கடல் மற்றும் விஸ்வரூபம்
February 10, 2013 at 9:47 pm 4 comments
மிகச் சிறப்பான கதை மற்றும் களம் கொண்டது கடல்,
நேரதிர் கொள்கைகளை கொண்ட இருவர் கடலின் சீற்றத்திற்கு நடுவே கொள்கைகளை மாற்றிக் கொள்கிறார்கள். அவர்களின் சிந்தனைகளுக்கு நடுவே வளர்ந்த ஒரு வாலிபனால் அது சமன் செய்யப்படுகிறது.
இதை மோசமான நடிப்பு, பாடல் காட்சிகள், நடன ஒத்திசைவுகள், வசன உச்சரிப்பு காட்சி தொகுப்பு போன்றவைகளால் பார்க்க சகிக்காத, பொறுமையை சோதிக்கின்ற திரைக்காடசிகளாக மாற்றி இருக்கிறார் இயக்குநர்.
இயக்குநர் மிகவும் புத்திசாலி, உலக சினிமா எடுப்பவர் என்று சினிமாத் துறையில் நம்பப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த அவரின் திரைப்படங்களை பார்த்த பிறகு எனக்கு இன்னும் சந்தேகமாகதான் இருக்கிறது.
கமல்ஹாசன் திரையில் தன்னுடைய பாத்திரத்திலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொள்ளாத வரையில், நல்ல திரைப்படத்தை கொடுக்க இயலாது.
பிரதமர் உளவாளியிடம் நேரடியாக பேசும் காட்சியின் அபத்தத்தை இன்னும் என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை.
ஷோக்கா வேலை செஞ்சப்பா. அவனுங்கள வூடாதே, சுட்டு தள்ளிடு. ஓ••, யாருக்கிட்ட வேலை காட்றன்ங்க.
இந்த வசனத்தையும் சேர்த்திருக்கலாம். இரசிகர்கள் கைதட்டியிருப்பார்கள்.
இதுதான் தமிழ் திரையுலகின் அதீத முயற்சிகள் அடுத்த படியை நோக்கி நகர என்றால், சலிப்பாக இருக்கிறது எனக்கு.
Entry filed under: Hunter's Mind.
1.
shankar | February 10, 2013 at 10:47 pm
இந்த லோகத்தில எல்லாரும் கோயாவி கணக்கா இருக்க முடியுமா என்ன…. சொல்லுங்க 🙂
கடல்லே…. வெறுமை
விஸ்வரூபம்…… கோயாவிய கிட்ட கூட நெருங்கல 🙂
2.
illuminati | February 10, 2013 at 10:48 pm
ஷோக்கா சொன்ன நைனா. வ****, யாராண்ட வந்து வரண்டிழுக்காணுக? நீ எழுது மாமே. உஜாலா போட்ட உன் எழுத்து என்ன சொம்மா குஜால்படுத்துது.
– சந்தையில் வந்து சம்பந்தமே இல்லாமல் சவுண்ட் விடுவோர் சங்கம்.
3.
shankar | February 10, 2013 at 10:52 pm
//ஷோக்கா வேலை செஞ்சப்பா. அவனுங்கள வூடாதே, சுட்டு தள்ளிடு. ஓ••, யாருக்கிட்ட வேலை காட்றன்ங்க.//
இத தெள்ளத் தெளிவா காட்டி இருக்காங்களே…. 🙂
4.
illuminati | February 10, 2013 at 11:09 pm
பக்கத்து சீட் பார்டியோடு கடலை போடலாம் என்ற எதிர்பார்ப்பில் சென்ற மைனர், பார்டி பாட்டி என்று படம் முடிந்தவுடன் தெரிந்து மயக்கம் அடைந்தார் என்று கோயம்புத்தூர் பக்கம் ஒரு வதந்தி இருக்குதாமே. அப்படியா? 🙂