Archive for July, 2012
The Dark Knight Rises – விமர்சனம்?
வணங்கமுங்க. எனக்கு நோலனின் திரைப்படங்கள் அனைத்துமே ரொம்ப பிடிக்கும். டாப்பா எடுப்பாரு. அதுவும் பேட்-மேன் படம். பின்னிபுட்டாரு. முத பாகத்தில யோடா பாத்திரம் ரொம்ப நல்லா வந்துருக்கு. இல்ல, மன்னிசுருங்க, அது ஏலியன் படமுங்க.
படத்துக்கு வருவோம்.எங்கூர்ல பேட்-மூன் மூணாவது பாகம் வெள்ளிக் கிழமைக்கு வருதுங்க. அது வரைக்கு பொறுத்தா, நண்டு சிண்டு எல்லாம் விமர்சனம் எழுதிடும். அது எனக்கு தோதா படல. அதனாலேயே இப்பயே எழுதிறது நல்லதுன்னு படுது.
அதாவது, கோத்தா ன்னு ஒரு சிட்டி இருக்கு. அதுலதான் பேட் – மேன் இருக்காரு. ஆனா, அவரு அங்க இல்ல. அதுக்கு பதில ப்ரூசு வாய்னு இருக்காரு. இது முதல்ல படிக்கற வாசகருகர்ளுக்கு குழப்பமா இருக்கலாம். ஆனா ரெகுலரா எம் ப்ளாக்க படிக்கறவங்க புரிஞ்சுப்பாங்க.
இப்ப சுருக்கமாக புரியணும்னா, பேட்-மேன் இல்ல, ப்ரூஸ் வில்லிஸ்தான் இருக்காரு. அவரு ஒரு தொழிலதிபரு. நிறைய காரு வச்சிருப்பாரு. டம்பளருன்னு ஒரு காரு இருக்கு. அத பேட் – மோன்தான் ஒட்டுவாரு. இது எக்ஸ்ட்ரா தகவல். நீங்க தெரிஞ்சிக்கணும்.
ஜோக்கரு செத்து போய்ட்டான். படத்திலுயும், நெசத்திலும். இரண்டுக்குமே வேதியியல் காரணம்தான். டபுள் மண்டையனும் போய் சேந்துட்டான். இந்த படத்தில கேட் வுமன் அப்படிங்கர ஒரு பொண்ண அறிமுகப்படுத்திருக்காரு.
இதுக்கு முன்னேடி ஒரு கேட்வூமன் அப்படின்னு நிறைய பூனையோட படம் வந்துச்சி. அது மொக்கை. அது நமக்கு இப்போ வேணாம். இந்த கேட் பேட்டோட சேந்துகிட்டு, வில்லன்களை எப்படி பந்தாடுங்கறதுதான் கதை.
கண்ணாடி போட்டுகிட்டு ஒரு போலீஸ் வருவாரு. அவரு நல்ல போலீசு. அவருதான் லைட்ட போட்டு காட்டுவாரு. பேட்-மேன் ப்ரூசு வூட்லேந்து வருவாரு. வீட்டுக்கு அடியில் லிப்ட் இருக்கும். அங்க அல்பர்ட்-ன்னு ஒரு தாத்தா இருப்பாரு. இவருக்கு எடுபிடி யுனிபார்ம் இல்லாமேயே யாரு பேட் மேன், ப்ரூசு யாருன்னு கண்டுபிடிச்சுருவாரு.
உள்ள நிறைய கம்யூட்டர் சர்வர்லாம் இருக்கும். அதுல்ல, Criminal’s PsychoAnalysis and Protoplasm and Electrosynthesis அப்படிங்கற ப்ரொக்ராம்ல இருக்கும். அத பத்தி அப்புறமா பேசலாம். அது ரொம்ப அட்வான்ஸ்ட் சாப்ட்வேரு. குற்றவாளிகளின் உள் மனதை புள்ளி விவரங்களுடன் ஆராய்ந்து, அவர்கள் வெளி டவுசர்களை கழட்டுற ஒரு சாப்ட் வேரு. அத பேட்மேன் இடுப்புல ஒரு வை பை கொடுத்து கண்ணுல தெரியற மாறி பண்ணிக்கிறாரு. இதுக்கு பாக்ஸ் அப்படின்னு ஒரு விஞ்ஞானி உதவி செய்யறாரு.
கோலன் படத்தில எப்போதுமே வில்லன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பாரு. அதேபோல இதுலயும். கொடுத்திருக்கிரு. போன் அப்படின்னு ஒரு வில்லன அறிமுகப்படுத்துறாரு. ஆளு சும்மா கருங்கல் மாறி கும்முனு இருக்கான். இந்த பூன் சிட்டியை அழிக்க வர்றான். அதை யாராலயும் தடுக்க முடியலை.
வேற வழியில்லாம பேட் – மேன் வர்றாரு. வந்து சிட்டியை காப்பத்துறாரு. இதுக்கு முன்னேடி அவருக்கு வித்தை சொல்லி கொடுத்த வாத்தியாரும் இதல வராரு. அவருக்கு இவருக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றாரு.முதல் பார்ட்டில் இவரு ரயில் வூட்டு சிட்டியை அழிக்க முயற்சி பண்ணுவாரு.
பேட் மேன் பறந்து பறந்து சுத்தியால தட்டி தட்டி செய்யற சாகசங்கள நீங்க 3டியில் தான் பாக்கணும். அப்டி பிரமாதமாக இருக்கு. பாசம், சாகசம், நாட்டுப் பற்று, அர்ப்பணிப்பு இது எல்லாவற்றையும் சரியளவில் கலந்து திரைக்கதை அமைச்சிருக்காரு இயக்குநர்.
இனி மேல் பேட் மேன் படத்தை இயக்க மாட்டேன் என சொல்லியிருக்காரு. இன்னாடா, இப்படி சொல்லிட்டாறேன்னு வருத்தமா இருந்தாலும், இனிமே வர பேட் மேன் படத்த விக்கிப் பீடியா படித்து புரிஞ்சிக்க வேண்டாம்னு நினைக்கும்போது, அத மூடிட்டு படத்த பாக்கலாம்னு தோணுது.
So, guys. don’t miss it! Visual Delight! 😉
கோப்ரா தீவில் கோயாவி – 03 நெஞ்சில் ஓர் ஆலயம்
உளவாளிகள் உளவுப் பணியில் ஈடுபடுவதற்கு முன் , கைபேசியில் பேசுவதற்கு என டாப் அப் செய்ய மறக்கக் கூடாது. மிஸ்ட் கால் என்றுமே அவசரத்தை தெரிவிக்காது, – இராவின் டைரிக் குறிப்பு |
காதல் மூன்றெழுத்து ஊடல் மூன்றெழுத்து, உயிர் மூன்றெழுத்து, நீ இல்லாத வாழ்க்கை எனக்கு மயிர், பி, கு, அதுவும் மூன்றெழுத்து. – கோயாவிக்கு துலுக்காணம் அனுப்பிய குறுஞ்செய்தி. |
நீ போம்போது மசிரா போச்சு என உணராமல், உசிரே போச்சு என உணர்கிறேன். – ஷீலா, இராவிற்கு காப்பி வாங்க கடைக்கு சென்றபோது அவளிற்கு கோயாவி அனுப்பிய குறுஞ்செய்தி. |
தலைமையகம் சென்ற கோயாவி, தன்னுடைய முதலாளி அறையில் குழல் விளக்கும், மின் விசிறியும் எரிவதை கண்டு வியப்புற்றார். மின்சார பில் கட்டணத்தை குறைக்க, இராவ் மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கையை கடைப்பிடித்து வந்தது, தலைமையகத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். மொத்தம் மூன்று பேருக்கு.
இராவின் காரியதரிசியான ஷீலாவிடம் அவசரமாக கூப்பிட்ட காரணத்தை அறிய எண்ணி, அவளிடம் கோயாவி பேச்சுக் கொடுத்தார்.
சீலா, எப்டி கீறே?
அக்காங்
உன் புருஷன் உன்ன சந்தோஷமா வச்சுகிறானா?
இந்த கேள்வி கேட்டதன் பின்னணியில் ஒரு நிகழ்ச்சி உள்ளது. ஷீலாவின் கணவன் (புருஷன் அல்லது வூட்டுக்காரன்) துலுக்காணம் பேட்டையில் ஒரு மாவீரன். நல்ல உயரத்தில், ஆஜானுபாகுவாக இருப்பான். சுற்றியுள்ள அனைத்து பேட்டைகளிலும், சக ரவுடிகள் அவனை மாமூல் வாங்க அவனை அழைத்துச் செல்வதுண்டு. கீரை , மோர், காய்கறி மற்றும் பூக்கள் வியபாரம் செய்பவர்கள் துலுக்காணத்தின் தோற்றத்தை கண்டே பயந்தார்கள், கசாப்பு கடை ஹக்கிம் பாயை தவிர. இரத்தம் படிந்த உடலுடன், கையில் பெரிய கத்தி இரண்டை வைத்திருப்பவர் கிட்டே யாரும் மாமூல் கேட்டதில்லை.
கோயாவி துலுக்காணத்தின் சம்சாரம் ஷீலாவின் மீது இரண்டு கண்களை வைத்திருந்தார். துலுக்காணத்திடம் நட்பு பாராட்டுவது எதிர்காலத்தில் பயனை தரும் என அவனிடமும் பேசி பழகி வந்தார். ஒருநாள், இருவரும் மாந்தோப்பில் தென்னங்கள்ளை மூக்கு மூட்ட குடித்து போதையில் மூழ்கினர்.
போதை தெளிந்து எழுகையில் இருவரும் அரை நிர்வாணமாக இருந்ததை உணர்ந்தனர். எந்த அரை என்பதை கோயாவி மிக இரகசியமாக வைத்திருந்தார். ஆனால், அந்த நாளில் இருந்து, துலுக்காணம் கோயாவியிடம் முற்றிலும் மாறுபட்டு பழக ஆரம்பித்தான். நள்ளிரவு ஒன்று, மூன்று, நான்கு மணிக்கெல்லாம் கைபேசியில் குறுஞ்செய்திகள் அனுப்பத் தொடங்கினான். கோயாவியை அவன் பார்க்கும் போதெல்லாம் வெட்கப் பட்டது, கோயாவியின் வயிற்றுல் கிலியை கிளப்பியது.
ந்தே, உன்ன பெருசு கூப்பிடு, போவியா?
கோயாவி இராவின் அறைக்குள் நுழைந்தார். அவர் முன் ஒரு வாட்டசாட்டமான இளைஞன் உட்கார்ந்திருந்தான். அவன் முன்னால் ஒரு டீ க்ளாசும், இரண்டு மசால் வடைகளும் இருந்தன. அவன் ஒரு முக்கியமான புள்ளியாக இருக்க வேண்டுமென்று கோயாவி ஊகித்தார்.
அந்த இளைஞன் கோயாவியை பார்த்து,
நான் ஒரு அவசரப் பணி காரணமாக இங்கே உங்களுடன் இணைந்து வேலை செய்ய வந்துள்ளேன். ஒரு அனுபவம் வாய்ந்த மூத்த ஏஜெண்ட் தன்னுடைய பணி எல்லையில் புதியவர்களை உடனே அனுமதிப்பதில்லை என அறிவேன். ஆனால், பணியின் முக்கியத்துவம் அப்படி. என்னால் உங்களுக்கு எவ்வித சிரமமும் இருக்காது.
எனக் கூறி கைகளை நீட்டினான்.
கோயாவி சுற்றி வளைத்து பேசும் கலையை என்றுமே அறிந்திருக்கவில்லை. தன் மனதில் பட்டதை அவர் என்றுமே மறைத்ததில்லை. தடாலடியாக அதை பேசக் கூடியவர்.
எனக்கு மசால் வடை சொல்லலியா?
(தொடரும்)
கோப்ரா தீவில் கோயாவி – 2. ஆபரேஷன் நாத்தங்காய்
அக்ஷய் குமார், விஜய், சுரேஷ் கோபி, பவன் கல்யாண் போன்ற நடிகர்களின் தீவிர இரசிகர்களை உளவுத் துறையில் சேர்க்கக் கூடாது.
– இராவின் டைரிக் குறிப்பு |
எந்த ஒரு உளவாளிக்கும் கடந்த காலம் உண்டு. அதுதான் அவனின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. கோயாவியின் கடந்த காலத்திய ஆபரேஷன் இப்போது உங்கள் கண்களிற்கு.
ஆபரேஷன் நாத்தங்காய்
(சிலர் கண்களிற்கு மட்டும்)
ஆனைமலையில் நடைபெறும் கள்ளச் சாராயக் கும்பலை பற்றி ஊடூருவி உளவறிதல் மற்றும் நாட்டு பாதுகாப்பிற்கு அவர்களால் ஏற்படும் தீங்குகளை பற்றி அலசி ஆராய்தல்.
உளவாளி : மிஸ்டர் கோயாவி (கோட் நேம் : லெமன் )
நாட்குறிப்பு
15.04.•• காலை 8.00 மணி ஆனைமலைக்கு பேருந்தில் புறப்படுதல்.
காலை 9.30 மணி – ஆனைமலை அடிவாரம் வந்தடைதல். ஹோட்டல் செல்வ விலாசில் டிபன். நான்கு இட்லி, ஒரு பூரி கிழங்கு, பொங்கல் மற்றும் வடை. பிறகு காபி.
காலை 10.45 மணி – ஆனை மலையில் மிக இரகசியமாக ஊடூருவுதல்.
காலை 11.55 மணி – தவறான மலை. ஆனை மலைக்கு செல்ல இன்னொரு பேருந்தை பிடிக்க வேண்டும்.
மதியம் 2.00 மணி – உண்மையான ஆனைமலை அடிவாரம். வேலு மிலிட்டரியில் பிரியாணி. பிறகு பீடா.
மதியம் 3.00 மணி – ஆனை மலையில் மிக இரகசியமாக ஊடூருவுதல்.
மாலை 5.00 மணி – சாராயக் கும்பலை பற்றி விசாரித்தல்.
மாலை 5.05 மணி – அவர்களால் சுற்றி வளைத்து சாராயக்கூடத்திற்கு தூக்கிச் செல்லப்படுதல்.
15.04.•• முதல் 18.04.•• வரை அவர்களால் கட்டி வைத்து உதைக்கப்படுதல்.
19.04.•• அன்று காலையில் போதையில் மயங்கிக் கிடக்கும் கும்பலிடமிருந்து தப்பிச் செல்லல்.
காலை 8.00 மணி - தாவி குதித்தோடி மலைப் பாதைக்கு வந்து, அங்குள்ள பெட்டிக் கடையை பார்த்து கண்ணீர் விடுதல். பின்னர், ஒரு சோடாவினை குடித்து ஆசுவாசப்படுதல்.
காலை 8.30 மணி – விரைவு பேருந்தை பிடித்து தலைமையகத்திற்கு விரைதல்.
அங்கே டைரக்டர் ராவிடம் விளக்க அறிக்கை அளித்தல். மற்றும் செலவின அறிக்கையையும்.
இராவின் குறிப்புகள். (கோயாவியின் பதில்கள்)
01. ,இரகசியமாக ஊடூருவது என்பது இரண்டே சொற்கள். அதில் எந்த சொல் உனக்கு புரியவில்லை. காலை டிபன் இவ்வளவு அதிகமாக சாப்பிடதான் வேண்டுமா?
(கோயாவி இராவின் மனநிலையை சந்தேகிக்கிறார்.)
02. எந்த நேரத்திலும் ஒரு உளவாளி தன் எண்ணங்களை வெளிக்காட்டக் கூடாது. ஆனைமலையில் பெட்டிக் கடை வைத்திருக்கும் திரு சுடலை என்பாரின் வார்த்தையில்
சட்டை இல்லீங்க, பேர் பாடிங்க. கொஞ்சம் புஸுபுஸூன்னு இருந்தாருங்க. பட்டாபட்டி மட்டுந்தான் போட்ருந்தாரு. என்னை பாத்த உடனேயே மம்மி. மம்மின்னு ஒரே அழுகைங்க. நாந்தான் லெமன் லெமன் அடிக்கடி சொன்னாரு. யாரு பெத்த புள்ளையோ.
என்னை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தமெல்லாம் கொடுத்தாருங்க. அப்புறம் என் சம்சாரம் பரிமளத்தை பாத்து அதே மாதிரி செய்ய பாத்தாரு. நான் தார்க்குச்சிய எடுத்து நல்லா நாலு கொடுத்தேன். அப்புறமா பரிதாபபட்டு, சோடா உடைச்சி கொடுத்து பஸ் ஏத்தி அனுப்பி வைச்சேன்.
நாறக்கம்மானட்டி, போம்போது என் பொண்டாட்டிக்கு பறக்கும் முத்தம் கொடுத்துட்டு போனான்ங்க.
(கோயாவி இராவின் பிறப்பினை சந்தேகிக்கிறார்.
03. உளவாளி கோயாவி நான்கு நாளைக்கு உணவு படி கேட்டு செலவின அறிக்கை அனுப்பியிருக்கிறார். ஆனால், மூன்று நாள் சாராயக் கும்பலின் பிடியில் இருந்திருக்கிறார். அவர்கள் சாப்பாடு போட்டுதான் அவரை அடித்திருக்க வேண்டும். எனவே, ஒரு நாள் உணவு படி மட்டுமே வழங்கப்படும்.
(கோயாவி மீளவும் இராவின் பிறப்பினை சந்தேகிகிறார்)
(ஆபரேஷன் நாத்தங்காய் – முடிவு – ஆனைமலையில் உண்மையாகவே ஒரு கள்ளச் சாராயக் கும்பல் இருக்கிறது. வதந்திகள் உறுதி செய்யப்பட்டன. இந்த தகவல் தமிழக காவல் துறையிடம் உடன் அளிக்கப்பட்டது.)
Recent Comments