Fantastic Mr. Fox – Truly Fantastic!

January 22, 2010 at 7:48 pm 6 comments

         மிகவும் புகழ் பெற்ற சிறுவர்கதை எழுத்தாளரான ரோல் டால் (Roald Dahl) கதைகளில் நிறைய  சித்திர திரைப்படங்களாகி இருக்கின்றன.  உதாரணத்திற்கு, ஜேம்ஸ் அன் த ஜயன்ட் பீச் (டிஸ்னி), சார்லி அன்ட த சாக்லேட் ஃபேக்டரி (ஜானி டெப் நடிப்பில்), மடில்டா (குழந்தை ஜீனியஸ்).

         அமெரிக்க மற்றும் இங்கிலாந்து மக்கள் குழந்தை பருவத்தில் அவரின் ஒரு கதையையாவது கேட்டு, படித்து இருப்பார்கள்.  இவரின் கதை தொகுப்பிலிருந்து சித்திர திரைப்படமாக தற்பொழுது எடுக்கப்பட்ட படம்தான் Fantastic Mr.Fox.

fantastic-fox book

     மூன்றிலிருந்து ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் தூங்குவதற்காக சொல்லப்படும் கதை இது என்பதால் பெரிய அளவில் வீர சாகசங்கள், அதி பயங்கர வில்லன்கள், பிரமிக்க வைக்கும் காட்சிகள் எதுவுமே இருக்காது. 

      மூன்று பண்ணை அதிபர்களிடமிருந்து கொள்ளையடித்து தன்னை நம்பியுள்ள குடும்பத்தினையும் (சுயநலம்) மற்றும் சில குடும்பங்களையும் (பொது நலம், ஹீரோ மெட்டிரியல்!)  திருவாளர்  நரி  காப்பாற்றுகிறது. 

     fantastic-mr-fox-2

      இது பொறுக்காத மூன்று பண்ணை அதிபர்களும் அந்நரியை வேட்டையாட புல்டோஸர், துப்பாக்கி, ஹெலிகாப்டர் என பல்வேறு விதமாக முயல, அம்முயற்சியில் நரி மற்றும் இதர மிருகங்களின்  இருப்பிடங்கள் அழிக்கப்படுகின்றன.  மற்ற மிருகங்கள் நமது ஹீரோவால் தானே இவ்வளவு தலைவலி என புலம்ப, திருவாளர் நரி  தான் உருவாக்கிய பிரச்சினையை தானே தீர்த்து வைப்பதே கதை.

 

           மிருகங்களை எடுத்துவிட்டு பார்த்தோமென்றால் இந்த கதை தமிழ் திரையுலகிற்கு புதிதில்லை என்றாலும், இந்த கதையை சித்திர திரைப்படமாக எடுக்க முயன்றது எல்லோருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.  ஏனென்றால் இக்கதையில் க்ராபிக்ஸ் உத்தியில் புகுந்து விளையாட தேவையான அளவிற்கு கதை அமைப்பு இடங்கொடுக்காது.

           fantastic_mr_fox4 மற்றொரு ஆச்சரியம் ஜார்ஜ் க்ளூனி, மெரில் ஸ்ரிப்,வில்லியம் டெஃபோ, பில் முர்ரே போன்ற பிரபலங்கள் குரல் தர முன்வந்தது.  இச்சித்திர படத்தின்  ட்ரைலரை பார்த்த பொழுது நான் வெறுத்தே போய்விட்டேன்.  1970-களில் வெளிவந்த டிஸ்னி கார்ட்டூன் கள் போல இருந்தது.  சித்திர திரைப்படங்களின் தீவிர இரசிகனான நான் இச்சித்திர திரைப்படம் வெளிவந்து சில மாதங்கள் ஆகியும் பார்க்க வேண்டுமென்ற ஆர்வமின்றி இருந்தேன்.

         george-clooney ஜார்ஜ் க்ளூனி என்னுடைய விருப்பத்திற்குரிய நடிகர்.  ப்ராட் பிட் போன்று முக அழகோ, உடல் வடிவமைப்போ கிடையாது.  இருந்தும் ஹாலிவூட்டில் மிக அழகான நடிகர்களில் இவரும் ஒருவர் என கருதப்படுகிறார்.   அப்படியாயின் அழகு எங்கே, எதில் இருகின்றது என்ற தத்துவ விசாரம் எழுந்தாலும் அதை ஆராயும் இடம் இதுவல்லவே.  வேட்டைக்காரனை வீம்புடன் பார்க்கின்றபோது இதை ஏன் விட்டுவைப்பானேன் என பார்த்தேன். 

      வெறும் குரலின் மூலம் எவ்வாறு மாயாஜாலம் காட்டுவது என்பதை இவர்களை பார்த்துதான் கற்றுக் கொள்ள வேண்டும்.  எந்தவித க்ராபிக்ஸ் வித்தைகளும் இச்சித்திர படத்தில் இல்லையெனினும், படத்தில் ஒரு கணம் கூட  நம்மை ஆர்வம் இழக்க வைப்பதில்லை. ஜார்ஜ் க்ளுனியின் அந்த கரகரத்த குரல் மற்றும் நரியின் ஸ்டைல் என அவர் ஒரு மெல்லிய விசிலுடன் உதட்டை சுழிப்பது  என மனிதர் பின்னியெடுத்திருக்கிறார்.  

        சிறுவர்களுக்கான கதையை ஒட்டியே fantastic_mr_fox_familyபெரியவர்களுக்கான  நுட்பமான நகைச்சுவையுடன் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் வெஸ் ஆன்டர்சன்.             நகைச்சுவை ரசனையை வேறு ஒரு தளத்திற்கு கொண்டு செல்லும் படம் இது.  தவற விடாதீர்கள்.

 

 

படத்தின் ட்ரைலர் (And so it begins………….)

Entry filed under: திரை விமர்சனம், Hunter's Mind. Tags: .

ஆயிரத்தில் ஓருவன் – திரை விமர்சனம் Death at a Funeral

6 Comments Add your own

  • 1. shankar visvalingam  |  January 22, 2010 at 9:18 pm

    நண்பரே,

    முதலில் உங்கள் பதிவு வடிவமைப்பு அருமையாக இருக்கிறது என்பதை கூறிக் கொள்கிறேன்.

    ட்ரெயிலர் சிறப்பாக இருக்கிறது. தவற விடப் போவதில்லை. அனிமேஷன் படப் பாத்திரங்களிற்கு குரல் கொடுப்பதும் ஒரு கலையே. வேட்டைக்காரனை அனிமேஷனில் உருவாக்கினால் வேட்டைக்காரன் பாத்திரத்திற்கு யாரைக் குரல் தர வைக்கலாம் என்ற கேள்வி எழாமல் இல்லை.

    நுட்பமான நகைச்சுவையை இப்படம் சுவைக்கத் தரும் எனும் எதிர்பார்ப்பு எனக்கிருக்கிறது.

    அழகு எங்கிருக்கிறது என்ற தத்துவ விசாரங்களை விட்டு விடுவோம், உண்மையிலேயே பிராட்டை விட குளூனி கவர்ந்திழுக்கும் தன்மை கொண்டவராகவே இருக்கிறார். ஆனால் ரஃபிக்கிற்கும் குளூனிக்கும் போட்டி வைத்தால் அதில் யார் வெல்வார்கள் என்பது உள்ளங்கை ஆப்பிள் கனி.

    சிறப்பான அறிமுகம், நிறைவான பதிவு.

  • 2. Lucky Limat  |  January 23, 2010 at 10:55 am

    நானும் இப்படம் பார்த்து விட்டேன் நண்பரே,நன்றாக விருவிருப்பாக சென்றது

  • 3. செல்வ கருப்பையா  |  January 23, 2010 at 12:43 pm

    ஜார்ஜ் க்ளூனி manly-ஆக அழகாக இருப்பதில் உங்களுக்கு சந்தேகமா? அப்படியாயின் அவரது அழகு என்னைப் போன்ற சில ஆண்கள் கண்ணிலும், நிறைய பெண்கள் கண்களிலும் உள்ளது – தத்துவ விசாரங்களைத் தள்ளி வையுங்கள்.

  • 4. sharehunter  |  January 23, 2010 at 1:01 pm

    //ஜார்ஜ் க்ளூனி manly-ஆக அழகாக இருப்பதில் உங்களுக்கு சந்தேகமா?//

    எனக்கு சந்தேகமே கிடையாதுங்க. ஆனால் எப்படி? -ங்கறதுதான் அழகான கேள்வி.

  • 5. Rafiq Raja  |  January 25, 2010 at 1:44 pm

    அனிமேஷன் படங்கள் எதையும் விட்டு வைப்பதில்லை நான். உங்கள் பதிவை படித்து விட்டு ட்ரெயிலர் பார்த்தேன்.. அப்படி ஒன்றும் சொல்லிக்கொள்ளும்படி இல்லைதான், ஆனால் சில கட்டங்களில் காமடி தொனி கண்டிப்பாக இருக்கிறது. இத்தனை பெரிய நடிக நடிகைகள் குரல் கொடுத்திருப்பதால் மொத்த படமும் நம்பிக்கையை தருகிறது..பார்த்து விட வேண்டியது தான்.

    பதிவில் இப்போது அதிக படங்களை தெளிக்கும் பாணிக்கு பிடியுங்கள் பாராட்டை. அனிமேஷன் படத்திற்கு வெறும் வார்த்தை விமர்சனங்கள் சரிபட்டு வராதே🙂

    க்ளூனிக்கு உடலமைப்பு இல்லை ஒத்துக்குறேன்.. ஆனா முகமைப்பு இல்லையா… ஒரு புன்முறுவல் காட்டி அவர் பார்க்கும் பார்வை ஒன்றே பாதாதா…. பெண்கள் அவருக்கு அடிமையாக இருப்பதில் ஆச்சர்யமே இல்லை.

    காதலர் ஷங்கர், எந்த கவுக்கும் படலத்திற்கு அடி போடுகிறார் என்று தெரியவில்லை… கொஞ்சம் உஷராராக இருக்கனும் போலிருக்கே🙂

  • 6. manohar  |  March 17, 2010 at 12:08 pm

    sir please continue the blog. a large gap( 22.2.2010 to 16.3.2010 )

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
January 2010
M T W T F S S
« Dec   Mar »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: