முக்கோணத்திற்கு எத்தனை பக்கம் அத்தியாயம் 6 பூம்புகார்
June 7, 2014 at 5:31 pm 2 comments
நான் மர்மங்களை ஆராயும் எழுத்தாளன். நாட்டில் அனைத்து பகுதிகளிலிருந்தும் எனக்கு தகவல் சொல்ல தொடர்புகள் உண்டு.
ஒரு புதன்கிழமையன்று, காலை 10 மணியளவில் நான் பூரி சாப்பிட்டு கொண்டிருந்த போது எனக்கு பூம்புகாரிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
சார், என்ன தெரியுதா?
யாருய்யா நீ?
அமீர் சார். உங்க பரம ரசிகன், நீங்க உடனே புறப்பட்டு பூம்புகார் வந்திங்கனா உங்களுக்கு பெரிய அதிசயத்த காட்றேன்.
பூரியை ஒரு நிமிடம் பார்த்த நான், அரைமனதுடன்,
அப்டி என்னய்யா காட்டப் போற?
சார், போன்ல அத சொல்லக் கூடாது. கிளம்பி சட்டுன்னு வாங்க.
பூம்புகாருக்கு நான் வந்து இறங்கியபோது மாலை ஆகிவிட்டது. பேருந்து நிலையத்தில் என்னை சந்தித்த அமீர் இளைப்பாற அவகாசம் கொடுக்காமல் கடற்கரை அருகில் உள்ள கிராமத்திற்கு கூட்டிச் சென்றான்.
அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் சேறு நிரம்பிய ஒரு பாதையில் ஒரு கிலோ மீட்டர் செல்ல வேண்டுமென்று சொன்னான்.
போகும் வழியில் அவனை விசாரணை செய்துக் கொண்டே சென்றேன்.
அங்க என்ன கல்லறை ஏதானும் இருக்குதா?
மனதிற்குள், ராஜராஜ சோழனின் ஏதேனும் வாரிசுகள் இருக்குமா என பெயர்கள் நகர்ந்த வண்ணம் இருந்தன.
சார், நீங்க பாத்திங்கீன்னா அசந்து போய்டுவீங்க.
அவன் வார்த்தைகளில் அபார உணர்ச்சி.
சேறு முழங்கால் வரை படிய கொசுக்களின் ரீங்காரத்துடன் அந்த பாதையை வாயை மூடிக் கொண்டு கடந்து வந்தோம்.
சட்டென்று எனக்கு முன்னால் சென்ற அமீர், நாடகப் பாணியில் பக்கத்திலிருந்து புதரை விலக்கி விட்டு ஒரு கல்வெட்டை காட்டினான்.
பார்த்தேன்.
எனக்கு அந்த இரவு நேரத்திலும் உலகம் இருள்வது போல இருந்தது. மெல்ல திரும்பி அமீரை பார்த்தேன். அவன் உற்சாகத்தில் தளும்பிக் கொண்டிருந்தான்.
எவ்வித எச்சரிக்கையும் கொடுக்காமல் அவன் மீது பாய்ந்தேன். தக்காளி சட்னியில் தக்காளிக்கு என்ன கதி ஏற்படுகிறதோ அந்த நிலையை அவனுக்கு வெகு வேகமாக அளித்துக் கொண்டிருந்தேன்.
Entry filed under: Hunter's Mind.
1.
கிங் விஸ்வா | June 7, 2014 at 6:56 pm
அமீர் செய்ததில் என்ன தவரு இருக்கிறதென்று அவர் மீது பாய்ந்தீர்கள்? ஐ வாண்ட் டு நோ……
2.
கிங் விஸ்வா | June 7, 2014 at 6:58 pm
மேலே இடப்பட்டு இருப்பது ஒரு பின் நவீனத்துவ பின்னூட்டமாகும். (தவறு என்பதையே தவறாக டைப் செய்வது ஒரு வகையான சமூக வலைதள கட்டுடைப்பாகும்).