ஸோம்சுங் குலக்ஸி IV Review

March 4, 2013 at 10:13 pm 3 comments

        ஆஹா! நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஸோம்சுங் குலக்ஸி மொபைல் போன் 4 அடுத்த வாரம் வெளிவரப்போகிறது.

     இது குறித்து அந்த கும்பெனி என்னை சிறப்பு விமர்சனம் செய்யச் சொல்லி கெஞ்சியதால், வேறு வழியில்லை என சிறப்பு விமர்சனத்தை இங்கே எழுதி வைக்கிறேன்.

ஹார்ட்வேர்

      இதன் ப்ராஸசர் டோங் லீ 482,5 முன்னை விட வேகமானது, சுகமானது, இதமானது. கடந்த ப்ராஸசரை விட 82.5 ஹெர்ட்ஸ் அதிகம். மொபைல் போனின் முக்கிய எதிரியே. சூடுதான். அதிக நேரம் உபயோகப்படுத்தி சூடாகி, பேன்ட் பாக்கெட்டில் வைத்து உள்ளாடையை தீய்த்துக் கொண்டவர்கள் இதனை ஆமோதிப்பார்கள்.

     ஆனால், இந்த போனின் பேட்டரி அதிக நேரம் உபயோகப்படுத்தினாலும், சூடாகாது. எரிய வாய்ப்புண்டு, நின்றுவிடக்  கூடும், வெடிக்கலாம். ஆனால், சூடாகாது. கடந்த பத்தாண்டுக் கால ஆராய்ச்சியின் பலன் இது.

    இதன் 5 இஞ்ச் திரையை மொபைல் பேட்டரி தீர்ந்தப் பின்னர், முகம் பார்க்கும் கண்ணாடியாக உபயோகித்துக் கொள்ளலாம். சுவரில் மாட்ட  திரைக்குப் பின்னே ஊக்கு ஒன்று வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், இதில் சிறிய சிரமம் உள்ளதாக இந்த ஆராய்ச்சியாளனுக்கு தோன்றியது. பேன்ட் பாக்கெட்டிலிருந்து அவசரமாக எடுக்க முயலுகையில, இரத்தக் காயம் ஏற்படுகிறது. எனவே, இந்த ஊக்கினை மடக்கி, பின்னே விரித்து வைக்கும்படி அடுத்த வெர்சனில் வைத்தால் நலம்.

சாப்ட்வேர்

     இதில் கான்ட்ராய்ட் பால்பேடா சாப்ட்வேர் உள்ளது.  இதன் அடுத்தடுத்த பதிப்புகளில்  என்ன வித்தியாசம் என்பது எனக்கு இன்னும் புரியாமல் இருப்பதால், இப்போதைக்கு இதுதான் புதியது என கருதி ஏற்றுக் கொள்வோம்.

     இந்த அற்புத மொபைல் போனை வாங்கி, யாரேனும் பேச பயன்படுத்தினால், அவர்கள் கங்கைக் கரையில் காய்ந்த மிளகாய் பஜிஜியை தின்ற பாவத்திற்கு ஆளாவார்கள்.

 

     ஸோம்சுங் குலக்ஸி 3 மொபைல் போனை சமீபத்தில் வாங்கிய வாடிக்கையாளர் திரு ஷங்கர் அவர்களிடம் இது குறித்து ஒரு சிறப்புப் பேட்டி

நான் : வணக்கம், திரு ஷங்கர் நீங்கள் இப்போது ஸோம்சுங் குலக்ஸி 3 வாங்கியிருக்கிறீர்கள். நான்காம் பதிப்பு அடுத்த வாரம் வரவிருக்கிறது. அதில் சிறப்பான அம்சங்களும் உள்ளன. உங்களுடைய மொபைல் போன் பழைய பதிப்பாகி விடுகிறது. இது குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

ஷங்கர் : *#$%#@ I#%#@!^ I#%^*($# *^*)

நான் : ஸோம்சுங் என்பது தனி மனிதனல்ல. அது ஒரு கம்பெனி. அதற்கு அம்மா கிடையாது என்பதை தாங்கள் அறிவீர்கள் தானே?

ஷங்கர் : *#$%#@ I#%#@!^ &&* *()*&^% I#%^*($# *^*)

நான் மன்னிக்கவும், மொபைல் போனை பற்றி தெளிவாக ஒரே ஒரு கருத்தையாவது கூறுங்கள்.

ஷங்கர் ஒரு மொபைல் போனின் நீளம், ஒரு மனிதனின் ••• விட அகலமாக இருக்கக் கூடாது. எப்போது அந்த விதி மீளப்படுகிறதோ, அது இயற்கைக்கு அப்பாற்பட்ட பொருளாகி விடுகிறது.

Advertisements

Entry filed under: நகைச்சுவை.

கடல் மற்றும் விஸ்வரூபம் கோயாவியின் ஆப்பிரிக்க சதி

3 Comments Add your own

 • 1. shankar  |  March 5, 2013 at 1:51 am

  *#$%#@ I#%#@!^ I#%^*($# *^*)*#$%#@ I#%#@!^ &&* *()*&^% I#%^*($# *^*) 🙂

 • 2. ரஃபிக் ராஜா  |  March 5, 2013 at 7:13 pm

  மரியாதையா சாம்பிளுக்கு வந்த Galaxy S4 ஐ பேக்அப் செய்து எமக்கு அனுப்பி வையும்….. இல்லையேல் நடப்பதே வேறு, ஆமா சொல்லிபுட்டேன் !

 • 3. ரஃபிக் ராஜா  |  March 5, 2013 at 7:14 pm

  ஷங்கருடைய ஸ்மார்ட் போன் சங்கதி தான் ஊரு முழுக்க பேசுதே… அவர் கதைய ஒரு கார்டூன் ஸ்டிரிப்பாவே தொடருராங்கன்னு பார்த்துக்கோங்களேன் 😛

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 4 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 5 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 5 years ago
March 2013
M T W T F S S
« Feb   May »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: