முகமூடி கொள்ளையர்

March 27, 2013 at 1:03 pm 6 comments

       அமாவாசை இரவு. கும்மிருட்டில் இரு வீரர்கள் முன் செல்ல அந்த பல்லக்கு காட்டுப் பாதையில் சென்று கொண்டிருந்தது. அதன் திரைகள் கத்தரிக்காய் நிற சீனப் பட்டினால் மறைக்கப்பட்டிருந்தன.  செல்வந்தர் வீட்டு பெண்ணாகத்தான் இருக்க வேண்டும். ஆனால், இந்த இரவில். கள்வர் சூழ்ந்த பாதையில் பயணம் ஏன் மேற்கொள்ள வேண்டும்?

ஒரு கரிய உருவம் பாதையை மறித்தப்படி நின்றிருந்தது. அடர்ந்த இருட்டில் எதுவுமே கருப்பாகத்தான் இருக்கும் என்பதால், தற்சமயம் அதை கரிய உருவம் என்றே அழைப்போம். பல்லக்கு நிறுத்தப்பட்டது. தீவட்டி கொளுத்தப்பட்டது. அதன் வெளிச்சத்தில் அவனின் கரிய நிறம் புலப்பட்டது.

யாரடா, நீ?

 

பிரபல தீவட்டிக் கொள்ளைக் காரன் கருப்பனை தெரியாதவர்கள் இந்த பகுதியில் கிடையாது. ஹஹஹஹ

நாங்கள் இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கிடையாது. ஆகவே, எங்களுக்கு தெரிய நியாயமில்லை.. அறிமுகத்தை முடித்துக் கொண்டாயிற்று, உனக்கு பெயர் வைப்பதில் உனது பெற்றோர் நீண்ட நேரம் சிந்தனை செய்ய அவகாசம் இல்லை போல. நல்லது, நாங்கள் அவசரமாக போக வேண்டும். வழியை விடு

 

அடேய், முட்டாளே, ஒரு தீவட்டிக் கொள்ளைக்காரன் பல்லக்கு பரிவாரத்திடம் அறிமுகப்படுத்திக் கொண்டு போக அனுமதித்தால் சரித்திரம் அவனை காறித் துப்பாதா?

அச்சமயம், இருளைக் கிழித்துக் கொண்டு, ஒரு வீரனின் தலைமையில் ஒரு கும்பல் தீவட்டிக் கொள்ளையரை தாக்கியது. கண நேரத்தில், தீவட்டிக் கொள்ளையர் சிதறியோடினர்.

கருப்பன் தரையில் வீழ்ந்து கிடந்தான். தோல்வியின் சாயை அவனது முகத்தில் அப்பிக் கிடந்தது. புழுதியும் கூட.

பல்லக்கின் திரையை விலக்கிக் கொண்டு, ஒரு அழகிய நங்கை வெளி வந்தாள். அந்த வீரத் தலைவன் அவளை நெருங்கி,

    அழகியே, கருப்பனின் கூட்டம் முறியடிக்கப்பட்டது. என்னை வீரன் என்றும், கோயாவி என்றும் அழைப்பார்கள். வீரக்கோயாவி என்று நீ அழைத்தால் எனக்கதில் ஆட்சேபம் இல்லை.

 

கோயாவியாரே, உமது சேவையை மெச்சினோம். முத்துநகை, இந்த மோதிரத்தை அவருக்கு பரிசாக கொடு.

கோயாவி மெல்ல தொண்டையை கனைத்துக் கொண்டார்.

தவறாக நினைக்க வேண்டாம், நாரீமணியே. தீவட்டியை பிடித்துக் கொண்டு சற்றும் நாகரிகமற்ற முறையில் கொள்ளையடிக்கும் இந்த முட்டாள்களை துரத்தி விட்டு, கொள்ளையை மிகச் சிறப்பாக மேற்கொள்ளவே நான் வந்துள்ளேன். ஆகவே, மோதிரத்தை மட்டுமில்லாமல் அனைத்து நகைகளையும் என்னிடம் அளித்து விடுங்கள். உங்கள் பயணம் இன்ப மயமாகட்டும்.

கீழே கிடந்த கருப்பனின் முகம் அதிர்ச்சியில் உறைந்தது.

    Image

       கோயாவியை சில கணங்கள் உற்றுப் பார்த்த அந்த நங்கை, பல்லக்கில் உள்ளேயிருந்து ஒரு பட்டாக் கத்தியை எடுத்து, கோயாவியின் கழுத்தில் வைத்தாள்.

கொள்ளையரே, நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு, அரசியல்வாதிகள் மற்றும் கொள்ளையரிடமே பணம் சேர்ந்துள்ளது. அவர்களிடமிருந்து கொள்ளையடிக்கவே நாங்கள் கிளம்பியிருக்கிறோம். உங்கள் கொள்ளைப் பொருட்களை இந்த பல்லக்கில் நிரப்புங்கள். உங்களுக்கு இனிய இரவாக இது அமையட்டும்.

கருப்பனின் புருவங்கள் ஆச்சர்யத்தில் மேலேறியன.

அவளை நோக்கி புன்னகை புரிந்த கோயாவி, மின்னலென தன் உள்ளாடையில் இருந்து ஒரு சிறுவில்லை எடுத்து நாண்பூட்டி, அவளை நோக்கி குறி வைத்தார்.

கொள்ளையரை கொள்ளையடிக்கும் கொள்ளைக் கும்பலை பிடிக்க அரசனால் நியமிக்கப்பட்டிருக்கும் இரகசிய உளவாளி நான். வேலை இவ்வளவு சுலபமாக முடியுமென நான் நினைக்கவில்லை.

கருப்பனின் கண் பயத்தில் குறுகியது.

கோயாவியை உறுத்துப் பார்த்த அந்த நங்கை பெரும் சத்தத்துடன் சிரிக்கலானாள்.

கருப்பனின் முகம் கடுப்பாகியது.

அன்பரே, கோயாவி, கொள்ளைக் கும்பலை கொள்ளையடிக்கும் கொள்ளைக் கும்பலை பிடிக்க நியமிக்கப்பட்டிருக்கும் இரகசிய உளவாளி ஒழுங்காக வேலை செய்கிறாரா என உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சரால் நியமிக்கப்பட்டிருக்கும் உளவாளியே நான். திறம்பட வேலை செய்கிறிர்கள்.

எரிச்சலான கருப்பன்,

***, ஒரு இரவிற்கு தேவையான திருப்பங்களை தாண்டி இத்தனை திருப்பங்களா? வெளியேறுங்கள், இங்கிருந்து. நான் உங்களை வெறுக்கிறேன்

எனக் கூறி தூவென காறி உமிழ்ந்தான்.

அனைவரும் புன்முறுவல் பூத்தனர்.

Advertisements

Entry filed under: Hunter's Mind.

என் மனங்கவர்ந்த பெரிய மனிதர் எங்கே காஞ்சனா?

6 Comments Add your own

 • 1. ரமேஷ்  |  March 27, 2013 at 1:55 pm

  ஹா ஹா ஹா

 • 2. shankar  |  March 30, 2013 at 3:37 pm

  மத்தவங்க வேலைய ஒழுங்கா செய்யுறாங்களான்னு வேவு பாக்கிறதே இப்ப ஒரு வேலையாப் போச்சு…. இந்த அவல நிலை என்று மாறுமோ….

  கறுப்பன் ஆதரவாளர் 🙂

 • வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… தொடர்கிறேன்… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

  உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/Bladepedia-In-Valaicharam-03.html) சென்று பார்க்கவும்… நன்றி…

 • 4. ரஃபிக் ராஜா  |  May 8, 2013 at 5:55 pm

  எத்தனை ட்விஸ்டுகள், ஒரே கதையில்.

  எனக்கென்னவோ இந்த கதையை எழுதியவரே, மன்னர் நியமிக்கபட்ட ஒரு உளவாளியாக இருக்குமோனு ஒரு சந்தேகம்.. பதிவை படிப்பவர்கள் ஒழுங்காக கமெண்டுகிறார்களா என்று சோதிப்பதற்கு. இல்லை ஒருவேளை கோயவி ஏஜென்டா… கமெண்டுடிபவர்களை வீடு தேடி கொள்ளை அடிப்பதற்கு….

  ஒரு கதைக்கு இத்தனை குழப்பமா… அய்யகோ இனி நான் என்ன செய்வேன் 😛

 • 5. sharehunter  |  May 8, 2013 at 6:37 pm

  ஷங்கர்,ரபீக்,
  ஒரு கதையில் அதிகபட்சம் எத்தனை முடிச்சிகளை வைக்க முடியும் என்பதன் முயற்சியே இது. இதன் விளைவுகளை சிறிது நாள் கழித்துதான் பார்க்க வேண்டும்.

 • 6. ரஃபிக் ராஜா  |  May 15, 2013 at 3:43 pm

  நீங்க பெரிய “முடிச்சவுக்கி” தான்… ஒத்துக்கறேன்…. 🙂

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

Error: Twitter did not respond. Please wait a few minutes and refresh this page.

March 2013
M T W T F S S
« Feb   May »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: