ஏலியன் கோவ்னன்ட் அல்லது மரண கிரஹம்
May 15, 2017 at 4:49 pm 4 comments
நடிகை கத்தரீன் வாட்டர்சன் (கேப்டன் டேனியல்ஸ் ஆக ஏலியன் கோவ்னன்ட் திரைப்படத்தில் நடித்தவர்) அவரின் வெளிவராத டைரிகுறிப்பு
சிகுர்னே வீவரை ஏலியன் ஆத்தான்னு கூப்டும்போதே ஏலியன் இனம் அழிஞ்சு போச்சுங்கிற நம்பிக்கையில, ஸ்காட்டு பிரோதியுமியூஸ்-ங்கற மொக்க விண்வெளி கப்பலை பறக்க விட்டார்.
அது கவுந்தும், புத்தி வராமல் எம்புருஷனோட தலைமையிலே அள்ளக்கை கும்பல கோவனன்ட்-ங்கற விண்வெளி கலத்தில ஏத்தி திரும்ப அனுப்பறாங்க. டேவிட்-னு அங்கே ஒரு டெரர் ரோபோ, அதையே வால்டர்-னு பேர மாத்தி அதே மாதிரி குடாக்கு ரோபோவோட அனுப்பறாங்க.
பாதி வழியிலேயே என்னோட வூட்டுகாரரு கள்ளநோட்டு கண்டுபிடிக்கிற மிஷினுல வைச்ச நோட்டு போல எரிஞ்சு போயிடுறாரு.
அடுத்து பதவி ஏத்துகிற கேப்டனுக்கு கிரகம் சரியில்ல. இன்னொரு கிரகத்திலிருந்து பாட்டு கேக்குதுன்னு, அதை பாக்க முடிவு செய்யுறாரு. மொக்க படத்தில அதைவிட மொக்க முடிவுன்னு நான் சொல்லியும் கேக்கல. அங்க போனா, கிரகத்து மேல புயல் அடிச்சுகிட்டு இருக்கு. இதைவிட நல்ல சகுனம் வேணுமா, கேட்டானுங்களா.
அங்கே போய் இறங்கி, மேலே சொன்ன அத்தனை மொக்க முடிவுகளையும் தூக்கி சாப்றாப்போல பல ஜிகிடி முடிவுகளை நம்ப கம்பெனி எடுக்குது. படம் முடியறச்ச நான் கோவென அழுவேன். இதுல போய் மாட்டுனேன்னேன்னு இல்லை. காட்சிக்கு தேவைப்பட்டதால் அழ வேண்டியதாயிற்று.
மீதியை வெண்திரையில் காண்க.
இத வெண் திரையில பாக்கணும்னு முடிவு பண்ணீங்க பாத்தீங்களா, அதுதான் மேல சொன்ன எல்லாத்தையும் விட பெரிய மொக்க முடிவு.
ஆனா, ஸ்காட்டு ஏலியன் கிளிமஞ்சாரோ-ன்னு ஒரு கப்பலை அனுப்பிச்சா பாக்காமயா இருக்க போறீங்க?
Entry filed under: திரை விமர்சனம், நகைச்சுவை.
1.
King Viswa | May 16, 2017 at 12:54 am
பட், வொய்? தற்கொலைக்கான வழிகள் பல இருக்க, பட் வொய் திஸ்?
2.
King Viswa | May 16, 2017 at 12:56 am
இந்த விமர்சனத்துல மொத்தம் எத்தன இடத்துல “மொக்க” என்ற வார்த்தை வருதுன்னு கரெக்டா சொல்றவங்களுக்கு, ஏலியன் கோவனென்ட் படத்துக்கான 2 பேக்-டு-பேக் ஷோக்கான டிக்கெட் கிடைக்கும்.
3.
sharehunter | May 16, 2017 at 12:00 pm
எனக்கு கிரஹம் சரியில்லை. 😉
4.
sharehunter | May 16, 2017 at 12:00 pm
😉