குதிரை வீரன் குணா அத்தியாயம் 7 துப்பு
May 22, 2015 at 9:04 pm 1 comment
தன் கொட்டைகளை இழக்க விரும்பாத காவல்தலைவன் காரி, துணை வீரனாக மாரியை அழைத்துக் கொண்டு, புரவியிலேறி துப்பு துலக்க சாணக்கியபுரிக்கு வந்தான்.
வாசலில் நின்றிருந்த யவனர் கூட்டத்தினை பார்த்ததும், அவர்களிடமிருந்தே துப்பு துலக்குதலை ஆரம்பிக்கலாமெண்ணி, மாரியிடம்
டேய், புரவியை பார்த்துக் கொள். நான் போய் யவன வீரர்களிடம் போய் பேசி விட்டு வருகிறேன்.
நானும் வருகிறேனே.
மூடனே, வீரர்களுக்கிடையே பேச்சுவார்த்தை நடக்கையில் தூர நின்று கவனி. ஒருநாள் நீயும் என்னிடத்திற்கு வரலாம்.
யவன வீரர்களிடம் சென்ற காரி, ஒரு குறுஞ்சிரிப்பினை முகத்தில் படர விட்டுக் கொண்டான்.
யவன வீரன் காரியை பார்த்ததும், யவன மொழியில்
ஆஹா, என் நீண்ட கொடுந்தனிமை உன்னால் முடிய போகிறது. வா வா
யவன மொழி தெரியாத காரி, புன்னகையை பெரிதாக்கி
இந்த சீலையில் இருக்கும் நபரை பார்த்திருக்கிறாயா?
இவள் பெண் போல இல்லையே? வேறு படங்கள் இருக்கிறதா?
மிக ஆபத்தானவன், ஒரு பெண்ணை பின்னால் தட்டி விட்டான்.
பின்புறம் பெரிதாக இருந்து என்ன பிரயோசனம், இவள் ஆண் போல இருக்கிறாளே
இவன் கிடைத்தால், என் அம்பு இவன் வாயில்தான் பாயும்
அதெல்லாம் சரி, வேறு பெண்கள் இல்லையா?
குதிரையில் இந்த பக்கம் வந்தானா?
யவனன் சோகத்துடன்,
நீ உன்னுடைய சரக்கினை பற்றி உயர்வாக சொன்னாய். என் நீண்ட கால தனிமையை இவள் மூலம் முடிப்பதாக இல்லை. நீ செல்லலாம்.
காரி ஏமாற்றத்துடன் திரும்பினான்.
தலைவரே, ஏதேனும் துப்பு கிடைத்ததா?
அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. வா நகர் புகுவோம். எனக்கு தெரிந்த ஒரு சத்திரத்தில் இரவு தங்கலாம்.
(தொடரக் கூடும்)
1.
maruti | May 23, 2015 at 2:25 pm
you have good humor feel. laughing hard at all your humor posts sharehunter