ஹாரிபாட்டரும் மிக்சரும் க்வாட்டரும்

July 28, 2009 at 9:17 pm 12 comments

     சொந்த வாழ்வில் துயரத்துடன் தன் மகளுடன் ஒருநாள் ரயிலில் சென்றுக் கொண்டிருக்கையில் உதித்த ஒரு எண்ணத்தை வைத்து ஜே கே ரௌலிங் எழுதிய ஹாரிபாட்டர் கதைத் தொடர்கள் இந்த அளவிற்கு பிரபலமாகும் என அவரே நினைத்து பார்த்திருக்க மாட்டார்.   ஹாரிபாட்டரை தெரியவில்லையென சொன்னால் பொடிசுகள் நம்மை பார்க்கும் கேவலமான பார்வையை தவிர்க்க படிக்க ஆரம்பித்தவர்கள் அப்படியே அந்த புத்தகத்திலே ஆழ்ந்துவிட்டார்கள்.  அடுத்த பகுதிக்காக உலகமே காத்திருக்க ஆரம்பித்தது.

        மாயாஜாலம் கலந்த கதைத் தொடர்கள் நிறைய ஆங்கிலத்தில் உண்டு.  கொஞ்சம் டிராகன்கள் (‘யோவ், யாருய்யா நீ, மேஜிக் கதைன்னு எடுத்துட்டு வந்துட்ட, ஒரு டிராகன் கூட இல்லை’)  , குள்ள மனிதர்கள், சூனியக்காரி என ரெடி ரெஸிப்பிகளும் உண்டு.  அதைத் தாண்டி இந்த தொடர் வெற்றி பெற்றதற்கு காரணம் ஒரு புதிய உலகத்தை உருவாக்கி மெள்ள மெள்ள அதில் நம்மை இழுத்ததுதான்.  இதற்கு முன் எழுத்தில் இந்த மாயாஜாலத்தை ஜே ஆர் ஆர் டோல்கியன் என்ற பிரிட்டிஷ் எழுத்தாளர் நிகழ்த்தியிருக்கிறார்.  த ஹாபிட் மற்றும் த லார்ட் ஆப் த ரிங்ஸ் என்ற புத்தகங்களில் மிடில் எர்த் என்ற ஒரு மாய உலகை உருவாக்கி அதன் பாத்திரங்களுடன் நம்மை உலவ விட்டிருப்பார். 

    இரண்டாம் உலகப்போரின் நடுவே எழுதப்பட்ட இந்த புத்தகங்கள் வழக்கமாக மாயாஜால புத்தங்களுக்கு கொடுக்கப்படாத இலக்கிய அந்தஸ்தை அடைந்தன.  அதனை ஹாலிவூட் படமாக்க நினைத்த போது உலகமெங்கும் இருந்த டோல்கியன் இரசிகர்கள் கோபம், கொலைவெறி என இரசிப்புத்தன்மைக்கேற்ப உணர்ச்சியை அடைந்தனர்.  ஆனால் பீட்டர் ஜாக்ஸ்ன் கதையை சிதைக்காமல் அவருக்குரிய சுதந்திர தன்மையுடன் கதையை திரை வடிவில் சிறப்பாக அளித்து பாதிப்பேரின் (இன்னும் நிறையபேர் திரைப்படத்தினை பார்த்து உறுமிக் கொண்டுதான் இருக்கின்றார்கள்)  பாராட்டுதல்களை அள்ளிக் கொண்டார்.

harry2

இன்னுமாடா இந்த உலகம் நம்ம நம்பிட்டு இருக்கு

      ஆனால் ஹாரிபாட்டருக்கு நேர்ந்த கதி கொடுமையானது என்றுதான் சொல்ல வேண்டும்.  கதைத் தொடர் முடிவடையும் முன்னரே ஹாலிவூட் இந்த கதைத் தொடரை சிதைக்க தயாராகிவிட்டது.    ஆரம்பத்திலிருந்து இந்த கதைத் தொடரை காத்திருந்து படித்தவன் என்ற முறையில் என்னைப் பொறுத்தவரை  ஒரு படம் கூட தேறவில்லை.  வசூல் ரீதியாக தொடர்ந்து வெற்றி பெற்று வந்தாலும் இரசிகன் என்ற முறையில் என்னை மிகவும் வயிற்றெரிச்சலுக்கு ஆளாக்கிய படங்கள் இவை.

     ஹாரிபாட்டர் கதைத் தொடரின் முக்கிய அம்சத்தை நாம் சின்ன வயதிலேயே படித்திருப்போம்.  ஒரு ரூபாய், ஐம்பது பைசா விலைகளில் வந்த அழுக்கு காகிதங்களில் அச்சான ‘அந்தரத்தில் வந்த மந்திர பூதம்’, ‘மேகமலை ராட்சதன்’, ‘சரசுக்குட்டி’  போன்ற புத்தகங்களில் வந்த கதைதான்.

      ஒரு நாட்டினை ஒரு ராட்சதன் அல்லது ஒரு பூதம் அல்லது ஒரு மந்திரவாதி பயமுறுத்திக் கொண்டிருப்பான்.  ராஜகுரு கதாநாயகனான இளவரசனை அழைத்து இந்த நாடே உன்னை நம்பிதான் இருக்குன்னு சொல்ல, இளவரசன் தன் அள்ளக்கையுடன் குதிரையில் கிளம்பி, போகும் வழியில் ஒரு பிகரை பிக்அப் பண்ணும்போது ஒரு உண்மையை கண்டறிவான்.

       அதாகப்பட்டது, அந்த ரா (அ) பூ (அ) ம-யை நேரடியாக யுத்தம் செய்து கொல்ல முடியாது. அவனது உயிர் ஏழு கடல் தாண்டி, ஏழுமலை தாண்டி அங்குள்ள ஒரு குகையில் உள்ள ஒரு வண்டில் உள்ளது.  அந்த வண்டை கைமா செய்தால் பலானவர் டிக்கெட் வாங்கிவிடுவார்.

      ஹாரிபாட்டரின் கதைத்தொடரில் முக்கிய அம்சமே இதுதான். ஆனால் கதையுலகை உருவாக்கிய விதத்தில் கதாசிரியரின் திறமையை உன்னதம் என்றே சொல்ல வேண்டும்.  அம்மாயவுலகை அப்படியே வார்த்தைகளில் செதுக்கியிருக்கிறார்.  கதைத் தொடரை படிப்பவர்கள் அவ்வுலகில் வாழ வேண்டும் விரும்ப ஆரம்பித்தாலே கதாசிரியர் வெற்றி பெற்று விட்டார்.  உலகின் பல்வேறு பிரபலங்கள் அவ்வுலகின் வலையில் விழுந்ததே கதையின் வெற்றிக்கு காரணம்.  வாடிகன் இந்த புத்தகத்தை வெறுக்க ஆரம்பித்ததும் அப்போதுதான்.

harry1

நான் உன்னோட பத்திரமா இருக்கேன், ஹாரி. (நாங்க அப்படி இல்லீயே நைனா)

       ஆனால் திரைப்படங்கள்…… சகிக்க முடியாத வகையில் எடுக்க ஆரம்பித்தனர்.  நானும் விடாமல் ஏதாவது ஒரு பாகத்தில் புரிந்துக் கொண்டு நன்றாக எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் பார்த்தால்… நல்லவன்னு நினைச்சுட்டாங்க.. சமீபத்தில் வெளியாகிய The Half-Blood Prince  பார்த்து நொந்து போய் வெளியில் வந்தால் திரைப்படம் அமெரிக்காவில் வசூலை அள்ளுகிறது என தகவல் வர வெறுத்துபோய்விட்டேன்.

          இக்கதைத் தொடரை படிக்காதவர்கள் இப்படங்களை பார்க்கும்போது எவ்வாறு உணர்கின்றார்கள் என எனக்கு தெரியவில்லை.  படித்தவர்கள் வேதனைப்படுவார்கள் என்றே நான் உணர்கின்றேன்.  ஹாரிபாட்டர் அவனுடைய நண்பர்கள் மற்றும் செவரஸ் ஸ்னேப் ஆக ஆலன் ரிக்மேன் இதைத்தவிர மற்ற துணை கதாபாத்திரங்களை பற்றி எதுவும் விசேஷ அக்கறை எடுத்ததாக தெரியவில்லை.  கதையை படிக்கும்போது அந்த உலகத்தினை பற்றி ஏற்பட்ட ஒரு கற்பனையை படத்தில் சிதறடித்திருக்கிறார்கள்.

       கதைத் தொடர் முடிவதற்குள் மற்றும் அதன் கதாபாத்திரங்களாக நடிக்கும் நடிகர்கள் வயது ஏறிக் கொண்டே இருப்பது போன்ற நேரக் கட்டுப்பாடுகள் இருந்தாலும், இந்த பிரமாண்ட கதைத் தொடரை தயாரிக்கும்போது உரிய முன் முயற்சிகள் மேற்க்கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.  அல்லது சித்திர திரைப்படமாகவாது எடுத்திருக்கலாம்.  இப்போது வேண்டுமானால் வார்னர் பிரதர்ஸ் நிறுவனம் வசூலை அள்ளலாம்.  இன்னும் சில காலம் கழித்து விமர்சகர்களின் நேர்மையான விமர்சனங்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும்.  இந்த நூற்றாண்டின் இறுதியில் வந்த மிகச் சிறந்த கதைத் தொடரானது படமாக்க பட்ட விதத்தை ஹாலிவூட் ஒரு அவமானமாக கருதும்.  அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்.

Entry filed under: திரை விமர்சனம்.

Princess Mononoke – திரை விமர்சனம் Smith & Wesson – மேற்கில் இன்னும் சில கோமாளிகள்

12 Comments Add your own

  • 1. யாத்ரீகன்  |  July 28, 2009 at 9:52 pm

    >> இக்கதைத் தொடரை படிக்காதவர்கள் இப்படங்களை பார்க்கும்போது எவ்வாறு உணர்கின்றார்கள் <<

    i felt the book should be an over-hyped one (understanding that the movie is the book) , didn't understand the story at all 🙂 , just enjoyed that game they play in air .. few visuals were amazing.. didn't feel anything great about this movie

    somehow i haven't got interest to read the book, probably because everybody started talking high about this 🙂 oru veembud thaan 😉

  • 2. Anonymous  |  July 28, 2009 at 10:04 pm

    y blood? same blood. boss HP-3 movie was good. well thats my opinion. but as u said all the other movies sucked. the adaptation’s were heartbreaking. a very nice view on the adaptations

  • 3. mayooresan  |  July 28, 2009 at 10:16 pm

    ‘சரசுக்குட்டி’

    அது என்ன கதை?? மல்கோவா ஆன்டி மாதிரி கதையளோ?? ஹி…ஹி…!

    உண்மை நண்பரே, புத்தகத்தில் இருக்கும் விறுவிறுப்பில் பாதிகூட திரைப்படங்களில் இருப்பதில்லை.

    ஆடர் ஓப் பீனிக்ஸ் படம் பார்த்து விரக்தியின் உச்சத்திற்கே போனேன். ஆனாலும் இந்த திரைப்படம் பரவாயில்லை என்று இணையத் தளங்களில் எழுதியிருந்தனர். இப்போ நீங்கள் வயித்தில புளியை கரைக்கிறீங்களே???

  • 4. sharehunter  |  July 28, 2009 at 10:21 pm

    யாத்ரீகன்

    கதைத் தொடரை ஆரம்பத்தில் சிறுவர்களுக்கான கதை என்றே நினைத்தேன். படித்து பாருங்கள். வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கும்.

    நான்காம் பாகத்திற்கு பிறகு பறக்க ஆரம்பித்து விடும். அவ்வுலகில் வாழ விரும்புவீர்கள். 🙂

    Mayooresan:

    அந்த கொடுமைய என்னத்த சொல்றது?

  • 5. shankar visvalingam  |  July 29, 2009 at 12:33 am

    நண்பரே,

    ஹாரிபாட்டர் நாவல்களை படித்திருக்கிறேன். அம்மணி ராலிங்கின் கற்பனை அபாரம். முதல் 4 பாகங்கள் வரை.
    அதன் பின் புத்தகங்கள் தலையணை சைஸிற்கு வந்து விட்டன. ஆரம்ப நாவல்களில் எனக்கு கிடைத்த திருப்தி பின் வந்த நாவல்களில் இல்லை. இறுதியாக வந்த பாகம் பக்கங்கள் குறைந்து வந்திருந்தது ஒர் நிம்மதியே.

    ஹாரிபாட்டர் படங்களை அவை சுமாராகத்தான் இருக்கும் என அறிந்துதான் பார்க்க வேண்டியுள்ளது. இந்தப் பகுதியிலாவது நன்றாக செய்ய மாட்டார்களா எனும் ஒர் அற்ப ஆசைதான். ஆனால் இதுவரை ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.

    இது போதாதென்று நாவலின் இறுதிப்பாகம் இரு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாகிறது. 🙂
    காசு கொட்டும் பூதமாக ஹாரிபாட்டர் திரைப்படங்கள் மாறி விட்டன, எல்லாம் அந்தப் பெயரில் உள்ள மந்திரம்.

    சிறப்பான பதிவு.

  • 6. Karthikeyan G  |  July 29, 2009 at 9:03 pm

    Sir,
    Harrypotter கதையும் படிக்காமல் படமும் பார்க்காமல் இருப்பவனை (நான்தான்) என்ன செய்யலாம்?

  • 7. sharehunter  |  July 29, 2009 at 9:18 pm

    கார்த்தி,

    உங்களை வம்பிழுக்கும் பல்கலை கழக துணை வேந்தராக நியமிக்கலாம். 🙂

  • 8. Rafiq Raja  |  July 31, 2009 at 12:14 pm

    வேட்டையரே,

    ஹாரி பாட்டர் நாவலை நான் முழுவதும் இது வரை படித்ததில்லை. ஆனால் உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் முதல் இரண்டு பாகங்களை சினிமாவில் பார்த்த போது அது நன்றாகவே இருந்ததாக உணர்ந்தேன். ஆனால் போக போக படங்கள் சற்றும் சம்பந்தம் இல்லாமல் ஒரு மட்ட தொனியில் எடுக்கபடுவதை உணர்ந்த பின்பு அதை தொடர்ந்து பார்க்கவில்லை.

    ஏதோ ம்யூசிகல் சேர் போல இஷ்டத்துக்கு டைரக்டர்களை மாற்றி மாற்றி ஒரு சினிமா தொடர் எடுத்தால், அது எப்படி சாத்தியமாகி இருக்கும் ஹாரி பாட்டர் சினிமா தொடர் ஒரு நல்ல உதாரணம்.

    // இந்த நூற்றாண்டின் இறுதியில் வந்த மிகச் சிறந்த கதைத் தொடரானது படமாக்க பட்ட விதத்தை ஹாலிவூட் ஒரு அவமானமாக கருதும். //

    உண்மையே… ஹாரி பாட்டரின் சினிமா தாக்கத்திற்கு முக்கிய காரணம், ஒரு கதை தொடர் முடியும் முன்பே அதை சினிமா ஆக்கம் செய்ய துணிந்ததற்கு தண்டனை. லார்ட் ஆஃப் த ரிங்க்ஸ் வெற்றியின் ரகசியமும் அதுவே.

    இப்போது ஹாலிவுட்டில் பாட்டர் என்ற சொல் ஒரு மந்திர உச்சாடனம். அது அயர்ந்து போகும் முன்பு படாதிபதிகள் பண சூரையாடல் நடத்த எண்ணி விட்டார்கள் போல…. ஆனால் நீங்கள் கூறியபடி சற்று காலம் கழித்து திரும்பி பார்க்கையில் இந்த படங்களையா நாம் அப்படி ரசித்தோம் என்று அவற்றின் ரசிகர்கள் தங்களையே கேள்வி கேட்டு கொள்ளும் நிலை கட்டாயம் வரும்.

    அவ்வேளையில் நான் தான் அப்பவே சொன்னேனே என்று சொல்லி கொள்ளும் பெருமை நமக்கு என்பது மட்டுமே இப்போதைக்கு இருக்கும் ஒரே ஆறுதல் 🙂

    ரஃபிக் ராஜா
    காமிக்கியல்

  • 9. harveena  |  August 1, 2009 at 10:10 pm

    anna,,,, i m also one among those who not seen this picture,, wt u ll do me ?///////// hehhehee,, m i the vice prinicipal , in the same school where u appointed Mr.Karthikeyan?/// hehehhe

  • 10. Karthikeyan G  |  August 3, 2009 at 7:49 pm

    //கார்த்தி,

    உங்களை வம்பிழுக்கும் பல்கலை கழக துணை வேந்தராக நியமிக்கலாம்.
    //

    அய்யா,… நான் இப்போது வம்பிழுக்கும் கலையில் பண்டிதம் பெற்று விட்டேன். நான் தற்போது வம்புவளர்க்கும் பல்கலை கழகத்தில் இனைந்து சேவையாற்றி கொண்டிருக்கிறேன்.

    🙂

  • 11. சென்ஷி  |  August 3, 2009 at 8:13 pm

    :))

    ஆதங்கத்தை சிறப்பா வடிச்சுட்டீங்க. நான் புத்தகம் படிச்சது இல்லை. அதனால அந்த வரிசை திரைப்படங்களை விரும்பி பார்த்தேன். முதல் இரண்டு பாகம் ஈர்த்த அளவு மத்த பாகங்கள் விருப்பத்துக்குரியதா எடுக்கப்படலைன்னு தோணுது. குழந்தை முகங்கள் வளர்ச்சி பெற்ற பின் கொடுத்த முக்கியத்துவம் அவ்வளவா எடுபடலைன்னு தோணுது. இது என்னோட கருத்து அம்புட்டுத்தேன்!

    //இன்னும் சில காலம் கழித்து விமர்சகர்களின் நேர்மையான விமர்சனங்களுக்கு அவர்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும். இந்த நூற்றாண்டின் இறுதியில் வந்த மிகச் சிறந்த கதைத் தொடரானது படமாக்க பட்ட விதத்தை ஹாலிவூட் ஒரு அவமானமாக கருதும். //

    ஹிஹி.. ஆனாலும் அநியாய நகைச்சுவை உணர்ச்சிங்கண்ணா உங்களுக்கு. இது வரைக்கும் ஏகப்பட்ட புத்தகங்களை அவங்க சினிமாவுக்காக வீணாக்கின கதை தனியா இருக்குது.

  • 12. ponmalar  |  August 8, 2009 at 11:30 am

    பங்குச்சந்தையில் ஈடுபட தேவையான அடிப்படைகள் – 1

    http://ponmalars.blogspot.com/2009/08/blog-post.html

Leave a comment

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.
July 2009
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031