ஆயிரத்தில் ஓருவன் – திரை விமர்சனம்

January 15, 2010 at 8:37 pm 20 comments

தமிழ் திரையுலகிற்கு இக்கதை புதிது. அப்படிப்பட்ட கதைக்கு திரைக்கதை அமைப்பதில் மிக பிரமாதமாக கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர். இது போன்ற கதைக்களன் பிரமாண்டமாக எடுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கு நிதியும் பெரிதாகவே தேவைப்படும் என்பதை அறிந்தும் இப்படி ஏன் சொதப்பியிருக்கிறார் என்று தெரியவில்லை.

சோழர்-பாண்டியர் மோதலின் பின்புலத்தையொட்டி இக்கதை இருக்கின்றது. ஒரு தொலைக்காட்சி பேட்டியில் இத்திரைப்படத்தை பார்த்த பிறகு தமிழர்கள் தங்களது வரலாற்றை அறிய விழைவார்கள் என்கிற வகையில் இயக்குநர் பேசியிருந்தார். உண்மைதான். ஏகப்பட்ட தகவல் பிழைகள். சரியான வரலாறு இதுவல்லவென்றால் வேறு எப்படி இருக்குமென்ற ஆவலில் அறிய விழைவார்கள்.

கதாநாயகன் கார்த்தி, ரீமா சென், ஆன்ரியா மற்றும் ஆர் பார்த்திபன் சில வித்தியாசமான உரையாடல்கள் மற்றும் உடலசைவுகள் மூலம் வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள். பெரிதாக குறிப்பிட்டு சொல்லும்படியான நடிப்பினை யாரும் கொடுத்துவிடவில்லை. உலக திரைப்படங்களை நிறைய பார்த்து அதனுடன் ஒப்பிட்டு சரியில்லை என்றெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால் நிறைய திரைப்படங்கள் நினைவிற்கு வந்து போகின்றன. பழங்கால வாத்தியங்களை பயன்படுத்தியிருந்தாலும் பின்னணி இசை ஒரு ஆக்ஷன் படத்திற்கு இருப்பது போலவே இருக்கிறது. படத்தில் துள்ளி விளையாடுவது எடிட்டிங் மட்டுமே.

திரைப்படத்தில் ஏராளமான குழப்பங்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு சில :

சோழர்கள் பழுப்பு நிறத்தவர்களாகவே இருந்திருக்க வேண்டும். ஆனால் இப்படத்தில் அடர்த்தியான கருமை நிறத்துடன் காணப்படுகிறார்கள். மலையினடியில் சூரிய ஒளி படாமல் ஒளிந்து கொண்டிருந்தாலுமா?

சோழர்களின் நிர்வாக முறை மிகவும் சீரானது. மன்னனுக்கு ஆலோசனை சொல்ல அமைச்சர்கள் சூழ்ந்திருப்பார்கள். இராணுவமும் மிக செம்மையாக இருக்கும். இத்திரைப்பட சோழர்கள் எல்லாவற்றையும் மறந்து விட்டு இருக்கின்றது போல் இருக்கிறது.

வரலாற்றில் பாண்டியர்களை சோழர்கள், சேரர்கள் மற்றும் புதியதாக தமிழகத்திற்கு வரும் வெளியூர் மன்னர்கள் எல்லோருமே சுயலாபத்திற்கு பயன்படுத்தி பின்னர் தூக்கியெறிந்து விடுவதே நடந்திருக்கிறது. அதனால்தான் தமிழர்களை கேரளாவில் இன்னும் பாண்டி என்று அழைக்கின்றார்கள் போலும். முந்நூறு வருடங்களுக்கு மேல் தொடர்ந்து பகையை வளர்த்துக் கொண்டு வருகின்றது போல் காட்டுவது நம்ப தகுந்தவையாக இல்லை. இருநூறு வருடங்களுக்கு மேல் இங்கே மூதாதையர்களை அடையாளம் காண்பது பொதுவாக நடைமுறையில் இல்லை.

வரலாறு மட்டுமல்ல புவியியலும் திரைப்படத்திற்கு முக்கியமே. அடர்ந்த காட்டின் நடுவே தேட வேண்டுமென்றால் வான் வழியாக செல்ல முடியாது.. சமவெளி பிரதேசத்தில் ஏன் வானூர்திகளை பயன்படுத்த வில்லை?

நடுவில் அமானுட காட்சிகள் வேறு சரியான விளக்கங்கள் இல்லாமல் பயமுறுத்துகின்றன.

இறுதி போர்க்களக் காட்சிகளில் திரைப்பட பாண்டியர்கள் ஏன் வானூர்திகளை பயன்படுத்தி சண்டையிடவில்லை. வெகு எளிதில் திரைப்பட சோழர்களை முறியடித்திருக்கலாமே?

சிறை முகாமில் சிறைப்பட்ட சோழர்கள் திரையரங்கில் எழுந்து தம்மடிக்க போகும் இரசிகர்கள் போல அடிக்கடி போய் வருகின்றார்கள். மேலும் இராணுவ வீரர்கள் கேப்டன் விஜயகாந்த்தின் கீழ் பணிபுரிந்தவர்கள் போல் இயந்திர துப்பாக்கியை குலுக்கி குலுக்கி சுடுகின்றார்கள்.

சோழர்-பாண்டியர்களை இழுக்காமல் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆல்பா ஏ என்ற குறுநில மன்னனுக்கும், பீட்டா பி என்ற மற்றொரு மன்னனுக்கும் இடையே நடந்த மோதல் என்றிருந்தால் எவ்வித தர்க்கமும் பார்க்காமல் படத்தை மற்ற மசாலா படத்தை போல் பார்த்துவிட்டு வந்திருக்கலாம். தர்க்க ரீதியாக தமிழ் படம் பார்க்க முடியாது என்றாலும் சோழர்-பாண்டியர் வரலாற்றை மிக மொக்கை தனமாக பயன்படுத்தியிருப்பதால் இவையெல்லாம் சொல்லப்பட வேண்டும். வித்தியாசமான முயற்சி என்றாலும் வரலாற்றை திரிக்கக் கூடாதே! நல்ல மர்ம படமாக வரவேண்டியது …………

கந்தசாமி எவ்வாறு சிறுவர்களுக்காக எடுக்கப்பட்டதோ அதேபோல் இத்திரைப்படமும் தமிழகத்தின் வரலாற்றையொட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.

Advertisements

Entry filed under: திரை விமர்சனம்.

கோட்டை உடைப்பு படலம் – சரித்திர புதினம் Fantastic Mr. Fox – Truly Fantastic!

20 Comments Add your own

 • 1. shankar visvalingam  |  January 15, 2010 at 9:20 pm

  நண்பரே,

  நான் படத்தை பார்க்கவில்லை. இருப்பினும் உங்கள் விமர்சனம் மீது நம்பிக்கை இருக்கிறது. [ உ+ம் வேட்டைக்காரன்]

  வரலாறு யாரிற்காக கூறப்படுகிறது என்ற ஒன்று உண்டு. வரலாற்றை அறிந்தவர்கள் உங்களைப் போல் பின்னி விடுவார்கள். என்னைப் போன்றவர்கள் ரீமா சென்னின் மார்புகளில் புதிய வரலாற்றைக் காண்பார்கள்.

  செல்வராகவன் அவர்கள் கதையை உருவாக்க முன் கலந்தாலோசித்த வரலாற்று நிபுணர்களிடம் ஜாக்ரதையாக இருக்க வேண்டும் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. கலந்தாலோசித்திருப்பார் என்கிறீர்கள்!!

  படத்தைப் பார்த்தோமா, விசிலடித்தோமா, ரீமாசென் படத்தைப் போட்டு பின் நவீனத்துவ தொடுகை என்று விமர்சித்தோமா என்றில்லாமல்… பிழைக்கத் தெரியாதவர் நீங்கள் அன்பு நண்பரே 🙂

 • 2. Dharshan  |  January 15, 2010 at 10:24 pm

  படத்தின் டைட்டிலில் முதலில் போடப் படுவதே இதற்கும் சோழ பாண்டிய வரலாற்றுக்கும் எவ்வித தொடர்புமில்லை. அனைத்தும் கற்பனையே என்பதே.

 • 3. sharehunter  |  January 15, 2010 at 10:42 pm

  ஷங்கர்,

  வேட்டைக்காரன் விமர்சனம் அல்ல. ஒரு எச்சரிக்கையே. நம்பிக்கை தரும் இயக்குநர்களே இப்படி செய்யும் போது என்ன செய்வது?

  தர்ஷன்,

  அது ஒரு சரியான டிஸ்க்ளைமர் அல்ல என்பது என் கருத்து. இதை ஒரு சிறப்பான புதையல் தேடும் கதையாகவோ அல்லது பழி வாங்கும் கதையாகவோ இவர்களை இழுக்காமல் எடுத்துச் சென்றிருக்கலாமே. கற்பனை சோழ-பாண்டிய பாத்திரம் என்றாலும் வரலாற்றின் சில கட்டுப்பாட்டுகளின் கீழ் வந்தாக வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

  மேலும் நான் காட்டிய சில குழப்பங்கள் தர்க்க ரீதியானவை.

 • 4. Rafiq Raja  |  January 18, 2010 at 2:36 pm

  முதல் பாதியில் உண்மையிலேயே படம் இதுவரை தமிழில் வெளிவந்த வகைகளில் இருந்து ஒரு வித்தியாச பாணியில் தான் பயனிக்கிறது என்று பார்க்க தோன்றிற்று….

  ஆனால் இடைவேளைக்கு பிறகு படத்திற்கான கதை கரு எது என்பதை செல்வராகவனே மறந்துவிட்டாரோ என்ன என்று தெரியவில்லை. சோழர்களை ஆப்பிரிக்க தேசத்து ஆட்கள் போலவும் காட்டுமிராண்டிகள் போலவும் சித்தரித்து, அதற்கு எஸ்கேப் ரூட்டாக இது கற்பனை கதை என்று முன்பே தட்டி வேறு… தமிழர் படம் என்பதால் தமிழரை இழிவுபடுத்த வேண்டும் என்று என்ன கட்டாயமோ…

  செல்வராகவனின் பைத்தியக்காரத்தனமான கற்பனைக்கு, சரியான நேரடி நடிப்பு உதாரணம் பார்த்திபன். சில கட்டங்களில் மனிதர் அவர் தன்னிச்சையாக நடிப்பதாக படுகிறது…. அவர் நடிப்பை புரிந்து கொள்ள நான் பிலிம் இன்ஸ்ட்டியூட்டில் ஸ்பெஷல் கோர்ஸ் ஒன்று சேர வேண்டும் போல இருக்கிறது.

  அதுவும் அந்த கடைசி கட்ட போர், ஏதோ ட்ராய்,300 படங்களை வைத்து மொக்கையாக உருவாக்கியது போல இருந்தது….

  படம் பார்த்து வெளிவந்த போது, காதுகள் இரண்டும் கொய்ன்னு சத்தம் போட்டு கொண்டே இருந்ததில், வீடுவரை செவிடனாக தான் வண்டி ஓட்டி கொண்டு போக வேண்டி போனது. காதுகளை, கண்களையும் அடைத்து கொண்டு பார்த்திருக்க வேண்டுமோ… ஆனால் ரீமா மற்றும் ஆண்ட்ரியாவை பார்க்காமல் போய் இருப்போமே… என்ன பாவம் செய்திருப்போம்… சரி கெட்டதிலயும் ஒரு நல்லது 🙂

 • 5. Ravikumar  |  March 26, 2010 at 2:37 pm

  கதாநாயகன் கார்த்தி, ரீமா சென், ஆன்ரியா மற்றும் ஆர் பார்த்திபன் சில வித்தியாசமான உரையாடல்கள் மற்றும் உடலசைவுகள் மூலம் வித்தியாசப்படுத்தி இருக்கிறார்கள். பெரிதாக குறிப்பிட்டு சொல்லும்படியான நடிப்பினை யாரும் கொடுத்துவிடவில்லை. உலக திரைப்படங்களை நிறைய பார்த்து அதனுடன் ஒப்பிட்டு சரியில்லை என்றெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால் நிறைய திரைப்படங்கள் நினைவிற்கு வந்து போகின்றன. பழங்கால வாத்தியங்களை பயன்படுத்தியிருந்தாலும் பின்னணி இசை ஒரு ஆக்ஷன் படத்திற்கு இருப்பது போலவே இருக்கிறது. படத்தில் துள்ளி விளையாடுவது எடிட்டிங் மட்டுமே.

 • 6. film lover  |  March 26, 2010 at 3:02 pm

  ஒரு நல்ல முயற்சியை பாராட்ட பாராட்ட கத்துக்கங்க….

  ஷங்கர் மாதிரி ஒரு இயக்குநர் 80 கோடி செலவு செஞ்சி சிவாஜி மாதிரி படம் எடுக்குறாரு அந்த படத்துடல என்ன இருக்கு…. ???? ரஜினியை சிகப்பா காண்பிக்க ஒருவருடமாக பல கோடிகள் செலவு செஞ்சு பாடல் எடுத்தோம்ன்னு சொல்றாங்க அவங்கள எல்லாம் விட்டுடுங்க, இந்த மாதிரி தமிழி சினிமாவை உலகத் தரத்துக்கு உயர்த்தும் படி அழகாக எடுத்திருக்கும் செல்வராகவனை தமிழின எதிரிமாதிரி காட்டாதீங்க…

  டேனி பயல் மாதிரி ஒரு இயக்குநர் இந்திய மதிப்பில் 30 கோடியில் ஸ்லம் டாக் மில்லினர் மாதிரி ஒரு அற்புதமான படத்தை எடுத்து உலகளவில் பேசப்பட்டார், நம்ம ரஹ்மான் தான் இசையமைத்தார் இரண்டு ஆஸ்கரும்
  நமக்கு கிடைத்தது. எனவே இனி தமிழ் சினிமாவில் பட்ஜேட் பற்றாக்குறை என்று யாரும் காரணம் சொல்ல முடியாது.

  ஷங்கர் மாதிரி இயக்குநர்களை இப்படி சாடுங்கள் அதை விட்டு விட்டு செல்வாராகவன் மாதிரி ஒரு இயக்குநரின் மனதை புண் படுத்தாதீர்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தை பார்த்த போது எனக்கு மம்மி மாதிரி ஒரு படத்தை பார்த்த திருப்தி ஏற்பட்டது, இந்த படத்தில் ஒரு ஷங்கர் மாதிரி ஒரு இயக்கிநரால் எடுக்க முடியுமா… சாரிங்க அவர் இதல்லாம் செய்ய மாட்டார்… அவர் கறுப்பானவங்களை வெள்ளை மட்டும் தான் ஆக்குவார்…

  நாளை தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு செல்ல இருக்கும் என்னைப் போன்ற இளைய தலைமுறைக்கு செல்வராகவன் ஒரு உதாரணமாகவே செயல்படுகிறார்….

 • 7. sharehunter  |  March 26, 2010 at 8:00 pm

  திரைப்படத்தின் காதலரே,

  உங்களின் பல கருத்துகள் விவாதத்திற்குரியவை என்றாலும் அவற்றை இறுதி முடிவுகள் போல் எழுதியிருக்கிறீர்கள். அது உங்கள் சுதந்திரம்.

  நிறைய வரலாறு, புவியியல் தவறுகளுடன் இருக்கும் இத்திரைப்படம் எவ்வாறு அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல முடியுமென இவ்விமர்சனத்தில் வியந்திருக்கிறேன். அவ்வளவே.

 • 8. film lover  |  March 31, 2010 at 4:19 pm

  மதிப்பிற்குரிய நண்பருக்கு,

  இந்த படத்தின் கதையை சோழர்கள் என்று சொல்லியதில் சில வரலாற்று பிழைகள் இருப்பதை ஒத்துக்கொள்கிறேன்… ஆனால படமாக்கம் செய்யப்பட்ட செவ்விந்தியர்கள் தாக்குதல், சோழர்களுக்கும்
  இராணவத்துக்கும் நடக்கும் சண்டை, அது படமாக்கப்பட்ட விதம் ஒளிப்பதிவு, Tones இவைகள் உலகத்தரத்தில் இருந்தது,

  லாஸ்ட் சாமுராய் படத்தில் பழைய ஆயுதங்களை கொண்டு பிரங்கிகளுடன் போதும் போர்விரர்களின் வீரத்தை உணரமுடியும். இன்றைய சக்தி வாய்ந்த ஆயுதங்களை கொண்டு பழங்கால வாளுடன் போரிடும் வீரர்களை
  கொல்வது நெஞ்சை உறைய வைக்கும்…. என்னை போன்ற சினிமா ரசனையாளர்களுக்கு இந்த அனுபவம் தமிழ் சினிமாவில் இதுவரை கிடைத்தது இல்லை, அத்தகைய அனுபவம் எனக்கு ஆயிரத்தில் ஒருவன் படம் பார்த்தபோது கிடைத்தது… மெல் கிப்சனின் Brave Heart-ல் உள்ள போருக்கு இணையாக நம் தமிழ் கலைஞர்கள் பணியாற்றியிருக்காங்க அதைத்தான் அடுத்த கட்டம் என்று சொன்னேன்… செல்வராகவனின் பிழை என்னவென்றால் சோழர்களை கதைக்களமாக வைத்து கொண்டு கதை கற்பனை என்று சொல்லியிருக்க கூடாது, அல்லது சோழர்களை தொட்டு இருக்க கூடாது….

  பொழுது போக்கு படங்களில் இது ஒரு வித்தியாசமான முயற்ச்சி….

 • 9. sharehunter  |  March 31, 2010 at 6:23 pm

  திரைப்படத்தின் காதலரே

  உலகத்தரம் என்பது உருவாக்கப்படும் பொருட்களில் வேண்டுமானால் இருக்கலாம். திரைப்படங்களில் கிடையாது என்பது என்னுடைய கருத்து.

  நீங்கள் கூறியது போல பொழுதுபோக்கு படங்களில் ஒரு வித்தியாசமான முயற்சி. இதனை க்ளாஸிக், மைல்கல் என சித்தரிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

  உண்மையான சாகச திரைப்படங்களுக்கு நாம் இன்னும் தயாராகவில்லையோ என்ற ஐயமும் எனக்குண்டு.

  கருத்துக்களுக்கு நன்றி.

 • 10. film lover  |  April 1, 2010 at 6:03 pm

  மன்னிக்கவும்,

  உலகத்தரம் என்பது உருவாக்கப்படும் பொருள்களில் கிடையாது…

  உலகத்தரம் என்பது திரைக்கதை, அது படமாக்கபடும் விதம் திரைக்கதையில் பயன்படுத்தபடும் தொழில்நுட்பம் இவைகள் தான் ஒரு காட்சியை, கதையை உலகத்தரத்துக்கு நிகரானதாக மாற்றுகிறது…

  நீங்கள் சொல்வது போல் உருவாக்கபடும் பொருள்களில் கிடையாது…

  panavision கேமராவில் படமாக்கபடும் அனைத்தும் உலகத்தரத்தில் அமைந்து விடுவதும் இல்லை
  சாதாரண arriflex camera -வில் எடுக்கபடும் காட்சிகள் உலகத்தரத்தில் அமைந்திருக்கின்றன…

  உலகத்தரம் என்பது திரைக்கதையின் தொழில்நுட்பமும் அதனை சிறப்பாக படமாக்குவதும் ஆகும்

  எதிரிகாலத்தில் பல சாகச படங்கள் வரும் என்று எனக்கு கண்டிப்பாக நம்பிக்கை உண்டு….

  நானும் கூட ஹாரி பாட்டர் போன்ற சில கதைகளை எழுதி வைத்திருக்கிறேன்…

  அந்த மாதிரியான படங்களுக்கு ஆயிரத்தில் ஒருவன் ஒரு மைல்கல்லாகவே இருக்கும்.

 • 11. sharehunter  |  April 1, 2010 at 10:28 pm

  filmlover,

  I rest my case.

 • 12. film lover  |  April 5, 2010 at 2:54 pm

  Ok….

  Take care.

 • 13. film lover  |  April 28, 2010 at 4:07 pm

  சமிப கால படங்கள் எதுவும் விமர்சிக்கப்படவில்லையே?????

 • 14. sharehunter  |  April 30, 2010 at 12:37 pm

  Film lover,

  பயம்தான். வேறென்ன?

 • 15. Anonymous  |  May 3, 2010 at 1:08 pm

  Forbes Gokak ; Flyjac ; Expo Freight ; Eskay Impex ; Elton & Sons ; Divyashipping ; Diamond ; DHL Leemuir ; Classic Shipping ; Chella Cargo ; Chakiat ; Cargomar ; Cargocare International ; Bharat Marines ; Bharat Impex Systems ; Balajee Mariline ; Balajee Enterprises ; AV Thomas ; Aspinwall & Co., ; Asian Shipping ; Asia Corpn ; Apcv ; ancheril ; Anand Transport ; Alpha Freight Chain ; Alex ; AJD Cruz ; Aiki Logistics ; Ahamed ; adarsh
  Cc: Nifco Sea Freight ; Navrang Shipping ; National Trades ; Moriks shipping ; Maxmiller ; Machado Sons P LTD ; M. Bhasker Kini ; Lee Muir ; Leaap International ; Lakshmi Cargo ; Kuehne + Nagel (P) Ltd., ; Kavikumar ; K.Nithianandam & Co., ; Janaki Traders ; Jainarayana Shipping ; J.M.Baxi ; International Exim ; Hari(CHA) ; Gordon Woodroffe ; International ; interfreight ; Intel Express ; Indolloyd ; Indev Logistics ; Impex forwarders ; Horizon ; H.T.L. Logistics ; Green Port ; Green Channel ; Glow Freight Logistics ; Global Shipping ; Global Cargo Freight Freight ; Galaxy ; GAC Shipping ; Freight AG

 • 16. film lover  |  May 4, 2010 at 6:35 pm

  விமர்சிக்கபடுபவர்கள் தான் பயப்பட வேண்டும், விமர்சிக்கும் நீங்கள் ஏன் பயப்பட வேண்டும்.???

 • 17. sharehunter  |  May 5, 2010 at 8:13 am

  film lover,

  திரைப்படத்தினை முழுதாக பார்க்க வேண்டுமே! தமிழ் திரையுலகில் இயக்குநர்கள் மற்றும் நடிகர்கள் விமர்சனங்களை தனிப்பட்ட தாக்குதலாகவே நினைக்கிறார்கள். புகழ்ச்சியை தவிர வேறெதும் அவர்களுக்கு பிடிப்பதில்லை.

  உண்மையில், விமர்சிக்கப்படுவர்கள் பயப்பட தேவையில்லை.

 • 18. Rafiq Raja  |  May 6, 2010 at 12:16 pm

  இயக்குநர்களும் நடிகர்களும் மட்டுமா தாக்குதலாக நினைக்கிறார்கள்… அவர்களை விட அவர்களின் வேலையில்லா தீவிர ரசிக பெருமக்களின் கண்மூடி தனமான பாசம் தான் சில வேளைகளில் நம்மை இப்படங்களை பற்றி உண்மையான கருத்துகளை இடுவதில் இருந்து வெறுத்து ஒதுங்குகிறது.

  ஒரு நல்ல படைப்புகளுக்கு ஆணிவேர், அவைகளுக்கு கிடைக்கும் உண்மையான கருத்துகளே. அவைகளை ஒதுக்கி வைத்து விட்டால், பின்பு உலக தரம் என்று இல்லாத ஒன்றுக்கு மாயையுடன் பீற்றி கொள்ள வேண்டியது தான்.

  நிதர்சனம் ஊருக்கே வெளிச்சம்.

 • 19. Tamil fan  |  August 24, 2010 at 8:37 am

  அன்பு ரசிகர்களே,

  இந்த படம் எனக்கு ஒரு புதிய அனுபவம்.இதில் எது தவரு எது சரி என்று அனக்கு தெரிய வில்லை.படதில் சில காட்சிகள் இன்னும் எனக்கு புரியவில்லை.4 முறை பார்து விட்டேன்.படதின் editing தரம் வாய்ததாக இருகிரது. and im waiting for part 2

 • 20. J.Krishanthan  |  July 11, 2012 at 3:33 pm

  saritthiram engu tharithiram hagi vittathu,selva ragavanal

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

 • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 4 years ago
 • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 4 years ago
 • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 5 years ago
 • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 6 years ago
 • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 6 years ago
January 2010
M T W T F S S
« Dec   Mar »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: