குதிரை வீரன் குணா 10 தோமா குருசு
August 14, 2015 at 4:38 pm 1 comment
குணாவின் முகவாயை பிடித்து முரட்டு தனமாக திருப்பி, காவல் தலைவன் காரி சொன்னான்
மூடனே, கொட்ட தெறிக்க தோமா குருசு போல ஒடினா உன்னை பிடிக்க இயலாது என்றா நினைத்தாய்?
இளவரசி பூங்காவனம்
யாரந்த தோமா குருசு
என வினவினாள்
அவனொரு ஒடுகாலி யவனன், இளவரசி
என பவ்யமாக பதிலளித்தான் காரி.
இளவரசி மெல்லியதாய் தலையை அசைக்க, குணாவின் பற்கள் ஆடும் வகையில் ஒரு பேரறை கொடுத்தான் காரி.
எருமையே, அவன் கட்டுக்களை அவிழ்த்து விட சமிக்ஞை காட்டினேன்
கண்களில் நட்சத்திரம் பறப்பதை பார்த்த வண்ணம் குணா மெல்லிய குரலில்
பாவம், கொட்டை அளவிற்கே அவன் மூளையும் இருக்கிறது, இளவரசி.
அவனை சுத்தம் செய்து ஆலோசனை அறைக்கு அழைத்து வா
என ஆணையிட்டு திரும்பி சென்றாள்.
குணா நல்ல ஆடையுடன் இளவரசியின் ஆலோசனை அறைக்குள் காவல் தலைவன் காரி பின்தொடர நுழைந்தான்.
சாணக்கியபுரி என் நாட்டை ஆக்கிரமிக்க நினைக்கிறது. அந்நாட்டு இளவரசனை நான் மணப்பது மூலம் போரின்றி அடைய நினைக்கிறான் ரணபுஜன். அதற்கு தடையாக இருப்பது என் காதலனென்று அவன் கருதும் உன்னைத்தான். உன்னை தீர்த்துக் கட்ட அவன் ஆட்கள் இந்நாட்டின் எல்லை தாண்டி காத்துக் கொண்டிருப்பார்கள். இந்நாட்டை தாண்டினால் உன்னை மரணம் துரத்தக் காத்துக் கொண்டிருக்கிறது. உன் நிலைமை புரிகிறதா?
நன்றியுண்ர்வுடன் குணா
புரிகிறது இளவரசி. என் உயிரை காப்பாற்றியதற்கு பெரும் கடன் பட்டிருக்கிறேன்.
நல்லது, இன்றிரவே நீ காரியுடன் சாணக்கியபுரி கிளம்புகிறாய். அங்கே உனக்கான உத்தரவுகள் என் உளவு ஆள் மூலம் அளிக்கப்படும்,
காரி,குணாவின் பின் மெல்லிய புன்னகையுடன், அவன் காதில் விழுமாறு கிசுகிசுத்தான்
ஒருவனுக்கு நேரம் சரியில்லை என்றால், அவன் யானை மீது போனாலும் நாய் கடிக்குமாம்.
(குணாவை நாய் கடிக்குமா?)
Entry filed under: நகைச்சுவை.
1.
சாரு shankar | August 16, 2015 at 12:08 pm
சாணக்கியபுரி டாக்ஸ் க்ளப் பிரசிடெண்ட் தேவையற்ற வன்முறையில் தம்மினத்தவர்க்கு ஆவல் அதிகம் என்பதை ஒத்துக் கொண்டிருக்கிறார் … வாளின் அரவிளிம்புபோல பற்களை கொண்ட தம்மினத்தவர் அவற்றின் கூர்மை குறித்து பெருமிதம் கொள்ள நியாயம் கற்பிக்க ஊழ் வழி தருகையில் காலவித்தினெழுதிசையிலிருந்து தாம் வழுவிட முடியாது என்றும் அவர் சொல்கூர்ந்தார் .. :p