Posts filed under ‘Uncategorized’
03-02-2009
நேற்றைய தினம் துவக்கத்தில் நிலவிய குழப்பமான சூழ்நிலையை கரடிகள் பயன்படுத்திக் கொண்டனர். இன்றைய தினம் Short Covering தினமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். காளைகள் துவக்கத்திலேயே வேட்டையை ஆரம்பித்து விட்டால் சந்தையானது 70 புள்ளிகளுக்கு மேலே துவங்கி மெல்ல மெல்ல 50 புள்ளிகளுக்கு நிலைக் கொள்ள நேரிடும் என நினைக்கறேன்.
எப்படியும் இன்றைய தினம் ஏறுமுகமாகவே முடிய வேண்டும். குறைந்த வால்யூம் உள்ள சந்தையில் மிக சரியான கணிப்புகள், டெக்னிகல் லெவல்கள் பலிப்பதில்லை. இழந்த புள்ளிகளை தக்க வைக்க சந்தை போராடும் நாள் இன்று.
நண்பகல் ஐரோப்பிய சந்தைகள் ஏறுமுகமாக துவங்கும் பட்சத்தில் நம் சந்தை மேலும் மேலே ஏற வாய்ப்புள்ளது.
நீண்ட கால முதலீட்டாளர்கள் வாங்க சிறிது நாள் காத்திருக்கலாம்.
மாலை விரிவாக எழுதுகிறேன்.
Read Disclaimer.
Good Morning to you All!
02-02-2009
இந்திய குழுமங்களில் முக்கிய குழுமங்களின் காலாண்டு அறிக்கைகள் திருப்திகரமாகவே வந்துள்ளன. உதாரணத்திற்கு, ரிலையன்ஸ், ஹின்டால்கோ போன்றவை. சில காலாண்டு அறிக்கைகள் அதிர்ச்சியை கொடுத்திருக்கின்றன. உதாரணத்திற்கு டாடா மோட்டார்ஸ், எம் அன் எம். இவற்றில் டாடா மோட்டார்ஸ் மட்டும் நஷ்டம் காண்பித்திருக்கிறது. ஆட்டோ துறை சிறிய அளவில் கரடிகளின் தாக்குதலை சந்திக்க நேரிடும் என தோன்றுகிறது.
அமெரிக்க சந்தை இறங்கியிருந்த போதிலும், இந்த வாரம் பொருளாதார ஊக்கத்தால் இந்த வாரம் மேலேறும் என எதிர்பார்ப்பதால், நம் சந்தையில் ஒரு குறுகிய கால காளை ஒட்டத்தை எதிர்பார்க்கலாம்.
நீண்ட துாரம் ஒடுமென எதிர்பார்க்க இயலவிட்டாலும், 3000 என்ற இலக்கை தாண்டி ஒடும் என டெக்னிகல் லெவல்கள் தெரிவிக்கின்றன. பார்க்கலாம்.
இன்றைய சந்தை சிறிது குழப்பமான நிலையில் ஆரம்பிக்கும் என நினைக்கிறேன். பிறகு மெல்ல மெல்ல மேலேற ஆரம்பிக்கும் என நினைக்கிறேன். சந்தையானது 86 முதல் -28 வரை ஆடும் என நினைக்கிறேன்.
மாலை விரிவாக எழுத முயற்சி செய்கிறேன்
Good Morning To You All!
Post Market:
இன்றைக்கு துவக்கத்தில் ஏற்பட்ட குழப்பத்தினை கரடிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டனர். 60 புள்ளிகள் இழப்பிற்கு பின் குறுகிய கால முதலீட்டாளர்களும் லாபத்தை உறுதி செய்துக் கொண்டதால், சந்தை மேலும் புள்ளிகளை இழக்க வேண்டியதாயிற்று.
ஆனாலும், இன்னும் வலுவாக இருப்பதையே உணர்கிறேன். ஒரு சிறிய நல்ல செய்திக்கு சந்தை வெகு வேகமாக ரீயாக்ட் செய்யக்கூடும். பொறுமை. அதுதான் நமக்கு இப்போது வேண்டும்.
27-01-2009
நேற்றைய அமெரிக்க சந்தை உயர்ந்தே முடிந்துள்ளது. ஆசிய சந்தைகள் விடுமுறை காரணமாக, ஜப்பான் சந்தை மட்டுமே தற்போது ஏற்றத்தில் துவங்கியுள்ளது. சீன சந்தை புது வருட கொண்டாட்டம் காரணமாக விடுமுறை. எருது வருடமாம். சென்ட்டிமென்டாக நல்ல வருடம்.
நமது சந்தையில் Futures & Options Contract முடிய இன்னும் மூன்று வணிக தினங்களே உள்ள நிலையில் சந்தை எப்படி வேண்டுமானாலும் ஆடலாம். சந்தை மீண்டும் 3000 என்ற நிலையை தொடும் சாத்தியமும் தற்சமயம் இருக்கிறது.
வங்கிக் குழுமங்கள் அனைத்துமே நல்ல காலாண்டு அறிக்கைகளை கொடுத்துள்ளன. அவற்றில் ஒரு ஏற்றத்தை எதிர்பார்க்கலாம். அது போல ரியல் எஸ்டேட் மற்றும் மெட்டல் குழுமங்கள் மிகவும் சரிந்துள்ளன. அவற்றில் காளைகள் புகுந்து ஏதேனும் செய்வார்கள் என நம்பலாம்.
இன்றைய சந்தையை மிகச் சரியாக கணிக்க இயலாது என்ற போதிலும், சந்தையானது 88 முதல் 12 வரை ஆடலாம். முடிவு சுபமாக இருக்கும் என நினைக்கிறேன்.
Good Morning to you all!
Recent Comments