Archive for October 10, 2008

தமிழில் ஒரு புதிய கெட்ட வார்த்தை : நிப்டி

 

ஒரு இளம் இயக்குநர் பிரபல கதாநாயகனிடம் கதை சொல்கின்றார் :

“சார், கதைப்படி நீங்க ஒரு நிப்டி. பணக்கார கதாநாயகி உங்க மேலே உயிரையே வைச்சுருக்கா”

“டைரக்டர் சார், நான் வேணா ஒரு பொறுக்கியாவோ, மொள்ளமாறியாவோ, முடிச்சவிக்கியாவோ நடிக்கிறேனே! நிப்டியாக வேணாமே! என்னோட இரசிகர்கள் ஏத்துக் கொள்ள மாட்டார்கள்!”

————————————————————————————-

 இடிந்த வீட்டின் அருகே தலைவிரிகோலமாக கதாநாயகனின் தாய். நாயகன் ஓடி வருவதை பார்த்த உடன் :
“ராஜா, வந்துட்டியாப்பா! பாத்தியாப்பா! எல்லாமே நிப்டியா போச்சுப்பா!”

கதாநாயகன் தன் தாயை கட்டி அணைத்தப்படி கோவென கதறி அழத் தொடங்குகிறான்.
————————————————————————————-

ஓரு கூட்டத்தில் சிக்கி தர்ம அடி வாங்கும் வாலிபன் :

“அடிக்காதீங்க, அடிக்காதீங்க. நான் அந்த பொண்னு கிட்டே பிப்டி இருக்குமான்னு தான் கேட்டேன். அந்த பொண்னு நிப்டி-ன்னு தப்பா நினைச்சுக்கிச்சி.”

————————————————————————————-

அரேபிய பாலைவனம். ஒரு வாலிபனின் கையில் ஒரு பழைமையான விளக்கு கிடைக்கிறது. அதை தேய்கிறான்.

“சலாம். எஜமான். நீங்கள் கட்டளையிட்டதை செய்ய காத்திருக்கிறேன்”

“ஜீனியே! நிப்டியை recover  செய்!”

போடாங் *@##@%^@!@^&#$%$ ##, நான் திரும்ப விளக்கிலேயே போய் படுத்துகிறேன்.”
————————————————————————————-

In a House at New York, United States of America :

Father (to his 8-old son) : “Johnny, you niffty boy.  Come here!”

Son (to his Father): “Don’t call me niffty, you moron! I’m a bad boy! Not that bad, you dickhead!”

————————————————————————————-

இந்த சோக்கெல்லாம் புரியாத அப்பாவி ஜீவனுகளுக்கு Niffty என்பது இந்திய தேசிய பங்கு சந்தை குறியீடு.

October 10, 2008 at 8:46 pm 14 comments

10-10-2008

முக்கியமான காலக்கட்டத்தில் இருக்கின்றோம்.  இம்மாதிரி காலக்கட்டம் தான் பல புதிய  பணக்காரர்கள் உருவாக்கும். பல பழைய பணக்காரர்களை ஏழையாக்கும். மிகச் சரியான முறையில் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டேமென்றால், நாமும் வெற்றியாளர்கள்தான்.

    அமெரிக்க சந்தை கிட்டத்தட்ட 50% சதவீதம் அதன் உயரத்திலிருந்து வீழ்ச்சியடைந்திருக்கிறது.  பொதுவாக கரடிகள் பிடிக்குள் சந்தை செல்லும்போது 50-65% என்பது ஓரளவு அதிகம்தான்.  ஆசிய சந்தைகளும் கீழ்நோக்கி பாய்ந்துக் கொண்டிருக்கின்றன. ஜப்பானிய நிக்கி பெரும்பாலும் அமெரிக்காவை சார்ந்து இருப்பதால் கிட்டத்தட்ட 10% சதவீதம் இறங்கியுள்ளது.  சீன சந்தை ஒரளவு கட்டுப்பாட்டை காட்டி வருகின்றது என்றபோதிலும், 5% இழப்பை இன்று ( இதுவரை) சந்தித்துள்ளது.

    நமது சந்தையை பொறுத்த வரையி்ல சென்செக்ஸ் 7000 என புதிய இலக்கு என ஊடகங்களில் பளிச்சிடுகின்றது.  பல முதலீட்டாளர்களும் இப்போது எந்த விலைக்கு வேண்டுமானாலும் விற்றுவிட்டு, இறங்கும்போது வாங்கிக் கொள்ளலாம் என்ற கரடி மனநிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர்.
    
    இந்த மனநிலைக்கு வராத முதலீட்டாளர்கள் போட்ட முதலீட்டில் பாதித் தொகை வந்தாலே போதும் என்று பயந்து போய் இருக்கின்றார்கள்.

    இவ்வாறாக இருக்கையில் சில நல்ல செய்திகளும் இருக்கின்றன.  அனுசக்தி ஒப்பந்தம் நிறைவேறியுள்ளது. கச்சா எண்ணெய் $83 என்ற விலைக்கு வந்துள்ளது.

     ஆனால் தற்சமயம் எதையும் கிரகிக்கும் நிலையில் நமது சந்தை இல்லை. இன்று வெள்ளிக் கிழமை வேறா? இன்றைய சந்தை சரிவுடன் ஆரம்பிக்கும். மீள வாய்ப்பு இருக்கின்றதா என்பது நண்பகல் தான் தெரியும். இன்றைக்கு சந்தை சன் அவுட்டேஜ் இன்டர்வெல் கிடையாது. வேறு இன்டர்வெல் இருக்க வாய்ப்பு இருக்கலாம்.

    தவிர்க்க இயலாத சூழ்நிலையால் மாலை விரிவாக எழுதுகின்றேன்.
 நாளை நஷ்டத்தை குறைப்பது பற்றி ஒரு பதிவு எழுதுகிறேன். அதில் சில தகவல்கள் உங்களுக்கு உபயோகமாக இருக்கும் என நம்புகிறேன்.

People respects the Wise, but adores the Brave.

October 10, 2008 at 6:30 am 5 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 6 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 7 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 8 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 8 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 8 years ago
October 2008
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031