Archive for July 19, 2012
The Dark Knight Rises – விமர்சனம்?
வணங்கமுங்க. எனக்கு நோலனின் திரைப்படங்கள் அனைத்துமே ரொம்ப பிடிக்கும். டாப்பா எடுப்பாரு. அதுவும் பேட்-மேன் படம். பின்னிபுட்டாரு. முத பாகத்தில யோடா பாத்திரம் ரொம்ப நல்லா வந்துருக்கு. இல்ல, மன்னிசுருங்க, அது ஏலியன் படமுங்க.
படத்துக்கு வருவோம்.எங்கூர்ல பேட்-மூன் மூணாவது பாகம் வெள்ளிக் கிழமைக்கு வருதுங்க. அது வரைக்கு பொறுத்தா, நண்டு சிண்டு எல்லாம் விமர்சனம் எழுதிடும். அது எனக்கு தோதா படல. அதனாலேயே இப்பயே எழுதிறது நல்லதுன்னு படுது.
அதாவது, கோத்தா ன்னு ஒரு சிட்டி இருக்கு. அதுலதான் பேட் – மேன் இருக்காரு. ஆனா, அவரு அங்க இல்ல. அதுக்கு பதில ப்ரூசு வாய்னு இருக்காரு. இது முதல்ல படிக்கற வாசகருகர்ளுக்கு குழப்பமா இருக்கலாம். ஆனா ரெகுலரா எம் ப்ளாக்க படிக்கறவங்க புரிஞ்சுப்பாங்க.
இப்ப சுருக்கமாக புரியணும்னா, பேட்-மேன் இல்ல, ப்ரூஸ் வில்லிஸ்தான் இருக்காரு. அவரு ஒரு தொழிலதிபரு. நிறைய காரு வச்சிருப்பாரு. டம்பளருன்னு ஒரு காரு இருக்கு. அத பேட் – மோன்தான் ஒட்டுவாரு. இது எக்ஸ்ட்ரா தகவல். நீங்க தெரிஞ்சிக்கணும்.
ஜோக்கரு செத்து போய்ட்டான். படத்திலுயும், நெசத்திலும். இரண்டுக்குமே வேதியியல் காரணம்தான். டபுள் மண்டையனும் போய் சேந்துட்டான். இந்த படத்தில கேட் வுமன் அப்படிங்கர ஒரு பொண்ண அறிமுகப்படுத்திருக்காரு.
இதுக்கு முன்னேடி ஒரு கேட்வூமன் அப்படின்னு நிறைய பூனையோட படம் வந்துச்சி. அது மொக்கை. அது நமக்கு இப்போ வேணாம். இந்த கேட் பேட்டோட சேந்துகிட்டு, வில்லன்களை எப்படி பந்தாடுங்கறதுதான் கதை.
கண்ணாடி போட்டுகிட்டு ஒரு போலீஸ் வருவாரு. அவரு நல்ல போலீசு. அவருதான் லைட்ட போட்டு காட்டுவாரு. பேட்-மேன் ப்ரூசு வூட்லேந்து வருவாரு. வீட்டுக்கு அடியில் லிப்ட் இருக்கும். அங்க அல்பர்ட்-ன்னு ஒரு தாத்தா இருப்பாரு. இவருக்கு எடுபிடி யுனிபார்ம் இல்லாமேயே யாரு பேட் மேன், ப்ரூசு யாருன்னு கண்டுபிடிச்சுருவாரு.
உள்ள நிறைய கம்யூட்டர் சர்வர்லாம் இருக்கும். அதுல்ல, Criminal’s PsychoAnalysis and Protoplasm and Electrosynthesis அப்படிங்கற ப்ரொக்ராம்ல இருக்கும். அத பத்தி அப்புறமா பேசலாம். அது ரொம்ப அட்வான்ஸ்ட் சாப்ட்வேரு. குற்றவாளிகளின் உள் மனதை புள்ளி விவரங்களுடன் ஆராய்ந்து, அவர்கள் வெளி டவுசர்களை கழட்டுற ஒரு சாப்ட் வேரு. அத பேட்மேன் இடுப்புல ஒரு வை பை கொடுத்து கண்ணுல தெரியற மாறி பண்ணிக்கிறாரு. இதுக்கு பாக்ஸ் அப்படின்னு ஒரு விஞ்ஞானி உதவி செய்யறாரு.
கோலன் படத்தில எப்போதுமே வில்லன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பாரு. அதேபோல இதுலயும். கொடுத்திருக்கிரு. போன் அப்படின்னு ஒரு வில்லன அறிமுகப்படுத்துறாரு. ஆளு சும்மா கருங்கல் மாறி கும்முனு இருக்கான். இந்த பூன் சிட்டியை அழிக்க வர்றான். அதை யாராலயும் தடுக்க முடியலை.
வேற வழியில்லாம பேட் – மேன் வர்றாரு. வந்து சிட்டியை காப்பத்துறாரு. இதுக்கு முன்னேடி அவருக்கு வித்தை சொல்லி கொடுத்த வாத்தியாரும் இதல வராரு. அவருக்கு இவருக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்றாரு.முதல் பார்ட்டில் இவரு ரயில் வூட்டு சிட்டியை அழிக்க முயற்சி பண்ணுவாரு.
பேட் மேன் பறந்து பறந்து சுத்தியால தட்டி தட்டி செய்யற சாகசங்கள நீங்க 3டியில் தான் பாக்கணும். அப்டி பிரமாதமாக இருக்கு. பாசம், சாகசம், நாட்டுப் பற்று, அர்ப்பணிப்பு இது எல்லாவற்றையும் சரியளவில் கலந்து திரைக்கதை அமைச்சிருக்காரு இயக்குநர்.
இனி மேல் பேட் மேன் படத்தை இயக்க மாட்டேன் என சொல்லியிருக்காரு. இன்னாடா, இப்படி சொல்லிட்டாறேன்னு வருத்தமா இருந்தாலும், இனிமே வர பேட் மேன் படத்த விக்கிப் பீடியா படித்து புரிஞ்சிக்க வேண்டாம்னு நினைக்கும்போது, அத மூடிட்டு படத்த பாக்கலாம்னு தோணுது.
So, guys. don’t miss it! Visual Delight! 😉
Recent Comments