கோட்டை உடைப்பு படலம் – சரித்திர புதினம்

January 13, 2010 at 6:15 pm 4 comments

In this world, the world of Sorrow, one must have a sense of of humour, neh?

–     Lord Toranaga Yoshi, James Clavell’s Gai-Jin

A man with a wicked sense of humour is, by default, a good kisser.

–    A wise man from South India (me)

சாண்டில்யன், கல்கி, நா பார்த்தசாரதி போன்றோரின் சரித்திர புதினங்களில் எவ்வளவு மோசமான வில்லன்களானாலும் நாகரிகத்துடனே உரையாடுவார்கள்.  ஆனால் உண்மை சரித்திரம் அவ்வாறு இராது என தற்போதைய சரித்திர புதினங்கள் நிறைய கெட்ட வார்த்தைகளுடன் வந்த வண்ணம் உள்ளன.

பழந்தமிழன் தனக்கு பிடித்த கதையெதும் படித்தால் உடன் ஒரு போஸ்ட் கார்டை எடுத்து அவ்வாசிரியருக்கு ஒரு கடிதம் எழுதி போடுவார்.  நவீன இணைய தமிழனோ தானும் ஒரு கதை அல்லது கவிதையை எழுதி சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கு அனுப்பி தானும் ஒரு ரௌடிதான் ஊர்ஜிதப்படுத்துவதே தற்போதைய பழக்கம்.

அதுபோல் எனக்கும் சரித்திர நவீனங்கள் எழுத வேண்டுமென்ற ஆசை ஒருநாள் நள்ளிரவு பீரிட்டெழுந்தது.  அதன் விளைவாக சில, பல அத்தியாயங்களை எழுத ஆரம்பித்தேன்.  எழுதி முழுக்க பதிவிட்டால் அது சீந்துவாரான்றி கிடக்கும் என்றும், அடிக்கடி பில்டப் கொடுத்தாலே அதனை படிக்க ஆட்கள் வருவார்கள் என்பதை அறியாத அறிவிலியல்லவே நான்?

எதற்கும் இருக்கட்டுமென நடுவிலிருந்து ஒரு அத்தியாயம் எடுத்து கொடுத்திருக்கிறேன்.  படித்து பாருங்கள்.  சரித்திர நாவல்களில் முக்கியமாக காணப்படும் வர்ணனைகளை (அந்தளவுக்கு தமிள் வராது) தவிர்த்து வித்தியாசமாக எழுதலாமென்ற எண்ணம்.

.

கோட்டை உடைப்பு படலம்

கொங்கன் நாயரின் தலைமையில் வந்த படை ஆடி பதினெட்டாம்பேர் மார்த்தாண்ட வர்மனின் கோட்டைக்கு அரைக் காதத்துக்கு தொலைவே முகாமிட்டு இருந்தது.  கோட்டையை கைப்பற்ற தீவிர மந்திரயாலோசனை நடந்துக் கொண்டிருந்தது.

மந்திரயாலோசனை முகாமில் படைத்தலைவருக்கு ஆலோசனை சொல்ல நீலகண்ட சாஸ்திரிகள் எழுந்து பின்வருமாறு உரையாற்றிக் கொண்டிருந்தார்.

இந்த கோட்டை பார்க்க மிக பலமாக இருக்கின்றது.  மிக மிக கவனமாக திட்டமிட்டே நாம் தாக்குதலை நடத்த வேண்டும்.

படைத்தலைவன் கொங்கன் தன் கோமணத்தை சரி செய்தவாறே எழுந்து

யோவ், அதால நாங்க பாத்துக்கிடுதோம்.  ஏலே, கூறு கெட்ட குறும்பைகளா,  நாஞ் சொல்றத கேட்டுக்கிடுங்க.  ரொம்ப நுணுக்கமான திட்டமாக்கும் இது சொல்லிட்டேன்

காலையில இஞ்ச இருந்து நாந் ஜுட் சொன்ன கையோடு எல்லாரும் குடு குடுன்னு ஒடிபோய் கோட்டை கதவை ஒடச்சுட்டு உள்ளே பூந்துடுங்க. குறுக்கே யார் இருந்தாலும் போட்டு தள்ளிடுங்க. அம்பிடுதான். புரிஞ்சிடுதா, மண்டைய மட்டுந் ஆட்டுங்கடே.

லே, வீரமுத்து, இந்த தபா நீதான் முன்னாடி போணும்.  போன தபா ஒண்ணுக்கு வருதுன்னு ஒடிப்போய்ட்ட.  அந்தபுரத்துப் பக்கம் போம்போது எல்லோருக்கு முன்னடி ஒடுன.  இப்ப ஏதாச்சும் பண்ண அறுத்துடுவேன்.

யோவ், கண்டரே, ஏதாச்சும் சொல்லிப்போடும்.  வாயில எதையோ வைச்சு முழுங்கிட்டு கிடக்கிதீங்க.

நீலகண்ட சாஸ்திரிகள் தொண்டைய கனைத்துக் கொண்டு ‘இந்த காட்டுமிராண்டி பசங்க கூட வந்து மாரடிக்கிறான் பாரு, இஞ்சே அனுப்பிச்ச எங்கப்பன சூளையில போட்டு எரிக்கணும்‘ என நினைத்தவாறே,

படைத்தலைவரே, முதலில் கோட்டையை முற்றுகை இட வேண்டும்

என்ன மயிருக்கு வோய்?

என்ன இப்டி கேட்டுட்டிங்க, கோட்டைய சுத்தி ஆகாரம், தண்ணி போகாமல் பாத்துக்கிட்டு இருந்தோம்ன உள்ளே இருக்கறவன்க பணிஞ்சு ஒரு வாரத்தில நம்ம கிட்ட சரண் ஆயுடுவோங்க.

முட்டா பய மக்கா, அது வரைக்கும் நம்மாளுங்க புல்லையா தின்னுவாங்க.  உன்னதான் அண்டாவுல போட்டு பொங்கணும்

சரி, அப்போ ஒரு தூதுவனை அனுப்பி அவங்கிட்ட பேச சொல்வோம் என்ன சொல்றீங்க.

உன்ன போட்டு விலாவில மிதிக்க, யோவ், இவ்வளவு கும்பல வந்துருக்கோம்.  பொங்கல் வைக்க வந்துருக்கோம்ன நினைப்பாங் அவன், ஆள அனுப்பபுறானாந் ஆள.  போறவனை சூப்பு வைச்சுருவான்.  நீ போவீரா

அப்புறம் என்ன மயித்துக்குவேய் எங்கிட்ட கேட்குதீங்க, எழவேன்னு கத்திட்டு போய் எல்லோரும் கதவை ஒடச்சுட்டு உள்ளே போ வேண்டியதுதானே

அட கூறு கெட்டவரே, அதத்தானே அப்பயிலிருந்து சொல்லிட்டு இருக்கேன்.

இவ்ளோ பெரிய கோட்டைய இருக்குதே, நம்மாளுங்கள உசுப்பி விட நீங்க எதாவது பெரிசா பேசிதான் ஆவணோம்.

என்ன பெருசா உசுப்பி விடுறது,  கோட்டையில பெரிய அந்தப்புரம் இருக்குதுன்னு சொல்லு.  மூணு கால்ல ஒடுவான்ங்க, பக்கி பசங்க.

இவ்வாறாக சபை கலைந்து நாளை கதிரவன் உதிக்கையில் கோட்டையை கொங்கன் நாயரின் படை தாக்குவது என ஒரே மனதாக முடிவெடுக்கப்பட்டது.  சரித்திரம் ரத்த நாக்குகளால் நாளை தீர்மானிக்கப்படும் என கதாசிரியன் நினைத்துக் கொண்டான்.

(தொடரும்)

காலதேவன் கருணை இருந்தால் இச்சரித்திர நவீனம் அடுத்த புத்தக சந்தையில் ரூ.1250 என்ற விலையில் (புத்தக சந்தையில் மட்டும் சகாய விலையாக ரூ.1115-க்கு கிடைக்கும்) தமிழகத்தின் முன்னணி பதிப்பகத்தால் வெளியிடப்படும்.

This post is humbly dedicated to the Chennai Book Fair #0033.

Entry filed under: நகைச்சுவை. Tags: .

பங்கு சந்தை 2010 ஆயிரத்தில் ஓருவன் – திரை விமர்சனம்

4 Comments Add your own

  • 1. Karthikeyan G  |  January 13, 2010 at 8:11 pm

    Welcome back..

    This is Attagaasam..

  • 2. shankar visvalingam  |  January 14, 2010 at 1:39 am

    நண்பரே,

    கதையில் கெட்ட வார்த்தைகளின் எண்ணிக்கை அதிகமில்லை. எனவே அதிகரிக்கவும். அந்தப்புர தாக்குதலை விரிவாக எழுதவும். அதற்கு மட்டும் நீங்கள் பத்து அத்தியாயங்கள் எடுத்துக் கொள்ளலாம். இத்தாக்குதலிற்கு மட்டுமே கோவண வஸ்திரம் இடைஞ்சலாக இருக்கும் என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். உங்கள் கதை அதைப்பற்றிய சூடான உண்மைகளை வெளிக்கொணர்வதாக இருக்க வேண்டும். சிறப்பாக இருக்கிறது. தொடருங்கள்.

  • 3. Anonymous  |  January 14, 2010 at 9:10 am

    இனிய விடுமுறை தின நல்வாழ்த்துக்கள்!

    //அதுபோல் எனக்கும் சரித்திர நவீனங்கள் எழுத வேண்டுமென்ற ஆசை ஒருநாள் நள்ளிரவு பீரிட்டெழுந்தது.//

    நீங்கள் பங்கு வேட்டையரா? வெண்ணிற ஆடை மூர்த்தியா என்ற ஆழ்ந்த ஐயம் எழுகிறது!

    தலைவர்,
    அ.கொ.தீ.க.

  • 4. Rafiq Raja  |  January 14, 2010 at 11:28 am

    சே சே எவ்வளவு நாள் சரித்திர கதைகளில் சுத்த தமிழ் பேசி நம்மள எல்லாம் முட்டாபய ஆக்கி இருக்காங்கப்பு…. அவங்க ட்ரேட்மார்க் பேச்சை நேரடிய ஒளிபரப்புனதுக்கு நன்றிங்கடேய்…

    மயிர், தயிர், ஜுட் ன்னு எவ்வளவு நல்ல நல்ல வார்த்தைகள்…. சரித்திரத்தில இதெல்லாம் பொறிக்கமாக போனதால தான், இப்ப இத மெட்ராஜ் தமிழ்னு கேவலமா பேசிக்கிறோங்கோ…

    அப்படியே அந்த அந்தபுர காட்சிகளை அடுத்த அத்தியாத்தில் விவரமாக விவரிங்கோ…. கூடவே அடுத்த புத்தக கண்காட்சியில, 10 க்கு 1 கேட்டகரியில உங்க புத்தகம் சிறப்பா விற்க வாழ்த்துகள், வேட்டையரே.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed


கோப்ரா தீவில் கோயாவி – முக்கிய அறிவிப்பு

இந்த கதையானது பூமி மற்றும் பிற கிரகங்களில் இருக்கும் எந்த உயிரினங்களின் மனதையோ, உடலையோ புண்படுத்தும் வகையில் எழுதப்படவில்லை. அவ்வாறு இருந்தால் அது தற்செயலே. இந்த கதையில் நடைபெறும் சம்பவங்கள் அல்லது வசனங்கள் பூமியில் நடக்கும் வாழ்க்கையை பிரதிபலிப்பவை அல்ல. அவ்வாறு நடப்பது புளுட்டோவில் புண்ணாக்கு கிடைக்க என்ன சாத்தியக்கூறோ அந்தளவிற்கு சாத்தியம். எதுக்குடே இப்டி எழுதுறே என்ற வகை பின்னுட்டங்கள் பிரசுரிக்கப்படாது. கள்ள ஐடீ பின்னுட்டங்கள் ஊக்குவிக்கப்படும்.

twit…twit…twit

  • Saw Noah. Very droll. Crowe lifts up the film in few moments. But why it is made. Only Creator can answer that. 2 years ago
  • If my office is attacked by ninjas right now, I might get a day's off. 3 years ago
  • Whatever the case, China domintes the Medal tally. As an asian, I'm proud. Why don't give Olympic Training to Army rather than Politicians 4 years ago
  • Just saw KV Anand's Maatyran trailer. Something struck on me! 4 years ago
  • @karthi_1 நல்லவேளை "முத்தமிழ் அறிஞர்களின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சிகள்" உங்களிடம் இல்லை. ;) 4 years ago
January 2010
M T W T F S S
« Dec   Mar »
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

%d bloggers like this: