Posts filed under ‘வேதாள நகரம்’

வேதாள நகரம் – 14. பொக்கிஷம்

    எஸ்கோபார் முகம் வெளுத்து போய், ‘நான்……அதாவது….இது…..’ என உளற ஆரம்பித்தார்.

     ‘எஸ்கோபார்,  இது என் குடும்பத்தை சேர்ந்த கப்பல்.  அதில் உள்ள அனைத்துமே என் குடும்பத்தை சேர்ந்தது.  உன் தந்தை இறந்த பிறகு நீ என்னிடமல்லவா வந்து சேர்ந்த்திருக்க வேண்டும்?’
 
   எஸ்கோபார் விஷ்வாவின் கையிலிருந்து பேழையை வாங்கி, எதுவும் பேசாமல் அவரிடம் ஒப்படைத்தார்.

   அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்ட விஷ்வா, ‘உங்களுக்கு வேதாள நகரம் இருப்பது எப்படி தெரியும்? எவ்வாறு எங்களை கண்டுபிடித்தீர்கள்?’

    ‘இந்த பொக்கிஷத்தை வேதாளத்தில் ஏற்றும்போதே என்னுடைய தாத்தா ஒரு கடிதத்தில் அனைத்தையும் விளக்கி, அதனை மற்றொரு கப்பல் மூலம் என் தந்தைக்கு அனுப்பி விட்டார்.  கடிதம் வந்து சேர்ந்தும், கப்பல் வந்து சேரவில்லை. 

        என் தந்தையின் காலத்திற்கு பிறகு நானும் இதை தீர விசாரிக்க ஆரம்பித்த பிறகுதான் இந்த வேதாள நகரம் பற்றி தெரிய வந்தது. ஆனால் அதன் அமைவிடம் தெரியவில்லை.      எஸ்கோபார் உங்களிடம் அந்த வரைபடத்தை கொடுத்த போதே எனக்கு தெரியும்.  எனவே உங்களை அப்போதிலிருந்தே பின்தொடர ஆரம்பித்தேன்.  பல்வேறு  அபாயங்களுங்குட்டு இந்த பொக்கிஷ வேட்டையை நீங்கள் நிறுத்தி விடக்கூடாது  உங்களை இந்த நகரத்தை நோக்கி துரத்த வேண்டியதாகிவிட்டது.

     இந்த நகரத்தின் இருப்பு என் காரியதரிசி ஸ்டெல்லா மூலமாக மிகச் சரியாகவே தெரிய வந்தது. என் குடும்பத்தின் சொத்துகளை கண்டுபிடிக்க உதவிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.’

    இதனை கேட்டு நம் இலட்சிய கு.வீ. பலத்த அதிர்ச்சியடைந்தனர்.  அதிலிருந்து மீண்ட சதீஷ், ‘சரி, இப்போது எங்களின் கதி என்ன?’ என வினவினார்.

    ‘நான் ஏற்கெனவே சொன்னது போல, என் குடும்பத்து சொத்தினை கண்டுபிடிக்க உதவியுள்ளீர்கள்.  உங்களுக்கு இரு வாய்ப்புகளை அளிக்கிறேன்.  நீங்கள் என்னுடன் பணியாற்றலாம். இரண்டு. அந்த கோச்சு வண்டியில் உங்களின் வெகுமானம் உள்ளது.  அதை எடுத்துச் செல்லலாம்.’

    நம் இலட்சிய கு.வீ.  உடம்பை வளைத்து வேலை செய்து பழக்கமில்லாததால், இரண்டாவது வாய்ப்பையே தேர்வு செய்தனர். எஸ்கோபார் மட்டும் தன் இறுதி நாட்களை பிரபுவிடம் கழிக்க விரும்பி முதல் வாய்ப்பினை தேர்வு செய்தான்.

    ‘கைகளை மேலே உயர்த்துங்கள்.  இல்லையெனில் மகாபிரபு சுடப்படுவார்’

    அனைவரும் அதிர்ச்சியுடைந்து திரும்பி பார்த்ததால், ஜானி பீரோ கையில் துப்பாக்கியுடன் அலெக்ஸாண்டரை குறிபார்த்துக் கொண்டிருந்தான்.

    ‘உன் கையில் இருக்கும் பொக்கிஷத்தை இங்கே கொடு.’

    சில நொடிகள் யோசித்த அவர், பேசாமல் அந்த பொக்கிஷ பேழையை தரையில் வைத்தார்.  அடுத்த கணமே அதை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் குதிரையில் ஏறி சிட்டென பறந்தான் ஜானி பீரோ.

    கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இச்சம்பவத்தை பார்த்து அனைவருமே அதிர்ச்சியடைந்து விட்டனர். இவ்வளவு நாள் உழைப்பிற்கு பின்னர், அந்த பொக்கிஷம் கைவிட்டு போவதென்றால்?

    இந்த களேபரத்தில் அலட்டிக் கொள்ளாமல் இருந்தவர் அலெக்ஸாண்டர் மட்டுந்தான்.
 
   ஜானி பீரோவை துரத்திக் கொண்டு செல்லலாமா என அவர் ஆட்கள் கேட்டதற்கு வேண்டாமென தலையசைத்தார்.

    மிக மனவருத்தமடைந்த கலீல் ‘அப்போது கோச்சு வண்டி எங்களுக்கு கிடையாதா?’ என ஏங்கினார்.

    ‘கொடுத்ததை பெறும் பழக்கம் எங்களுக்கில்லை’ என பஞ்ச் அடித்த பிரபு, அவர்கள் எல்லோருமே மனவருத்தம் அடைந்திருப்பதை உணர்ந்து உண்மையை சொல்ல முடிவு செய்தார்.

     தன் சட்டைப்பையிலிருந்து ஒரு பழைய கடிதத்தை எடுத்த பிரபு, ‘இந்த கடிதம் என் தாத்தா என் தந்தைக்கு அனுப்பிய கடைசி கடிதம்.  படிக்கிறேன் கேளுங்கள்.’

என் அன்பு மகனுக்கு,

      பலவித சிரமங்களுக்கிடையில் ஒரு புதிய கடல் வழியை கண்டுபிடித்திருக்கிறோம்.  இந்த நிலமானது அன்பான மக்களையும், ஏராளமான பொக்கிஷங்களை கொண்டுள்ளது. இந்த கடல்வழியை மன்னருக்கு தெரிவித்தால், அனைத்து பொக்கிஷங்களும் நாட்டிற்கு என சொல்லி விடுவார் என்பதால், சிறிது காலம் இதனை மறைத்து வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

          இங்குள்ள மக்கள் மிகுந்த ஞானமுள்ளவர்களாக இருக்கிறார்கள்.  இவர்களிடமுள்ள ஒரு சிறந்த ஞானப் பொக்கிஷம்  இரண்டு அடிகளில் உள்ள ஒரு கவிதை. அதனை அவர்கள் குறள் என அழைக்கிறார்கள். அதில் வாழ்க்கைக்கு, வணிகத்திற்கு தேவையான ஏராளமான விவரங்கள் அடங்கியுள்ளன.  அதனை ஒரு பிரதியெடுத்து இந்த கப்பல் தலைவனிடம் கொடுத்து பொக்கிஷ பேழையில் வைத்து உனக்கு அனுப்புகிறேன். 

        உலகில் உள்ள மிகச் சிறந்த கலைப் பொக்கிஷங்கள் அனைத்தும் ஸ்பெயின் நாட்டவர்களுக்கு தானே சொந்தம்?  இந்த விலை மதிக்கவியலாத கலைப் பொக்கிஷத்தை கப்பல் தலைவனின் அறையில் உள்ள பொக்கிஷ நிலவறையில் வைத்து உனக்கு அனுப்புகிறேன். 

      இந்த கடிதத்தை வெகு இரகசியமாக வைத்துக் கொள்.  அரச குடும்பதாருக்கு தெரியவேண்டாம்.

   அன்புள்ள

உன் தந்தை.
   
      ‘அப்போது ஜானி பீரோ எடுத்துச் சென்ற பேழையில் இருப்பது வெறும் ஒரு புத்தகம் தானா?’

    ‘ஆம்.  அதுவும் இத்தனை கால இடைவெளியில் மக்கி போயிருக்கும். என்னிடம் வேறு புதிய பிரதியே இருக்கிறது.  இன்னமும் அது விலை மதிக்கவியலா கலை பொக்கிஷம்தான்.  பொக்கிஷம் என்பது அவரவர் மனதை பொறுத்ததுதானே? 

            இவ்வளவு சிரமப்பட்டு தேடிய பொக்கிஷம் போனதென்ற வருத்தத்துடன் நீங்கள் செல்ல வேண்டாம் என்பதால்தான் உங்களுக்கு இந்த உண்மையை சொன்னேன்.’

          தற்போது நால்வரான நமது இலட்சிய குதிரை வீரர்கள் விஷ்வா, சதீஷ், கலீல் மற்றும் செழி கோச்சு வண்டியை அடைந்து ‘இவ்வளவு சிரமமும் ஒரு புத்தகத்திற்கு தானா? என அலுத்துக் கொண்டே கிளம்பினர்.

          அவர்கள் கோச்சு வண்டி தொலைவில் மறைவதை பார்த்துக் கொண்டிருந்த அலெக்ஸாண்டர் அந்த கடித்தில் திருப்பி அதிலிருந்த பின் குறிப்பை மீண்டும் படித்தார்.

        பின் குறிப்பு  நாம் கண்டுபிடித்த புதிய நிலமானது செல்வ செழிப்பில் மிதந்து கொண்டிருக்கிறது.  அங்குள்ள மக்கள் நகைகள் செய்வதில் வல்லவராக இருக்கிறார்கள். அங்கேயிருந்து நம் குடும்ப வணிகத்திற்கு உதவுமே என ஏராளமான தங்க, வைர நகைகளை நான்கு குடி தண்ணீர் பீப்பாய்களில் வைத்து அனுப்பியிருக்கிறேன்.

      வேதாளம் என்று அழைக்கப்பட்ட அந்த கப்பலில் ஏறிய அலெக்ஸாண்டர் கீழ் தளத்தில் இருந்த நான்கு குடி தண்ணீர் பீப்பாய்களில் ஒன்றின்  மூடியை விலக்கி பார்க்க, அதில் வைரங்கள் பளபளத்துக் கொண்டிருந்தன.

முற்றும்.

February 21, 2009 at 9:54 am 5 comments

வேதாள நகரம் – 13 வேதாள நகரம்

       கோச்சு வண்டி மெள்ள பாலைவனத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.  கோச்சு வண்டியின் உள்ளே இருப்பவர்கள் உள்ளூர ஒரு பதட்டத்தை உணர ஆரம்பித்திருந்தனர்.

  ‘ஆமாம், செழி.  நீ எப்படி அந்த கயவன் கிட்ட போய் சேந்தே?’

   ‘அண்ணே, ஜானி பீரோ நல்லவரா தான் இருந்தாரு. அவரோட வாலிப வயசில துப்பாக்கிய கையாள கடுமையான பயிற்சிகளை எல்லாம் பண்ணிக்கிட்டு இருந்தாரு.  துப்பாக்கியும் கையுமா தான் இருந்தாரு.  முதுகு அரிச்சா கூட துப்பாக்கியால தான் சொறிவாரு.  பொண்ணுங்க கூட்டமாக போன அவ்வளவுதான்,  துப்பாக்கியால தலைய சொறியறது, முதுக சொறியறதுன்னு ஒரே சீனா இருக்கும்.  ஒருதபா அப்படிதான் தொடை இடுக்குல அரிக்குதுன்னு சொறிஞ்சிகிட்டு இருக்கும்போது துப்பாக்கி வெடிச்சுடுச்சி.  அதுலேயிருந்து அண்ணணுக்கு பொண்ணுங்கன்னா ஆவாது.  எல்லோர் மேலயும் வெறுப்பா ஆயிடுச்சி.  ஆனா அடிப்படையில அண்ணன் நல்லவருதான்.’

   அப்போது கோச்சு வண்டியோட்டி ‘பாலைவனத்துக்குள்ளே வந்துட்டோம்.  அப்புறம் எங்கே போறது?’

     கோச்சு வண்டியை விட்டு இறங்கிய எஸ்கோபார் சுற்றும் முற்றும் பார்த்து விட்டு, ‘அதோ அது வழியாகதான் போக வேண்டும்.’  அவர் காட்டிய வழியானது இரு மணல் மேடுகளுக்கிடையில் செல்லும் பாதையாக இருந்தது.

   ‘அது சரிவாக அல்லவா இருக்கிறது?’

     ‘அது ஒரு காலத்தில் இந்த பாலைவனத்தில் ஆறு போன பாதைதான் அது.  அதன் வழியாகதான் வேதாளம் போயிருக்கிறது.  அதை தொடர்ந்து சென்றாலே வேதாள நகரத்திற்கு சென்று விடலாம்.’

   ‘சரி அனைவரும் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள்’

     கோச்சு வண்டி பாலைவனத்தின் முன்பு ஒரு காலத்தில் ஒடிய ஆற்றின் தடத்தில் செல்ல ஆரம்பித்தது.

================================================================

         சில மணி நேர  பயணத்திற்கு பின்னர், அந்த பாதையும் முடிவடைந்தது.  கோச்சு வண்டியை விட்டு இறங்கியவர்கள் சுற்றும் முற்றும் பார்த்தனர்.  ஒரே மண்மேடாக இருந்தது.  அதற்கு மேல் பாதையும் இல்லை.

      எஸ்கோபார் ஒவ்வொரு மண்மேடாக பார்த்துக் கொண்டே சென்றார்.  அவரை பின்தொடர்ந்து நம் இலட்சிய குதிரை     (ஏது அவங்ககிட்டே இப்போ குதிரைகள்?) வீரர்களும் ஒவ்வொரு மண்மேடாக பரிசோதித்துக் கொண்டே சென்றனர்.

    ‘இந்த மண்மேட்டை பாருங்கள்.  மிக பிரமாண்டமாக உள்ளது. எல்லோரும் இங்கே வாருங்கள்.’

     கலீல் கூறியபடி அந்த மண்மேடு மிக உயரமாகவே இருந்தது.  மெள்ள அந்த மண்மேட்டை சுற்றிக் கொண்டு முன்னே வந்தனர்.  மறுபக்கத்தில் இருந்த மண்ணை மெள்ள மெள்ள அகற்ற ஆரம்பித்தனர்.

     ‘இதோ எழுத்துக்கள் காணப்படுகின்றன. ’

      மிகவும் மங்கிய நிலையில் ‘வேதாளம்’ என்ற எழுத்துக்கள் புலப்பட ஆரம்பித்தன.

      பலவித துயரங்களுக்கு பின்னர் புதையல்தேடிகள் வேதாளத்தை கண்டறிந்து விட்டனர். 

====================================================================

        பாழடைந்த கப்பலை மூடியிருந்த மண்ணை ஒரளவு அகற்றிய பிறகு முதலில் நம் இலட்சிய வீரர்கள் மூவர் மற்றும் எஸ்கோபார் நான்கு பேரும் மெள்ள  ஒருவர் பின் ஒருவராக கப்பலில் ஏற ஆரம்பித்தனர்.

       அங்கே கீழே இருந்த அறையில் நிறைய மூடியிட்ட பீப்பாய்கள் இருந்தன.  அதைப் பார்த்த சதீஷ் ‘இவையெல்லாம் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றனவே.  புதையல் இவற்றில் இருக்குமா?’ என வினவினார்.

      ‘இது சரக்கு வைக்கும் அறை.  புதையலை விட விலைமதிப்பற்ற ஒன்று தான் இங்கே வைக்கப்படும்.  அது குடிதண்ணீர்.  கடல் பிரயாணத்தின் போது இதன் மதிப்பு அதிகம். கரையை நெருங்க நெருங்க அதன் மதிப்பு குறைந்து விடும். புதையல் கப்பல் தலைவனின் அறையில் வைக்கப்பட்டிருந்தாக தான் படித்திருக்கிறேன்.  மேலும் அது ஒரு சிறு பேழைதான். மேலே இருக்கிறது அந்த அறை.  வாருங்கள் செல்லலாம்.’

     ஒரு வழியாக கப்பல் தலைவனின் அறையை அடைந்தார்கள். உள்ளே துர் நாற்றம் வீசிக் கொண்டிருந்தது.  மூக்கை பிடித்துக் கொண்டு சென்ற அவர்கள் அங்கே சிதறி கிடந்த அந்த அறையின் பொருட்களை  விலக்கிக் கொண்டு கப்பல் தலைவனின் பொக்கிஷ  நிலவறையை அடைந்தார்கள்.  அந்த பேழையின் கதவு கால வெள்ளத்தில் பழுதடைந்து கிடந்ததால், வெகு எளிதாக அந்த கதவினை உடைத்து உள்ளே கைவிட்டு துழாவினர்.

     காற்று புகாவண்ணம் துணியினால் கட்டப்பட்டிருந்த ஒரு பேழையை எடுத்தனர்.  சில மணித்துளிகளுக்கு யாருக்குமே பேச்சு வரவில்லை. 

     ‘இதுதானா, இதுதானா நாம் இவ்வளவு சிரமப்பட்டு வந்த புதையல் இதுதானா?’

     ‘இவ்வளவு சிறியதாக இருக்கிறதே?’

     ‘அப்படியென்றால் கீழை நாடுகளில் கிடைக்கும் வைரங்களாகதான் இருக்கும்.’

      அந்த பொக்கிழ பேழையை மிக பத்திரமாக எடுத்துக் கொண்டு கீழே இறங்கினார்கள்.

       அந்த கப்பலை சுற்றி ஒரு கூட்டமே நின்றுக் கொண்டிருந்தது.  அவர்கள் எல்லோரும் அவர்களை இதுவரை துரத்திய கொள்ளையர் கூட்டமே.

      அவர்கள் வந்த கோச்சு வண்டியின் அருகே ஸ்டெல்லா மேல் கை வைத்துக் கொண்டு ஒரு உருவம் நின்றிருந்தது.

     அவரை பார்த்த எஸ்கோபாரின் உதடுகள்  பயத்துடன் ‘அலெக்ஸாண்டர் பிரபு’ என உச்சரித்தது.

                                                                                                                                                                               (தொடரும்)

February 15, 2009 at 8:31 am 9 comments

வேதாள நகரம் 12 – டூயட்

       ஒரு கயவன் வீசியெறிந்த பிச்சுவா இலட்சிய வீரன் விஷ்வாவின் மார்பை நோக்கி வேகமாக வந்தது.

இது நடப்பதற்கு பதிமூன்று நிமிடங்களுக்கு முன்பு …….

      அறையில் அமர்ந்திருந்த இலட்சிய வில்லன் செழிக்கு அறையிலே அடைந்து கிடப்பது சோர்வாக இருந்தது. எனவே ஒரு பீர் வாங்கி வரலாம் என எண்ணி கீழே இருந்த பாருக்கு சென்றார்.

‘ஒரு பீர்  கொடுங்க. எவ்வளவு?’

‘மூன்று டாலர்கள் தான் சார். ஆனால் இப்போது கம்பெனி சார்பாக ஒரு புதிய தள்ளுபடி கொடுக்கிறோம். மூன்று பீர் பாட்டில்கள் வாங்கினால் வெறும் பத்தே டாலர்கள்தான்.’

‘அடடே, ரொம்ப நல்ல திட்டமா இருக்குதே. எனக்கு மூன்றே கொடுங்க. உங்களுக்கு எப்படி கட்டுபடியாகுது?’

‘ஏதோ உங்கள மாதிரி கஷ்டமருக்கு சேவை செய்யதான் நாங்க இருக்கோம்.’

     ஒரு பீர் பாட்டிலை சுவைத்துக் கொண்டே மாடிக்கு சென்ற செழி வழிமறித்து நிறுத்தியது கலவர சத்தம்.  போதையில் பீதியுடன் ஓடிய செழி நிலாவின் சுற்றுப்பாதையில் நுழைந்த சாட்டிலைட் போல பிச்சுவாவின் பாதையில் புகுந்தார்.

       விஷ்வாவின் நெஞ்சை நோக்கி வந்த பிச்சுவா செழியின் …  செழியின்…..செழியின் பின்னால் பாய்ந்தது.

‘அய்யோ’

    அலறியது யார்?  விஷ்வாவா?  செழியா?  இல்லை. கத்தியை எறிந்த கயவன் தன் குறி தப்பியதை எண்ணி அலறிய சத்தமே அது.

‘அய்யோ’

     அலறியது யார்?  கத்தியை எறிந்த கயவனா? விஷ்வாவா?  இல்லை.  செழியின் பின்னால் பாய்ந்திருந்த பிச்சுவாவை பிடிங்கி அந்த கயவனின் நெஞ்சை நோக்கி விஷ்வா விட்டெறிந்ததால் ஏற்பட்ட வலியில் செழி போட்ட அலறல்தான் அது.

‘அய்யோ’

      யோசிக்கவே வேண்டாம். இது பிச்சுவா அந்த கயவனின் காலில் பாய்ந்ததால் ஏற்பட்ட அலறல்.

‘அய்யோ’

     ஹலோ! இது ரொம்ப ஓவர்.  கதை படிக்கும்போது நீங்க ஏன் சத்தம் போடுறீங்க?

——————————————————————————————————

             ‘சதீஷ், என் உயிரை காப்பாற்றியவர் இவர்.  இவருக்கு சிகிச்சை அளித்து இவரின் உயிரை நான் காப்பாற்ற கடமைப்பட்டுள்ளேன்.  ஒரு நல்ல டாக்டர் பக்கத்தில இருந்தா கூட்டிட்டு வாயேன்.’

         ‘யாருமே இல்லை.  நான்தான் இந்த சிக்கலான ஆபரேஷனை தனியா மேற்கொள்ள வேண்டும்’

     எல்லோரும் செழியை பரிதாபமாக பார்த்தனர்.  செழி மனதை உருக்கும் குரலில் சதீஷை கேட்டார்.

     ‘டாக்டர், இனி பெண்களை நான் கசமுசா செய்ய முடியுமா?’

     ‘தம்பி,  பிச்சுவா ஆழமாக பாய்ந்திருக்கிறது.  குறைந்தது ஆறு மாசம் எந்த பெண்ணும் உன்னை கசமுசா செய்யாமல் பார்த்துக் கொள்.’

      ‘எனக்கென்னவோ இந்த கதையில் உனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது என்றே தோன்றுகிறது’ என கலீல் தன் உள்ளத்தை திறந்தார்.

——————————————————————————————————

         வேகமாக வந்த கோச்சு வண்டி அவர்களிடையே நின்றது.  கதவை திறந்த பாப்பா …..ச்சீச்சீ… ஸ்டெல்லா ‘அனைவரும் வண்டியில் ஏறுங்கள். கலவரம் இன்னும் பெரிய அளவில் வரும் போலிருக்கிறது. வாங்க,  ஓடி போய்டலாம்.’

       ஒரு இளம்பெண் இவ்வாறு சொன்னபிறகு அதை பெருந்தன்மையாக மறுக்க நம் இலட்சிய வீரர்கள் என்ன கனவான்களா? இல்லையே.  உடன் அனைவரும் செழியை கோச்சு வண்டியின் உள்ளே படுக்க வைத்து (மல்லாக்க) அனைவரும் வண்டியில் ஏறிக்கொண்டனர்.

     அந்த சமயத்தில் ஸ்டெல்லா கை நம் இலட்சிய வீரன் விஷ்வாவின் கையுடன் உரச, ஒரு கனவுலக டூயட் சிச்சுவேஷன்ஐ எப்படி தவற விட முடியும்? 

         பாடல் வகை = டூயட்     ஆண்=விஷ்வா,  பெண்=ஸ்டெல்லா இடம்=கனவுலகம் கோரஸ் கலீல் சதீஷ், செழி.

இராகம்=கபோதி,  பாடல் ஆசிரியர்=நாந்தேன்.  கோரஸ் வரிகளை எழுதியவர்=தற்சமயம் பெயர் தெரிவிக்க விரும்பவில்லை.

பெ :                               டேய் விச்சு, வாடா வாடா ஆ……..ஆ
                                          இச்சு ஒன்னு தாடா தாடா ஆ……..ஆ

    
சத்.கலீ.செழி கோரஸ்.     போங்கண்ணா விச்சு, குடுங்கண்ணா இச்சு

     
ஆ                                    விச்சு நான் வந்துட்டேன் ஆ……..ஆ
                                          பிச்சு பிச்சு நான் தந்துட்டேன் ஆ……..ஆ

சத்.கலீ.செழி கோரஸ்.    தள்ளிக்கடா விச்சு, நாங்க கொடுக்கப் போறம் இச்சு

      
பெ                                 நேத்து பெஞ்ச மழையிலே ஆ……..ஆ
                                       நனைஞ்ச எனக்கு அச்சு அச்சு ஆ……..ஆ

 

சத்.கலீ.செழி கோரஸ்.ஜிங்கு ஜிக்கு ஜிக்கு நாங்க பூசி விடுவோம் விக்ஸு

        
ஆ                               அச்சு அச்சு இருந்தாலும் நான் ஆ……..ஆ
                                     உனக்கு இச்சு இச்சு தரேன் ஆ……..ஆ
 
சத்.கலீ.கோரஸ். இச்சு இச்சு விச்சு, ஆஃப் பண்றம் லைட் சுவிட்ச்சு

பெ                                  எங்கப்பன் நொச்சு நொச்சுனு ஆ……..ஆ
                                         உன்னப் பாத்த பிச்சு பிச்சு ஆ……..ஆ

ஆ                                 அவன பாத்தா நான் நச்சு நச்சு ஆ……..ஆ
                                       அவந் மக உனக்கு தாரென் இச்சு இச்சு ஆ……..ஆ

————————————————————————————————

      கோச்சு வண்டி அந்த நகரத்தின் எல்லையை தாண்டிய உடனே கோச்சு வண்டியை ஒட்டிய ஒட்டுநர்  ‘வண்டிய எந்தபக்கம்  திருப்பணும்?’ என வினவினார்.

     ஸ்டெல்லா  நம் இலட்சிய வீரர்களை பார்க்க, அவர்களும் இவளை மையலுடன் பார்த்தனர்.  ஒரு ஐந்து நிமிடம் கழித்து குறுக்கே புகுந்த கோச்சு  வண்டியின் டிரைவர் ‘யோவ், புண்ணாக்குகளா, வண்டிய எந்தபக்கம் திருப்பறதுன்னு மேடம் உங்களை பாத்தா, இப்டி பதிலுக்கு ஏன்யா ரொமன்டிக் லுக் வூடுறீங்க’ என கேட்டு அந்த மையல் பார்வையை கலைத்தார்.

     விஷ்வா திரும்பி எஸ்கோபாரை காதில்  ‘நிறைய பிரச்சினைகள் வந்துக் கொண்டே இருக்கு.  இந்த கோச்சு வண்டி நம்ம கூடவே இருந்தா நல்லாருக்கும் இல்ல.  கிடைக்கிற புதையல்ல இவங்களுக்கு கொஞ்சம் குடுத்துறுவோம்.  என்ன சொல்ற’  என  கிசுகிசுத்தார்.

      எஸ்கோபாரும் தீவிர யோசனைக்கு பிறகு சம்மதித்தார்.  பிறகு வண்டி ஒட்டியிடம் திரும்பி ‘வண்டியை கிழக்கே பாலைவனத்தை நோக்கி விடு. ’

      ‘பாலைவனத்திற்கா? யோவ், அங்க யாருய்யா இருக்கா?’

      விஷ்வா ஸ்டெல்லாவை பார்த்து ‘இப்போது எதுவும் கேட்காதீர்கள்.  எல்லாம் முடிந்த பிறகு சொல்கிறேன்.  அப்போதும் எதுவும் கேட்காதீர்கள்.’

       ‘சரி, இவர்கள் சொல்கிற பக்கமே வண்டியை திருப்பு.’

      கோச்சு வண்டி பாலைவனத்தை நோக்கி செல்ல ஆரம்பித்தது.

 

                                                                                                                                            (தொடரும்)

January 26, 2009 at 6:00 am 10 comments

Older Posts


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 8 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 9 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 10 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 10 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 10 years ago
March 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031