வேட்டைக்காரன் – திரை விமர்சனம்
December 19, 2009 at 1:09 pm 8 comments
- ப்ளாஷ்பேக் : சென்ற வாரம் பேருந்தில் அமர்ந்திருந்த போது ஒரு பெரியவர் பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு போட பணத்தை எடுத்த போது பேருந்து கிளம்பி விட்டதால் அவருக்கு கொடுக்க தூக்கி எறிய வேண்டியதாகி விட்டது. அது புண்ணியம் என நேற்று வரை நினைத்துக் கொண்டிருந்தேன்.
- அறிவுரை : என்னதான் உயிர் நண்பர்கள் என்றாலும் எல்லா விஷயத்திலும் அவர்கள் சொல்வதை ஆராயாமல் முடிவெடுத்து விடக்கூடாது.
- சரி, கதைக்கு வருவோம். கதையின் நாயகன் மகா சக்தி படைத்தவன். ஒரே அடியில் கான்க்ரிட் தூணை உடைப்பவர். முப்பது பேரை ஒரே சமயத்தில் அடிக்கக் கூடியவர். மொக்கை நண்பர்களை கொண்டவர் (என்னைப் போலவே).
- அவ்வாறாகப்பட்டவர் காவல் துறையில் சேர்ந்து பெரிய அதிகாரியாக வேண்டுமென்று விரும்புகிறார். அது தொடர்பாக மேல்படிப்பு படிக்க சென்னை வருகிறார். கதாநாயகியை சந்திக்கிறார். சற்று சுமாரான பிகரையும் சந்திக்கிறார். அவளை தன் உடன்பிறவா சகோதரியாக ஏற்றுக் கொள்கிறார். ஆட்டோ ஒட்டி படிக்கிறார்.
- காவல் துறை, இராணுவம், சிஐஏ போன்ற சக்திளால் தடுக்க முடியாத வில்லன் கும்பல் ஒன்று சென்னையில் அட்டகாசம் செய்து வருகிறது. அவர்களது அட்டகாசங்களை விரிவாக திரையில் காணலாம். ஆனால் அவர்கள் கதாநாயகனின் உடன்பிறவா சகோதரியிடம் சில்மிஷம் செய்ய கதாநாயகன் பொங்கி விடுகிறார்.
- வில்லன் டேமேஜ் ஆகி ஆஸ்பிட்டலில் சேர, போலீஸ் பொங்கி எழுகிறது. கதாநாயகன் கைது செய்து சிறையில் அடைக்கப்படுகிறார். அவரை என்கவுண்டரில் கொல்ல போலீஸ் முயற்சி செய்யும்போது கதாநாயகன் ஒரு அருவியிலிருந்து குதித்து காயத்தை கர்ச்சீப் மூலம் காயத்தை நீக்கி ராம்போக்கள் தமிழ்நாட்டிலும் உண்டு என நிருபித்திருக்கிறார்.
- நடுநடுவில் கதாநாயகன் வண்ணமயமான ஆடைகளை அணிந்து பாடல் காட்சிகளில் ஆடுகின்றார். சமயத்தில் கதாநாயகியையும் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார். பாடல் காட்சிகளில் கதாநாயகன் போடும் ஆடைகளை நீங்கள் நடைமுறை வாழ்வில் போட நேர்ந்தால் சமூகத்தால் உங்களுக்கு சில விரும்பதகாத விளைவுகள் நேரலாம்.
- இடைவேளைக்கு பின்னர் வில்லனும், கதாநாயகனும் பல சவால்களை விட்டு கொல்கின்றனர். இருப்பினும் பொறுமையாக நீங்கள் இருந்தால் ‘என் உச்சி மண்டை சுர்ருங்குது’ என்னும் குத்து பாடலை இரசிக்கலாம்.
- அப்புறம் வேற என்ன எழுதுறதுன்னு தெரியல. கிர்ருன்னு இருக்கு.
Entry filed under: திரை விமர்சனம்.
1.
panguvaniham | December 19, 2009 at 1:18 pm
படம் பொழச்சிக்கும்னு சொல்றாங்க….
2.
pattapatti.cbe | December 19, 2009 at 1:45 pm
soon release in SUN TV… :-)..
3.
shankar visvalingam | December 19, 2009 at 2:27 pm
நண்பரே,
இம்முறை தங்க ஆலமரவிருதிற்காக இத்திரைப்படத்தை பரிந்துரை செய்யலாமா?! சுறா திரைப்பட விமர்சனத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சூப்பர் ஹீரோக்கள் வெளியே ஜட்டி போடாது நடிப்பது தமிழ் திரைப்படங்களில்தான் அதற்கும் சமூகத்தால் பாதிப்பா!! யாராவது வேட்டைக்காரன் திரைப்படத்தை தயவுசெய்து பாராட்டி எழுதுங்ணா… ப்ளீஸ்ணா…
4.
kanna | December 19, 2009 at 5:05 pm
படம் தப்பிச்சுக்கும் ஏன்னா படம் குருவி வில்லு
அளவுக்கு மோசமா இல்ல.திருப்பாச்சி சிவகாசி
போக்கிரி மாதிரி இருக்கு.மசாலா ரசிகர்கள் 1 முறை
பார்க்கலாம்.விஜய் ரசிகர்கள் பலமுறை பார்க்கலாம்.
5.
sharehunter | December 19, 2009 at 6:07 pm
பங்குவணிகம்,
அந்த நம்பிக்கையிலதான் விஜயும் இருக்கார்.
பட்டாபட்டி,
that’s mass *********
ஷங்கர்,
எனக்கு நேரம் சரியில்லை. வேற என்ன சொல்ல…..
கண்ணா,
பார்க்காம இருந்தா நீங்க தப்பிச்சீங்க.
6.
Rafiq Raja | December 22, 2009 at 4:19 pm
பங்கு வேட்டையர் என்ற உங்கள் பெயருக்கே களங்கம் ஏற்படுத்துவது போல இப்படி ஒரு செய்யா கூடாத காரியத்தை செய்திருக்கிறீர்கள்….
// சற்று சுமாரான பிகரையும் சந்திக்கிறார். அவளை தன் உடன்பிறவா சகோதரியாக //
ஹா ஹா… இதெல்லாம் ஜொள்ளில் சகஜம்தானே 🙂
// மொக்கை நண்பர்களை கொண்டவர் (என்னைப் போலவே). //
தயவுசெய்து, உங்கள் நண்பர்கள் பட்டியலில் இருந்து முதலில் என் பெயரை உடனே நீக்க ஆவண செய்யுங்கள்… ஹி ஹி ஹி
அந்த பிச்சைகாரனின் சாபம் தான் உம்மை இந்த படத்தை பார்க்கும் பயரங்கமான காரியத்தை வைத்து பாடாய்படுத்தி இருக்கிறது போல…..
யதம் கதம்….
7.
SAM | December 25, 2009 at 7:02 am
WE WISH YOU A MERRY CHRISTMAS.
8.
Tamil MA | December 29, 2009 at 12:24 pm
படம் பொழச்சிக்கும்…ஆனா படத்த பாதவுங்க பல பேர் நிலைமை கவலைகிடமாக இருக்குதுன்னு சன் டிவி நியூசில சொன்னங்க.