்போது, என்னைப் பற்றி இப்படியா கூறுவது? என்று.  ஆனால், அமெரிக்கர்கள் இதனை பற்றி பெரிதாக கவலைப்பட மாட்டார்கள். மேலும், சுயநலம் என்ற வார்த்தை அங்கே கெட்ட வார்த்தையே இல்லை. மேலும், அவர்கள் மற்றவர்களை திட்ட வேண்டும் என்று நினைத்தால் அதற்கு அவர்கள் பயன்படுத்தும் வார்த்தைகள் ஏராளம். அந்த பட்டியலில்  “சுயநலவாதி” என்பது கிடையாது.  எல்லோருமே சுயநலவாதிகள் தான். அதனை அமெரிக்கர்கள் முடி மறைப்பதில்லை.

 
         ஆரம்பத்தில் கூறியவாறு அமெரிக்கர்கள் தங்கள் நலனையே  பெரிதாக எண்னுவதால், எல்லோரும் சுயதன்மையோடு (Independent or Independent Thinking Mindset)  இருப்பார்கள். எந்த முடிவிலும், மற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டாலும், கடைசி முடிவு அவர்களே எடுப்பார்கள். தங்களுக்காக அடுத்தவர்கள் முடிவு எடுப்பதை விரும்ப மாட்டார்கள். அது அவர்களுடைய நலனை கருதி எடுக்கும் முடிவாக இருந்தாலும் கூட. உதாரணத்திற்கு, இங்கே ஒரு தம்பதியருக்கு குழந்தை பிறந்தவுடன் அவனை அல்லது அவளை டாக்டர் அல்லது Engineer  என கூறி அவனுடைய அல்லது அவளுடைய எதிர்காலத்தை பெற்றோர்களே தீர்மானிப்பது போன்ற செயல்களெல்லாம் அமெரிக்காவில் கிடையாது. இதனால் வாழ்க்கையில் அவன் எடுக்கும் முக்கிய முடிவுகளுக்கெல்லாம் அவனே காரணம் என்ற மனநிலையை பெறுகின்றான். “நான் உருப்படமால் போனதுக்கு காரணம் அந்த ….” என்றெல்லாம் அவர்கள் யாரையும் குறைசொல்ல மாட்டார்கள். சிறிய வயதிலேயே தான் வாழ்க்கையில் இவ்வாறு ஆக வேண்டுமென்று அழிக்க முடியாத தீர்மானங்களுடன் எல்லாம் இருக்க மாட்டார்கள். பெற்றோர்களும் அந்த குழந்தைக்கு எதில் ஆர்வம் அதிகம் என்பதை கண்டறிய விருப்பம் காட்டுவார்கள். “ஏலே, படித்து பெரிய ஆளாகி கலெக்டர் வேலைக்கு போகனும், மனசிலே வைச்சிக்கோ” என்ற வாழ்த்துகளெல்லாம் அங்குள்ள பெரியவர்கள் சொல்ல மாட்டார்கள். ஒவ்வொரும் தன் நலன் பற்றியே கவலைப்படுவதால், தன்னுடைய குழந்தைகள் எதிர்காலத்தை பற்றி முடிவெடுப்பதில் ஒரு வெறித்தனமான கவனிப்பு எல்லாம் அங்கே இருக்காது. பரீட்சை சமயத்தில் “அத படிச்சியா, இத படிச்சியா” போன்ற “அக்கறைகள்” எல்லாம் குழந்தைகளிடம் காண்பிக்க படாது.

       இந்த விஷயத்தை பொறுத்த வரை, சரி, தவறு என நிறைய பேசலாம். என்னுடைய குழந்தையிடம் அதிகப்படியான அக்கறை காண்பிப்பது தவறா? என்ற கேள்விகள் எழலாம். ஆனால், நிலைமை மாறிக் கொண்டு வருகிறது. பழைய தமிழ் திரைப் படங்களில் கதாநாயகனின் தந்தை கதாநாயகனின் மேல் காட்டும் அக்கறை படத்தில் ஒரு பகுதி மட்டுமே. அந்த  “அக்கறையே” படத்தின் மைய கதையாக வந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் வெற்றி பெற்றிருக்கிறது “சந்தோஷ் சுப்ரமணியம்” திரைப்படம். தந்தை-மகன் இடையே உள்ள உரையாடல் எவ்வாறு வளர்ச்சியடைந்திருக்கிறது என்பதை பழைய, புதிய திரைப்படங்களை பார்த்தாலே தெரிந்துக் கொள்ளலாம்.

      இன்னும் இந்த வரிசையில் படிப்பு, விளையாட்டு, அரசியல், நிதி நிர்வாகம், பங்கு சந்தையை பற்றிய அறிவு என்ற தலைப்புகளில் எழுதலாம் என்று இருக்கிறேன். இது தொடர்பாக உங்கள் கருத்துகளை அறிய விரும்புகின்றேன்.

October 1, 2008 at 5:15 pm 14 comments

01-10-2008

     நேற்றைய தினம் சந்தையின் உற்சாகத்தை கவனித்திருப்பீர்கள். உடனே எல்லாப் பிரச்சினைகளும் சுமுகமாக முடிந்தது. இனி நிப்டி 4000-4400-4800 என்று ஊடகங்களில் பேச ஆரம்பித்து விடுவார்கள். சந்தை தற்சமயம் மிகச் சரியாக கணிக்க முடியாத பாதையில் பயணித்துக் கொண்டிருக்கிறது. பழைய சார்ட், டைரி, மேப் மற்றும் சினிமா டிக்கெட்டுகளை புரட்டி பார்க்கும்போது நிப்டி 2975 என்ற இலக்கு சாத்தியமானதாகவே இருக்கிறது. நண்பர்களே, இது ஒரு பழைய குப்பைகளை கிளறி பார்த்து தற்போதைய நிலையில் ஒப்பிட்டு பார்க்கும் போது எனக்கு தோன்றியது தான் இது. இந்த இலக்கு நாளைக்கே வரும் என்ற அவசியமில்லை.

     இந்த வலைப்பூவை ஆரம்பிக்கும்போது (ஏப்ரல் 2008 கடைசியில்) சந்தை கரடிகளின் பிடியில் மாட்டப் போவதாக எழுதியிருந்தேன். அது கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் கழித்தே நடைபெற்றது.

      இன்றைய கதைக்கு வருவோம். நாளை சந்தைக்கு விடுமுறை. இரு நாட்கள் வங்கிகள் விடுமுறை. மீண்டும் வெள்ளிக் கிழமை தான் சந்தை. பிறகு இரு நாட்கள் விடுமுறை. இதுபோன்ற இடைவெளி வரும் நாட்களில், உலக சந்தை குழப்பமாக இருந்தால் முதலீட்டாளர்கள் Profit-Booking  செ்ய்யவே விரும்புவார்கள். கடந்த வாரத்தில் எவ்வளவு திகிலடைந்து காணப்பட்டார்கள். நேற்றைய தினம் வேறு நிறைய short-covering நடந்திருக்கிறது. சந்தையும் கிட்டத்தட்ட 200 புள்ளிகள் (-100 லிருந்து +100 வரை) மேலெறியிருக்கிறது.

      இன்றைய சந்தை Positive இருந்தாலும், அதனை மேலேற விடாமல் Profit-Booking நடந்து கொண்டே இருக்கும். நிறைய இ-மெயில்கள் கடந்த இரு நாட்கள் வந்தன. எல்லாவற்றிலும் எனக்கு இவ்வளவு நஷ்டம். நான் என்ன செய்வது? என்ற கேள்விகள் தான். நீங்கள் முதலீடு செய்திருப்பது “மன்னார்” கம்பெனியாக இருந்தால் எதனையும் பொருட்படுத்தாது Loss-booking  செய்து விடுங்கள். பின்னர் எந்த சூழ்நிலையில் அக்குழுமத்தில் முதலீடு செய்தோம் என யோசித்து மீண்டும அந்நிலைக்கு வராதிருக்க என்னென்ன செய்ய வேண்டும் என முடிவெடுத்துக் கொள்ளுங்கள். தினமும் இரவு நாம் உங்களுடன் பேச தயாராக இருக்கின்றேன். தவறான முதலீடு செய்தமைக்கு ஏன் வெட்கம்? சந்தையில் எப்போதும் சரியான முடிவெடுத்தவர்கள் யாருமில்லை. வாரன் பப்பெட்-ன் குழுமமமான “Berkshire Hathaway” ஒரு ஆடை உற்பத்தி குழுமம். குழுமத்தை வாங்கிய பின் மேலும் நஷ்டத்தை சந்திக்கும் என தெரிந்த பிறகு, அவர் குழுமத்தின் அப்பிரிவையே முடி விட்டார். அதுபோல, எல்லோரும் எல்லா நேரங்களில் சரியான முடிவுகள் எடுப்பதில்லை.

     இன்றைய சந்தை ஆரம்பத்திலேயே Selling Pressure இருக்கும் என எதிர்பார்க்கின்றேன். மேலேற சிரமப்படக் கூடும்.

     அனைவருக்கும் ரம்ஜான் பெருநாள் வாழ்த்துக்கள்.

October 1, 2008 at 6:53 am 5 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 6 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 6 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 7 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 7 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 8 years ago
October 2008
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031