குதிரை வீரன் குணா அத்தியாயம் 9 உளவாளி
July 13, 2015 at 1:20 pm Leave a comment
அவளை கண்டதும் பெருங்குரலில் அழ ஆரம்பித்தவனை, இளவரசி பூங்காவனம் தொடைகளுக்கு நடுவில் ஒரு உதையை விட்டு அடக்கினாள்.
மூடனே, உன்னால் எனக்கு எவ்வளவு பிரச்சினைகள் தெரியுமா?
கண்ணீருடன், அது பற்றி தன்னால் ஊகிக்க இயலவில்லை என கூறி, ஒரு அறையை பெற்றான்.
உன்னை இங்கேயே கொன்று, நீ இருந்த அடையாளமே இல்லாமல் ஆக்க என்னால் முடியும். ஆனால் உன்னால் ஒரு வேலை ஆக வேண்டியதிருக்கிறது.
உன்னை வைத்தே சில அரசியல் நிகழ்வுகளை செய்ய உத்தேசித்திருக்கிறேன். அதற்கு நீ ஒத்துழைத்தால், நீ உயிர் பிழைப்பது மட்டுமின்றி, பரிசிலும் கிடைக்கும். என்ன சொல்கிறாய்?
நான் சிறிது யோசிக்க வேண்டும், இளவரசி.
காவல் தலைவன் மாரி குணாவின் தாடையை முரட்டுத் தனமாக திருப்பி
டேய், உனக்கு எப்பேர்ப்பட்ட பரிசில் கிடைக்க போகிறது, அதைப் போய் வேண்டாம் என்கிறாயா? முட்டாளா நீ?
ஒருவனிடம் முதல் முறையாக அடி வாங்கும்போது இருக்கும் பயம், பலமுறை சாத்தப்பட்டவுடன் வெகுவாக குறைந்து விடுவது உலக நியதி. அரசுப் பள்ளிகளில் சுமாராக படித்தவர்களுக்கு இது நன்றாக தெரியும்.
ஆகவே அத்தனை அடி வாங்கியும், சலிப்புடன் குணா சொன்னான்
அன்னத்திற்கே வழியில்லை, ஆட்டக்காரிக்கு ஆயிரம் பொன்னா?
(குணாவுக்கும் நேரும் இக்கொடுமை என்று முடியுமோ?)
Entry filed under: Hunter's Mind.
Trackback this post | Subscribe to the comments via RSS Feed