கோப்ரா தீவில் கோயாவி – 2. ஆபரேஷன் நாத்தங்காய்

July 6, 2012 at 9:31 pm 5 comments

 

               அக்ஷய் குமார், விஜய், சுரேஷ் கோபி, பவன் கல்யாண் போன்ற நடிகர்களின் தீவிர இரசிகர்களை உளவுத் துறையில் சேர்க்கக் கூடாது.

                                                                      – இராவின் டைரிக் குறிப்பு

 

        எந்த ஒரு உளவாளிக்கும் கடந்த காலம் உண்டு. அதுதான் அவனின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. கோயாவியின் கடந்த காலத்திய ஆபரேஷன் இப்போது உங்கள் கண்களிற்கு. 

ஆபரேஷன் நாத்தங்காய்

(சிலர் கண்களிற்கு மட்டும்)

ஆனைமலையில் நடைபெறும் கள்ளச் சாராயக் கும்பலை பற்றி ஊடூருவி  உளவறிதல் மற்றும் நாட்டு பாதுகாப்பிற்கு அவர்களால் ஏற்படும் தீங்குகளை பற்றி அலசி ஆராய்தல்.

உளவாளி : மிஸ்டர் கோயாவி (கோட் நேம் : லெமன் )

நாட்குறிப்பு

15.04.••   காலை 8.00 மணி ஆனைமலைக்கு பேருந்தில் புறப்படுதல்.

காலை 9.30 மணி – ஆனைமலை அடிவாரம் வந்தடைதல். ஹோட்டல் செல்வ விலாசில் டிபன். நான்கு இட்லி, ஒரு பூரி கிழங்கு, பொங்கல் மற்றும் வடை. பிறகு காபி.

காலை 10.45 மணி – ஆனை மலையில் மிக இரகசியமாக ஊடூருவுதல்.

காலை 11.55 மணி – தவறான மலை.  ஆனை மலைக்கு செல்ல இன்னொரு பேருந்தை பிடிக்க வேண்டும்.

மதியம் 2.00 மணி – உண்மையான ஆனைமலை அடிவாரம்.  வேலு மிலிட்டரியில் பிரியாணி. பிறகு பீடா.

மதியம் 3.00 மணி – ஆனை மலையில் மிக இரகசியமாக ஊடூருவுதல்.

மாலை 5.00 மணி – சாராயக் கும்பலை பற்றி விசாரித்தல்.

மாலை 5.05 மணி – அவர்களால் சுற்றி வளைத்து சாராயக்கூடத்திற்கு தூக்கிச் செல்லப்படுதல்.

15.04.•• முதல் 18.04.•• வரை அவர்களால் கட்டி வைத்து உதைக்கப்படுதல்.

19.04.•• அன்று காலையில் போதையில் மயங்கிக் கிடக்கும் கும்பலிடமிருந்து தப்பிச் செல்லல்.

காலை 8.00 மணி -  தாவி குதித்தோடி மலைப் பாதைக்கு வந்து, அங்குள்ள பெட்டிக் கடையை பார்த்து கண்ணீர் விடுதல். பின்னர், ஒரு சோடாவினை குடித்து ஆசுவாசப்படுதல்.

காலை 8.30 மணி – விரைவு பேருந்தை பிடித்து தலைமையகத்திற்கு விரைதல்.

அங்கே டைரக்டர் ராவிடம் விளக்க அறிக்கை அளித்தல். மற்றும் செலவின அறிக்கையையும்.

இராவின் குறிப்புகள். (கோயாவியின் பதில்கள்)

01. ,இரகசியமாக ஊடூருவது என்பது இரண்டே சொற்கள். அதில் எந்த சொல் உனக்கு புரியவில்லை. காலை டிபன் இவ்வளவு அதிகமாக சாப்பிடதான் வேண்டுமா?

(கோயாவி இராவின் மனநிலையை சந்தேகிக்கிறார்.)

02. எந்த நேரத்திலும் ஒரு உளவாளி தன் எண்ணங்களை வெளிக்காட்டக் கூடாது. ஆனைமலையில் பெட்டிக் கடை வைத்திருக்கும் திரு சுடலை என்பாரின் வார்த்தையில்

சட்டை இல்லீங்க, பேர் பாடிங்க. கொஞ்சம் புஸுபுஸூன்னு இருந்தாருங்க. பட்டாபட்டி மட்டுந்தான் போட்ருந்தாரு. என்னை பாத்த உடனேயே மம்மி. மம்மின்னு ஒரே அழுகைங்க. நாந்தான் லெமன் லெமன் அடிக்கடி சொன்னாரு. யாரு பெத்த புள்ளையோ.

என்னை கட்டி பிடித்து கன்னத்தில் முத்தமெல்லாம் கொடுத்தாருங்க. அப்புறம் என் சம்சாரம் பரிமளத்தை பாத்து அதே மாதிரி செய்ய பாத்தாரு. நான் தார்க்குச்சிய எடுத்து நல்லா நாலு கொடுத்தேன். அப்புறமா பரிதாபபட்டு, சோடா உடைச்சி கொடுத்து பஸ் ஏத்தி அனுப்பி வைச்சேன்.

நாறக்கம்மானட்டி, போம்போது என் பொண்டாட்டிக்கு பறக்கும் முத்தம் கொடுத்துட்டு போனான்ங்க.

(கோயாவி இராவின் பிறப்பினை சந்தேகிக்கிறார்.

03. உளவாளி கோயாவி நான்கு நாளைக்கு உணவு படி கேட்டு செலவின அறிக்கை அனுப்பியிருக்கிறார். ஆனால், மூன்று நாள் சாராயக் கும்பலின் பிடியில் இருந்திருக்கிறார். அவர்கள் சாப்பாடு போட்டுதான் அவரை அடித்திருக்க வேண்டும். எனவே, ஒரு நாள் உணவு படி மட்டுமே வழங்கப்படும்.

(கோயாவி மீளவும் இராவின் பிறப்பினை சந்தேகிகிறார்)

(ஆபரேஷன் நாத்தங்காய் – முடிவு – ஆனைமலையில் உண்மையாகவே ஒரு கள்ளச் சாராயக் கும்பல் இருக்கிறது.  வதந்திகள் உறுதி செய்யப்பட்டன.  இந்த தகவல் தமிழக காவல் துறையிடம் உடன் அளிக்கப்பட்டது.)

Entry filed under: கோயாவி சாகசம், நகைச்சுவை. Tags: .

கோப்ரா தீவில் கோயாவி – 1.The Ghost Protocol கோப்ரா தீவில் கோயாவி – 03 நெஞ்சில் ஓர் ஆலயம்

5 Comments Add your own

  • 1. Anonymous  |  July 6, 2012 at 11:32 pm

    அடுத்த பதிவிலாவது ராவின் ராத்திரிக் குறிப்புகளை ரகசியக் கோப்புகளில் இருந்து எடுத்து பிரசுரிக்கவும்.
    -இப்படிக்கு,
    கோச்சுகிட்டுப் போன கோந்து மாமா.

  • 2. illuminati  |  July 6, 2012 at 11:34 pm

    Forgot to mention my name in the last comment.

  • 3. sharehunter  |  July 7, 2012 at 12:20 am

    @ Uncle Gondu,

    i know, Who doesn’t.😉

  • 4. shankar  |  July 7, 2012 at 12:53 am

    இந்தப் பயதான்லே நம்ம க்ரூப் ட்ரன்க் ட்ரீம் சாங்கில குதிச்சிகிட்டிருந்தப்ப இஸ்கேப்பு ஆனது…. இந்த வரலாற எழுதுற தம்பிய அப்டியே அலாக்கா தூக்கி வந்து கரண்டு இல்லாத மலை பங்களாவில வெச்சு லிப்ஸு லீவுராயன வுட்டு ரேப் பண்ணுவோம்னு மெரட்டி லெமன் பாய் ரகசியத்தை பிடிங்கிடலாம்…. என் பட்டாபட்டிய அவுத்திட்டு போன பயல அறுக்காம நான் இறக்க மாட்டேன்லே…. அன்னிக்கு எடுத்த சபதம்லே அத வாங்காம நான் போடப்போறது இல்ல….🙂

  • 5. sharehunter  |  July 7, 2012 at 12:52 pm

    @shankar,
    மாராவின் இரசிகரே, ஏன் இந்த கோபம்?😉

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
July 2012
M T W T F S S
« Apr   Aug »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  

%d bloggers like this: