Archive for July 26, 2012
வியட்நாம் உணவு
நான் காலை ஒட்டத்திற்கு செல்லும் வழியில் ஒரு புதிய உணவகம் திறந்திருந்திந்தார்கள். மல்டி க்யூசீன். அதில் வியட்நாம் உணவும் அடங்கும். சிறிய உணவகம்தான். அன்றைய தினம் மாலையே அங்கு சென்றேன்.
அவ்வளவாக கூட்டமில்லை. முதலாளியே வந்து ஆர்டர் எடுத்தார். சமையல் நிபுணர் (செப் அவர் வார்த்தையில்) மதுரையிலிருந்து வந்திருப்பதாக கூறியதும் எனக்கு அவரை சந்திக்கும் ஆர்வம் ஏற்பட்டது. அதற்கு இரண்டு காரணங்கள். பிரபல பதிவர் என்பது அதில் ஒன்று இல்லை.
ஒன்று, முருகதாஸ் ஏழாம் அறிவில் தமிழர்களுக்கு அந்தளவிற்கு விவரம் பத்தாது, போதிசத்துவர் தமிழர் என்பது மலேசியா, சிங்கப்பூர், சீனாவில் உள்ளவர்களுக்கு தெரிந்தது நம்மூர் ஆட்களுக்கு தெரியவில்லையே என வருந்தி இருந்தார். ரெட் ஜெயன்ட்ஸ் தயாரிப்பு வேறு. அவர்கள் அதை க்ளாஸிக் என சொல்லியிருப்பதால், காமெடி என கருதலாகாது. அவர்களே காமெடி என்று சொன்னால்தான் சிரிக்க வேண்டும். ஒரு தமிழன் வியட்நாம் உணவின் தயாரிப்பின் நுட்பங்களை கற்று தேர்ந்திருக்கிறான், குறைந்த பட்சம் பாராட்டி சாப்பிட வேண்டாமா?
இரண்டாவது, சமையல் நிபுணர்களுக்கு ஒருவரை பிடித்து விட்டால் மிகச் சிறந்த சமையல் டிப்ஸ் கொடுப்பார்கள். அப்படி ஒருவர் கொடுத்த டிப்ஸ் இன்னும் எனக்கு உபயோகமாகிக் கொண்டிருக்கிறது. (இதான் என் நம்பரு, உனக்கு ஏதாச்சும் வேணும்னா இந்த நம்பருக்கு கால் அடி. அரை மணி நேரத்தில வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன் )
செப் நல்ல களையாக, உற்சாகமாக இருந்தார். வாடிக்கையாளர்கள் அவரிடம் வந்து பேசுவது முதல்தடவையாம். முதலாளியும் கூடவே நின்றிருந்தார்
நான் |
வியட்நாம் உணவு தயாரிக்க எங்கே கத்துக்கிட்டிங்க? |
செப் |
சார், நிறைய பேருக்கு தெரியாது, வியட்நாம் சமையலும் பர்மா சமையலும் ஒண்ணு. ஒரே மாரிதான் இருக்கும். |
முதலாளி, இல்லையா பின்ன என புன்னகை செய்கிறார்.
நான் |
ஒன்னாவா இருக்கும்? |
செப் |
பர்மாவில் நம்மாளுகதான் செட்டியார்கள் நிறைய பேர் இருந்தாங்க. பிரச்சினை வந்த உடனேதான் திரும்பி வந்துட்டாங்க. |
நான் |
ம் |
செப் |
அவங்க சமையலதான் இன்னமும் பர்மா காரங்க சாப்டுறாங்க. |
முதலாளிக்கும் இந்த விஷயம் தெரியவில்லை என்பதால், இருவரும் வியந்தோம்.
நான் |
அப்ப செட்டிநாட்டு சமையலுக்கும், பர்மா வியட்நாம் சமையலும் ஒண்ணா? |
செப் |
(எச்சரிக்கையுடன்) கண்டிப்பா இல்லை. முதல்ல சிக்கன சாப்சீன்னு சொல்லுவாங்க. அப்புறம் வேற வேற தட்டுல பரிமாறணும். இந்த மாரி நிறைய விஷயம் இருக்கு சார். |
எனக்கு அவருடைய தன்னம்பிக்கை பிடித்து இருந்தது.
Recent Comments