கோப்ரா தீவில் கோயாவி – கடிதங்கள்

July 20, 2012 at 11:10 pm 5 comments

இந்த தொடரை எழுதும்போது இவ்வளவு பாராட்டு வரும் என நான் கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை.  நிஜத்திலும் அப்படி பெரிய அளவில் பாராட்டுக்கள் வந்து குவிந்து விடவில்லைதான். இருப்பினும், சில கடிதங்கள் என்னை ஊக்கப்படுத்தின. நிறைய நாடுகளிலிருந்து இந்த தொடரை இரசிகர்கள் படிக்கின்றார்கள்.  கவுதமாலாவிலிருந்து கூட படிப்பது என் மனதில் கிலியை கிளப்புகிறது.

காப்பி தானே அடிச்சே, சொல்லு! பாரீஸிலிருந்து மோரீஸ்

டாய் பொறுக்கி,

         இதெல்லாம் ஒரு பொழப்பாடா? பல்லிருக்கிறவன் பக்கோடா சாப்ட்றான், உனக்கெதுக்கு? ஜெயமோகன் எழுதிய விஷ்ணுபுரத்தின் கதையை அப்படியே காப்பியடித்து வேறு மாதிரி எழுதினா தெரியாதுன்னு நினைச்சியா?

வெட்கங்கெட்டவனே, அடுத்து என்னடா? தமிழ்த் திரைப்படம் இயக்க திட்டம் உள்ளதா?

இப்படிக்கு

மோரீஸ் ப்ரம் பாரீஸ்

டியர் மோரீஸ்,

ஏன்ய்யா?  விஷ்ணுபுரம் நாவலின் உட் கட்டமைப்பை உள் வாங்கி அதன் வெளி மையங்களை சீர்படுத்தி அதை இந்த தொடரில் கொண்டு வந்திருக்கிறேன்.  அநேகமாக இதை நான் மட்டுமே செய்திருப்பேன்.  அதை நியாயமாக நீங்கள் பாராட்டி இருக்க வேண்டும்.

பக்கோடா எதன் குறியீடு என்பதை உணர முடிகிறது. இருப்பினும், கஜ்ஜீரா என்ற உதாரணம் சாலச் சிறப்பாக இருக்கும். தொடர்ந்து படியுங்கள். அடிக்கடி எழுதாதீர்கள். அடியோஸ் அமிகோஸ்.

இலங்கையிலிருந்து ஸ்ரீபதி,

அண்ணேன்,

நான் உங்கட பரம இரசிகன்.  நான் எட்டாம் வகுப்பு வாசித்து வருகிறேன்.  கோயாவி கதைன்னா எனக்கு அப்படி இஷ்டம்.  அண்ணேன், உங்கட வலைப்பூவிற்கு காலையிலிருந்து இராத்திரி வரை திரையில் வச்சு இரசித்துக்கிட்டு இருக்கேன்.

அண்ணேன், நீங்க எண்ட தெய்வம். கோயாவிக்கு ஷீலாவை கட்டி வையுங்கோள். கோயாவி ஒரு நல்ல ஏஜெண்டாக்கும். அவருக்கு பெலத்தை கொடுங்கோள்.

தண்டனிட்டு

ஸ்ரீபதி

தம்பி ஸ்ரீ,

கேட்கவே ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளதடா.  இப்படிதான் இலுமின்னு ஒரு தம்பி இருந்தான். நேரம் சரியில்லாம பய ரௌடியாக போய்ட்டான். யார் எது சொன்னாலும், அதுக்கென்ன இப்போ-ன்னு திரியறான். நல்ல வாசகனாக்கும். ஆனா கண்டதை படிக்கிறான். அது போலவே, நீயும் ஆயுடாதே, கண்ணா.

            சின்ன வயசு வாசகர்களும் எனக்கு முக்கியம்தான். குருவி கொத்தி, குதிரை குதிச்சா கொப்பறகேசரியும் குப்புற விழுவான் என்பது ஆன்றோர் மொழி.

நான் பாராட்டுதலையும், விமர்சனத்தையும் சமமாகவே பாவித்து வருகிறேன். இத்தொடருக்கு நல்ல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.  ஆன்லைன் சாட்டில் வாசகர்களுடன் கதைக்கையில், அவர்கள் எண்ணத்தை அறிய முடிகிறது.

         தனிப்பட்ட காரணங்களால், வெளியூர் அன்பர்களின் ஆன்லைன் சாட்டை நான் தவிர்க்க நேரிடுகிறது. இருப்பினும், உங்கள் அன்புதான் என்னை இத்தொடரை எழுத வைத்திருக்கிறது என்பதை மறவாதீர்கள்.

ஆன்லைன் சாட் நாள் 15.07.2012 நேரம் மாலை நான்கு மணி

மோரீஸ் டேய்
நான் வணக்கம் மோரீஸ், நலமாக உள்ளீர்களா?
மோரீஸ் ஜெயமோகன் ஒரு சூரியன் போல, நீயெல்லாம் கடன் வாங்கிதான் எழுதற. ஒரு சூரியன்தான். தெரிஞ்சிக்கோ.
நான் கிட்ட இருப்பது ஒரு சூரியன்தான்.  அனைத்து நட்சத்திரங்களும் சூரியன்தான் என்பதை மறவாதீர்கள்.😉
மோரீஸ் பெரிய பருப்பு மாதிரி பேசிட்டதாக நினைப்பா?
நான் டேய், செருப்பால அடிப்பேன்.
மோரீஸ் பொறுக்கி ராஸ்கல், உனக்கு தைரியம் இருந்தா அட்ரஸ் சொல்லுடா
நான் உங்கக்காக்கிட்ட கேளுடா, புறம்போக்கு.😉
மோரீஸ் என்னைக்காச்சும் எங்கையில் நீ மாட்டுவடா?
நான் ஓ, ரெய்டு போலீசா நீ, ஹஹஹஹஹஹஹஹ

 

Happy Weekend!

Entry filed under: கோயாவி சாகசம், நகைச்சுவை. Tags: .

The Dark Knight Rises – விமர்சனம்? வியட்நாம் உணவு

5 Comments Add your own

  • 1. shankar  |  July 22, 2012 at 12:52 pm

    ரைட்டர் தம்பி….

    உம்மாலே சாரு போல எழுத முடியுமாலே.. கேக்கேன்லே… சொல்லும்லே… முடியுமாலே…. கோபுர உச்சில நின்னு கோவணத்த அவுத்தா கோவண சாமி ஆக முடியாதுலே…. உள்ள இருந்து வரணும் கொட்டணும், ஒரு ஃப்லோவா… உம்ம கிட்ட அது இல்ல…. நீரு பாம்புக் கதைகள மொதலில படிச்சு மனனம் பண்ணிக்கோம் அப்புறமா ரைட்டர் வேல பத்தி சாகவாசமா சோசிக்கலாம்….

    சாருநேசன்

  • 2. shankar  |  July 22, 2012 at 1:00 pm

    என்னங்க, நான் தான் பாரீஸ் மொரீஸ் பொஞ்சாதி, அந்த முட்டாள செமையா திட்டினீங்களாமே…. சும்மா சிலிர்ச்சு போய்ட்டேனுங்க… நீங்க பாரிஸிக்கு வந்தா எங்க வீட்டில வந்து படுத்திட்டு தான் போகனுங்க.. என் போன் நம்பர தர்றேன் .. கூப்பிடுங்க…

    கண்ணகி மொரீஸ்…. பாரீஸ்

  • 3. sharehunter  |  July 22, 2012 at 9:00 pm

    @ சாருநேசன்,

    யோவ், உனக்கு அக்கா, தங்கச்சி இல்லன்னு தைரியமா பேச வந்துட்டியா? பிளேன்ல இருந்து பிரியாணி சாப்டாலும் செரிமானம் ஆகும்யா எனக்கு? சின்ன வயசிலயே பரம பதம் விளையாடினவன்யா நான்? ஞான் ஒரு வலிய ரைட்டாருக்கும்.

    @ கண்ணகி,

    உங்கள் அன்புக்கு நன்றி. எதிர்காலத்தில் அதை நேரம் இருப்பின் உபயோகப்படுத்திக் கொள்கிறேன்.

  • 4. illuminati  |  July 26, 2012 at 8:53 am

    அண்ணே, நீ கோச்சுக்காம “கோவண அங்கிள் கோயாவி” பத்தி எழுதுண்ணே. உன்ன விட்டா யாராலண்ணே இத இம்புட்டு அழகா எழுத முடியும்? குறிப்பா கீழ்க்கண்ட ரகசியக் குறிப்புகளை எப்படியாவது உருவிட்டு வந்து ஊற வச்சு ஊறுகா போடுண்ணே.

    இரும்புஜட்டியும் கரும்புக்கட்டியும்… (முதல் பாகம்)
    இரும்புஜட்டியும் கருப்பட்டி சட்டியும் (இரண்டாம் பாகம்)
    கோயாவியும் எறும்புக் கண் ஏகாம்பரமும்.
    நாக்குப் பூச்சி நகரத்தில் கோயாவி.
    கோங்குரா சாம்ராஜ்ஜியம்.
    ராவின் ராத்திரிக் குறிப்புகள்.
    கோயாவியும் கோங்குரா சட்னியும் .
    உப்புக்கண்டமும் உப்பாத அப்பளமும்
    மாங்காத்தோப்பில் மாயாவி
    நடுநிசிக் கிழவன்
    பதுங்குகுழியில் ஒரு பன்னிக்குட்டி
    கோயாவிக்கு ஒரு கோந்து
    இயந்திரப் பாடை
    மினிபாட்டரியும் முப்பது செகண்ட் மர்மமும்

  • 5. sharehunter  |  July 26, 2012 at 7:44 pm

    @ இலுமி,

    மேற்கண்ட புத்தகங்களை எல்லாம் பட்டப் படிப்பில் வைக்க வேண்டுமென்ற போராட்டத்திற்கு என் ஆதரவை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரிசையில் பறக்கும் தட்டு கடததிய பாட்டு வாத்தியார் கதையை விட்டு விட்டீர்கள்,

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
July 2012
M T W T F S S
« Apr   Aug »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: