Archive for October 21, 2008

காமிக்ஸ் சூப்பர்ஸ்டார்கள் – இரும்புகை மாயாவி II

      முத்து காமிக்ஸானது எத்தனையோ கதாநாயகர்களை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ள போதிலும், இரும்புகை மாயாவியே எல்லோர் மனதிலும் நிற்கிறார்.  சென்ற பதிவில் போடப்பட்டுள்ள ஒட்டுகளின் எண்ணிக்கையும் அதைத்தான் சொல்கிறது (எத்தனை கள்ள ஒட்டுகளோ!  ரிப் கெர்பிக்கு மூன்று ஒட்டுகள் விழுந்தது ஆச்சரியம்.   தவறாக எண்ண வேண்டாம்.  Who are the Blacksheeep?)

     காமிக்ஸ் கதாநாயகர்கள் பல சாகசங்களை நிகழ்த்திய போதிலும், இரும்புகை மாயாவி நம் சிறிய வயதில் மனதில் பிடித்திருக்கும் இடத்தினை வேறு யாராலும் அந்த நேரத்தில் பிடித்திருக்க முடியாது.  காரணம் என்னவென்று யோசிக்கும்போது, நம் சிறிய வயதில் சில நேரங்களில் நாம் கண்ணுக்கு தெரியாமல் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என எண்ணுவோம். காரணம், வீட்டில் ஏதாவது ஒரு பொருளை உடைத்திருப்போம், உதைப்பற்காக தேடிக் கொண்டிருப்பார்கள்.  பள்ளியில் வீட்டுக் கணக்கு எழுதாமல் வந்திருப்போம்.  இது போன்ற காரணங்களுக்காக நாம் மற்றவர் கண்ணுக்கு புலப்படாமல் இருந்தால் தேவலை என்று நினைத்திருப்போம்.  அதனை இரும்புகை மாயாவி செய்கின்றபடியால்,சிறிய வயதினில் நம் மனதில் சற்று அதிகப்படியான இடத்தினை பிடித்திருக்கின்றார். 

     என்னுடைய சிறிய வயதில் பிளக் பாய்ண்டை பார்க்கும்போதெல்லாம், அதில் கையை விட்டு மறைந்துவிடலாமா என்ற எண்ணம் அடிக்கடி தோன்றும்.  குறிப்பாக, வார இறுதி விடுமுறையினை கொண்டாடிவிட்டு திங்களன்று பள்ளி திரும்புகையில்.  இரும்புகை எனக்கு கிடைத்தால் யார், யாரையெல்லாம் குத்த வேண்டும் என ஒரு பெரிய லிஸ்டே வைத்திருந்தேன்.  அதில் சில ஆசிரியர்களின் பெயர்களும் இருந்தன.

     இந்த கண்மூடித்தனமான பிரியத்தால் இரும்புகை மாயாவி தோன்றும் அனைத்து சித்திரக் கதைகளையும் தவறாது வாங்கி படித்தோம்.  அனைத்தும் பிடித்தும் இருந்தது.  கொஞ்சம் பெரியவர்களாக ஆனபிறகு, தலைமறைவாக இருப்பது என்ற வித்தை நமக்கு ஓரளவு தெரிய ஆரம்பித்து விடுகின்றபடியால், அவர் மேல் உள்ள அபிமானம் இயற்கையாகவே குறைந்து விடுகிறது.  எத்தனை தடவை கல்லுாரிக்கு/அலுவலகத்திற்கு டிமிக்கி கொடுத்துவிட்டு வேறு எங்காவது சுற்றியிருக்கிறோம்!

      இரும்புகை மாயாவியின் கதைகள் வண்ணம், டைஜஸ்ட் வடிவத்தில் என பல்வேறு விதங்களில் வந்திருக்கிறது.  அசல் கதைகளுக்கும், முத்து காமிக்ஸில் வந்தவற்றிற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்த போதிலும், அவைகள் நமக்கு தெரியாத அளவுக்கு எடிட் செய்யப்பட்டிருக்கும்.  தமிழில் மிகச் சிறந்த சித்திர கதை எடிட்டர்கள் சிவகாசியில்தான் உள்ளனர். 

     இரும்புகை மாயாவியின் கதைகளில் உங்களுக்கு பிடித்தமான கதைகள் என்னவென்பதை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.  என்னுடைய டாப் ஐந்து.

1) விண்வெளி கொள்ளையர்

2) இயந்திர படை

3) நியூயார்க்கில் மாயாவி

4) சைத்தான் சிறுவர்கள் (புதியது)

5) மாயாவிக்கோர் மாயாவி

     முத்து காமிக்ஸில் வந்த கதாநாயகர்களை பற்றி பார்ப்பதற்கு முன் சில விக்ஷயங்கள்.  எல்லா கதாநாயகர்களையும் உங்களுக்கும், எனக்கும் தெரியும்.  இருப்பினும் ஏன் என்றால், நமக்கு பிடித்தவைகளை பற்றி எத்தனை தடவை பேசினாலும், படித்தாலும் நமக்கு எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.  அதுபோல எனக்கு பிடித்தவைகளை பற்றி எழுதவும், அதனை படித்து விட்டு நீங்களும் மகிழ்ச்சி அடைவதும் மிகவும் பிடித்திருக்கின்றபடியால்தான்.

லாரன்ஸ் & டேவிட்

       எனக்கு இவர்களை அதிகமாக பிடிக்காது.  அ.கொ.தீ. கழகம் என்னும் முகந்தெரியாத எதிரி விளைவிக்கும் தீமைகளை கண்டுபிடித்து தடுப்பதாக இவர்களின் சாகசங்கள் வரும்.  எனக்கு பிடித்தமான இவர்களின் கதைகள் தலைகேட்ட தங்க புதையல் மற்றும் இன்னொரு கதை பெயர் நினைவில்லை.  ஆனால் அதில் வில்லன் மற்றும் இவர்கள் கவிதைகளாக சொல்லி சாகசங்கள் நிகழ்த்துவார்கள்.

மந்திரவாதி மான்ட்ரெக்

       இவர் கதைகள் நிறைய ஆர்ட்டிஸ்ட்களால் வரையப்பட்டு இருக்கின்றன.  முத்து காமிக்ஸில் ரூ.1 புத்தகங்களாக வந்த இவரின் கதைகள் அனைத்துமே நன்றாக இருக்கும்.  அதிகமாக மந்திரத்தை பயன்படுத்தாமல் க்ரைம் த்ரில்லர்கள் போல் செல்லும் கதைகள் நன்றாக இருக்கும்.  இவரின் கைத்தடியாக வருபவர் லொதார் என்னும் ஆப்பிரிக்க இளவரசன் (இவர் இளவரசன் என்பது நிறைய பேருக்கு தெரியாது).

      பிடித்த கதைகள் முத்து காமிக்ஸ் ரூ.1 கதைகள் அனைத்தும்.

ரிப் கெர்பி

      சில பேருக்கு சில டேஸ்ட்.  மற்றவர்களின் விருப்பத்தினை கேலி செய்கின்றேன் என நினைக்க வேண்டாம்.  ரொம்பவும் Down-to-Earth கதாநாயகன் இவர்.  இவர் வில்லனை நாலு அடி அடித்தால், அதில் இரண்டையாவது இவர் முகத்தில் வாங்கியிருப்பார். 

      எனக்கு பிடித்த கதை காசில்லா கோடீஸ்வரன்.

பிலிப் காரிகன்

      அமெரிக்க உளவாளியாக வரும் காரிகன் சாகசங்கள் நன்றாக இருக்கும். முத்து காமிக்ஸில் ரூ.1 புத்தகங்களில் வரும் இவரின் கதைகள் நன்றாக இருக்கும்.  இவரும் வில்லனின் ஆட்களிடம் கண்டபடி உதை வாங்கின மற்றொரு Down-to-Earth கதாநாயகன். படித்திருக்கின்றேனே தவிர, நிறைய கதைகள் நினைவில் இல்லை.

மூகமுடி வேதாளர்

      முத்து காமிக்ஸ் வெளியிட்ட இவரின் அனைத்து கதைகளும் நன்றாக இருக்கும்.  இவர் இராணி காமிக்ஸில் மட்டுமே சொதப்பினார்.  மிகத் தெளிவான படங்களை வடிவமைத்ததும் ஒரு காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். 

ஜானி நீரோ

        இந்தாளை எனக்கு பிடிக்காது. இவருடைய செக்ரட்ரி இவர் மேல் ஒரு இதுவாக இருப்பாள். இவர் தமிழ்பட ஹீரோ போல் கண்டுக் கொள்ள மாட்டார்.

     பிடித்த கதைகள் எதுவுமில்லை.

     இவர்களெல்லாம் பழைய கதாநாயகர்கள். புதிய கதாநாயகர்கள் சிலரை முத்து காமிக்ஸ் தற்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது.

மர்ம மனிதன் மார்ட்டின்

       இப்போதைக்கு எனக்கு மிகவும் பிடித்தமான கதாநாயகர்களின் ஒருவர்.  முதல் இரு கதைகளில் அவ்வளவாக வரவேற்பு கிடைக்கவிட்டாலும், அடுத்த இரு கதைகளால் மிகுந்த வரவேற்பை பெற்றவர்.  இவரின் புத்தகம் தான் முத்து காமிக்ஸின் அடுத்த வெளியீடு. வழக்கம் போல் காலதாமதம்.  என்று வரும் என காத்திருக்கிறேன்.

சி.ஐ.டி இராபின்

    என்னை பொறுத்த வரையில் இவர் தேறா கேஸ்.  உங்களில் யாருக்காவது இவரை பிடிக்குமா?

கேப்டன் டைகர்

      இவரை பற்றி தவறாக ஒரு வார்த்தை நான் எழுதினாலும் என்னை வீடு புகுந்து உதைக்கக் கூடிய என் நண்பர்களை இரசிகர்களாக பெற்றிருப்பவர்.  அமெரிக்காவில் சிவில் யுத்தம் நடக்கையில் நடந்த நிகழ்ச்சிகளை சித்தரிக்கும் பின்புலத்தினை கொண்டது.  அட்டகாசமான சித்திரங்கள், அருமையான கதைகள். 

     குறை என்னவென்றால், அனைத்தும் பெரிய கதைகளாக இருப்பதால் சிறிது சிறிதாக போடுவது அதனுடைய வீர்யத்தை குறைப்பதாக உள்ளது.

        என்னுடைய பேவரைட் அனைத்து கதைகளும் என்றாலும், தங்க கல்லறை சான்ஸே இல்லை.

         முத்து காமிக்ஸ் பற்றி இன்னும் பேசலாம் என்றாலும், இந்த பதிவோடு முடித்துக் கொண்டு, அடுத்த பதிவில் மற்றொரு காமிக்ஸை பற்றி பேசலாமா என்பதற்கு உங்கள் கருத்துகளை எதிர்நோக்கியிருக்கிறேன்.

                                                        (……………..இன்னும் பேசலாம்……………………)

October 21, 2008 at 3:31 pm 9 comments

21-10-2008

      அமெரிக்க சந்தை 400 புள்ளிகளுக்கு மேலாக முடிந்து வெகு வலுவாக இந்த வாரத்தை தொடங்கியிருக்கிறது.  ஆசிய சந்தைகளும் அதனை தற்போது எதிரொலிக்கின்றன. நண்பகல் தொடங்கும் ஐரோப்பிய சந்தைகளும் எதிரொலிக்கும் என நம்புகிறேன்.

      நமது சந்தை துவக்கத்திலே +100 புள்ளிகள் அதிகமாக தொடங்க வாய்ப்பு இருக்கிறது.  நேற்று சொன்னது போல, நிப்டி பங்குகளில் சில பங்குகளை Short Covering செய்வதால், சந்தை முதல் அரை மணி நேரத்திற்கு வெகு வேகமாக ஏற வாய்ப்பு இருக்கிறது.  பிறகு ஒரு தொய்வு நிலை ஏற்பட்டு,  மீண்டும் நண்பகலில் ஒரு சிறிய ஏற்றத்தை எதிர்பார்க்கலாம்.

     ஆனால், நண்பர்களே, இந்த ஏற்றம், இறக்கம் எல்லாம் தற்காலிகமானவையே.  நீண்ட கால முதலீட்டாளர்கள் தினமும் மிக சிறிய எண்ணிக்கையில் நல்ல பங்குகளை வாங்கிக் கொண்டு வாருங்கள்.  ஒரு வருடத்தில் நல்ல இலாபம் கண்டிப்பாக கொடுக்கும்.  தின வணிகம் மற்றும்  BTST செய்யலாம்.  ஆனால், வரும் இலாபத்தை பார்த்து மயங்கி அதிக எண்ணிக்கையில் இறங்காமல் மனத்தை கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள்.  போதுமான இலாபம் கிடைத்தவுடன் உடன் வெளியேறிவிடுங்கள்.  நாளைய சந்தை எவ்வாறு இருக்கும் என்பதை சரியாக கணிக்க முடியாத நிலை தற்போது நிலவுகிறது. 

     இன்றைய சந்தை +175 முதல் +65 வரை ஆடும் என நினைக்கிறேன்.  முடிவு +75 முதல் +125 வரை முடியலாம்.

    இன்றைய சந்தையில் கீழ்க்கண்ட பங்குகளை கவனிக்கலாம்.

    Reliance Communications, Suzlon, Idea Celluar, L & T.

     Good Morning to You All!

Post Market:

        Reliance Communication – மிகவும் மந்தமாக ஆரம்பித்து 236-லிருந்து 260 வரை சென்றது.     Suzlon – 87 ல் ஆரம்பித்து 94 வரை சென்றது.  Idea Cellular – இலாபம் குறைந்திருக்கிறது என்ற காரணத்தால் கிட்டதட்ட 13% வரை குறைந்தது.  நல்ல விலையில் இருக்கிறது.   L & T – ரூ100 வரை ஏறியிறங்கியிருக்கிறது.  மேலே குறிப்பிட்ட பங்குகள் அனைத்திலும் நல்ல ஏற்ற இறக்கங்கள் இருந்தன.  சந்தையும் புதிய சப்போர்ட்ஐ கண்டிருக்கிறது.   தற்போது ஆரம்பித்திருக்கும் டோ ஜோன்ஸ் தடுமாற ஆரம்பித்திருக்கிறார். 

      இன்னும் இரு மணி நேரத்தில் அப்டேட் செய்ய முயற்சிக்கிறேன்.

அமெரிக்க சந்தை 200-க்கும் மேற்பட்ட புள்ளிகளை இழந்து தற்சமயம் மீண்டிருக்கிறது.  ஆனால் கடைசி அரை மணி நேரம் முக்கியமான கட்டத்தை தாண்டும் சமயம் என்று நினைக்கிறேன்.   இதற்கு மேல் Positive ஆகவில்லையென்றால் சரியும் வாய்ப்பே இருக்கிறது.  இன்னும் 30 நிமிடங்கள் தான் உள்ளன. சந்தை அடிப்படையில் ஒரு பலவீனம் தெரிகிறது. அது மட்டுமல்லாமல் இன்னொரு முக்கிய செய்தியும் கிடைத்திருக்கிறது.  எங்கள் வீட்டு எதிர் டீக்கடை பாயிடம் டீ மாஸ்டராக சேர நியூயார்க்கிலிருந்து விண்ணப்பம் வந்திருப்பதாக வதந்தி நிலவுகிறது. 

Good Night and Sweet Dreams!

October 21, 2008 at 6:25 am 3 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 6 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 6 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 7 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 7 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 8 years ago
October 2008
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031