Posts tagged ‘Hunter’s Mind’

Hunter’s Mind

நான் நேற்று மாலை தேநீர் அருந்த சென்ற போது டீக்கடை பாய் என்னை பார்த்து

“என்னா சார், ஷெர் மார்க்கெட்ல கரெக்ஷன் வர போதாமே, உண்மையா? போட்ட பணம் எல்லாம் கோவிந்தா தான்”.

நான் அதிர்ந்து “பாய், உங்களுக்கு யார் சொன்னா?”.

 “எல்லாந்தான் பேப்பர்லா போட்டுருக்கே”.
 இன்றைய பங்கு சந்தையில் ஊடகங்களின் பங்கு மிகவும் அதிகம்.  இந்த வார ஏறக்குறைய அனைத்து ஊடகங்களிலும் பங்கு சந்தையைப் பற்றி கிட்டதட்ட ஒரே செய்திதான்.
அதாவது, கரடிகளானது துாக்கத்திலிருந்து எழுந்து காபி குடித்து, தலை சீவி, உடையணிந்து, தங்கள் அலுவலகங்களுக்கு செல்ல தயாராகி விட்டன என்பது தான்.

எந்த வினாடியிலும் சந்தை தலைகுப்புற கவிழ்ந்து விடலாம்.

 

நம் நாட்டு கோடைக்காலம், மழைக் காலம் இவற்றைப் பற்றியும் நம்முடைய கருத்துகள் இவைதான்.

“போன வருசம் வெயிலைவிட இந்த வருசம் அதிகம் தான்”.

நமது பங்கு சந்தை என்னவோ கரடிகளின் கட்டுபாட்டில் வர இருப்பது தவிர்க்க இயலாதுதான். ஆனால் சரிவு மிக பயங்கரமாக இருக்காது என்றுதான் தோன்றுகிறது.  சென்ற வருடத்தில் ஏறிய விதந்தான் மிகவும் பயமுறுத்தும் வகையில் இருந்தது.

முதலீட்டாளர்களுக்கு கரடிகளை பிடிக்காது. காளைகளையே பிடிக்கும். சிலை கூட வைத்திருக்கின்றோம். நாட்டின் வளர்ச்சி பங்கு சந்தையின் புள்ளிகளை வைத்து கணக்கிடப் படுவதால், காளைகளே புள்ளிகளை ஏற்றுவதால் காளை இரசிகர் மன்றத்தில் அனைவரும் இணைந்துள்ளோம்.

நாட்டின் முன்னேற்றத்திற்கு பங்கு சந்தை புள்ளிகள் மட்டுமே காரணியாக இருக்க முடியாது.

திரும்ப படித்து பார்க்கும்போது இக்கட்டுரையானது மிகவும் எளிமையாகவும், புதிய முதலீட்டாளர்களுக்கு தெரியாத எந்த விஷயத்தையும் இக்கட்டுரையில் குறிப்பிடவில்லை என தெரிகிறது.  ஆனால் இது அடிப்படை.

சந்தை சரியும் போது முதலீட்டாளர்களுக்கு தாங்கள் வாங்கிய பங்குகளை பற்றியும், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை பற்றியும் பெருத்த சந்தேகம் எழுகின்றது. சரிவின்போது அடிப்படையை மறந்து விட்டு அச்சம் நம்மை சூழ்ந்து கொள்வதை ஒவ்வொரு முறையும் பார்க்கின்றோம். அத்தகைய நேரங்களில் முதலீட்டாளர் இவ்வுலகில் உள்ள அனைத்தையும் சந்தேக மனப்பான்மையுடன் தான் பார்ப்பார்.

 

இந்த மனநிலையின் இரு நிலைகள்.

“செல்லம், அப்பாவுக்கு முத்தா கொடு!”

“சனியனே, தள்ளிப் போ!”.
இந்த மனநிலைக்கு ஊடகங்கள் ஆற்றும் பணி மிகவும் குறிப்பிடதக்கது. இது குறித்து தொடர்ந்து பார்ப்போம்.

 

 

April 25, 2008 at 2:46 am Leave a comment

Bear’s Footsteps

பெளர்ணமி. காடு. பெரும் புதரின் ஒரு புறம் நீங்கள். மறுபுறம் உலவி கொண்டிருக்கும் ஒரு புலி.

உங்கள் துப்பாக்கியில் ஒரு தோட்டாதான்.     என்ன செய்ய போகிறீர்கள்?


இத்தளத்தில் நம் பங்கு சந்தை குறித்த என்னுடைய புரிதலை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கின்றேன்.  சில பங்குகள் பற்றிய என்னுடைய விரிவான பார்வையையும்தான். தின வர்த்தகம் குறித்து தற்போது எழுதும் உத்தேசமில்லை.

 தற்போதைய சூழலில் கரடிகள் குளிர்கால துாக்கத்திலிருந்து எழுந்து விட்டன என்றுதான் நான் நினைக்கின்றேன்.

 

நாளைய தினம் நம் பங்கு சந்தையை பொறுத்தமட்டில் ஒரு முக்கியமான நாள். 

 

கையிருப்பிலுள்ள பங்குகளை விற்று ரொக்கம் வைத்திருப்பவர்களுக்கு சந்தை சரிந்தால் தங்க வெள்ளி. இதற்கு எதிர்மாறான நபர்களுக்கு கறுப்பு வெள்ளி. சந்தையில் இரண்டாம் வகை மனிதர்களே அதிகம் இருப்பதனால் கறுப்பு வெள்ளி, திங்கள் என்பவை நிரந்தரம் பெற்று விடுகின்றன.
சந்தையை பொறுத்த மட்டில் அது ஒரு சாதாரண வெள்ளி கிழமை.

 நல்லது. முதலில் கேட்ட கேள்விக்கு பதில்.
தேர்ந்த வேட்டைகாரரும், அனுபவமில்லாத வேட்டைகாரரும் வேட்டையை தவிர்த்து விடுவார்கள். காரணம், முதலாமவருக்கு அனுபவம், பிந்தையவருக்கு பயம்.
தேர்ந்த வேட்டைகாரர் என நம்பி கொண்டிருப்பவர்கள் மட்டுமே புலியின் நடையை கவனித்து ஒரு  Pattern உருவாக்கி வேட்டையாட முயன்று தோற்று அதற்கும் ஒரு காரணம் கண்டுபிடிப்பார்கள்.

 

 

April 24, 2008 at 5:17 pm Leave a comment

Hunter’s Moon Rises

வணக்கம்,

காட்டில் வசிக்கும் புலியை வேட்டையாடி இருக்கிறீர்களா? இல்லையென பெருமுச்செறிபவர்களுக்கு புலி வேட்டை நம் நாட்டில் சட்ட விரோதம் என்ற தகவலை தெரிவித்து கொள்கின்றேன்.  அதை விட சுவாரஸ்யமான வேட்டை பங்கு சந்தை என்னும் காட்டில் ஆடும் வேட்டை.

பங்கு சந்தை எனும் காட்டிலுள்ள புலிகளை வேட்டையாட தேவையான வேடனின் மனநிலையை அடைவதற்கு ஒரு சிறிய முயற்சியே இத்தளம். 

வேட்டை காலம் நெருங்கி வருகிறது ………………

April 23, 2008 at 6:42 pm 2 comments


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 8 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 9 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 10 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 10 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 10 years ago
March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031