The Dark Knight Rises – விமர்சனம்?

July 19, 2012 at 12:30 am 6 comments

வணங்கமுங்க. எனக்கு நோலனின் திரைப்படங்கள் அனைத்துமே ரொம்ப பிடிக்கும்.  டாப்பா எடுப்பாரு.  அதுவும் பேட்-மேன் படம்.  பின்னிபுட்டாரு.  முத பாகத்தில யோடா பாத்திரம் ரொம்ப நல்லா வந்துருக்கு.  இல்ல, மன்னிசுருங்க, அது ஏலியன் படமுங்க. 

    படத்துக்கு வருவோம்.எங்கூர்ல பேட்-மூன் மூணாவது பாகம் வெள்ளிக் கிழமைக்கு வருதுங்க.  அது வரைக்கு பொறுத்தா, நண்டு சிண்டு எல்லாம் விமர்சனம் எழுதிடும்.  அது எனக்கு தோதா படல.  அதனாலேயே இப்பயே எழுதிறது நல்லதுன்னு படுது.

   ஹி ஹி இதல்லா யாருய்யா படம் எடுக்கறது? அதாவது, கோத்தா ன்னு ஒரு சிட்டி இருக்கு.  அதுலதான் பேட் – மேன் இருக்காரு.  ஆனா, அவரு அங்க இல்ல.  அதுக்கு பதில ப்ரூசு வாய்னு இருக்காரு.  இது முதல்ல படிக்கற வாசகருகர்ளுக்கு குழப்பமா இருக்கலாம்.  ஆனா ரெகுலரா எம் ப்ளாக்க படிக்கறவங்க புரிஞ்சுப்பாங்க.

    இப்ப சுருக்கமாக புரியணும்னா, பேட்-மேன் இல்ல, ப்ரூஸ் வில்லிஸ்தான் இருக்காரு.  அவரு ஒரு தொழிலதிபரு. நிறைய காரு வச்சிருப்பாரு. டம்பளருன்னு ஒரு காரு இருக்கு.  அத பேட் – மோன்தான் ஒட்டுவாரு.  இது எக்ஸ்ட்ரா தகவல்.  நீங்க தெரிஞ்சிக்கணும்.

    ஜோக்கரு செத்து போய்ட்டான்.  படத்திலுயும், நெசத்திலும்.  இரண்டுக்குமே வேதியியல் காரணம்தான்.  டபுள் மண்டையனும் போய் சேந்துட்டான்.  இந்த படத்தில கேட் வுமன் அப்படிங்கர ஒரு பொண்ண அறிமுகப்படுத்திருக்காரு. 

   இதுக்கு முன்னேடி ஒரு கேட்வூமன் அப்படின்னு நிறைய பூனையோட படம் வந்துச்சி.  அது மொக்கை. அது நமக்கு இப்போ வேணாம்.  இந்த கேட் பேட்டோட சேந்துகிட்டு, வில்லன்களை எப்படி பந்தாடுங்கறதுதான் கதை.  என்னய டார்ன்டியோ கையில பிடிச்சுக் கொடுத்துறாதீங்க, எசமான்.

கண்ணாடி போட்டுகிட்டு ஒரு போலீஸ் வருவாரு.  அவரு நல்ல போலீசு.  அவருதான் லைட்ட போட்டு காட்டுவாரு.  பேட்-மேன் ப்ரூசு வூட்லேந்து வருவாரு.  வீட்டுக்கு அடியில் லிப்ட் இருக்கும். அங்க அல்பர்ட்-ன்னு ஒரு தாத்தா இருப்பாரு.  இவருக்கு எடுபிடி யுனிபார்ம் இல்லாமேயே யாரு பேட் மேன், ப்ரூசு யாருன்னு கண்டுபிடிச்சுருவாரு.

உள்ள நிறைய கம்யூட்டர் சர்வர்லாம் இருக்கும்.  அதுல்ல, Criminal’s PsychoAnalysis and Protoplasm and Electrosynthesis அப்படிங்கற ப்ரொக்ராம்ல இருக்கும்.  அத பத்தி அப்புறமா பேசலாம். அது ரொம்ப அட்வான்ஸ்ட் சாப்ட்வேரு. குற்றவாளிகளின் உள் மனதை புள்ளி விவரங்களுடன் ஆராய்ந்து, அவர்கள் வெளி டவுசர்களை கழட்டுற ஒரு சாப்ட் வேரு. அத பேட்மேன் இடுப்புல ஒரு வை பை கொடுத்து கண்ணுல தெரியற மாறி பண்ணிக்கிறாரு. இதுக்கு பாக்ஸ் அப்படின்னு ஒரு விஞ்ஞானி உதவி செய்யறாரு.

கோலன் படத்தில எப்போதுமே வில்லன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பாரு.  அதேபோல இதுலயும். கொடுத்திருக்கிரு.  போன் அப்படின்னு ஒரு வில்லன அறிமுகப்படுத்துறாரு.  ஆளு சும்மா கருங்கல் மாறி கும்முனு இருக்கான்.  இந்த பூன் சிட்டியை அழிக்க வர்றான்.  அதை யாராலயும் தடுக்க முடியலை.

வேற வழியில்லாம பேட் – மேன் வர்றாரு.  வந்து சிட்டியை காப்பத்துறாரு. இதுக்கு முன்னேடி அவருக்கு வித்தை சொல்லி கொடுத்த வாத்தியாரும் இதல வராரு.  அவருக்கு இவருக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றாரு.முதல் பார்ட்டில் இவரு ரயில் வூட்டு சிட்டியை அழிக்க முயற்சி பண்ணுவாரு.

      பேட் மேன் பறந்து பறந்து சுத்தியால தட்டி தட்டி செய்யற சாகசங்கள நீங்க 3டியில் தான் பாக்கணும்.  அப்டி பிரமாதமாக இருக்கு.  பாசம், சாகசம், நாட்டுப் பற்று, அர்ப்பணிப்பு இது எல்லாவற்றையும் சரியளவில் கலந்து திரைக்கதை அமைச்சிருக்காரு இயக்குநர்.

இனி மேல் பேட் மேன் படத்தை இயக்க மாட்டேன் என சொல்லியிருக்காரு.  இன்னாடா, இப்படி சொல்லிட்டாறேன்னு வருத்தமா இருந்தாலும், இனிமே வர பேட் மேன் படத்த விக்கிப் பீடியா படித்து புரிஞ்சிக்க வேண்டாம்னு நினைக்கும்போது, அத மூடிட்டு படத்த பாக்கலாம்னு தோணுது.

So, guys. don’t miss it!  Visual Delight!😉

Entry filed under: திரை விமர்சனம், நகைச்சுவை. Tags: .

கோப்ரா தீவில் கோயாவி – 03 நெஞ்சில் ஓர் ஆலயம் கோப்ரா தீவில் கோயாவி – கடிதங்கள்

6 Comments Add your own

  • 1. shankar  |  July 19, 2012 at 12:52 am

    யப்பா … நல்ல வேளை வியாழக்கிழமை ராக் கனவிலேயே படம் பார்த்து ஒரு போஸ்டு போடலாம்னு இருந்தேன் ஆனா நீங்க காப்பாத்திட்டீங்க…. கேட் வுமன் ட்ரெஸ் சேஞ்ச் பண்ணுற மாதிரி ஏதாவது உண்டான்னு எழுதாம விட்டிட்டீங்களே பாஸு 🙂

  • 2. illuminati  |  July 19, 2012 at 4:16 am

    I am tired of this little charade.

  • 3. sharehunter  |  July 19, 2012 at 11:50 am

    @shankar,
    உங்கள் ராக்கனவுகளை எழுத வைக்க வேண்டாமென்ற நலல நோக்கத்துடன் முன்னரே எழுதி விட்டேன்.

    @illumi,

    சரடல்லாம் இல்லீங்க. படம் சூப்பரா இருக்கு. இராத்திரி வந்து ப்ளாக் படிக்காதீங்க, சோர்வாதான் இருக்கும். ஆபிஸ் டைம்ல படிங்க.

  • 4. Rafiq Raja  |  July 29, 2012 at 12:24 pm

    படம் பார்க்காமலே விமர்சனம் எழுதற அளவு உங்க திறமை யாருக்கு வரும். கோதா ன்னு ஒரு உர் இருக்கதே இப்ப தான் தெரிஞ்சுகிட்டேன்… நல்ல வேலை சென்னைக்கு வந்தா அதன் பெயரே மாறி போயிடும்.

    மற்றவர்கள் போல, ஆபிஸ் டைம்ல ப்ளாக் படிக்குற பழக்கம் நமக்கில்ல… நாங்கெல்லாம் ரொம்ப சின்சியராக்கும்… அய்யோ பாஸ் கூப்பிடற மாதிரி இருக்கு, அப்புறம் வரேன்.

  • 5. Rajesh Da Scorp  |  August 1, 2012 at 10:42 pm

    ஆண்புள்ள ஆயா. . ஈந்த வீமர்சானம் மூதலில் பாடித்து இருந்தல் ஈந்த பாடத்தை பார்த்து ஈருக்க மட்டேன் . . ஏன் அறிவூ காண்ணை திறந்து இருக்கின்றீர்கள்….ஊங்களைப் பாட்றி நொள்ளானுக்கு டுவிட்டரில் மிச்டு கல் அனுப்பி இருக்கின்றேன்.. நான்றி

  • 6. sharehunter  |  August 2, 2012 at 7:08 am

    @rafiq,

    ஆபிஸ் டைம்ல ப்ளாக் படிக்க மாட்டேன் என்று சொன்ன உங்களைப் பற்றி என்ன சொல்வது?

    @Rajesh,

    நோலனும் சொன்னார். போலுக்கு பதிலாக எங்கஊர் விசாலை போட்டிருக்கலாம் என்றேன். பத்து போனை வூடு கட்டி அடித்திருப்பார். செலினாவுடன் பூனை பூனை திருட்டு பூனை என ஒரு ஆட்டம் ஆடியிருப்பார்.

    இருப்பினும், மிச்கின் இயக்கிய அடுத்த படத்திற்கு உங்கள் ஆதரவை தெரிவிக்க மறக்காதீர்கள். படத்தை பார்ப்பதற்கு முன்பே விமர்சனம் எழுதி விடுங்கள். கீரோ சூப்பர் கீரோ யூனிபார்ம் போட்டு நடிச்சதால், உடம்பெல்லாம் அலர்ஜி வந்து தடிசசு போச்சாம். இதெல்லாம் மனசுல வைச்சுக்கிட்டு எழுதுங்க. “சண்டக் காட்சிகளில் அனல் தெறிக்கிறது, ஹாலிவுட் தரம்”. போன்ற வார்த்தைகளை சேர்க்க மறக்காதீர்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
July 2012
M T W T F S S
« Apr   Aug »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: