கோப்ரா தீவில் கோயாவி – 1.The Ghost Protocol

April 8, 2012 at 2:15 pm 6 comments

 

இந்திய உளவாளிகள் பெண்களை மயக்குவதில்லை.  மாறாக மயங்குகிறார்கள். மொக்கை பிகர்களிடம் கூட.

                                                                         – ராவின் டைரிக்குறிப்பு

 

கோயாவி தன் பாசறையில் பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது, அவருக்கு ஒரு மிஸ்ட் கால் வந்தது.  அது தலைமையகத்தின் அழைப்பு.  புன்முறுவலுடன் பதிலுக்கு ஒரு மிஸ்ட் கால் கொடுத்து விட்டு புறப்பட எழுந்தார்.

அவர் சைக்கிளை எடுத்து சீட்டை துடைத்துக் கொண்டிருக்கையில் அவருக்கு மீண்டும் ஒரு மிஸ்ட் கால் வந்தது.  அதுவும் தலைமையகமே. அதை கண்டதும் கோயாவியின் முகத்தில் புன்முறுவல் மறைந்து, வியர்வை அரும்ப தொடங்கியது. தலைமையகம் இரண்டு மிஸ்ட் கால் கொடுத்ததென்றால், அதற்கு ஒரே ஒரு அர்த்தம் தான்.

அது கோஸ்ட் ப்ரோட்டகால். பாஸ் அழைக்கிறார். அவசரமாக. சனியன், தாமதமாக போனால் பிசாசு போல பிடுங்கி எடுக்கும்.

உடனடியாக தலைமையகத்திற்கு செல்ல வேண்டும். கோயாவி சைக்கிளை வைத்து விட்டு பேருந்தை பிடிக்க விரைந்தார்.

கோயாவியின் பாஸ் திரு சாம்பசிவ ராவ், ஐ பி எஸ் (அட்டெம்ப்ட்). இந்திய உளவுத் துறையில் பல வருடங்கள்  உளவாளியாக பணியாற்றியவர். அவர் தன் உளவு அனுபவங்களின் அடிப்படையில்  ஒரு விரிவான அறிக்கையை தன் பழைய டைரியில் எழுதி, தன் மேலதிகாரிகளுக்கு சமர்பித்தார்.

அது உளவுத் துறை வட்டாரங்களில் பலத்த அதிர்ச்சியலையை உருவாக்கியது.  நிறைய பிரிவுகள் இருக்கும் இந்திய அரசாங்கத்தில் மேலும் பிளவு ஏற்பட்டது. இதை தடுக்க அவரின் அறிக்கையை பழைய டைரியில் எழுதியதால், அதை ஏற்க இயலாது என ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து ஒரு விசாரணை கமிஷன் குழுவால் அவ்வறிக்கை நிராகரிக்கப்பட்டது. திரு ராவ் உளவுத் துறையில் இருந்து நீக்கப்பட்டார்.

  இருப்பினும், அந்த அறிக்கை “ராவின் டைரிக்குறிப்பு என உளவுத் துறை வட்டாரங்களில் மிகவும் புகழ் பெற்றது.  சில அனுபவம் மிக்க உளவுத் துறை ஜாம்பவான்கள் அவர் திறமை மீது மதிப்பு வைத்து அவருக்கு பட்ஜெட்டில் ஒரு ஷேர் கொடுத்து, அவரை ஒரு சிறிய உளவுத் துறை அலுவலகத்தை அமைக்க முடிவு செய்தனர்.

மிக சொற்ப தொகையில் ஒரு புண்ணாக்கு மண்டியில் அமைக்கப்பட்டதே தலைமையகம்.  கோயாவி பணியாற்றுவது அங்கேதான். பணப் பற்றாக்குறையினால் பணியில் பல இன்னல்கள் ஏற்பட்டாலும், திரு ராவ் அதனை தொடர்ந்து நடத்தி வந்தார்.

ஒருமுறை, சீன உளவாளிகள் இரவில் நடமாட தொந்தரவு செய்யும் தெரு நாய்களை ஒழிக்க, சீனா வைரஸ் கிருமியுடன் ஒரு உளவாளியை அனுப்பி வைத்தது.  அந்த கிருமியினால் தெரு நாய்களை ஒழித்து விடலாம் என்ற மிகப் பெரிய அபாயம் இருந்தது. அதை தலைமையகம் கண்டறிந்து, முறியடித்தது.  விமானத்தில் தப்பியோடிய அந்த உளவாளியை பிடிக்க,  இரயிலில் ஸ்லீப்பர் வகுப்பில்  துரத்தி சென்ற கோயாவி ஓரிசாவை சேருவதற்குள், அவன் பெய்ஜிங் சென்றடைந்து, அங்கே ஒரு திருமணமும் செய்துக் கொண்டான்.

அந்த ஆபரேஷன் தோல்வியடைந்ததை ஒட்டி, கோயாவி டாஸ்மாக்கில் குடித்து புலம்பிக் கொண்டிருக்கையில் அவருக்கு இலவசமாக சைட் டிஷ் கொடுத்த சக குடிகாரர் கோலிவூட்டில் பணியாற்றும் ஒரு அஸிஸ்டென்ட் டைரக்டர். சில மாதங்களுக்கு பிறகு, இந்த உண்மைச் சம்பவத்துடன் புத்தரை சேர்த்து ஒரு முழு நீள ஆக்ஷன் படம் வெளிவந்தது.

தலைமையகம் அவசரமாக கூப்பிடுகிறது என்றால், மீண்டும் ஒரு அவசரப் பணி. நாட்டை நோக்கி மிகப் பெரிய அபாயம் வருகிறது. அதை தடுக்க கோயாவி தலைமையகத்தை நோக்கி விரைந்தார்,

http://www.youtube.com/watch?v=XAYhNHhxN0A

Entry filed under: கோயாவி சாகசம், நகைச்சுவை. Tags: .

கோப்ரா தீவில் கோயாவி – துவக்கம் சீன ஏவுகணை கோப்ரா தீவில் கோயாவி – 2. ஆபரேஷன் நாத்தங்காய்

6 Comments Add your own

  • 1. shankar  |  April 8, 2012 at 2:26 pm

    அருமையான ஆரம்பம்……சிரிப்பதை விட வேறு வழியிருப்பதாக தெரியவில்லை…. டவுண் பஸ்ஸில் கோயாவி செல்லும் போது இசைக்கும் தீம் இசை……ஜகஜ்ஜாலம்……

  • 2. Anonymous  |  April 9, 2012 at 11:28 pm

    சிரிப்பான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்

  • 3. செல்வ கருப்பையா  |  April 24, 2012 at 12:00 am

    ரொம்ப நாளைக்கப்புறம் எழுதறீங்க… அதுவும் புனைவு… ரகளையாக ஆரம்பித்திருக்கிறது… காத்திருக்கிறோம்…

    – செல்வ கருப்பையா.

  • 4. sharehunter  |  April 24, 2012 at 7:15 am

    நன்றி, திரு செல்வ கருப்பையா. ஒரு சிறிய எழுத்துப் பயிற்சி மட்டுமே இது. உலகளாவிய இலக்கியங்கள் படைக்கும் முன், ஒரு ட்ரையல் பார்த்துக் கொள்வது போல.😉

  • 5. ரஃபிக் ராஜா  |  May 14, 2012 at 1:43 pm

    என்னயா நடக்குது இங்கே… நான் மேல வந்திட்டேன்யா ?😀

  • 6. sharehunter  |  May 14, 2012 at 3:29 pm

    @rafiq,

    இவ்வளவு நாள் கழித்து வந்து, என்ன நடக்கிறது என்ற கேள்வி வேறா? தொடர்ந்து இந்த மல்டி-மீடியா இலக்கியத்தை படியுங்கள்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
April 2012
M T W T F S S
« Jan   Jul »
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

%d bloggers like this: