புயலை கடித்தவன்
June 3, 2014 at 12:46 pm 1 comment
பாரீஸ் நகர வீதியில் சக இன்டர்போல் உளவாளிகளுடன் மாலை தென்றலை இரசித்தப்படி கோயாவி நடந்துக் கொண்டிருந்தார்.
ஒரு உளவாளி அவருடைய எகிப்திய அனுபவத்தை கூறலானார்.
பாரோக்களின் கல்லறையில் கொட்டிக் கிடக்கும் செல்வங்களையும், அதை கொள்ளையடிக்க கிளம்பிய கும்பலை எவ்வாறு மடக்கிய விவரங்களையும் சுவைப்பட விவரித்தார்.
வைகிங் கல்லறைகளையும் அதுபோலவே ஆராயப்பட வேண்டும்
என கோயாவி கூறினார்.
கோமணம் கட்டினவனே இவ்ளோ சேர்த்தான்னா முழு பேண்ட் போட்டவன் எவ்ளோ சேர்த்துருப்பான்
என தர்க்க ரீதியாக விளக்கினார்.
கனத்த மௌனத்துடன் உளவாளிகள் நடந்துக் கொண்டிருந்தனர்.
கோயாவியின் கூரிய கண்கள் எதிர் வரிசையில் காரின் அருகே மறைந்து ஒருவன் துப்பாக்கியுடன் காத்துக் கொண்டிருந்ததை கவனித்து விட்டன.
அவரின் மூளை சுற்றுப்புறங்களை ஆராய ஆரம்பித்து. இரு பேருந்துகள் எதிர்நோக்கி 48 கிமீ வேகத்தில் வந்துக் கொண்டிருக்கின்றன, பக்கத்து பேக்கரியில் கத்தியால் ஒரு பெண் கேக்கினை நறுக்கிக் கொண்டிருக்கிறாள், 20 மீட்டர் தொலைவில் கட்டிடம் கட்டுகின்ற இடத்தில் ஒரு கான்க்ரீட் மிக்ஸர் வேகமாக சுழன்று கொண்டிருக்கிறது.
சக உளவாளிகளை காப்பாற்ற உடன் முடிவெடுத்து, பாய எத்தனைத்தார்.
அவரை பாயவிடாமல் பின்னால் ஒரு உருவம் இறுக்க கட்டிப்பிடித்துக் கொண்டது. திரும்பி பார்க்கையில் அமெரிக்க உளவாளி கண்ணீருடன் சொன்னார்
கோயாவி, விட்ருய்யா, அவன் சுட்டா ஒருத்தனுக்கு காயம் படும், நீ காப்பாத்தா புகுந்தா எல்லோரும் கோமாவுக்கு போய்டுவோம். வேணாம்யா. கெஞ்சிக் கேட்டுக்கிறேன்.
Entry filed under: Hunter's Mind. Tags: கோயாவி சாகசம்.
1.
கிங் விஸ்வா | June 4, 2014 at 1:03 pm
ஏனிந்த கொலைவெறி?
//கோயாவி, விட்ருய்யா, அவன் சுட்டா ஒருத்தனுக்கு காயம் படும், நீ காப்பாத்தா புகுந்தா எல்லோரும் கோமாவுக்கு போய்டுவோம். வேணாம்யா. கெஞ்சிக் கேட்டுக்கிறேன்.//